ரத்தம் கக்கி சாவார்கள் ஃபத்வா கொடுத்தார் லுஹா.
பிஸ்மில்லாஹ்ஹிர்ரஹ்மான்நிர்ரஹீம் தேதி : 01.02.2004
மதிப்பிற்குரிய வெளிநாட்டில் வாழும் மேலப்பாளையம் தவ்ஹீத் ஜமாத்தார்களுக்கு, ராவுத்தர் மேலத்தெருவைச் சார்ந்த இமாம் ( 00971504601699- imamcivil@gmail.com, Ahamed.Imam@dewa.gov.ae, ) எழுதுவது,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்,
சமீபத்தில் மவ்லவி சம்சுல் லுஹா செய்திருக்கின்ற இறையச்சமில்லாத காரியத்தை உங்களுக்கு தெரியப் படுத்தவே இக்கடிதம் எழுதுகிறேன்.
26.01.2004 அன்று மஸ்ஜிதுர் ரஹ்மான் கமிட்டி பொதுக்குழு கூட்டமும், தர்பியா என்ற மார்க்க பயிற்சி விளக்கமும் நடைபெறப்போவதாக ஒரு அழைப்பிதழ் 25.01.2004 மாலை 4 மணிக்கு எனக்கு நேரில் கொடுக்கப்பட்டது. ராஜ்மஹால் திருமண மண்டபத்தில் நடந்த அந்த கூட்டத்தில் P.J. அவர்களை துணைக்கு வைத்து மவ்லவி சம்சுல் லுஹா நிகழ்த்தி இருக்கிற நேர்மையற்ற செயல்களை சொல்லுவதற்கு முன், நமது தவ்ஹீத் ஜமாத்தார்களே நம்மை விமர்சனம் செய்வார்களே! மற்றவர்கள் நம்மை சிறுமை படுத்தி பேசுவார்களே! அது நமது பிரச்சாரத்தை பெரிய அளவில் பாதிக்குமே! என்ற உணர்வு கொஞ்சம் கூட இல்லாமல் மவ்லவி சம்சுல் லுஹா செய்திருக்கிற இச்செயலை எழுதுவதற்கு முன்னால், இதற்கு தொடர்பு உள்ள சில சம்பவங்களை முதலில் விவரிக்கிறேன்.
இனிமேல் எழுதப்போகின்ற செய்திகளை மனிதன் என்ற அடிப்படையில் எந்தவித சுய விருப்பு, வெறுப்பு இல்லாமல் இறையச்சத்தோடு எழுதுகிறேன் என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு மேலே தொடர்கிறேன்.
1. ராஹத் மெடிக்கல் அப்துல் ஹக் வீட்டு (கம்ப்யூட்டர் இன்ஜினியர்) திருமணத்திற்கு மவ்லவி சம்சுல் லுஹாவை விருந்திற்கு அழைத்தார். அவர் செல்லவில்லை. அன்று அந்த வீட்டில் நடந்த 1200 கலம் சாப்பாட்டை மிகக் கடுமையாக விமர்சனம் செய்தார். ஆனால் அதேமாதிரி 1200 கலம் விருந்து வைத்த T.S.M.O. வீட்டைச் சார்ந்த அப்துல் மாலிக் என்பவரின் விருந்தில் மவ்லவி சம்சுல் லுஹா கலந்து கொள்கிறார். மக்கள் அதைச் சுட்டிக்காட்டி கேள்வி கேட்டபோது நான் அந்த திருமணத்தில் கலந்து கொள்வதாக (அப்துல்) மாலிக்கிடம் ஏற்கனவே வாக்கு கொடுத்து விட்டேன், என்று பதில் கூறினார். (அப்துல்) ஹக் திருமண விருந்தை கடுமையாக விமர்சனம் செய்தவர், (அப்துல்) மாலிக் திருமண விருந்தைப் பற்றி எதுவும் பேசவில்லை. (அப்துல்) மாலிக் மவ்லவி சம்சுல் லுஹா சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் தன்மையுடையவர், ஆனால் (அப்துல்) ஹக், தவறு செய்தால் அதைச் சுட்டிக்காட்டும் தன்மையுடையவர்.
2. கிராம்சு வீட்டு தெருவில் நடந்த கூட்டத்தில் L.K.M. வீட்டு திருமண விருந்தையும் அவர்களது செயல்களையும் விமர்ச்சித்து இவர்கள் எல்லாம் ரத்தம் கக்கி சாவார்கள் என்று ஃபத்வா கொடுத்தார். இதை தவறு என்று நமது தவ்ஹீத் சகோதரர்கள் அவரிடம் கூறியபோது. Tension-ல் அம்மாதிரி பேசிவிட்டேன் என்று கூறிவிட்டார்.
3. ரஹ்மானியாபுரத்தில் (பெரிய தெரு பள்ளிக்கு எதிர்த்த தெரு) நடந்த கூட்டத்தில் தப்லீக்காரர்கள் 40-நாள், 6-மாதம் ஜமாஅத்தில் சென்று விடுகிறார்கள் இங்கு அவர்களது மனைவிமார்கள் தகாத உறவில் ஈடுபடுகிறார்கள் என்று கூறிவிட்டார். நமது ஊரே கொந்தளித்து விட்டது இதைக் கேட்டு. இதற்கும் டென்ஸனில் அவ்வாறு பேசிவிட்டதாகக் கூறிவிட்டார். ஒரு ஜும்மாவில் இதற்கு மன்னிப்பும் கேட்டார். சில நாட்களில் அந்த மன்னிப்பையும் வாபஸ் வாங்கினார். ஏனெனில் இப்ராகீம் அவரிடம் நீங்கள் எப்படி மன்னிப்பு கேட்கலாம். குர்ரான் ஹதீஸ் படி நீங்கள் பேசியது சரிதான் என்று கூறினாராம் அப்பொழுது இனாயத்துல்லா அருகில் இருந்திருக்கிறார். இனாயத்துல்லாவிற்கும் மவ்லவி சம்சுல் லுஹாவிற்கும் மனக் கசப்பு ஏற்பட இதுவே முதல் காரணம் ஏனெனில் இனாயத்துல்லாஹ் லுஹா அவ்வாறு பேசியது தவறு என்று கூறினார்.
4. நிர்வாகக் குழுவில் இருந்து குலாம் ரசூல் (லுஹாவின் தம்பி மாமனார்) ராஜினாமா செய்கிறார். லுஹாவிடம் நேரிடையாகவே நீங்கள் எந்த ஒரு காரியத்தையும் நீங்களாகவே முடிவு எடுக்கிறீர்கள். செயற்குழுவில் எங்களிடம் கலந்து ஆலோசிப்பதே இல்லை என்று கூறிவிட்டே விலகுகிறார்.
5. P.J. அவர்கள் லுஹாவை கடுமையாக விமர்சித்து நிர்வாகத்திற்கு ஒரு கடிதம் அனுப்புகிறார். அதில் நீங்களும் S.K. கமாலுத்தீன் போலவே செயல் படுகிறீர்கள். கணக்கும் சரியாக காட்டுவதில்லை என்று பல விமர்சனங்களை கூறுகிறார்.
கமிட்டி நிர்வாகத்திற்கு வந்த இந்த கடிதத்தை லுஹா மறைத்து விடுகிறார். J.S. ரிபாயி, இனாயத்துல்லாஹ், இப்ராஹீம் போன்றவர்களுக்கு மட்டுமே இது தெரியும்.
உடனே லுஹா சென்னை த.மு.மு.க. தலைமையகத்திலிருந்து ஒரு ஆடிட்டரை வரவழைத்து அவருக்கு 5000 ரூபாய் சம்பளம் கொடுத்து கணக்குகளை தயார் செய்கிறார். அந்த ரிபோர்ட்டை பொருளாளர் என்ற முறையில் J.S. ரிபாயி அதைப் பார்க்கக் கேட்டார். ஆனால் லுஹா அவரிடம் காட்டாமல் நேரிடைய நிர்வாகக் குழுவில் சமர்ப்பிக்கிறார். கணக்குகளை கையாளும் பொருளாளர் பொறுப்பில் உள்ள தன்னை உதாசீனப்படுத்தியதாலும் எந்த செலவுகளையும் அவரிடம் கலந்து ஆலோசிக்காமல் செய்வதாலும் ரிபாயி தனது பதவியை ராஜினமா செய்கிறார்.
6. மஸ்ஜித் ரஹ்மான் பள்ளிக் கட்டுமானத்திற்கு வெளிநாட்டில் 8 லட்சம் வசூலிக்கப்பட்டது. சவுதியில் உள்ள அரபி உதவி செய்வதை நிறுத்தி விட்டதால், நிர்வாகமே தனியே வசூல் செய்தது. அந்தப் பணத்தில் 1½ லட்சம் ரூபாய்க்கு கணக்கு காட்டப்படவில்லை. லுஹாவோ நான் பள்ளிக்கு மட்டுமே அந்தப் பணத்தை செலவு செய்தேன். ஆனால் அதற்கான கணக்கு விபரம் தன்னிடம் இல்லை என்று கூறினார். நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கோ அதிர்ச்சி. ஜமாஅத்துடைய பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக (பி.ஜே. ஆலோசனைப்படி) அந்த 1½ லட்சம் பணத்தை சரிசெய்ய ஒரு தவறான முடிவிற்கு வருகிறார்கள். அந்தமுடிவை லுஹாவும் ஏற்றுக் கொள்கிறார்.
அதாவது கடந்த 18 மாதங்கள் பள்ளி கட்டுமானப் பணி மேற்பார்வை செய்ததற்காக லுஹாவிற்கு மாதச் சம்பளம் கொடுப்பது போல் கொடுத்து கணக்கை சரி செய்கிறார்கள். ஆரம்பத்திலேயே சம்பளம் கொடுத்திருந்தால் தவறில்லை. ஆனால் கணக்கில் விழுந்த துண்டை சரிசெய்வதற்காக சம்பளம் என்று ஒன்றை உருவாக்குவது தவறு என்று அப்பாஸ் ஹில்மி அப்போதே சுட்டிக்காட்டினார். இந்தச் சம்பவத்திற்கு பின் அப்பாஸ் ஹில்மி மீது லுஹாவிற்கு வெறுப்பு ஏற்படுகிறது.
7. மவ்லவி சம்சுல் லுஹா ஒரு முறை துபாய் சென்று வந்தபின் T.A. செய்யதலியிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது தான் துபாய் செல்வதற்கு முன் பள்ளி கணக்குகளை பள்ளியின் இமாம் மசூத்திடம் ஒப்படைத்து விட்டுத்தான் துபாய் புறப்பட்டதாகக் கூறுகிறார். அதற்கு செய்யதலி, 'நம்ம பள்ளியில் நிர்வாகம் என்று ஒன்று இருக்கிறது. நீங்கள் பொருளாளரிடம் கணக்குகளை ஒப்படைக்காமல் பள்ளி இமாமிடம் ஒப்படைத்து எப்படி செல்லலாம்' என்று கேட்கிறார். உடனே லுஹா கோபம் அடைந்து நீங்க உங்க வாயை மூடுங்க என்று கூறிவிட்டு சென்று விடுகிறார்.
8. சம்சுல் லுஹா டாக்டர் கொலை வழக்கில் சிறையில் இருந்த போது நமது பள்ளியில் இருந்து பல வேன்களில் ஆட்கள் சென்று பார்த்திருக்கிறார்கள். நிறைய பேர் கூட்டமாக சென்று பார்த்தால்தான் போலிஸில் ஒரு மரியாதை ஏற்படும் என்பதற்காக அப்படிச் செய்தார்கள். ஆனால் வேன் செலவிற்கு பணம் முழுவதும் பள்ளியில் இருந்துதான் கொடுக்கப்பட்டுள்ளது. 1½ லட்சம் ரூபாய்க்கு கணக்குகள் வராமல் போனதற்கு காரணம் இம்மாதியான செலவுகள் தான்.
9. வரதட்சனை வீட்டுத் திருமணத்திற்கு போகக்கூடாது, அந்த விருந்து ஹராமான விருந்து, அதில் யாரும் கலந்து கொள்ளக்கூடாது என்று பேசிவருபவர் லுஹா. ஆனால் சமீபத்தில் சீட்டுவட்டி வியாபாரம் செய்துவரும் பள்ளியின் இமாம் மசூத்தின் மச்சினன் வீட்டில் நடந்த கிரஹப்பிரவேச விருந்தில் மசூத் மற்றும் நமது பள்ளியில் சிலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். லுஹாவிற்கும், (தென்காசி) M.S. சுலைமானுக்கும் உணவு வீட்டிற்கு அனுப்பப்ட்டது. மசூத்திடம் இதுபற்றி கேட்டேன் அதற்கு அவர் வட்டி தொழில் செய்யும் வீட்டில் விருந்து உண்ணக்கூடாது என்று தெளிவாக தடுக்கும் ஹதீஸ் ஏதாவது இருந்தால் காட்டுங்க என்றார். நான் பதிலுக்கு வரதட்சணை வீட்டுத் திருமண விருந்தில் கலந்து கொள்ளக்கூடாது என்று கூறும் ஹதீஸை காட்டுங்க என்று கேட்டேன். அதற்கு கூறிய பதில் அது வேறு இது வேறு அவ்வளவுதான்.
10. த.மு.மு.க. நமது ஊர் மக்களுக்காக ஆம்புலன்ஸ் ஒன்று வாங்கியிருக்கிறார்கள் அதை ஊருக்கு அர்ப்பணிப்பு செய்வதற்கு ஒரு கூட்டம் ஏற்பாடு செய்கிறார்கள். ஆம்புலன்ஸ் வாங்குவதற்கு வசூல் செய்த 3 லட்சம் பணத்தில் 70% சதவீதம் சுன்னத் ஜமாஅத்தை சேர்ந்தவர்களே கொடுத்துள்ளார். V.S.T. அமானுல்லாஹ் போன்றவர்கள் கூட பணம் கொடுத்து இருக்கிறார்கள் அதனால் இந்த கூட்டத்திற்கு அந்த ஜமாஅத்தை சேர்ந்த ஒருவரையும் அழைப்பது என்று த.மு.மு.க. முடிவு செய்து ஹைதர் அலி ஆலீமை கூப்பிடுகிறார்கள். அவரும் வருவதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். தலைமை கழக த.மு.மு.க.வும் சம்மதித்து தலைமைக் கழகத்திலிருந்து தலைவர் ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் ஹைதர் அலி நமது ஊரில் இருந்து சம்சுல் லுஹா, ஹைதர் அலி ஆகியோர் பேசுவதாக நோட்டீஸ் அடித்து எல்லா பள்ளிகளுக்கும் இது சம்பந்தமாக கடிதம் அனுப்பி ஜும்மாவில் வாசிக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. எல்லா பள்ளிகளிலும் ஜீம்மாவில் அதை வாசித்தார்கள். நமது பள்ளியில் மட்டும் லுஹா அதை வாசிக்க மறுத்துவிட்டார். ஹைதர் அலி ஆலீம் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் தவ்ஹீத் ஜமாஅத்தைச் சார்ந்த நான் கலந்து கொள்ள மாட்டேன் என்றும் கூறிவிட்டார்.
நானும் M.A.S. கரீமும், லுஹாவிடம் இது த.மு.மு.க.வின் நிகழ்ச்சி ஹைதர் அலியே இந்த நிகழ்ச்சிக்கு, நீங்கள் வருகிறீர்கள் என்று தெரிந்தும் வர ஒப்புக் கொண்டுள்ளார். நீங்கள் கலந்து கொள்ள மறுப்பது சரியல்ல. ஏற்கனவே ராமர் கோவில் கட்ட தமிழ்நாட்டிலிருந்து செங்கல் அனுப்புவதற்கு அனுமதி கொடுத்த ஜெயலலிதாவை கூப்பிட்டு த.மு.மு.க. சென்னையில் வாழ்வுரிமை மாநாடு போட்ட போது நீங்களும் தவ்ஹீத் ஜமாஅத்தை சார்ந்த பல மவ்லவிகள் அதில் கலந்து கொண்டிருக்கின்றனர். ஜெயலலிதாவை விட ஹைதர் அலி அவ்வளவு மோசமானவர் அல்ல என்று விளக்கிக் கூறினோம் அதற்கு அவர் ஜெயலலிதாவுடன் நாங்கள் மேடையில் இருந்தது தப்பில்லை. ஹைதர் அலி மாதிரி ஷpர்க்கிற்கு துணை போவோருடன் நான் மேடையில் பேசமாட்டேன். இதற்கு மேல் நான் பேச விரும்பவில்லை என்று கூறிச் சென்று விட்டார். ஆனால் நமது ஜமாஅத்தை சேர்ந்த பலரும் அவரது கருத்தை எதிர்த்தார்கள். இனாயத்துல்லாஹ், ரிபாயி ரஷhதி, உட்பட பலரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
11. நமது மாவட்டத்தைச் சார்ந்த அப்துல் ரசீத் கொலையில் அவரது மகன் கைது செய்யப்பட்டதை எதிர்த்து நமது ஊரில் ஒரு பிரம்மாண்ட ஊர்வலம் நடந்தது. அப்போது மேடையில் காஜா ஹஜரத், ஹைதர் அலி ஹஜரத் ஆகியோருடன் நமது தவ்ஹீத் ஜமாஅத்தும் அந்த த.மு.மு.க. கூட்டத்தில் கலந்து கொண்டார்கள் (அப்பொழுது லுஹா ஊரில் இல்லை) அது தவறு கிடையாதாம். சமீபத்தில் தலித் கலை நிகழ்ச்சி ஒன்றில் லுஹா கலந்து கொண்டு பள்ளியிலிருந்து நிர்வாகத்தினர் யாரிடமும் கலந்து கொள்ளாமல் ரூ.2500/-ஐ நன்கொடையாக கொடுத்துவிட்டு வந்திருக்கிறார். ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு போவதும், பள்ளியின் பணத்தை கொடுப்பதும் தவறு கிடையாதாம். ஆனால் ஹைதர் அலி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் தானும் கலந்து கொள்வது குற்றமாம். ஊர்மக்கள் பெருமளவு அதிருப்தி அடைந்த சம்பவம் இது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் 26.01.2004 அன்று தர்பியா (மார்க்க செயல்முறை விளக்க நிகழ்ச்சி) மற்றும் பொதுக்குழு மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டது. நமது பள்ளி சம்பந்தமாக எந்த ஒரு சின்ன நிகழ்ச்சியாக இருந்தாலும் பள்ளியில் அறிவிப்பு செய்வார்கள். ஆனால் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் திடீரென்று பொதுக்குழு மீட்டிங் என்று அழைப்பிதழ் வருகிறதே என்று வியப்படைந்து, செயலாளர் இனாயத்துல்லாவிடம் இது பற்றி விசாரித்தேன். அவர் இதைப்பற்றி தனக்கும் எதுவும் தெரியாது லுஹா தன்னிடம் எதுவும் பேசவில்லை என்று கூறினார். நான் அதிர்ச்சி அடைந்து நிர்வாகத்தில் உள்ள T.A.. செய்தலி, அப்பாஸ் ஹில்மி, M.A.S.. அப்துல் கரீம், S.K.. பீர், த J.S. ரிபாயி ரஷhதி என்று பலரிடம் விசாரித்தேன் ஆனால் யாரிடமும் இந்த பொதுக்குழு மீட்டிங் பற்றி எதுவும் தெரிவிக்காமல் இப்படி முறைகேடான முறையில் லுஹா ஏன் P.J. தலைமையில் பொதுக்குழுவை கூட்டுகிறார் என்று அழைப்பிதழை கவனமாக படித்துப்பார்த்தேன்.
அசர் தொழுகைக்கு பின் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் அலி ரஹ்மானி. S.S.U. சைஃபுல்லாஹ் மற்றும் P.J. உரையாற்றுவார்கள். பிறகு பொதுக்குழு நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு 300 பேர் அழைக்கப்படுகிறார்கள். அழைப்பிதழ் கொண்டு வந்தால் மட்டுமே (ராஜ்மஹால் திருமண) மண்டபத்தில் அனுமதிக்கப்படுவார்கள். உள்ளே நுழைபவர்கள் நிகழ்ச்சி முடியும் வரை வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று பல நிபந்தனைகள்
அதில் பொதுக்குழு என்பதற்கு கீழே செயல் திட்டம் : மஸ்ஜிதுர் ரஹ்மான் ஜமாஅத்தின் ஏகத்துவ கொள்கை சம்பந்தமாக மற்றும் தலைவரின் அனுமதியுடன் பிற விஷயங்கள் என்று அச்சிடப்பட்டுள்ளது.
இதை கவனமாகப் படித்துப் பாருங்கள். தான் செய்யப்போகின்ற காரியங்களை முன்னாடியே தீர்மானித்து வைத்துள்ள லுஹா, அதை குறிப்பிடாமல் எந்தக் காரியத்தை செய்தாலும் அதை நியாயப்படுத்துவதற்கு எற்ற மாதிரி வாங்கியங்களை அமைத்திருக்கின்றார். அல்லாஹ்விற்கு பயப்படுகிறவர்கள் இப்படி அரசியல்வாதியைப்போல் திட்டமிடுவார்களா?
அலி ரஹ்மானி, S.S.U. சைஃபுல்லாஹ் தங்களது தலைப்பில் பேசுகிறார்கள். ஆனால் P.J. தனக்கு கொடுக்கப்பட்ட தலைப்பில் பேசாமல், அவ்வாறு பேச முடியாமல் போனதற்கு எந்த காரணத்தையும் கூறாமல் நேரிடையாக பொதுக்குழு மீட்டிங் பற்றி பேச ஆரம்பித்து விடுகிறார்.
இங்கே இன்னொரு விசயத்தை சொல்ல வேண்டியதிருக்கிறது. அதாவது இப்படி நிர்வாகத்தில் யாரிடமும், சொல்லாமல், பள்ளியில் அறிவிக்காமல் லுஹா பொதுக்குழு கூட்டப்போகும் அழைப்பிதழ் இனாயத்துல்லாவிற்கு கிடைத்தவுடன் (அவரது அழைப்பிதழ் எண்.156, ரிபாயி ரஷhதியின் எண்.216, எனது எண்.127) அவர் உடனே P.J. விற்கு போன் செய்கிறார். P.J. தலைமை என்று போட்டிருப்பதால் இந்த முறைகேடுகளை அவரிடம் சுட்டிக் காட்டினால் அவர் இந்த நிகழ்சியை ரத்து செய்து முறைப்படி பொதுக்குழவை கூட்ட ஏற்பாடு செய்வார் என்ற நம்பிக்கையில் நடத்த விசயங்களை அவரிடம் கூறுகிறார்.
பள்ளியில் உள்ள ஆரம்பகால தவ்ஹீத் வாதிகளுக்கு அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை. 300 பேரில் 15 பேர்களுக்கு மட்டுமே பழைய சென்ற பொதுக் குழுவில் கலந்தவர்கள் (மொத்தம் 200 பேர் சென்ற பொதுச்குழுவில் கலந்திருக்கிறார்கள்.) என்று கூறுகிறார்.
ஆனால் P.J. பொதுக்குழு கூட்டுவதில் உள்ள முறைகேடுகளைப்பற்றி கண்டுகொள்ளாமல், தான் நிச்சயம் அநியாயத்திற்கு துணை போக மாட்டேன், அழைப்பிதழ் அனுப்பாதவர்களின் பெயரை சொல்லுங்கள். நான் அழைப்பிதழ் அனுப்ப ஏற்பாடு செய்கிறேன் என்று செயலாளர் என்ற நிலையில் உள்ள இனாயத்துல்லாவை அந்த பொதுக்குழு மீட்டிங்கை அங்கீகரிக்க வைக்க முயற்சி செய்கிறார்.
மதுரையில் இருந்து ரிபாயி ரஷhதி, சைஃபுல்லாஹ்விற்கு போனில் பொதுக்குழு முறையாக கூட்டப்படவில்லை என்கிறார். சைஃபுல்லாஹ்வும் (அவர் தான் அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் தலைவர்) P.J. இனாயத்துல்லாஹ்விற்கு சொன்ன பதிலையே கூறுகிறார்.
ஒரு நாள் முன்புதான் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. அதில் பலருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை என்ற தகவல் கிடைப்பதற்குள் ½ நாள் போய்விட்டது. மீதியுள்ள இந்த குறைந்த அவகாசத்தில் மீதி 185 பேர் முகவரிகளை சேகரித்து அழைப்பிதழ் அனுப்புவது நிச்சயமாக முடியாத காரியம் என்ற தெரிந்தும் கூட P.J., சைப்புல்லாஹ் இருவரும் ஒரே மாதிரி விட்டுப் போனவர்களின் பட்டியலை கேட்டார்கள்.
P.J. தனது தொடக்க உரையில் முதல் பொதுக் குழு ஆரம்பித்து மூன்றாண்டுகளுக்குள் இரண்டாவது பொதுக்குழுவை கூட்டவேண்டும் என்று முதல் கூட்டத்தில் தீர்மானித்து இருந்தது. ஆனால். தற்போது 4½ வருடம் ஆகிவிட்டது. என்று கூறி அதைக் கண்டிக்கிறார்.
அப்பொழுது இனாயத்துல்லாஹ் அப்பாஸ் ஹில்மி போன்றோர் நமது பள்ளிக்கு கிட்டத்தட்ட 2000 பேர் தொழவருகிறார்கள். அவர்களில் இந்த 300 பேரை எந்த அடிப்படையில் தேர்வு செய்தார்கள் என்பதை விளக்கவேண்டும் என்று கேட்டார்கள். ஏனெனில் வந்தவர்களில் மிகப்பெரும்பாலோர் 20 வயதுக்கு அருகில் உள்ள இளைஞர்கள். புதிதாக தவ்ஹீதை ஏற்றுக்கொண்டவர்கள். ஆனால் P.J. அதற்கு சாரியாக விளக்கம் கூறாமல் மழுப்பலாக பதில் கூறுகிறார். சென்ற முறை பொதுக்குழுவிற்கு எப்படி ஆட்களை தேர்வு செய்தார்களோ, அதைப்போலவே இப்பொழுதும் செய்திருப்பார்கள் என்று கூறுகிறார்.
ஆனால் சென்ற முறை நிர்வாகம் என்று ஒன்று இல்லை. அதை தேர்ந்தெடுக்கத்தான் கூடினார்கள். ஆனால் இப்பொழுது நிர்வாகம் இருக்கிறது. அதை சௌகரியமாக P.J. மறைக்கிறார். பிறகு இனாயத்துல்லாஹ் தான் இந்த பள்ளியினுடைய செயலாளர். ஆனால் தனக்கு 156 ஆளாக அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருக்கிறது. எந்த ஒரு நிர்வாகத்திலும் பொதுக்குழுவை கூட்டுவதே செக்ரட்டரிதான். ஆனால் எனக்கு லுஹா கொடுத்த மரியாதை சரிதானா என்று கேட்கிறார். உடனே லுஹா எழுந்து, தான் மறந்துவிட்டதாகக் கூறுகிறார். பிறகு அவரே இனாயத்துல்லாஹ் மீது எனக்கு சில வருந்தங்கள் இருந்தது என்று கூறுகிறார்.
முதலில் அவர் கூறிய குற்றச்சாட்டு இனயாத்துல்லாஹ அவரிடம் கடன் வாங்கியிருந்தாராம். அதைப் பலமுறை கேட்டும் அவர் கொடுக்கவில்லையாம். பள்ளியை பற்றி பேசுவதற்கு பொதுச்குழுவை கூட்டி விட்டு இப்படி அநாகரிமாக சொந்த விஷயத்தை, அதுவும் அந்தரங்கமான விசயத்தை லுஹா பேசும் போதும் P.J. அவரை தடுக்காமல் பேச அனுமதிக்கிறார்.
அப்போது இனாயத்துல்லாஹ் குறுக்கிட்டு பதில் சொல்ல வருகிறார். அதற்கு P.J. உங்களுக்கும் பேச வாய்ப்பு தரப்படும் என்று கூறி அவரை உட்கார வைத்துவிடுகிறார். பிறகு லுஹா பேசிவிட்டு அமர்கிறார். இப்போது இனாயத்துல்லாவிற்கு வாய்ப்பு கொடுக்காமல் P.J. - வே மறுபடியும் பேசுகிறார்.
பேசிவிட்டு திடீரென்று இப்பொழுது நாம் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்போமா என்று கூட்டத்தைப் பார்த்து கேட்கிறார். அழைப்பிதழில் தேர்தலைப் பற்றி எந்த அறிவிப்பும் இல்லாத நிலையில் P.J. இப்படிக்கேட்டவுடன் அதிர்ச்சியடைந்த நான் உடனே எழுந்து P.J. - வை நோக்கி ஆரம்பத்திலிருந்தே இனாயத்துல்லாவும், அப்பாஸும், 'இங்கு வந்துள்ள மக்களை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்' என்று உங்களிடம் கேட்டார்கள். அதற்கு சரியான பதிலை இன்னமும் கூற வில்லையே என்று P.J.விடம் கேட்டேன். மேலும் நான் இங்கே வந்துள்ள அனைவரையும் லுஹாவே தேர்ந்தெடுத்து அழைப்பிதழ் அனுப்பியுள்ளார். அப்படிப்பட்ட மக்கள் மத்தியில் தேர்தலைப்பற்றி எதுவும் கூறாமல் தேர்தல் நடத்துவது எப்படி நியாயம் என்றும் கேட்டேன்.
அதற்கு P.J. 'தேர்தலைப்பற்றி அழைப்பிதழில் போடவில்லை என்பது உண்மைதான். ஆனால் இங்கு வந்திருக்கின்ற மக்கள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள்' என்று கூறினார். நான் மறுபடியும் அவரிடம் கேள்வி கேட்க முற்பட்ட போது லுஹாவின் ஆதரவாளர்கள் உட்காரு, உட்காரு என சத்தம் போட ஆரம்பித்து விட்டார்கள். ஒருவர் என் சட்டையை பிடித்து கீழே உட்கார வைக்க முயல்கிறார்.
P.J. வின் கண் எதிரேயே இப்படி அரசியல் கட்சி கூட்டத்தில் நடந்துகொள்வதுபோல் தவ்ஹீத்வாதிகள் நடப்பதை P.J. கண்டிக்காமல் மேலும் என்னை பேசவிடாமல் அவரும் சேர்ந்தே என்னை உட்காரச் சொல்லுகிறார். நீங்கள் குழப்பம் செய்ய வந்து இருக்கிறீர்கள் என்று கூறினார். நான் கேள்வி கேட்கும் போது P.J. அவர்கள் நான் இன்னும் ஒரு நாள் இங்கு இருக்கிறேன். உங்களால் பொதுக்குழுவை கூட்ட முடியுமா? என்று என்னைப் பார்த்து கேட்டார்.
ஆனால் என் மனதில் ஏற்பட்ட கேள்வி இவ்வளவு அவசரமாக, எந்த ஒரு முறையையும் மரபையும் கடைப்பிடிக்காமல் லுஹாவுடன் சேர்ந்து P.J.வும் ஏன் பொதுக்குழுவை கூட்ட விரும்புகிறார் என்று சந்தேகம் தான். இப்படி ஒரு செயலை நாம் செய்யும் போது தவ்ஹீத்வாதி மட்டும் அல்ல, ஊரில் உள்ள சுன்னத் ஜமாத்காரர்களும் நம்மை தவறாக பேசுவார்களே அது நமது நம்பகத்தன்மையை பெருமளவில் பாதிக்குமே என்ற அச்சம் கொஞ்சம் கூட இல்லாமல் இந்த இருவரும் இப்படி செயல்பட்டது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இங்கே இருக்கின்ற மக்கள் தேர்தலை நடத்த விரும்புகிறார்கள். என்று கூறிய P.J. அங்கு கூடி இருந்த மக்களின் உள்ளத்தில் உள்ள விருப்பத்தை எப்படி அறிந்தார் என்று நாம் யோசனை செய்தால் கிடைக்கக் கூடிய பதில் தேர்தல் நடத்தப்படுபோவதை இவர்கள் முன்னாடியே தீர்மானித்துவிட்டுத்தான் இந்த நிகழ்ச்சியை எற்பாடு செய்துள்ளார்கள் என்பதுதான் (இதற்கான வலுவான ஆதாரங்களை நான் கடித்தத்தின் இறுதியில் சுறுகிறேன். இன்ஷா அல்லாஹ்).
தேர்தல் நடந்தது. சம்சுல் லுஹா தலைவர், செய்யது இப்ராகீம் பொருளாளர். அஸ்ஸத்துல்லாஹ் செயலாளர் என தேர்ந்தெடுத்தார்கள். இதில் அஸ்ஸத்துல்லாஹ் நமது ஊரைச் சார்ந்தவர் இல்லை. வெளியூரில் இருந்து நமது ஊரில் குடியேறியவர் 300 பேரில் 285 பேர் தனது ஆதரவாளர்களாக அழைத்து வந்தும் சம்சுல் லுஹா, அவரது சார்பில் நிறுத்திய செயலாளர் அஸ்ஸத்துல்லாவிற்கு கிடைத்த ஓட்டுக்கள் வெறும் 50 தான்.
இந்த பொதுக்குழு மீட்டிங் நமது ஊர் தவ்ஹீத் ஜமாத்தில் ஒரு பெரிய பூகம்பத்தையே ஏற்படுத்தி விட்டது. லுஹாவிற்கு மிகவும் நெருக்கமாக இருந்த பலர் இப்போது அவரை விமர்சனம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். S.K. பீர், M.A.S. கரீம், A.M.S. ஹயாத், பஸீரப்பா பீர், அன்வர், T.A. செய்யதலி, ரிபாயி ரஷாதி, இனாயத்துல்லாஹ் மஸ்ஜித் தவ்பா இமாம் காசிம், ஊரில் உள்ள அனைத்து த.மு.மு.க நண்பர்கள், கோழி வியாபாரம் செய்யும் மீரான், இன்டியன் கெமிக்கல்ஸ் மன்சூர் ஹல்லாஜ், சலாம் ஸ்டோர் ஹயாத்பாய் என்று பலரும். இவர்கள் எல்லாம் தவ்ஹீதுக்காக நிறைய உழைப்புகள் செய்பவர்கள். பொதுக்குழு மீட்டிங் முடிந்த மறுநாள் இந்த கூட்டத்தை நடத்திய பின் லுஹா செய்த ஒவ்வொரு தப்புகளும் வெளியே வர ஆரம்பித்தது.
இந்த கூட்டத்திற்கு 300 பேர் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை லுஹா, மசூத் ஆலிம், மற்றும் ஞானியார், அக்பர் என்று மூன்று பேரிடம் ஒப்படைத்தார். இதில் அக்பர் என்பவர் ஒவ்வொருவரிடமும் அழைப்பிதழ் கொடுக்கும்போது தாங்கள் யார் பெயரை சொல்கிறோமோ அவர்களுக்குத்தான் நீ கையை தூக்க வேண்டும் என்று கூறி அதற்கு ஒப்புக் கொண்டவர்களுக்கே அழைப்பிதழ் கொடுத்திக்கிறார். இதை நேரில் பார்த்த சாட்சி இருக்கிறது. வேறு யாராவது வந்து எனக்கு அழைப்பிதழ்; வரவில்லை என்று கேட்டால் அதற்கு அக்பர் ஞானியார் இருவரும் சேர்ந்து நீ விடியல் வெள்ளி கோஷ்டியை சார்ந்தவன், நீ ஜாக் கோஷ்டியை சார்ந்தவன் என்று காரணம் கூறி அழைப்பிதழ் கொடுக்க மறுத்திருக்கிறார்கள்.
பொதுக்குழு மீட்டிங்கிற்கு அடுத்த நாள் நான் மசூத் ஆலிமிடம் கேட்டேன். நீங்கள் தேர்தல் நடத்தப் போவதை அழைப்பிதழ் தயார் செய்யும் முன்பே தீர்மானித்து இருந்தீர்களா? இல்லையா? என்று கேட்டேன். அதற்கு அவர் ஆமாம் என்றார். பின் நான் ஏன் நீங்கள் அதை அழைப்பிதழில் போடவில்லை என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் : பொதுக்குழு மீட்டிங் என்றாலே அதில் தேர்தல் நடத்தப்போவதும் அடங்கும். இதை தனியாகப் போடத்தேவையில்லை என்றார். வல்லாஹி அவர் இப்படித்தான் பதில் சொன்னார்.
பொதுக்குழு நடந்த ராஜ்மகால் திருமண மண்டபத்திற்கு லுஹா மூன்றுபோலீஸ் காரர்களை வரவழைத்து ஒவ்வொருவருக்கும் 50 ரூபாய் தனியே கொடுத்து நிறுத்தி வைத்திருந்தார். தான் செய்யப்போகிற காரியத்தை நிச்சயம் மக்கள் எதிர்ப்பார்கள், கலாட்டா ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதை எதிர்பாத்துதானே அவர் பள்ளியின் பொதுக்குழு மீட்டிங்கிற்கு போலீஸை வரவழைத்து இருக்கிறார். நமது ஊரில் ஏதாவது ஒரு பள்ளியில் பொதுக்குழு மீட்டிங்கிற்கு போலீஸ் வந்து இருப்பார்களா?.
பிறகு நடத்த தவறுகளை சுட்டிக்காட்டி ஒரு நண்பர் P.J. விற்கு கடிதம் ஒன்று எழுதுகிறார். அதில் பல கேள்விகள் கேட்கிறார். ஊர் மக்கள் உங்கள் மீது வைத்திருந்த மரியாதையை நீங்கள் உங்கள் செயலின் மூலம் கெடுத்துவிட்டீர்கள் என்று எழுதி நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் தரும்படி கேட்கிறார். அதற்கு P.J. அவருக்கு பதில் கடிதம் போடுகிறார். அதை அவருக்கு அனுப்பாமல் மஸ்ஜித் ரஹ்மானுக்கு அனுப்புகிறார்.
அதில் அந்த M.C.A. படித்த நண்பரின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், பொதுக்குழு மீட்டிங்கிற்கு முன்பே லுஹா M.I. சுலைமான் செய்யது இப்ராகீம் ஆகியோர் ஓர் அணியாகவும் இனாயத்துல்லாஹ், ரிபாயி, அப்பாஸ் ஆகியோர் வேறு ஒரு அணியாகவும் செயல்பட்டாதாகவும். இரண்டு அணியினரும் தவறுகள் செய்து இருப்பதாகவும் அதில் அதிகமான தவறுகள் செய்தவர்கள் ரிபாயி அணியினர். அதனால் தான் லுஹா ஆதரவு நிலைமையை எடுத்ததாக கூறுகிறார்.
நிச்சயமாக P.J. இக்கடித்தத்தை அல்லாவின் பயம் கொஞ்சம் கூட இல்லாமல்தான் எழுதியிருக்கிறார். ஏனெனில் நமது ஊரில் அந்த பொதுக்குழு மீட்டிங் முன்பு எந்த ஒரு அணியும் சத்தியமாக கிடையாது இனாயத்துல்லாஹ், ரிபாயி, அப்பாஸ் ஆகியோர் ஒருமுறை கூட தனித்து சந்தித்து பேசியது கூட கிடையாது. அப்படியொரு அணி இருந்திருந்தால் லுஹா அதைக் கண்டிப்பாக ஜும்மா உரையில் கூறி இருப்பார். ஏனெனில் அவரை யார் எதிர்த்தாலும் அவரைப்பற்றி ஜும்மாவில் அடையாளம் காட்டாமல் விட்டதே இல்லை. ஊரில் இனாயத்துல்லாஹ், ரிபாயி, அப்பாஸ் அணி இல்லை என்பதற்கு அவரது ஜும்மா உரையே சான்று. பள்ளியைப் பொறுத்தவரை சம்சுல் லுஹாவும், செய்யது இப்ராகீமும் தான் எதையும் முடிவு செய்வார்கள். அதன்படி செயல்படவும் செய்வார்கள். ஆனால் P.J. பிரச்சனையை திசை திருப்ப இரண்டு கோஷ்டிகளாக நமது ஜமாஅத்தை பிரிக்கிறார்.
இரண்டாவது அதிகம் தவறு செய்தவர்கள் ரிபாயி, இனாயத்துல்லாஹ், அப்பாஸ் ஆகிய மூவரும் தான் என்கிறார். உலக நடைமுறையில் ஒருவன் எவ்வளவு பெரிய குற்றம் புரிந்தவனாக இருந்தாலும், அவன் மீது உள்ள குற்றச்சாட்டுகளை அவரிடம் கூறி அதற்கான பதிலை விளகத்தை கேட்டபின்பே தீர்ப்பு கூறப்படும். ஆனால் நமது P.J. அவர்கள் சம்சுல் லுஹா அவரிடம் தெரிவித்த குற்றச்சாட்டுகளை ரிபாயிடமோ, இனாயத்துல்லாவிடமோ, அப்பாஸிடமோ கூப்பிட்டு விசாரிக்காமல் ஒரு தரப்பு செய்திகளை மட்டும் வைத்து தீர்ப்பு வழங்கியிருக்கிறார். இந்த மூவரும் தாங்கள் என்ன தவறு செய்து விட்டோம் என்று புரியாத நிலையில் அப்படி தங்களது பெயரை அநியாயமாக P.J.சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் சம்சுல் லுஹாவுடைய பதவியை கைப்பற்றும் திட்டத்திற்கு P.J. இப்படி நேர்மையற்ற முறையில் துணைபோவார் என நம்மூர் சகோதரர்கள் ஒரு போதும் நினைக்கவில்லை.
இம்மாதிரியான அசத்தியமான காரியங்கள் செய்யும் இவர்கள் சத்தியப் பிரச்சாரம் செய்தால் அதற்கு அல்லாஹ் எப்படி வெற்றியை கொடுப்பான் என்ற எண்ணமே ஏற்படுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு அத்தியடித் தெருவில் லுஹா போட்ட கூட்டத்திற்கு 100 பேர் கூட வரவில்லை. லுஹாவின் பேர் பெறும் அளவில் கெட்டுக்கிடக்கிறது. ஊரில் எல்லோரையும் ஷிர்க்வாதி, காஃபிர் என்று பட்டம் கொடுத்து அழைப்பதனால் மக்கள் இவர் மீது வெறுப்பிலேயே உள்ளார்கள். இவர் சொல்லி தவ்ஹீத் பற்றி கேட்க யாரும் தயாராக இல்லை என்ற நிலையில்தான் ஊர் உள்ளது.
அதனால் இவரால் வெறுப்படைந்த தவ்ஹீத் வாதிகள் எல்லோரும் சேர்ந்து மஸ்ஜித் தக்வா என்ற பெயரில் ஒரு புதிய பள்ளியை உருவாக்குவது அதன் மூலம் ஏகத்துவப் பிரச்சாரம் செய்வது என்று முடிவு செய்து இருக்கின்றார்கள். தற்காலிகமாக அம்பிகாபுரம் ஸ்கூலுக்கு எதிரில் முன்னாடி பாண்டியன் கிராம பேங்க் இருந்த இடத்தில் தொழுகையை ஆரம்பம் செய்து இருக்கிறோம்;. இன்று 13.02.2004 முதல் ஜும்மாவை நல்ல முறையில் முடித்திருக்கிறோம். நிறைய மக்கள் வந்திருந்தார்கள். ஜும்மா வசூல் 1000 ரூபாய் வரை வந்துள்ளது.
இந்தப் பள்ளி ஆரம்பித்தது பற்றி கிட்டத்தட்ட 100 பேரை கூட்டி ஒரு மஷ்வாரா போட்டுதான் முடிவு செய்தோம்.
11 பேரை கொண்ட குழு ஒன்று அமைத்து இருக்கிறோம்.
1. T.A செய்யதலி 98421 - 68633
2. ரியாபி ரஷாதி 9443581777
3. இனாயத்துல்லாஹ் 9443507100
4. பஷீரப்பா பீர்
5. (தைக்காத் தெரு) ஜெய்லானி (ஓட்டல் வைத்திருப்பவர்)
6. இன்டியன் கெமிக்கல்ஸ் மன்சூர் ஹல்லாஜ்
7. அன்வர் (ஆசூரா தெரு)
8. M.A.S. அப்துல் கரீம்
9. S.K. பீர்
10. சலாம் ஸ்டோர் ஹயாத் பாய்
11. சீனி லாலா
இதில் த.மு.மு.கவின் பொறுப்பில் இருப்பவர்கள் யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
அப்பாஸ் த.மு.மு.க. வின் மாவட்ட பொருளாளர் என்பதால் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அவர் தொலைபேசி எண்.3105664- 94431376466 நீங்கள் அனைவரும் உங்கள் ஆதரவையும், உதவியையும் மஸ்ஜித் தக்வா பள்ளிக்கு தர வேண்டுகிறேன். நல்ல இடம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். நிறைய மக்கள் கட்டுமானத்திற்கு உதவி செய்வதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்கள். அந்த பொதுக்குழு வீடியோ கேசட்டை லுஹாவிடம் கேட்டு போட்டும் பாருங்கள். பொதுக்குழு மீட்டிங் முடிந்ததும் P.J. வே அக்கேசட்டை கையோடு எடுத்துச் சொன்றுவிட்டார்.
உண்மையாக, ஹக்காக சொல்கிறேன். சம்சுல் லுஹாவிற்கும், P.J.விற்கும் இப்படி ஒரு முகம் இருக்கிறது என்று ஊர் மக்கள் கொஞ்சம் கூட எதிர்பாக்கவில்லை.
இன்னமும் நடந்து முடிந்த சம்பவங்கள் ஒரு நம்ப முடியாத கனவாகத்தான் இருக்கிறது. ஆனால் நம்மூர் மக்கள் நல்ல முறையில் இந்த சம்பவத்தின் மூலம் ஒரு ஆக்கப்பூர்வமான முடிவையே எடுத்திருக்கிறார்கள்.
நாம் தௌஹீத்தை அல்லாவிற்காகவும், மறுமையில் அவன் தரக்கூடிய பரிசுக்காகவும் தான் பின்பற்றுகிறோம். அதற்காகவே உழைக்கிறோம். P.J. விற்காகவோ, அல்லது லுஹாவிற்காகவோ நாம் தவ்ஹீத் கொள்கையை ஏற்கவில்லை.
பதவியை யார் விரும்புகிறார்களோ, அவர்களுக்கு பதவியை கொடுக்காதீர்கள் என்ற ஹதீஸை நமக்கு சொல்லிச் கொடுத்தவர்களே அந்த பதவி ஆசைக்கு பலி ஆவார்கள் என்பதை நாங்கள் எல்லாம் எதிர் பார்க்காததினால்தான் இப்படி ஒரு அதிர்ச்சி எங்களுக்கு எற்பட்டது. கைர்.
நிறை குறைகளை எங்களுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். மஸ்ஜித் தக்வா வளர்ச்சிக்கு உங்களது துவாவையும் உதவிகளையும் வேண்டுகிறோம். வஸ்ஸலாம்
அன்புடன்
அகமது இமாம்
60, இராவுத்தர் மேலத் தெரு,
98420-44014 ( 00971504601699- imamcivil@gmail.com, Ahamed.Imam@dewa.gov.ae, )
தேதி : 06.03.2004
Comments