இஸ்லாமிய பிரச்சாரகர்களின் குறைகளை பகிரங்கப்படுத்தலாமா?
கண்ணியத்திற்குரிய சகோதரர் சாதிக் அவர்கட்கு, கா.அ.முஹம்மது பழ்லுல் இலாஹியின் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
தவ்ஹீது கொள்கையின் பெயராலும் தவ்ஹீது அமைப்புகளின் பெயராலும் பிழைப்பு நடத்தி வரும் வகையறாக்களின் பொய்களை அடையாளம் காட்டியும், இஸ்லாமிய விரோத போக்குகளை கண்டித்தும் விமர்சித்தும் பல தலைப்புகளில் விளக்க இதழ்கள் வெளியிட்டுள்ளோம். தாங்கள் பி.ஜே. அவர்களின் சி.டி.க்களை பார்த்தீர்களா? பார்த்து விட்டு எழுதுங்கள் என்று மெயில் அனுப்பி இருந்தீர்கள் சந்தோஷம். உங்கள் கேள்விக்குரிய பதிலை பார்ப்பதற்கு முன் நமது விளக்க இதழ்களை ஒட்டி உலவி வரும் சில கேள்விகளைப் பார்ப்போம்.
பிரச்சாரப் பணி பாதிக்காதா?
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை இப்படி கடுமையாக விமர்சிக்கலாமா? என்னதான் இருந்தாலும் மார்க்க அறிவு உடைய அவர்களது மனதை புண்படுத்தலாமா? மார்க்கப் பிரச்சாரகர்களின் குறைகளை வெளிப் படுத்தலாமா? அவர்களது இமேஜ் பாதிக்கப்படும் பொழுது பிரச்சாரப் பணி பாதிக்காதா? இவ்வளவு கடுமையாக விமர்சிக்கலாமா? இது போன்ற கேள்விகளை உலவி வரச் செய்துள்ளனர். உயர்ந்த நோக்கம் கொண்டதுபோல் தோன்றும் இந்தக் கேள்விகளை உலவி வரச் செய்துள்ளவர்களின் பிதா யார்?
நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பது போல் ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. எந்த அமைப்பும் தலைமையும் விமர்சனத்திற்கு உட்பட்டே ஆக வேண்டும். விமர்சிக்க முடியாத தலைமை என எந்த ஒரு தலைமையும் கூறிவிட முடியாது. இப்படி தத்துவம் கூறி ஒவ்வொரு தலைமையையும் விமர்சித்தார்.
உலகில் உள்ள முஸ்லிம் ஆட்சித் தலைமையிலிருந்து அமைப்புத் தலைமை வரை இவர் கூறாத குறைகள் இல்லை, விமர்சிக்காத வார்த்தைகள் இல்லை. விமர்சனம் செய்வதையே தொழிலாகக் கொண்ட இவர் விமர்சிக்காத தலைமையே உலகில் கிடையாது. சீட்டுக்கு மாறும் அமைப்பு நோட்டுக்கு மாறும் அமைப்பு வீதியில் இறங்காத ஜிஹாதுக்கு துணியாத கோழைத்தனமான அமைப்பு என்று இவர் விரும்பாத அமைப்புகள் பற்றி விமர்சித்தார்.
முஸ்லிம்களை முஸ்லிம் பெயர் தாங்கிகள் என்றும், முஸ்லிம் பேச்சாளர்களை கூலிக்கு மாரடிப்பவர்கள என்றும் சுன்னத் ஜமஅhத் மவுலவிகளை சட்டி சோறு திண்பவர்கள் என்றும் இன்ன பிற வார்த்தைகளாலும் விமர்சித்தார். அவருக்கு ஆபத்து ஏற்பட்ட போது மட்டும் லாஇலாஹ இல்லல்லாஹு... கலிமாச் சொன்ன முஸ்லிம்களே ஓடி வாருங்கள் என்று அவர்களையும் முஸ்லிம்களாக ஏற்று அழைத்து பாதுகாப்பு தேடிக் கொண்டார்.. இப்பொழுது சுன்னத் ஜமஅhத் மவுலவிகளையும் முஸ்லிம்களையும் காபிர்கள் என்கிறார்.
இவர் தவ்ஹீதுவாதிகள் என்று ஒப்புக் கொண்டவர்களையாவது சும்மா விட்டாரா?; தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் போல் ஊர் ஊராய்ப் போய், அவன் அவளோடு போனான், இவன் இவளோடு போனான், அவன் பொண்டாட்டி இப்படி சொன்னாள் என்று முஸ்லிம் அல்லாதவரையும் அல்லாஹ்வுடைய பள்ளியில் கூட்டி வைத்து அசிங்கங்களை வீடியோ படம் எடுத்து வெளியிட்டார். இப்படி யாரையும் விட்டு வைக்காமல் எந்த ஒரு பிரச்சாரகரையும் விட்டு வைக்காமல் பொய்களை புனைந்து விமர்சித்து வந்தார். அரங்கம் முதல் அந்தரங்கம் வரை அபாண்டங்களை சுமத்தி அணு அணுவாக விமர்சித்து வந்தார்.
அப்படிப்பட்டவர் கூறி வரும் பொய்களும் போலித்தனமும் அடையாளம் காட்டப்பட்டு சுய ரூபம் தோலுரித்து காட்டப்படும்போதெல்லாம் இது மாதிரியான கேள்விகளை உலவி வரச் செய்வார். அதுபோல்தான் இப்பொழுதும் உலவி வரச் செய்துள்ளார். கேள்வி யாருடையதாக இருந்தாலும் அது சரியா? தவறா? என்றுதான் பார்க்க வேண்டும்.
அவர் மற்ற பிரச்சாரகர்களை விமர்சிக்கும்போது என்ன விளக்கம் கூறி அவர் செய்த விமர்சனங்களை நியாயப்படுத்தினாரோ அதையே அவருக்கு பதிலாக முன்பு கூறி இருந்தோம். அவர்கள் கூற்றே அவர்களுக்குப் பதில் என்று மீண்டும் கூறி விடலாம். இதுதான் நடை முறை. ஆனால் நாம் மார்க்கத்தின் நிலை என்ன? என்பதை அறிந்து செயல்படுவோம். செய்த விமர்சனங்கள் மார்க்க ரீதியாக சரிதான் என்றால், மார்க்கத்தில் தடை இல்லை என்றால், தூய இஸ்லாத்தை நிலை நாட்ட நமது விமர்சனங்களையும் மார்க்கத்தின் பெயரால் பிழைப்பு நடத்தும் பிரச்சாரகர்களை அடையாளம் காட்டும் பணிகளையும் தொடர்வோம். மார்க்க ரீதியாக தவறு என்றால் விமர்சனத்தை நிறுத்தி விட்டு நடந்தவற்றுக்கு வரட்டு கவுரவம் பார்க்காமல் பகிரங்க மன்னிப்பு கேட்போம். இன்ஷா அல்லாஹ். வஸ்ஸலாம்.
Comments