இவர்கள் இனி எதிலும் ஈடுபட மாட்டார்கள் என்று நான் பொறுப்பு ஏற்கிறேன்.

கண்ணியத்திற்குரிய த.மு.மு.க. தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் பொறுப்பாளர்களுக்கு கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹியின் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. நலம், நலம் பல சூழ்க.

சில விரும்பத் தகாத செய்திகள் சமீப காலமாக மேலப்பாளையம் நகர் முழுவதும் உலவி வருகின்றது. இது பற்றி பல வழிகளிலும் உங்களுக்கும் செய்திகள் வந்திருக்கும். இது சம்பந்தமாக மேலப்பாளையத்தில் அல்-உம்மா என்று அறியப்பட்டவர்களின் நிலை என்ன? என்பதை அறிய வேண்டும். அதையொட்டி நம்மால் இயன்ற அறிவுரைகளைக் கூற வேண்டும் என்று முடிவு செய்தேன். அதன் அடிப்படையில் முல்லன் செய்யது அலி தலைமையில் உள்ளவர்களை அழைத்து வருமாறு கூறினேன். 20-05-2006 அன்று மஃரிபுக்குப் பிறகு 17 பேரை எனது வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார். அதனை சிறைவாசிகள் நலன் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் என அமைத்துக் கொண்டோம்.

8 ஆண்டுகளாக சிறையில் வாடும் முஸ்லிம்களின் விடுதலை விஷயத்தில் த.மு.மு.க. கொண்டுள்ள கவலை. அதற்காக எடுத்து வரும் முயற்சிகள். ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசி வருவது. 1993 இல் தடாவில் போட்ட இதே அணியினரை இதே த.மு.மு.க.தான் இதே ஆட்சியாளர்களிடம் பேசித்தான் 1996 முதல் விடுதலை வாங்கித் தந்தது. பிறகு விடுதலையான அதே அணியினரால்தான் அதே ஆட்சியில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தப்பட்டது. விடுதலை வாங்கித் தந்த அதே த.மு.மு.க.வுக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.

இப்பொழுதும் அதே அணியினரை அதே த.மு.மு.க.வினர்தான் அதே ஆட்சியாளர்களிடம் விடுதலை வாங்கித் தருவதில் முனைப்பாக உள்ளார்கள். அதே நேரத்தில் மீண்டும் முன் போல் நடந்து விடுவார்களோ என்ற அச்சம் எல்லா மட்டத்திலும் உள்ளது. எனவே அப்படி இருக்கக் கூடாது என்று ஆலோசனைகள் கூறி. இனிமேல் அது மாதிரி எதிலும் ஈடுபட மாட்டோம் என்று வாக்குறுதி வாங்கி உள்ளேன். அதற்காகவே பாளை, மதுரை, கோவை, திருச்சி என சிறைகளுக்குச் சென்று வந்தேன். ஏற்கனவே திட்டமிட்டிருந்த செயல்களை நமது வேண்டுகோள்களை ஏற்று உடனடியாக நிறுத்தி விட்டார்கள். எனவே சிறைவாசிகள் சத்தியத்தை மீற மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது.

இப்பொழுது நமதூரில் உலவி வரும் விரும்பத் தகாத சில செய்திகளை ஒட்டியே இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அப்படி ஏதாவது நடந்தால் உங்கள் சகோதரர்களான சிறைவாசிகளின் விடுதலைதான் பாதிக்கும். த.மு.மு.க. ஒதுங்கி விடும். இனி எந்த முயற்சியும் த.மு.மு.க. செய்யாது. எனவே இனிமேல் இது மாதிரி எதிலும் ஈடுபட மாட்டோம் என நீங்கள் வாக்குறுதி தர வேண்டும். வாக்குறுதி தந்தால்தான் த.மு.மு.க. தலைமை தொடர்ந்து முயற்சிகள் செய்யும் என்று கூறினோம்.

இதன் பிறகு பல்வேறு கருத்துப் பரிமாற்றங்கள் செய்தார்கள். குறிப்பாக ஏதோ ஒரு குரூப் செய்ய நாங்கள் தண்டனை அனுபவிப்பது என்ற நிலையை விட நாங்கள் செய்து விட்டுப் போனால் மன நிம்மதியாக இருக்கும் என்ற கருத்தையும் பலமாகப் பேசினார்கள். இனி நீங்கள் அநியாயமாக பாதிக்கப்பட்டால் அதை பார்த்துக் கொண்டு த.மு.மு.க. சும்மா இருக்காது. இந்த உத்தர வாதத்தை த.மு.மு.க. தலைமையிடமிருந்து நான் வாங்கித் தருகிறேன் என்றேன். இதன் பிறகு பல்வேறு கோரிக்கைகளை வைத்தார்கள். இதை மத்திய-மாநில அரசு மூலம் த.மு.மு.க.வால்தான் செய்ய முடியும். த.மு.மு.க. தலைமை நினைத்தால் அரசை அணுகி செய்து தர முடியும் என்றார்கள்.

அவர்கள் கோரிக்கைகளை கூறும்படி கூறினோம். அவர்கள் கூறியவற்றில் நாம் ஏற்றுக் கொண்ட 13 வகையான கோரிக்கைகளை அவர்களில் ஒருவரைக் கொண்டே பேப்பரில் எழுதும்படி கூறினோம். அவற்றை த.மு.மு.க. தலைமைக்கு தெரிவித்து நிறைவேற்றித் தர தொடர்ந்து முயற்சி செய்து வருவேன் என்று வாக்குறுதி அளித்தேன். அதன் பிறகு இனிமேல் சட்டத்தை கையிலெடுக்கும் மாதிரி எந்த செயலிலும் நாங்கள் ஈடுபட மாட்டோம் என்று 17 பேரும் வாக்குறுதியளித்து சத்தியம் செய்தார்கள். அவர்கள் வைத்த கோரிக்கைகள் வருமாறு.

1. சிறையில் இருந்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக வழக்குகள் முடிந்தவர்களுக்கு பாஸ்போர்ட் கிடைக்காமல் உள்ளது. இதற்கு தடையாக காவல்துறைதான் உள்ளது. எனவே பாஸ்போர்ட் கிடைக்கச் செய்ய வேண்டும்.

2. சிறையில் இருந்தவர்கள் என்ற காரணத்துக்காக எங்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைப்பதில்லை. எனவே தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் மூலம் பொருளாதாரத்துக்கு செய்து வறுமையை நீக்க வேண்டும்.

3. ஆயுள் தண்டனை பெற்றவர்களுக்கு பிணையில் விடுவது. அல்லது பொது மன்னிப்பு அளிப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

4. பிள்ளைகள் கல்வி கற்க வழி வகை செய்து தர வேண்டும்.

5. டிசம்பர் 6 போன்ற நேரங்களில் போராட்டம் அறிவித்த அமைப்பினருக்கு பிரிவண்டிங் அரஸ்ட் இல்லாத நிலையிலும் சிறை சென்றவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக பிடித்து வைக்கும் நிலையை இல்லாமல் ஆக்க வேண்டும் .

6. சகஜ நிலை உள்ள நேரங்களிலும் தொழுது விட்டு கூட்டாக பள்ளிவாசல் அருகிலோ, கடைகள் பக்கத்திலோ நின்று பேசக் கூடாது என விரட்டுவது. நாங்கள் நிற்கும் பள்ளியின் முத்தவல்லி, கடை உரிமையாளர்களை மிரட்டுவதை காவல் துறை நிறுத்த வேண்டும்.

7. கடன் வழங்குதல் வேண்டும்.

8. ஆயுள் கைதிகளை அவர்கள் குடும்பத்தார் அடிக்கடி பார்க்க முடியா வண்ணம் தொலை தூரத்தில் வைப்பதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக கடலூர் சிறையில் உள்ள மொட்டை அப்பாஸ் அவர்களை அவரது ஊரான கோவைக்கு மாற்ற வேண்டும். அண்ணா, காந்தி பிறந்த தினங்களுக்காக அளிக்கப்பட்டு வந்த சலுகைகளை வழங்கி விடுதலை செய்ய வேண்டும்.

9. டி.என்.டி.ஜே. போன்ற அமைப்புகள் தங்களுக்கு பிடிக்காதவர்களைப் பற்றி போலீஸில் புகார் செய்யும்பொழுது அல்-உம்மா என்று புகார் செய்தால் காவல்துறை விசாரணை செய்யாமல் அப்படியே ஏற்றுக் கொள்கிறது. இந்த போக்க நிறுத்த வேண்டும்.

10. சிறையிலுள்ள முஸ்லிம் சிறைவாசிகளுக்கு போதிய மருத்துவ வசதி செய்து கொடுக்க வேண்டும்.

சிறை சென்றவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களது சகோதரிகளுக்கு திருமணம் என்பது சிக்கலாக இருந்து வருகிறது. எனவே திருமணத்திற்கு வழி காண வேண்டும். வெளி நாட்டு வேலை வாய்ப்புக்கு விஸா பெற எங்களுக்கு விபரம் தெரியாது எனவே அதற்கு வழி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார்கள். இது அரசு சம்பந்தமானது அல்ல. சமுதாய ரீதியாகத்தான் பார்க்க வேண்டும். விஸா விஷயத்தில் என்னால் இயன்ற உதவிகளைச் செய்வேன். த.மு.மு.க.வையும் கவனம் செலுத்தச் சொல்வோம் என கூறி விட்டோம் .

அல் உம்மா மீதான தடை நீக்கப்பட வேண்டும் என்றனர். அது உங்கள் அமைப்பு என்ற முறையில் நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். அதில் த.மு.மு.க.வை ஈடுபடும்படி கோரிக்கை வைக்க முடியாது. ஈடுபடாது என்றேன். சிம் தடை செய்யப்பொழுது த.மு.மு.க. குரல் கொடுத்ததே என்றார்கள். அது வேறு நிலை இது வேறு நிலை. இப்பொழுது எதற்கு அல் உம்மா என்றேன். அதற்கு நாங்கள் ஜனநாயகவாதி என்று செயல்பட்டு காட்ட என்றனர்.

ஜனநாயகவாதிகள் என்று செயல்பட்டுக் காட்ட த.மு.மு.க இருக்கிறது. உங்களை த.மு.மு.க.வில் இணைந்து செயல்படுங்கள் என்று கூறி இருக்கிறேன் . நீங்கள் ஏன் சேரவில்லை என்றோம். த.மு.மு.க.வில் உள்ளவர்கள் எங்களை தாழ்த்தப்பட்டவர்கள் போல் பார்க்கிறார்கள். எங்களில் உறுப்பினராக சேர்ந்தவர்களுக்கு இதுவரை கார்டு தரவில்லை என்றார்கள். நீங்கள் கொடுத்த சத்தியத்துக்கு கட்டுப்பட்டு நடங்கள் இன்ஷh அல்லாஹ் ஒரு பெரிய நிகழ்ச்சி மூலம் உங்கள் அனைவரையும் த.மு.மு.க.வில் இணைப்போம் என்று கூறி உள்ளோம்.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விபரம் வருமாறு:-
1. முஹம்மது ஆசிக் இஸ்லாம் (இவர்தான் கூட்டத்துக்கு தலைமை வகித்தார்)
2. ஏ. செய்யது அலி. (முல்லன்)
3. எஸ்.எம். காதர் மைதீன்.
4. முஹம்மது அலி.
5. முஜிபுர்றஹ்மான்.
6. கவுதுல் ஆலம் (தடா புகாரி தம்பி)
7. எஸ்.ஆர். சாகுல்.
8. உபைதுல்லாஹ் (மொட்டை அப்பாஸ் மச்சான்)
9. கே.எம். (கறிக்கடை) சாகுல் ஹமீது.
10. பி. அஜ்மீர்.
11. முஹம்மது ஸாலின்.
12. எஸ். யாசீன்.
13. அப்துல் லத்தீப்.
14. ஏ. மீரான் முகைதீன்.
15. எம். இஸ்மாயீல் பன்னா.
16. கே. செய்யது அலி.
17. கே. ஷh ஆலம்.
இதில் கலந்து கொள்ள முடியாமல் போன பசீர், அப்துர் றஹ்மான் ஆகிய இருவருக்கும் சேர்த்து 17 பேரும் வாக்குறுதி தந்துள்ளார்கள். எனவே இவர்கள் இனி எதிலும் ஈடுபட மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் இவர்கள் இனி எதிலும் ஈடுபட மாட்டார்கள் என்று நான் பொறுப்பு ஏற்கிறேன். இவர்கள் வைத்துள்ள கோரிக்கைகள் விஷயத்தில் த.மு.மு.க. மத்திய- மாநில அரசுகளையும் அரசு அதிகாரிகளையும் அணுகி நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வஸ்ஸலாம்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு