மணாளர் காதர் முஹைதீன். மணாளி சுமையா
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். ஷரீஅத் சட்டப்படி மாப்பிள்ளையிடம் பெண் வரதட்சணை வாங்கிடும் புரட்சித் திருமண அழைப்பிதழ். அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால், அவனது தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வழிமுறைப்படி, இன்ஷh அல்லாஹ் ஹிஜிரி1428 ரபிய்யுல் ஆகிர் பிறை 18 (06-05-2007) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் 102. செய்குல் அக்பர் தெரு சுல்தான் அப்துல்லாஹ், தண்டன் ஹமீது பாத்திமா ஆகியவர்களின் மகனும் எனது மைத்துனருமாகிய S.A. காதர் முஹைதீன் மணாளர் J.A.Q.H. மேலப்பாளையம் முன்னாள் செயலாளர் தண்டன் Nஷக் மன்சூர், சிமிட்டி சுலைஹா ஆகியவர்களின் மகள் T.S. சுமையா மணாளியை ரூபாய் 10,000 பெறுமான தங்க நகையை மஹராக வழங்கி திருமணம் செய்து கொள்கிறார். இத்திருமணத்தின் சிறப்பம்சங்கள். திருமணத்தின் போது வரதட்சணை என்ற பெயராலும், திருமணத்திற்குப் பின் பல சந்தர்ப்பங்களில் சீர்வரிசை என்ற பெயராலும் பெண் வீட்டாரிடம் பணம், பொருள்கள் கேட்டு வாங்கக் கூடாது. இந்த உயரிய கொள்கையுடன்தான் மாப்பிள்ளை மணப் பெண்ணுக்கு மஹர் நகை வழங்குகிறார். இது மட்டுமன்றி வரதட்சணை கொட