Posts

Showing posts from November, 2004

பி.ஜே. இடம் கொடுக்கப்பட்ட பணத்திற்கு அவர் கணக்கு காட்டவில்லை.

கண்ணியத்திற்குரிய திருவாரூர் ஏ. ஜபருல்லாஹ் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். நேற்று பேட்மாநகரம் எஸ். முஹம்மது பாரூக் அவர்கள் ஒரு மெயில் அனுப்பி இருந்தார். அது ஜே.பி.ஜி. பைலாக உள்ளது. முடிந்தவரை சிலருக்கு நேற்றே பார்வேடு பண்ணி விட்டேன். அதை அப்படியே டைப் செய்து இப்பொழுது அனுப்புகிறேன் பார்த்துக் கொள்ளவும். http://mdfazlulilahi.blogspot.com/2004/11/blog-post_21.html பழுலுல் இலாஹியின் குற்;றச்சாட்டுகளுக்குப் பதில் என பி.ஜே. துபைக்கு அனுப்பிய வீடியோவில் பி.ஜே. கூறி உள்ள 38 மவுலவிகளுடனும் அந்த 6 ஆடியோக்களுடனும் ஒரே மேடைக்கு வரவேண்டும். முஸ்லிம் டிரஸ்ட் த.மு.மு.க.வுக்கு சொந்தமானது, பி.ஜே. இடம் கொடுக்கப்பட்ட பணத்திற்கு அவர் கணக்கு காட்டவில்லை என்பது உட்பட அவர் மீது நான் கூறி உள்ள அனைத்திற்கும் நான் முபாஹலா பண்ணத் தயார். பிறர் மீது குற்றச்சாட்டுகள் கூறியுள்ள முபாஹலா பண்ணலாம் என்ற கொள்கை உடைய த.த.ஜ.வினர் குறிப்பாக மாநில தலைமைப் பொறுப்பாளர்கள் அனைவரும் முபாஹலா செய்ய வேண்டும். விரிவான விபரங்கள் முந்தைய வெளியீடுகளில் இருந்தாலும் பி.ஜே.யின் முபாஹலா அழைப்பு ஒரு பித்தலாட்டமே என்ற தலைப்பில் மதுக்கூர் அ...

ஷம்சுல்லுஹாபாய் அவர்களுக்குபேட்மாநகரம் எஸ். முஹம்மது பாரூக்.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம் 'ஏகத்துவம்'மாத இதழ் ஆசிரியர் எம். ஷம்சுல்லுஹாபாய் அவர்களுக்கு துபையில் பணி புரியும் பேட்மாநகரம் எஸ். முஹம்மது பாரூக் உடைய அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... பி.ஜே. அவர்களும் அவரது பின்னால் உள்ள உங்களைப் போன்றவர்களும்தான் உண்மையாளர்கள். டி.என்.டி.ஜே.யை விமர்சிப்பவர்கள் பொய்யர்கள் என்று நம்பி இருந்தேன். நான் துபை வந்த பின்தான் உங்கள் தரப்பான பி.ஜே.யின் டி.என்.டி.ஜே. பற்றி நான் வைத்திருந்த நல்லெண்ணங்களெல்லாம் தவிடுபொடியாயின. குறிப்பாக டி.என்.டி.ஜே.யின் கிளையான துபை ஜே.டி.யில் உள்ளவர்களின் முரண்பாடான செயல்களும் ரவுடித்தனமான பேச்சுக்களும் காரணமாக இருந்தது. ஒருவர் மீது குற்றச்சாட்டுக் கூறுவதும் ஆதாரம் கேட்டதும் ஓடி ஒளிவதுமான அவர்களது செயல்கள்தான் டி.என்.டி.ஜே. தரப்பு மீது நான் வைத்திருந்த நல்லெண்ணங்களை சுத்தமாக துடைத்து விட்டது. பி.ஜே.யின் நோட்டீஸைப் பார்த்து உங்கள் ஊரைச் சார்ந்த பழுலுல் இலாஹி பற்றி நான் கொண்டிருந்த கெட்ட எண்ணங்களெல்லாம் ஜே.டி.யினரின் நடவடிக்கைகளை பார்த்ததும் போய் விட்டது. அவரை நேரில் கண்டு அவரது தரப்பு நியாயங்களை கேட்க ஆரம்பித்தேன். அவர் ஷமுஸ்...

உணர்வில் வந்த பி.ஜெ.யின் உளறலுக்கு கோட்டை தங்கப்பாவின் பதில்.

சிறுபான்மை உதவி அறக்கட்டளை பொருளாளர் கோட்டை தங்கப்பா அவர்களுக்கு துபையில் பணி புரியும் கொடுங்கையூர் மனிதநேய இல்லம், 1.ஏ. 157, 24வது தெரு சென்னை 118 என்ற முகவரியைச் சார்ந்த மைதீன் உடைய அஸ்ஸலாமு அலைக்கும்.  நவம்பர் 05-11, 2004 உரிமை 09, குரல் 09 உணர்வு பக்கம் 14 பதில்கள் பகுதியில் எஸ். செய்யது அப்துல்லாஹ் துபை எனும் பெயரால் கோவை சிறைவாசிகளுக்கு உதவுவது சம்பந்தமாக ஒரு கேள்வி இடம் பெற்றிருந்தது.  அதற்கு அளிக்கப்பட்ட பதிலில் கோவை சிறைவாசிகளுக்கு உதவுவதாக இருந்தால் உணர்வு அலுவகத்திற்கு அனுப்புமாறு எழுதி உள்ளார்கள். கோவை சிறைவாசிகளுக்கு உதவுவதற்காக சிறுபான்மை உதவி அறக்கட்டளை (சி.டி.எம். டிரஸ்ட்) அமைத்து உதவி வருகிறீர்கள்.  சிறைவாசிகள் குடும்பப் பெண்களின் வேலை வேலை வாய்ப்பிற்காக டிரஸ்ட் சார்பில் மகளிர் சுய தொழில் உதவி மையம் நடத்தி வருகிறீர்கள். அதில் தயாரிக்கப்படும் பெண்கள் உள்ளாடையான ஷைனி பிரா ஏற்றுமதி சம்பந்தமாக துபை வந்துள்ள உங்களின் பதில் என்ன? வஅலைக்குமுஸ்ஸலாம். குணங்குடி ஹனீபா அவர்களின் மகனார் மைதீன் அவர்களே! நீங்கள் குறிப்பிட்டுள்ள பத்திரிக்கையில் பதில்...

குழப்பங்களும் குதர்க்கங்களும்.

இழந்த உரிமைகளை மீண்டும் பெறுவதற்கும், இருக்கும் உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும், சந்தியில் நிற்கும் நம் சந்ததிகளின், வருங்கால வாழ்வுரிமைகளை அடைவதற்காகவும், அனைத்துத் தரப்பு முஸ்லிம்களால், அனைத்துத் தரப்பு மக்கட்காகவும் சமுதாயத்தேவைகளைக் தங்கு தடையின்றி ஆற்றுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட நம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தன்னலம் மறந்து சமுதாயச் சேவையை மட்டுமே இலக்காக கொண்டு செயல்படும், தலை சிறந்த நிர்வாகிகளின் சீரிய அர்பணிப்புகளால் இன்று இமயம் போல் எழுந்து நிற்கின்றது. தமுமுக சமுதாயச் சேவைகளையும் மறுமை வெற்றிக்குத் தேவையான தவ்ஹிதுப் பணிகளையும் ஒருங்கே செய்து தனிமுத்திரை பதித்து வருவதை, இந்திய அரசே உற்று நோக்குகிறது. இந்திய முஸ்லிம்களுக்கே ஒரு ஒப்பற்ற உதாரணமாகச் செயல்பட்டு வரும் தமுமுகவில் 9 ஆண்டுகளாகத் தன் பேச்சாற்றலால், பலதரப்பட்ட மக்களையும் பெரிதும் கவர்ந்த தமுமுகவின் மூத்த தலைவர் சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தானாகவே தமுமுக-விலிருந்து விலகியது தவ்ஹிது பிரச்சாரத்தை முன்பை விட இன்னும் வீரியமாகச் செயல்படுத்த நல்ல வாய்ப்பாகவே அமையும் என்று தான் அனைத்து முஸ்லிம்களும் எதிர்ப...

நபி வழியா? நமது பாலிஸியா?

இந்த ஆக்கம் இறையச்சம் உடையவர்களால் மட்டுமே ஜீரணிக்க முடியும் என்பதை முதலிலேயே தெரிவித்துக் கொள்கிறோம். நமது சமுதாயத்தின் இன்றைய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு ஒற்றுமை, பிளவுகள் ஏன்? ஒன்றுபட என்ன வழி? இப்படி ஏதாவது ஒரு தலைப்பில் அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறும் ஒற்றுமை பற்றி எழுதுமாறு பல சகோதரர்கள் வற்புறுத்தினார்கள். நாம் அவற்றை தலைப்பாகக் கொண்டு எழுத விரும்பவில்லை. காரணம், பிரிவுகளை தவிர்க்க என்ன வழி? ஒற்றுமையின் அவசியம், ஒன்றுபடுவது எப்படி? என்பது பற்றியெல்லாம் விரிவாகவும் விளக்கமாகவும் ஆய்வுரைகளையும் ஆக்கங்களையும் தந்தவர்களே பிளவுகளுக்கு காரணமாக இருந்து பல பிரிவுகளை உண்டு பண்ணி விட்டனர். எனவே அந்த தலைப்பில் எழுதினால் யாரும் படிக்க மாட்டார்கள். அந்த அளவக்கு ஒற்றுமை சம்பந்தமான தலைப்புகள் மீது சமுதாய மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு விட்டது. எனவே நபி வழியா நமது பாலிஸயா? என்ற தலைப்பை நாம் தேர்வு செய்துள்ளோம். இரண்டு முனாபிக்குகளும் சமமானவர்களா? முனாபிக்குகள் என்றால் யார்? என்பது பற்றி விளக்கம் தரும் ஹதீஸ்களை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். எனவே முனாபிக்குகள் என்றால் யார்? என்ற விரிவான விளக...

சஹாபாக்களைப்பற்றி பி.ஜெ.யின் விமர்சனம்.

Image