Posts

Showing posts from September, 2004

10 லட்சம் ரூபாய் பரிசு.

பி.ஜே.யை பிடித்து வந்து அவர் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வைத்து விட்டால் 10 லட்சம் ரூபாய் பரிசு கண்ணியத்திற்குரிய சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. மேலப்பாளையம் கா.அ.முஹம்மது பழுலுல் இலாஹியாகிய நான் 1986ல் இருந்து பல ஆண்டுகளாக மவுலவி பி.ஜெய்னுல் ஆப்தீன் உலவி அவர்களை ஒரே மேடையில் சந்திக்க ஸைபுத்தீன் ரஷhதியை அழைத்து வந்தால் 5 ஆயிரம் ரூபாய் பரிசு. கலீல் அஹ்மது கீரனூரியை அழைத்து வந்தால் 10 ஆயிரம் ரூபாய் பரிசு என்று இது மாதிரி பல்வேறு விளம்பரங்கள் செய்திருக்கிறேன். அதே மேலப்பாளையம் கா.அ.முஹம்மது பழுலுல் இலாஹியாகிய நான் இப்பொழுது செய்யும் விளம்பரம், பி.ஜே. விட்ட சவால்படி அவரை பிடித்து வந்து அவர் கூறிய குற்றச்சாட்டுகளை அவர் கூறிய சாட்சிகளுடனும் ஆதாரங்களுடனும் வந்து மக்கள் மத்தியில் பகிரங்கமாக நேருக்கு நேர் நிரூபித்து நமது குற்றச்சாட்டுகளையும் பொய்ப்படுத்தி விட்டால் அல்லது அவரது கூற்றை உண்மைப் படுத்தி அவர்களது கொள்கைப்படி அவரும் அவரது சாட்சிகளும் முபாஹலா செய்து விட்டால் பி.ஜே.யை பிடித்து வந்தவர்கள் தனி நபராக இருந்தாலும் ஜமாஅத்தாக இருந்தாலும் 10 லட்சம் ரூபாய் பரிசு என அறிவிக்க...

த.த.ஜ. மக்கள் அமைப்பா? டிரஸ்ட்டா? ஏன் இந்த இரட்டை வேடம்?

மதுக்கூர் அய்யூப் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. பி.ஜே.யின் முபாஹலா அழைப்பு ஒரு பித்தலாட்டமே. ஏன்ற தலைப்பிலான விளக்க இதழின் பிரதியை கவரில் வைத்து உங்கள் பெயரை எழுதி நீங்கள் தீவிரமாக செயல்படுவதாகக் கூறிய அமைப்பில் கொண்டுபோய் கொடுக்கச் செய்தோம்  வாங்க மறுத்து விட்டார்கள். நீங்கள் தீவிரமாக செயல்படுவதாகக் கூறிய அமைப்பில் உங்களுக்கு இவ்வளவுதான் மதிப்பா? கைர். பிறகு நீங்கள் துபையில் தங்கி உள்ள இடத்திற்கு தேடி வந்த பின் அருகில் உள்ள கோட்டைப் பள்ளிக்கு நேரில் வந்து வாங்கினீர்கள். அதன் பிறகு உங்கள் பதிலை ஆவலுடன் எதிர் நோக்கி இருந்தோம் இதுவரை பதில் இல்லை. இதோ மொட்டைக் கடித முதல் எடுபிடி குவைத் ரசூல் மைதீன் முகவரி. பி.ஜே., லுஹா, இபுறாஹீம் ஆகிய ஏகத்துவம் ஆசிரியர் குழுவினர்களான த.த.ஜ.வினர்தான் மொட்டைக் கடிதங்கள் எழுதினார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் என்று 19-8-04 அன்று 050-4950191 என்ற நம்பரிலிருந்து பேசும்போது கேட்டீர்கள்.  பி.ஜே., லுஹா, இபுறாஹீம் ஆகியவர்தான் மொட்டைக் கடித ஆசாமிகள் என்பதற்கு ஏற்கனவே நாம் வெளியிட்டிருந்த ஆதாரங்கள் உங்களுக்கு திருப்தியாக இல்லை என்று...

த.த.ஜ.வின் நவீன பைஅத்து ஈமானுக்கு ஆபத்து.

த.மு.மு.க.வுக்குரிய முஸ்லிம் டிரஸ்ட், முஸ்லிம் மீடியா டிரஸ்ட் ஆகியவைகளைக் கைப்பற்றியுள்ள பி.ஜே. பத்திரிக்கைகளையும் அபகரித்து அதில் வார இதழை மட்டும் நடத்தி வருவது அனைவருக்கும் தெரியும்.  அந்த வார இதழில் த.த.ஜ. உறுப்பினர் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள பைஅத்கள் குர்ஆன் ஹதீஸ்கள் அடிப்படையில் சரிதான் என்பதுபோல் சுற்றி வளைத்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  அந்த மார்க்க விரோதமான விளக்கத்தைக் காட்டி மக்களை ஏமாற்றி வேக வேகமாக கையெழுத்து வேட்டையாடி ஆள் பிடித்து வருகிறார்கள் த.த.ஜ.வினர்.எனவே இப்பொழுது நடைபெறும் மார்க்க நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் பைஅத் பற்றிய கேள்விகள்தான் அதிகம் இடம் பெறுகின்றன.  பெரும்பாலானவர்கள் மூடி மறைத்து கேட்கும் இந்தக் கேள்வியை துபை கிஸஸ்ஸில் நடந்த கூட்டத்தில் பேசிய பெரம்பலூர் நாஸர் அலி கான் அவர்களிடம் த.த.ஜ. உறுப்பினர் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள பைஅத்கள் குர்ஆன் ஹதீஸ்கள் அடிப்படையில் சரியா? என்று தெளிவாகவே கேட்டார்கள்.  த.த.ஜ. உறுப்பினர் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள 2 பைஅத்களும் இஸ்லாத்திற்கு விரோதமானதுதான் என்பதை தெளிவாக விளக்கி பேசினார்...

பி.ஜே.யின் முபாஹலா அழைப்பு ஒரு பித்தலாட்டமே.

கண்ணியத்திற்குரிய முஸ்லிம்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். 19-8-04 அன்று இரவு 11-47க்கு 050-4950191 என்ற நம்பரிலிருந்து மதுக்கூர் ஐயூப் என்பவர் போன் செய்து என்னிடம் பேச வேண்டும் என்றார். பிஸியாக இருப்பதால் காலையில் பேசுவோம் என்றேன்.  தன்னை பி.ஜே. அணி என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், தான் பி.ஜே. அணியில் தீவிரமாக செயல்படுவதாகவும் கூறிவிட்டு, “உங்கள் வெளியீடுகள் சம்பந்தமாக பேசணும். உங்கள் வெளியீடுகளை நாங்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை உங்கள் வெளியீடுகளைப் பார்த்தால் எங்களுக்கு ஆத்திரம் வருகிறது” என்று கூறினார்.  நமது வெளியீடுகளை ஒரு பொருட்டாக கருதவில்லை என்றால் ஏன் ஆத்திரம் வருகிறது உங்களுக்கு, ஏன் அது சம்பந்தமாக பேசணும் என்கிறீர்கள் என்று கேட்டோம் பதில் இல்லை. நியாயவான் என்றால் என்ன செய்ய வேண்டும். பி.ஜே. மற்றும் ஏகத்துவம் பத்திரிக்கை ஆசிரியர்களெல்லாம் சேர்ந்து மொட்டைக் கடிதம் போடுகிறார்களே அதை தட்டிக் கேட்டீர்களா? என்றேன்.  மொட்டைக் கடிதம் என்கிறீர்கள் பிறகு எப்படி அவர்கள் எழுதினார்கள் என்கிறீர்கள் என்றார்.  அதற்குரிய ஆதார விளக்கத்தை வெளியிட...

வேஷம் கலைந்தது

அல்லாஹ்வின் திருப்பெயரால். வெளியீடு பேராசிரியர் எஸ். எச். அமீருத்தீன் அமீர் வில்லா 26, ஜானகிராம் காலனி அரும்பாக்கம், சென்னை – 600 108. அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்! சமீபத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திலிருந்து பி.ஜே. வெளியேறிய சம்பவம் தமிழக முஸ்லிம்களிடையே ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பி.ஜே. த.மு.மு.க.விலிருந்து விலகினாரா? அல்லது விலக்கப்பட்டாரா? அவரின் விலகலுக்கு உண்மையான காரணம் என்ன? கொள்கை மோதல் என்று அவர் தரப்பிலிருந்து கூறப்படுவது சரியா? அல்லது உள் அந்தரங்கமான வேறு காரணம் எதுவும் உண்டா? இக்கேள்விகளுக்கு சரியான விடை காணவே இப்பிரசுரம் எழுதப்பட்டுள்ளது. இங்கு எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு வரிக்கும், எழுத்துக்கும் ஆதாரங்கள் உண்டு. எதுவும் ஊகத்தின் அடிப்படையில் எழுதப்படவில்லை. அவரைக்குறித்து காழ்ப்புணர்ச்சி எதுவும் எனக்கில்லை. நடந்த சம்பவங்களும் அதன் பாதிப்புகளுமே அசைக்கு முடியாத ஆதாரங்களாய் விளங்குகின்றன. ஆகவே அச்சம்பவங்களை கோர்வை செய்து நடுநிலை நின்று ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள இதனை வாசகர்கள் விருப்பு, வெறுப்புக்கு ஆளாகாமல் திறந்த மனதுடன் படிக்க வேண்டுகிறேன்...