ஈமானுடையவர்களே இவனிடத்தில் உஷாராக இருங்கள்.
பி.ஜே. தன்னை பெரிய தமிழ் பண்டிதர்போல் காட்டிக் கொண்டு தனது இமேஜை கூட்டிக் கொள்ள குர்ஆனையும் விட்டு வைக்கவில்லை. அவரது தர்ஜுமாவின் 4ஆவது வெளியீட்டில் 1211ஆம் பக்கம் (முதல் வெளியீட்டின்) 1341 ஆம் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதைப் பாருங்கள். அரபு மொழியில் "யார் உங்களை அடித்தார்களோ அவர்களை நீங்களும் அடியுங்கள்" என்பன போன்ற சொற்றொடர்கள் சர்வ சாதாரணமாகவே பயன்படுத்தப்படும். அதுதான் அம்மொழியில் நல்ல நடைக்கு அடையாளமாகவும் இருக்கும். ஆனால் தமிழ் மொழியில் மிக மிக அரிதாகவே இது போன்ற சொற்றொடர்களைப் பயன்படுத்துவோம். எனவே "உங்களை அடித்தவர்களை நீங்களும் அடியுங்கள்" என்று இதைத் தமிழ்ப்படுத்துவது தான் தமிழுக்கு நெருக்கமான நடையாகும். "யார் உங்களை ஏமாற்றினார்களோ அவர்கள்" என்பதை உங்களை ஏமாற்றியவர்கள் என்று நாம் தமிழ்ப்படுத்தியுள்ளோம் என்று எழுதியுள்ளார். குர்ஆனில் உள்ள வசனத்தை குறிப்பிட்டுக் காட்டி அதை இப்படி எளிதாக்கியுள்ளேன் என்று எழுதவில்லை. குர்ஆனில் இல்லாத ஒரு வசனத்தை இவராகவே கற்பனை செய்துகொண்டு அதை இப்படி எழுதினால் (உம்மா வழியில்) தமிழுக்கு நெருக்கம். (வாப்பா வழியில் ...