24 மணி நேரத்துக்குள் உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமை.

12.10.2007 வெள்ளி அன்று நோன்புப் பெருநாள் தொழுகை நடந்த நாடுகளும் இந்திய நேரங்களும்.

நாம் உம்மி சமுதாயமாவோம். விண் கலையை அறியாதவர்களாகவும் எழுதத் தெரியாதவர்களாகவும் உள்ளோம் என்பதால் பிறையை பார்த்து நோன்பு வையுங்கள் பிறையை பார்த்து நோன்பை விடுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன் கூறியுள்ளார்கள். 

 விண் கலையை அறிந்துள்ள காலத்தில் வாழும் நாம் கணித்து செயல்பட இந்த ஹதீஸும் ஆதாரமாக உள்ளது. விஞ்ஞான முன்னேற்றம் அடைந்துள்ள இந்தக் காலத்திலும் பிறையை பார்த்தே நோன்பு வைப்போம் பிறையை பார்த்தே நோன்பை விடுவோம் என்பவர்கள் சரியான முறையில் பிறை பார்க்கத் தெரியாதவர்களாகவே உள்ளனர். சரியான முறையில் பிறையை பார்த்து வந்திருந்தால் 12.10.2007 வெள்ளி அன்றுதான் நோன்புப் பெருநாளை கொண்டாடி இருப்பார்கள்.

அறியாதவர்களாகவே முஸ்லிம்களை ஆக்கி வைத்திருக்கிறார்கள்.

சூரியன் தோன்றுவதை பார்க்க வேண்டுமானால் காலையில் 6 மணிக்கு முன் கிழக்கு நோக்கி நின்று பார்க்க வேண்டும். யாராவது மாலையில் 6 மணிக்கு மேல் மேற்கு நோக்கி நின்று கொண்டு சூரியன் தோன்றுவதை பார்க்கிறோம் என்று சொன்னால் அவர்களை அறியாதவர்கள் என்று சொல்வோம்.. காரணம் சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறைகிறது. மேற்கு நோக்கி பார்த்தால் மறையும் சூரியனையே பார்த்தான் என்போம். 

சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைவது போல்தான் சந்திரனும் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைகிறது. இதை அறியாதவர்களாகவே முஸ்லிம்களை ஆக்கி வைத்திருக்கிறார்கள். எனவேதான் அதிகாலையில் கிழக்கில் உதிக்கும் சந்திரனை அதாவது பிறையை தோன்றும் போது கிழக்கு நோக்கி பார்க்காமல் அது மறையும் போது மேற்கு நோக்கி பார்த்து விட்டு பிறை தென்படவில்லை என்கிறார்கள்.

12.10.2007 வெள்ளி அன்று நோன்புப் பெருநாள் தொழுகை நடந்து முடிந்துள்ளது.

பிறை தோன்றுவதை முறையாக கிழக்கு நோக்கி நின்று பார்த்தவர்களும் கணித்தவர்களும் 12.10.2007 வெள்ளி அன்று நோன்புப் பெருநாள் தொழுகையை நடத்தியுள்ளார்கள். எந்த எந்த நாட்டில் நடத்தியுள்ளார்கள். இந்திய நேரம் எத்தனை மணிக்கு நடத்தியுள்ளார்கள் என்ற விபரத்தைத் தருகிறோம். 

இந்தியாவில் இரவு நடுநிசி 12.30க்கு நியூசிலாந்து. 2.30க்கு ஆஸ்திரேலியா. 3.30க்கு பர்மா, ஜப்பான். அதிகாலை 4.30க்கு சைனா, மலேசியா, சிங்கப்பூர். 5.30க்கு இந்தோனிஷியா, தாய்லாந்து என பெரும்பாலும் பெருநாள் தொழுகை நடந்துள்ளது. 

காயல்பட்டிணம் ஜாமிவுல் அஸ்கர், மேலப்பாளையம் தவ்பா, தக்வா கன்னியாகுமரி, கோட்டாறு, தென்காசி, கடையநல்லூர், கோவை, நாகூர் என பல பகுதிகளிலும் நடந்து முடிந்தது. இதே நேரத்தில் சற்று முன் பின்னாக பாக்கிஸ்தானிலும் மஹ்தி வருவார் என்று எதிர் பார்க்கப்படும் ஆப்கானிஸ்தானிலும் 12.10.2007 வெள்ளி அன்று நோன்புப் பெருநாள் தொழுகை நடந்து முடிந்துள்ளது.


விளக்கம் அளிக்கும் விதமாக 12.10.2007 அமைந்து விட்டது.

இந்திய நேரம் காலை 9 மணி, 9.30 என துபை, கத்தர்,ஈராக்,ஒமான், பஹ்ரைன் ஆகிய நாடுகளிலும் இந்திய நேரம் காலை மணி முதல் புனிதமிகு நகரங்களான மக்கா, மதீனாவைக் கொண்ட சவூதி அரேபியாவிலும் சிரியா, துருக்கி, லிபியா என அனைத்து அரபு நாடுகளிலும் 12.10.2007 வெள்ளி அன்று நோன்புப் பெருநாள் தொழுகை நடந்து முடிந்துள்ளது. 

12.9.2007 புதன் அன்று நாம் நோன்பு ஆரம்பித்தபொழுது புனிதமிகு நகரங்களான மக்கா, மதீனாவைக் கொண்ட சவூதி அரேபியாவுக்கு முன்பாகவா என கேட்டார்கள் அல்லவா அதற்கும் விளக்கம் அளிக்கும் விதமாக 12.10.2007 அமைந்து விட்டது. பெருநாள் தொழுகை நடந்த நேரத்தை அறிய நாம் முற்பட்டபொழுது 12.10.2007 வெள்ளியாக இருந்ததால் ஜும்ஆ நடந்த நேரமும் நமக்கு கிடைத்தது.

சவூதி அரேபியாவுக்கு முன்பாகவா என கேட்டவர்கள் சிந்திப்பார்களாக.

12.10.2007 வெள்ளியன்று ஜும்ஆ நடந்த விபரம். இந்திய நேரம் காலை 6 மணிக்கு நியூசிலாந்து. 8மணிக்கு ஆஸ்திரேலியா, 9 மணிக்கு பர்மா, ஜப்பான், 10 மணிக்கு சைனா, மலேசியா, சிங்கப்பூர், 11 மணிக்கு இந்தோனிஷியா, தாய்லாந்து. அது மட்டுமல்ல இந்தியாவிலுள்ள அந்தமானிலும் வெள்ளிக் கிழமை ஜும்ஆ இந்திய நேரம் காலை 11 மணிக்கும் கல்கத்தாவில் 11.30க்கும் நமது பகுதிகளில் 12.30க்கு நடந்துள்ளது. 

நியூஸிலாந்திலிருந்து இந்தியா வரையிலான மேற்கண்ட அனைத்து நாடுகளிலும் ஜும்ஆ முடிந்த பின்தான் அரபு நாடுகளிலும் குறிப்பாக சவூதி அரேபியாவிலும் மிகவும் குறிப்பாக புனிதமிகு நகரங்களான மக்காவிலும் மதீனாவிலும் ஜும்ஆ நடந்துள்ளது. ஐங்காலத் தொழுகையும் இப்படித்தான் நடக்கிறது. 12.9.2007 புதன் அன்று நாம் நோன்பு ஆரம்பித்தபொழுது சவூதி அரேபியாவுக்கு முன்பாகவா என கேட்டவர்கள் சிந்திப்பார்களாக.

2004இல் அரபா தினத்தை ஒரு பிந்தி அறிவித்தது சவூதி.

24 மணி நேரத்துக்குள் உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ குத்பா நடந்து முடிகிறது. அது போல்தான் பெருநாள் குத்பாவும் நடந்து முடிய வேண்டும் என்பதையும் உணர்வார்களாக. புனிதமிகு நகரங்களான மக்கா, மதீனாவைக் கொண்ட சவூதியில் உள்ள அறிஞர்கள் 12.10.2007 வெள்ளி; அன்று ஆற்றிய பெருநாள் உரையில் 12.9.2007 புதன் அன்றுதான் நோன்பு ஆரம்மாகி உள்ளது. நாம் ஷஃபான் பிறையில் தவறு செய்து விட்டோம் என்று கருத்து கூறி உள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ். இதே மாதிரிதான் 2004இல் அரபா தினத்தை ஒரு பிந்தி அறிவித்தது சவூதி. அது தவறு என சுட்டிக் காட்டி சரி செய்ய வைத்தவர்கள் நெல்லை மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் என்பதையும் நாம் பதிவு செய்து கொள்கிறோம்.



Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு