ஆய்வு செய்யப்பட வேண்டிய அந்த அறிஞர்.

முஸ்லிம்களில் தவ்ஹீதுவாதிகள் என்போர் சுன்னத் ஜமாஅத் என்போரை பின்பற்றித் தொழக் கூடாது என்று கூறி வருகிறார்கள். அவர்களது இந்த வாதத்திற்கு ஆதாரம் போல் அவர்கள் கூறியுள்ள ஆயத்து கலிமாச் சொன்ன முஸ்லிம்கள் பற்றியது அல்ல. அவர்கள் வைத்துள்ள வாதப்படி பார்த்தாலும் அவர்களின் கருத்தே அவர்களுக்கு முரண்படுகிறது ஆகியவற்றையும் எப்படியெல்லாம் முரண்படுகிறது என்பதில் ஒரு சிலவற்றையும் முந்தைய வெளியீடுகளில் பார்த்தோம். அல் குர்ஆன் 9 வது அத்தியாயம் 28 வது வசனத்தில் எல்லா பள்ளிகளையும் குறிக்கும் வகையில் மஸாஜித் (பள்ளிகள்) என பன்மையில் கூறாமல் மஸ்ஜித் என ஒருமையில் குறிப்பிட்டு மஸ்ஜிதல் ஹராம - புனிதமான இப்பள்ளியை என்று, அந்த ஒரு பள்ளியை குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது. இவ்வளவு தெளிவாக மக்காவிலுள்ள புனிதமான அந்த ஒரு பள்ளியை குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளதை தெரிந்தும் உலகில் உள்ள எல்லா பள்ளிகளுக்குமான பொதுவான கட்டளையாக இட்டுள்ளது போல் கூறி அதில் கூறப்படாத இமாம் சட்டத்தை உண்டு பண்ணி திணித்து சுன்னத் ஜமாஅத் என்போரை பின்பற்றி தொழக் கூடாது என்று கூறி வருகிறார்கள்.
சிந்திக்கக் கூடியவர்கள் திறமையாளர்கள்?
இப்படி கூறி வரும் தவ்ஹீது அமைப்புகளில் ஒரு அமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ள மவுலவி ஒருவரிடம் அதே அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ள 18வது ஆயத்தைக் கூறி, இந்த ஆயத்துக்கு முரணாக தவ்ஹீது பள்ளிகளில் ஜகாத் வாங்கும் நிலையில் உள்ளவர்கள் நிர்வாகிகளாக உள்ளார்களே இது சரியா? என்று கேட்கப்படுகிறது. டி.வி. நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட இந்த கேள்விக்கு அந்த அறிஞர்;, இது பொதுவான எல்லா பள்ளிகளுக்கும் உள்ள சட்டம் அல்ல. இது மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராம் என்ற புனிதமான அந்தப் பள்ளியை மட்டுமே குறிக்கும் என்று பதில் கூறியுள்ளார். தவ்ஹீதுவாதிகள் என்போர் சாதரணமானவர்கள் அல்ல. சிந்திக்கக் கூடியவர்கள் திறமையாளர்கள் அதுவும் தவ்ஹீது மவுலவிகள் என்றால் சொல்லத் தேவையே இல்லை. அவர்கள் அரபியிலும் பண்டிதர்களாக இருப்பார்கள் என்ற மாயை மக்களிடம் இருந்து வருகிறது. அவற்றை தவிடுபொடியாக்கிடும் வகையில்தான் இந்த பதில் உள்ளது.
ஒருமை பன்மை தெரியாத அறிஞர்.
சுன்னத் ஜமாஅத் எனும் எதிர் தரப்பு மவுலவிகளை ஏழாண்டுகள் அரபிக் கல்லூரிகளில் படுத்தவர்கள் என்று ஏகடியம் செய்தவர்களுக்கு எழுத்துக் கூட்டிப் படிப்பவர்களுக்கும் தெரிந்த மஸ்ஜித்(பள்ளி) என்றால் ஒருமை. மஸாஜித்(பள்ளிகள்) என்றால் பன்மை என்ற மிகச் சாதாரண இந்த இலக்கணம் கூட தெரியவில்லையோ? முஷ;ரிக்குகள் கஃபதுல்லாஹ்வை நெருங்கக் கூடாது என்பது பற்றி 9:28வது வசனத்தில் மஸ்ஜிதல் ஹராம (புனிதப்பள்ளியை) என ஒருமையில் குறிப்பிட்டுள்ள அல்லாஹ், ஜகாத் கொடுக்கக் கூடிய நிலையில் உள்ளவர்கள்தான் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும் என்பது பற்றி கூறிடும் 9:18வது வசனத்தில் மஸாஜிதல்லாஹி (அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களை) என பன்மையில் குறிப்பிட்டுள்ளான். சிறுவர் சிறமியர்களுக்கும் விளங்கிடும் இந்த வித்தியாசத்தைக் கூட தெரியாதவரா அந்த அறிஞர்? அறிந்து கூறினாரா? அறியாமையில் கூறினாரா? அல்லாஹ்வே அறிவான். இது மாதிரி முரண்பாடான தவறான கருத்தை சுன்னத் ஜமாஅத் மவுலவிகள் கூறி இருந்தால் அவர்களை எது மாதிரியெல்லாம் இவர்கள் விமர்சித்திருப்பார்கள்?
அவர்களைப் பின்பற்றித் தொழுவதும் தடுக்கப்பட்டது தான்.
அல் குர்ஆன் 9:17 வது வசனத்தில் பள்ளிவாசல்களை நிர்வாகம் செய்வதற்கு இணை வைப்பவர்களுக்குத் தகுதியில்லை என்பதை அல்லாஹ் சுட்டிக் காட்டுகிறான். பள்ளிவாசலை நிர்வகித்தல் என்பது இமாமாக நின்று தொழுவிப்பதையும் உள்ளடக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது. எனவே இணை வைப்பவர்கள் இமாமாக நின்று தொழுவிப்பதற்கு தடையுள்ளது. இணை வைப்பவர்கள் இமாமத் செய்யக் கூடாது எனும் போது. அவர்களைப் பின்பற்றித் தொழுவதும் தடுக்கப்பட்டது தான் என்பதில் சந்தேகமில்லை என்று ஒரு தவ்ஹீது? பத்திரிக்கையில் எழுதியுள்ளார்கள். உள்ளடக்கம் (வெளியடக்கம்) என்ற வார்த்தை ஜாலத்தைப் பயன்படுத்தி சுற்றி வளைத்து இப்படி ஒரு விளக்கத்தை எழுதியுள்ளார்கள். இதையே இவர்களது எதிர் தரப்பு மவுலவிகள் எழுதி இவர்கள் சரியான கருத்தில் இருந்திருந்தால் எப்படி எழுதி இருப்பார்கள். இந்த 9:17 வது வசனத்தில் யாரைப் பற்றி கூறப்பட்டுள்ளது என்பதை அறியாதவர்கள் என்று சொல்ல முடியாது. அறிந்து கொண்டுதான் சுயநலத்துக்காகவும் சுயஇலாபத்துக்காகவும் வருவாய்க்காகவும் தங்கள் எஜமான விசுவாசத்தைக் காட்டவும் இப்படி எழுதியள்ளார்கள் என்ற விமர்சனங்களால் விலாசி தள்ளி இருப்பார்கள்.
நிர்வாகம் என்பது வேறு தொழுகை (வணக்கம்) என்பது வேறு.
நிர்வகித்தல் என்பது இமாமாக நின்று தொழுவிப்பதையும் உள்ளடக்கும் என்பதோடு நிறுத்தி விட்டால், இமாமாக நின்று தொழுவிப்பது உள்ளடக்கம் ஆகாது என்ற பதில் வந்து விடும். எனவே யாரும் மறுக்க முடியாது என்றும் எழுதி அந்த கருத்துக்கு அவர்களே முற்றுப்புள்ளி வைத்துக் கொண்டார்கள். நிர்வகித்தல் (நிர்வாகம்) என்பது வேறு தொழுகை (என்ற வணக்கம்) என்பது வேறு. தொழுகை என்ற வணக்கம் எப்படி நிர்வகித்தலில் (நிர்வாகத்தில்) உள்ளடக்கம் ஆகாதோ அது போல் தொழுகையைச் சார்ந்த இமாமத் (தொழக்கூடியவர்களில் ஒருவராக இருக்கும் இமாம்) என்பது நிர்வகித்தலில் அடங்காது. வெளிரங்கமாக கூறப்படாத ஒன்றுக்கு சுற்றி வளைத்து உள்ளடக்கும் என்று விளக்கம் கூறி கச்சை கட்டி நிற்கிறார்கள். இப்படி கச்சைக்கட்டி நிற்பவர்கள் அதற்கு அடுத்த ஆயத்தானா 9:18வது வசனத்தில் ஸகாத் கொடுக்கும் தகுதியில் உள்ளவர்கள்தான் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும் என்று தெளிவான நேரடியான கட்டளை உள்ளதை கண்டு கொள்வதே இல்லை.
ஏன் அந்த பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்?
இவர்களது பள்ளிகளில் ஸகாத் வாங்கும் நிலையில் உள்ளவர்கள், எங்காவது ஸகாத் பணம் கிடைக்காதா? என்று தேடி அலைபவர்கள். எந்த நேரம் பார்த்தாலும் கையேந்தாத குறையாக எதன் பெயரிலாவது பிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள்தான் நிர்வாகிகளாக உள்ளார்கள். இவர்கள்தான் தங்களை குர்ஆன் ஹதீஸ்கள்படி நடப்பவர்கள் போல் காட்டிக் கொள்கிறார்கள். உள்ளடக்கம் விளக்கம் கூறி இல்லாத சட்டத்தின் மூலம் ஒரு சாரார் பின் தொழக் கூடாது என்று கூறி வருபவர்கள் இந்த ஆயத்தில் வெளிரங்கமாக கூறப்பட்டுள்ள சட்டத்தை ஏன் செயல்படுத்துவதே இல்லை. அன்று கத்தம் பாத்திஹா மவுலிதுகளெல்லாம் காசுக்காகத்தான் ஓதினோம். கொள்கைக்காக அல்ல என்று சொன்ன இவர்கள் இன்று குர்ஆன் ஹதீஸ் என்று சொல்வதும் காசுக்காகத்தான். உண்மையிலேயே இவர்கள் கொள்கைவாதிகள் என்றால் ஏன் அந்த பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்?
பராமரிப்பு பணிகள்தான் நிர்வகித்தல் என்பதில் அடங்கும்.
நிர்வகித்தல் என்றால் என்ன என்பதற்கு அதே அத்தியாயத்தில் தொடராக வரும் ஆயத்துகளிலேயே விளக்கம் உள்ளது. ஷஷஹாஜிகளுக்கு தண்ணீர் வழங்கி, மஸ்ஜிதுல் ஹராமை நிர்வகிப்போரை அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைப் போல் சமமாக கருதுகிறீர்களா?...|| இது அல்குர்ஆனின் 9:18வது வசனமாகும். பராமரிப்பு பணிகள்தான் நிர்வகித்தல் என்பதில் அடங்கும். வணக்கங்கள் நிர்வகித்தல் என்பதில் அடங்காது என்பதை இந்த வசனம் தெளிவுபடுத்தி அவர்களது கூற்றை பொய்ப்படுத்துகிறது. அவர்களது வாதத்தை ஏற்றுக் கொண்டால் அவர்களின் வாதப்படி குர்ஆனில் உள்ள முஷ;ரிக் என்பது சுன்னத் ஜமாஅத்தினரைத்தான் குறிக்கிறது என்றால், இதை சுயநல நோக்கம் இன்றி கொள்கை அடிப்படையில்தான் கூறி வருகிறார்கள் என்றால் இவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்.
அல்லாஹ்வுடைய பள்ளியைத்தான் புறக்கணிக்கச் சொல்கிறார்கள்.
இவர்களால் முஷ;ரிக்குகள் என்று அடையாளம் காட்டப்பட்டுள்ள சுன்னத் ஜமாஅத்தினர்களிடமிருந்து பள்ளிகளை மீட்கும் பணிகளில்தான் ஈடுபட்டிருக்க வேண்டும். அந்த ஆயத்துகள் அவர்கள் பின்னால் நின்று தொழாதீர்கள் என்று சொல்லவில்லை. முஷ;ரிக்களிடம் அல்லாஹ்வுடைய பள்ளியின் நிர்வாகமே இருக்கக் கூடாது என்றும் அவர்கள் பள்ளியின் எல்கைக்கே வரக்க கூடாது என்றும்தான் கட்டளை இட்டுள்ளது. எனவே நேரடியாக சொல்லப்பட்டுள்ள கட்டளையை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டு இமாமத்தில் மட்டும் குறியாக உள்ளார்கள் என்றால் அவர்களின் இந்தக் கூற்று கொள்கை அடிப்படையிலானது அல்ல முழுக்க முழுக்க சுய நலம்தான் என்பதை தெளிவுபடுத்துகிறது. அவர் தொழ வைக்கும் பள்ளிக்கு போகாதே இவர் தொழ வைக்கும் பள்ளிக்குப் போகாதே என்பதன் மூலம் எதைப் புறக்கணிக்கச் சொல்கிறார்கள். முதன் முதலில் புறக்கணிக்கச் சொல்வது அல்லாஹ்வுடைய பள்ளியைத்தான்
இந்த அடிப்படையில்தான் மவுலவி கமருஸ்ஸமான் போன்றவர்கள் கொல்லப்பட்டார்களா?
அதே அத்தியாயத்தில் 5 வது வசனத்தில், அந்த இணை வைப்போரை (முஷ;ரிக்குகளை) எங்கு கண்டாலும் (கண்ட இடத்தில்) கொன்று விடுங்கள்! அவர்களை பிடியுங்கள்! அவர்களை முற்றுகையிடுங்கள்! ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களுக்காகக் காத்திருங்கள்!... என்று கட்டளை இடப்பட்டுள்ளது. இன்னவர்களெல்லாம் இணை வைக்கும் இமாம்கள் எனவே அவர்கள் பின்னால் நின்று தொழக் கூடாது என்பவர்கள் இதை செயல்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்களா? இந்த அடிப்படையில்தான் மவுலவி கமருஸ்ஸமான் போன்றவர்கள் கொல்லப்பட்டார்களா? உண்மையிலேயே குர்ஆன் ஹதீஸ்களை நிலை நாட்டத்தான் பாடுபடுகிறார்கள் என்றால் இவர்கள் வாதப்படி யாரை முற்றுகையிட வேண்டும்? யாரை முற்றுகையிட்டுக் கொண்டிருக்pறார்கள்? எங்கு போய் முற்றுகை போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்? குர்ஆனில் கூறப்பட்டுள்ள முஷ;ரிக் என்பது சுன்னத் ஜமாஅத்தினரைத்தான் குறிக்கிறது என்ற அவர்களின் வாதம் பொய்யானது என்பதற்கு அவர்களது செயல்கள் மூலம் அவர்களே சான்று பகன்று கொண்டிருக்கிறார்கள்.
சொல்வது நபி வழி செல்வது iஷத்தான் வழி.
மேலும் மஸ்ஜித் தக்வாவில் தொழுதால் தொழுகை கூடாது. அந்த மவுலவி பின்னால் தொழுதால் தொழுகை கூடாது என்று சொல்லி வந்தவர்கள் இலாஹியை அத்வானி உமாபாரதி என விமர்சித்த மவுலவி ஜே.எஸ். ரிபாஈ அவர்களை வைத்து இலாஹி குடும்பத்தினர் திருமணம் நடநத்தலாமா? இது சம்பந்தமாக வெப் சைட்டுக்கு கேள்விகள் அனுப்பியும் பதில் இல்லை என்று இதை ஒரு பெரிய பிரச்சனையாக பேசி வருகிறார்கள். நாம் எந்த வெப் சைட்டும் வைத்திருக்கவில்லை. இவர்களாக கற்பனை செய்து கொண்டு எங்காவது கேள்வி அனுப்பினால் நாம் பொறுப்பாக முடியுமா? அத்வானி உமாபாரதி என்ற விமர்சன வார்த்தைக்கு சொந்தக்காரர் ரிபாஈ அல்ல என்பதை அறிந்த நாம் அந்த வார்த்தைக்குரியவரை விமர்சிக்க வாய்ப்பு கிடைத்த போது அதே வார்த்தையால் விமர்சித்து விட்டோம். சரி ரிபாய்தான் சொன்னார் என்றே வைத்துக் கொள்வோம். சமாதானமே ஆகக் கூடாதா? இறப்பு வீட்டுக்கு விசாரிக்க வந்தவர்களை காக்க வைத்து சந்திக்காமல் வீட்டில் இல்லை என பொய் கூறி திருப்பி அனுப்பி பெற்ற தாயின் பிணத்தை வைத்து பிழைப்பு நடத்தும் மடச் சாமியார் மாதிரியா பகைமை பாராட்ட வேண்டும். 2 பேரிடையே பிணக்கு ஏற்பட்டால் அவர்களிடையே சமாதானத்தைத்தான் ஏற்படுத்த வேண்டும். இதுதான் ஒழுங்கான முஸ்லிம்களின் பண்பாகும். சமாதானமாக ஆகிவிட்டவர்களிடம் போய் உன்னை அப்படி பேசினானே இப்படி பேசினானே என பிரச்சனையை தூண்டுகிறார்கள் என்றால் இவர்கள் சொல்வது நபி வழி செல்வது iஷத்தான் வழி என்பது தெளிவு.
அழகாக பேசக் கூடிய தவ்ஹீது மவுலவிகள்.
காஜா நாயகம் தெரு ஜமாஅத்தார்கள் இதற்கு முன்பு அந்த தெருவில் நடந்த திருமணத்திற்கு அசிங்கமாக பேசும் மவுலவி வரக் கூடாது என்றார்கள். அசிங்கமாக பேசும் மவுலவிதான் வருவார் என்றதால்தான் அந்த திருமணத்திற்கு காஜா நாயகம் தெரு ஜமாஅத்தார் நிக்காஹ் பதிவேடு கொடுக்க மறுத்ததோடு திருமணத்தையும் புறக்கணித்தார்கள். இலாஹி இல்லம் முன் நடந்த திருமணத்தில் கலந்து கொண்டு மவுலவி ஜே.எஸ். ரிபாஈ அவர்களின் உரையைக் கேட்ட 3 தெரு ஜமாஅத்தார்களும், ஷஷஇவ்வளவு அழகாக பேசக் கூடிய தவ்ஹீது மவுலவிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்! இப்படி அழகாகப் பேசினால் நாங்கள் ஏன் தவ்ஹீது திருமணங்களை புறக்கணிக்கப் போகிறோம். சபை ஒழுக்கம் பேணாமல் நாய், பேய், பன்னி, அவன் ஜமாஅத்தில் போறான், அவன் மனைவி விபச்சாரத்தில் போறாள் என்று மேடைகளில் அசிங்கமாக பேசுவதால்தான் அந்த கழிசடை மவுலவியை வரக் கூடாது என்கிறோம்|| என்றார்கள்.
ஆய்வு செய்யப்பட வேண்டிய அந்த மவுலவி யார்?
அசிங்கமாக பேசும் கூட்டத்தைச் சார்ந்தவர்கள் கொள்கைக்காக உள்ளவர்கள் அல்ல சுயநலமிகள்தான் வரட்டு கவுரவம் பிடித்தவர்கள்தான் தங்களது வரட்டு கவுரவத்தை நிலை நாட்ட எதையும் செய்வார்கள் என்பதற்கு பல நிகழ்ச்சிகள் ஆதாரங்களாக உள்ளன. அவற்றில் ஒரு சிலவற்றை முந்தைய வெளியீடுகளில் சுட்டிக் காட்டி இருக்கிறோம். அதன் தொடரைப் பார்ப்போம். பிறை விஷயத்தில் ஒரு சாரார் கிராமவாசிகள் மதீனாவில் வந்து சொல்லும் ஹதீஸை ஆதாரமாகச் சொல்கிறார்களே என்று கூறிபோது அந்த ஹதீஸை பலவீனமானதாக ஆக்கி விடுங்கள் என்று ஒரு மவுலவி கூறியுள்ளார். இதை அறிந்ததும் அந்த ஹதீஸ் பலஹீனமானது என்றால் அது ஆய்வு செய்ய வேண்டிய ஒன்றுதான். அதை பலவீனமானதாக ஆக்கி விடுங்கள் என்று கூறி இருந்தால் அந்த மவுலவி ஆய்வு செய்யப்பட வேண்டியவர், அடையாளம் காட்டப்பட வேண்டியவர் என்று கூறினோம். ஆய்வு செய்யப்பட வேண்டிய அந்த மவுலவி யார்? என்பதை அறிய விரும்புகிறவர்கள் அறிஞர் ஹாமித் பக்ரி அவர்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளுங்கள். அந்த ஹதீஸை பலவீனமானதாக ஆக்கி விடுங்கள் என்று அந்த மவுலவி கூறியபொழுது உடனிருந்தவர்களில் அறிஞர் ஹாமித் பக்ரியும் ஒருவர் என்பதை நாம் உறுதி செய்து கொண்டோம்.
அந்த ஹதீஸுக்கு வேறுவிதமான அர்த்தம்.
அந்த ஹதீஸை பலவீனமானதாக ஆக்கி விடுங்கள் என்று சொன்னதும் அறிஞர் ஹாமித் பக்ரி அவர்களும் இன்னொரு மவுலவியும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். அதற்குப் பிறகுதான் வாதத்தின் மூலம் அந்த ஹதீஸுக்கு வேறுவிதமான அர்த்தம் கூறி எதிர் தரப்பினர் கருத்தை தவறானதாக ஆக்கி உள்ளார்கள். இப்படிப்பட்ட மவுலவியார் கூட்டம்தான் அவரை பின் பற்றி தொழக் கூடாது. இவரைப் பின் பற்றி தொழக் கூடாது. அந்த பள்ளிக்கு தொழப் போகக் கூடாது. தொழுதால் தொழுகை கூடாது என்றெல்லாம் கூறி வருகிறார்கள். அவர்களின் கூற்றுக்கு ஏற்றவாறு விளக்கம் சொல்வதற்கு வசதியாக ஆயத்து ஹதீஸ்களை முன் பின் துண்டித்தும் வளைப்பு வாதம் செய்தும் வருகிறார்கள்.
ஏன் அந்த மாதிரி போட்டோவை போட்டார்கள்.
புனிதமிகு ரமழானில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியான இப்தார் நிகழ்ச்சியை எடுத்துக் கொள்வோம். முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்த இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்துவோம் என்று சிலரும், இந்திய சூழலை கருத்தில் கொண்டு பிற மதத்தவர்களுடனான நட்பை பலப்படுத்த, புதுப்பிக்க இதை பயன்படுத்திக் கொள்வோம் என்று ஒரு சிலரும் பிறமத பிரமுகர்களை அரசியல் கட்சித் தலைவர்களை அழைத்து நோன்பு கஞ்சி கொடுத்து வந்தார்கள். இதை மார்க்கத்தில் ஹராமாக்கப்ட்ட நிகழ்ச்சி போல் சித்தரித்து எதிர்த்து வந்தார்கள் ஒருசாரார். முஸ்லிம்களை கண்ணியப்படுத்தும் நோக்கில் அவர்கள் அறிந்துள்ள முறைப்படி தொப்பி அணிந்து வந்தால் அதையும் கிண்டலடித்தார்கள். அப்படிப்பட்டவர்கள் அதே இந்துத் தலைவர் தொப்பி அணிந்த மாதிரியான போட்டோவை விளம்பரமாக போட்டு காசு விட்டார்களே இது சரியா? அது மாதிரியான போட்டோக்களை அரசியல் அமைப்பினர் போடலாம். அதை விமர்சித்து ஆன்மீகத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதாகக் கூறிக் கொள்பவர்கள் ஏன் அந்த மாதிரி போட்டோவை போட்டார்கள். இதையும் நாம் கேட்க மாட்டோம்.
100 பேரின் இப்தாருக்கு 22 ஆயிரம் செலவா?
நோன்புக் கஞ்சியை மட்டும் கொண்டு நடந்த ரமழான் இப்தார் நிகழ்ச்சிகளை இஸ்ராப் என விமர்சித்தவர்கள். திருமண வீட்டில் இஸ்ராபான செலவு செய்கிறார்கள் என்று கூறி திருமண விருந்துகளை புறக்கணித்து தங்களை சுத்த சூபிகள் போல் காட்டிக் கொண்டிருப்பவர்கள் முஹர்ரம் நோன்புக்காக இப்தார் நிகழ்ச்சி நடத்தினார்கள். கேள்விகளிலிருந்து தப்பிக்க மக்களை ஏமாற்றி இந்த நிகழ்ச்சிக்கு வேறு ஒரு பெயரையும் வைத்துக் கொண்டார்கள். நோன்பை திறக்க தவ்ஹீது பள்ளிவாசலுக்கு வருமாறு மாண்புமிகு அமைச்சர் நயினார் நாகேந்திரன் அவர்களையும் கவுன்ஸிலர்களையும் மற்றும் சில மாற்றுமத சகோதரர்களையும் இவர்களால் கழிசடைகள் என்று கூறப்பட்ட அரசியல்வாதிகளையும் அழைத்துள்ளார்கள். பொறித்த கோழிக் கறி, ஐஸ் கிரீம் என வகை வகையான உணவுடன் 100 பேர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட அந்த நிகழ்ச்சிக்கு 22000 (இருபத்தியிரண்டாயிரம்) ரூபாய் செலவு ஆகி உள்ளதாக கணக்கு கூறி உள்ளார்கள். 100 பேரின் இப்தாருக்கு 22 ஆயிரம் செலவா? இந்த கணக்கு சரியா? என கணக்கு கேட்கவில்லை. இது இஸ்ராப் இல்லையா? நோன்புக்கு சம்பந்தமில்லாதவர்களை நோன்பு நோற்காதவர்களை நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகளுக்கு அழைத்து நோன்பு திறப்பது போல் நடிக்க வைப்பவர்கள் நோன்பாளிகளையும் நோன்பையும் கிண்டல் செய்பவர்களே என்று மற்றவர்களைப் பார்த்து சொன்னவர்கள் இப்படிச் செய்யலாமா? மனிதர்களை தெய்வம் என்று சொல்லக் கூடியவர்களுடன் ஒரே மேடையில் இருக்கலாமா? என்றெல்லாம் கேட்க மாட்டோம். காரணம் இவர்கள் சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாக உள்ள ஊருக்கு உபதேசிகள். பிணத்தை வைத்து பிழைப்பு பண்ணுபவன் கூட அடுத்தவன் பிணத்தில்தான் பிழைப்பு நடத்துவான். பெற்ற தாயின் பிணத்தின் மீது பிழைப்பு நடத்தவும் அனுதாபம் தேடவும் முயற்சிக்க மாட்டான். அந்த நோக்கில் பிண வீட்டில் வீடியோ பண்ணிக் கொண்டு பிளாஷ; நியூஸ் ஓட விடவும் மாட்டான். அந்த மாதிரி பிணத்தை வைத்து பிழைப்பு நடத்துபவர்களை விட கேடு கெட்டவர்கள் இவர்கள் என்பது நமக்குத் தெரியும்.
அமைச்சரை கண்டபடி ஏசிய தவ்ஹீது மவுலவி.
முஹர்ரம் 10 ஆம் நாள் நோன்பை திறக்க தவ்ஹீது பள்ளிவாசலுக்கு வருமாறு மாண்புமிகு அமைச்சர் நயினார் நாகேந்திரன் அவர்கள் அழைக்கப்பட்டதும் நிகழ்ச்சிக்கு அவர் வராததும் ஏன் வரவில்லை என்பதும் நமக்குத் தெரியாது. நோன்பு திறக்க தவ்ஹீது பள்ளிக்கு அமைச்சர் வராததால் அமைச்சரை கண்டபடி ஏசி இழிவுபடுத்தியுள்ளார் தவ்ஹீது மவுலவி. முஸ்லிம்களையே தேவை என்றால் கலிமாச் சொன்ன முஸ்லிம்களே வாருங்கள் என்பதும் தேவையில்லை எனில் காபிர்களே என்பதும் அவரது வாடிக்கை. எனவே அமைச்சரை இழிவாகப் பேசியதில் ஆச்சரியம் இல்லை. இது அந்த தவ்ஹீது மவுலவின் குணம் அது பற்றியும் நமக்குத் தேவை இல்லை. இந்த கால கட்டத்தில் அ.இ.அ.தி.மு.க.வின் பகுதிச் செயலாளர் அருமைமிகு அண்ணன் ஷhஜஹான் அவர்களுடன் நட்பு ரீதியாக நலம் விசாரித்து 2 முறை போனில் பேசிக் கொண்டோம். அப்படி பேசும்போது அமைச்சர் என்ற வார்த்தையைக் கூட நாம் சொல்லவில்லை. 3வது முறை பேசும்போதுதான் அமைச்சர் வராததற்குரிய காரணத்தை கேட்டு தெரிந்து கொண்டோம். அப்படி இருக்க இயல்பாக நடந்த போன் உரையாடலுடன் முடிச்சு போட்டு. அ.இ.அ.தி.மு.க.வின் பகுதிச் செயலாளர்; ஷhஜஹான் மூலம் அமைச்சரை வர விடாமல் நாம் தடுத்து விட்டதாக கதை விட்டுள்ளனர் இதைத்தான் கண்டிக்கிறோம்.
உலக முஸ்லிம்களுக்காக பாடுபடுவர்கள்.
டாக்டர் முஹம்மது பகத்சிங் இவர் பரம்பரை முஸ்லிம் அல்ல இஸ்லாத்தை தழுவியவர். இவர் இஸ்லாத்தை தழுவிய நாளிலிருந்து ஆர்.எஸ்.எஸ் போன்ற சமூக விரோத கும்பல்களால் பாதிப்புகளுக்குள்ளாகி வருகிறார். இவருக்காக த.மு.மு.க. குரல் கொடுத்ததால், இவருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டாலும் நாங்கள் கண்டு கொள்ள மாட்டோம் என்று முடிவு செய்துள்ளார்கள் முஹர்ரம் 10 இப்தார் தவ்ஹீது அணியினர். இதுதான் அவர்கள் கண்ட தவ்ஹீது போலும். சமீபத்தில் பைக்கில் வந்து கொண்டிருந்த டாக்டர் முஹம்மது பகத்சிங் அவர்களை கிருஷ;ணவேணி என்ற வாகனத்தை ஓட்டியவன் வீம்புக்காக வந்து இடித்து தள்ளியுள்ளான். இதை ஒட்டி அந்த வாகனம் மறிக்கப்பட்டு நியாயம் கேட்கப்படுகிறது. வாகனத்தில் இருந்த முஸ்லிம் அல்லாதவர்களும் நியாயம் பேசியுள்ளார்கள். அப்பொழுது அந்த வழியாகச் சென்ற தவ்ஹீது மவுலவிகள் என்போர் கண்டும் காணாதது போல் சென்றுள்ளார்கள். கண் முன்னால் நடக்கும் நிகழ்ச்சியில் நியாயம் பேசாத இவர்கள்தான் உலக முஸ்லிம்களுக்காக பாடுபடுவர்கள் போல் தங்களை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த இக்கட்டான நிலையிலும் இவர்களுக்கு டாக்டர் முஹம்மது பகத்சிங் அவர்கள் ஸலாம் சொல்லி உள்ளார். மாற்று மதத்தவரை அழைத்து நோன்பு திறக்க வைக்கும் தவ்ஹீது மவுலவி இஸ்லாத்தில் இணைந்தவர் சொன்ன ஸலாமுக்கு பதில் சொல்லாமல் போய் விட்டார்.
இஸ்லாத்தை தழுவிய அந்த சகோதரரின் மனம் எவ்வளவு புண் பட்டிருக்கும்.
இஸ்லாத்தை தழுவிய சகோதரர் என்றால் அவர் முஸ்லிம்களால் அரவணைக்கப்பட வேண்டிவர் என்பதை அலிப், பே தெரியாதவர்களும் அறிந்து வைத்துள்ளார்கள். இந்த அறிவு கூட இந்த முஹர்ரம் 10 மவுலிக்கு இல்லை. பாதிக்கப்பட்ட நிலையில் நியாயம்தான் கேட்கவில்லை. பாதிக்கப்பட்ட நிலையில் நின்ற அந்த சகோதரரரின் ஸலாமுக்கும் பதில் சொல்லாமல் செல்கிறார் என்றால் இஸ்லாத்தை தழுவிய அந்த சகோதரரின் மனம் எவ்வளவு புண் பட்டிருக்கும். இந்த மாதிரி மவுலவிகள்தான் கலிமாச் சொன்ன முஸ்லிம்களை காபிர்கள் என்று கூறி அவர் பின்னால் தொழாதே. அந்த பள்ளியில் போய் தொழாதே தொழுதால் தொழுகை கூடாது என்று இஸ்லாத்தில் இல்லாத சட்டங்களை கூறி வருகிறார்கள். எனவே இன்னும் என்ன என்ன ஆயத்துகளைக் கூறி முஸ்லிம்களை காபிர்களாக ஆக்குகிறார்கள் என்பதை அடுத்தடுத்த வெளியீடுகளில் பார்ப்போம். இன்ஷh அல்லாஹ்.

Comments

Popular posts from this blog

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.