மாஸ்ட்டர் பிரைனை மக்கு பிரைனாக அன்று மட்டும் மாற்றியது ஏனோ?

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்
தர்பியா மற்றும் பொதுக்குழு அழைப்பிதழ்
அன்புள்ள சகோதரர் ----------------------------------------------- அவர்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்;

இன்ஷh அல்லாஹ் எதிர் வரும் 26.0.12004 திங்கட்கிழமையன்று மாலை அஸர் தொழுகையைத் தொடர்ந்து மேலப்பாளையம் ராஜ்மஹால் திருமண மண்டபத்தில் மஸ்ஜித்துரஹ்மான் ஜமாஅத் உறுப்பினர்களுக்கான தர்பியா மற்றும் பொதுக்குழு நடைபெறவுள்ளது. இதில் தாங்கள் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளுகிறேன்

நாள்: 26.01.2004. இடம்: ராஜ்மஹால் திருமண மண்டபம்
திங்கட்கிழமையன்று மாலை 4.30 அணி அரவாட்டுத் தெரு மேலப்பாளையம்

நிகழ்ச்சி நிரல்
தர்பியா

மவ்லவி பி.எம். முஹம்மது அலீ ரஹ்மானீ
(பேராசிரியர். இஸ்லாமிய கல்லூரி)
தலைப்பு:; தொழுகை செய்முறை பயிற்சி

மவ்லவி எஸ்.எஸ். ஸைபுல்லாஹ் ஹாஜா
(மாநில தலைவர். அனைத்து தவ்ஹீத் ஜமாஅத்)
தலைப்பு: ஏகத்துவவாதிகளும் தொழுகையும்

மவ்லவி பி. ஐஜனுல் ஆபிதீன்
(மேலாண்மைக் குழு உறுப்பினர். அனைத்து தவ்ஹீத் ஜமாஅத்)
தலைப்பு: ஷஷ இப்ராஹீம் (அலை) - ஒரு முன்மாதிரி|| என்ற வசனத்தின் விளக்க உரை

பொதுக்குழு

செயல் திட்டம்: மஸ்ஜிதுர்ரஹ்மான் ஜமாஅத்தின் ஏகத்துவ கொள்கை சம்பந்தமாக மற்றும் தலைவரின் அனுமதியுடன் பிற விஷயங்கள்
இப்படிக்கு
(எம். ஷம்சுல் லுஹா)
தலைவர். மஸ்ஜிதுர் ரஹ்மான் நிர்வாக கமிட்டி
11ஏ. ராவுத்தர் கீழத் தெரு, மேலப்பாளையம்
குறிப்பு:
1. இந்த அழைப்பிதழ் கொண்டு வருவோர் மட்டுமே மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

2. பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபர் மட்டுமே அழைப்பிதழைக் கொண்டு வர வேண்டும். அழைப்பிதழை மற்றவர்களிடம் கொடுத்து விடக் கூடாது.

3. எக்காரணம் கொண்டும் நிகழ்ச்சி நிறைவுறுவதற்கு முன் வெளியில் செல்ல அனுமதிக்கப் படாது.

4. அழைப்பிதழின் நகல் ஏற்றுக் கொள்ளப் படாது.


அல்லாஹ்வின் திருப் பெயரால்
அனுப்புநர்:
எஸ்.இ.எம்.முஹம்மது மஸ்தான்,
113ஏ. ஹாமீம்புரம் தெற்கு தெரு,
மேலப்பாளையம். - 5


பெறுனர்: பீ.ஜைனுல் ஆப்தீன் உலவி அவர்கள்
மேலான்மைக் குழு உறுப்பினர்,
துவ்ஹீது ஜமாஅத்.

அஸ்ஸலாமு அலைக்கும்,
எனது அன்பும் பாசமும் நிறைந்த அண்ணன் பீ.ஜே. அவர்களுக்கு தம்பி முஹம்மது உடைய துவாஸ்ஸலாம் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ் உங்களுக்கும் எனக்கும் நற்பாக்கியத்தை தந்தருள்வானாக என்று பிரார்த்தித்தவனாக, இம்மடலை எழுதுகிறேன்!

கடந்த 26.0.12004 திங்கட்கள் அன்று மாலை மேலப்பாளையம் மஸ்ஜித்துரஹ்மான் பொதுக்குழு மாலை 4 மணி அளவில் ராஜ்மஹால் மண்டபத்தில்; வைத்து தங்கள் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் 250 க்கும் அதிகமான தௌஹீது வாதிகள் கலந்து கொண்டனர், அவர்களிடம் தாங்கள் ஒப்புதல் கேட்டு பொதுக் குழுவை நடத்தி நிர்வாகிகளை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். கூட்டத்தில் தாங்களிடம் பல்வேறு வினாக்கள் எழுப்பப் பட்டது. அதற்கு தாங்கள் எப்பொழுதும் இல்லாத புது வகையான மலுப்பலான பதில் சொல்லி உள்ளீர்கள். இது பொருத்தமல்ல. பதில் சொல்லப்பட வைத்துள்ளார்கள் என்பதே சரி. ஓருவர் உங்களிடம் கேட்கிறார் ஒரு அமைப்பின் பொதுக்குழு நடைபெறுவதாக இருந்தால் அந்த அமைப்பின் முக்கிய பொறுப்ப வகிக்கும் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியவர்களுக்கு கட்டாயம் தெரியும். ஆனால் இந்த பொதுக்குழு செயலாளருக்குத் தெரியாமல் அவசர அவசரமாக கூட்டியுள்ளனர். இது என்ன நியாயம் என்கிறார்.
அதற்கு தாங்கள் மூன்று வருடம் முடிந்ததும் கூட்டி இருக்க வேண்டும் நாலரை வருடம் ஆகிவிட்டது எனவே இது மொத்தத்தில் முறையற்றது என்று பதில் சொல்லியிருக்கிறீர்கள்? செயலாளருக்கு தெரியாமல் கூட்டிய காரணம் என்ன? அவர் ஏதேனும் ஒண்ணரை லட்சம் கையாடல் செய்துள்ளாரா? அல்லது கணக்கு சரி ஏமாற்றினாரா? என்றாவது தாங்கள் கேட்டிருக்க வேண்டும் ஆனால் தாங்கள் மொத்தத்தில் குறையாகக் கூறி முடித்துள்ளீர்கள். இது நியாயமா? தாங்களுக்கு தேர்தல் நடத்துவதற்கு முன்னதாக ஒரு முக்கிய பொறுப்பை தந்திருந்தனர். கூட்;டத்தின் அழைப்பிதழில் கூட முதலில் அமைந்தது தங்களுடைய தர்பியா நிகழ்ச்சி என்றும் தாங்கள் இப்ராஹீம்(அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு என்றும் தலைப்பிடப் பட்டிருந்தது. சரி என்னுடைய கேள்வியெல்லாம்

1. மேலப்பாளையம் மஸ்ஜித்துரஹ்மானில் அந்த கூட்டத்திற்கு வந்த 250 ஒரிஜினல் தௌஹீதுகள்தான் வருகின்றார்களா? அல்லது 2000க்கு மேற்பட்ட மக்கள் வருகின்றனரா?
2. அழைப்பிதழில் முதலில் தர்பியா என்றும் அதன் பின் பொதுக்குழு என்றும் அச்சிடப் பட்டுள்ளது, ஆனால் மண்டப வாயிலில் பொதுக்குழு அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே உள்ளே செல்ல வேண்டும் என்று போடப் பட்டதன் நோக்கம் என்ன?
3. தர்பியா நிகழ்ச்சி உள்ளிருந்த 250 பேருக்கு மட்டும்தானா?

4. ஜும்ஆவில் அறிவித்தால் அல் உம்மா, விடியல் சிந்தனை உள்ளவர்கள் வருவார்கள் என்று தனித் தனியே அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. ஜும்ஆவிற்கு 2000 க்கும் மேற்பட்டோர் வருகின்றனர் 250 தவிர மீதி உள்ளவர்கள் உம்மாவும் விடியலுமா?

5. இன்னொருவர் மீண்டும் உங்களிடம் செயலாளருக்கு தெரியாமல் கூட்டியது எப்படி என்று கேட்கும்பொழுது மேடையில் ஒருவர் எழுந்து இவர் இலாஹி உடைய ஆள் என்கிறார்? இலாஹி உடைய ஆள் என்றால் அவருக்கு அழைப்பு கொடுத்தது யார்? எப்படி?

6. மஸ்ஜித் தவ்பா தனி நிர்வாகம் அவர்கள் உள்ளே வந்தால் பிரச்சனை எற்படும் என்று கூறியுள்ளனர். நாங்கள் வந்ததோ தங்களின் தவ்பியாவுக்குதான் எனக்கு சந்தேகம் உங்களின் நிகழ்ச்சியை கேட்டால் பிhரச்சனை வரும் என்று தடுத்து விட்டீர்களா? இல்லை நியாயத்தைக் கேட்பார்கள் என்று பயமா?

7. மண்டபத்தின் கீழ் மாடியில் ஆர்.எஸ்.எஸ்ன் பொதுக்குழு போன்றும் மேல் மாடியில் தௌஹீதுவாதிகளின் பொதுக்குழு என்றும் கருதியோ காவல்துறையை அழைத்துள்ளனர், இறுதியில் தலைக்கு 50 ரூபாயும் கொடுத்துள்ளனர் இதற்கு காரணம்?

8. பல்வேறு மாவட்டங்களில் பல மாதங்களுக்கு முன்பே தங்கள் நிகழ்ச்சிக்கு கேட்டும் தாங்கள் நாள் இல்லை என்று கூறி உள்ளீர்கள். இந்த அலங்கோல அவசர கூட்டத்திற்கு வந்தது ஏனோ? இதற்கு மட்டும் காலம் சரி என்றதோ?

9. இந்த தர்பியா என்ற பெயரில் ரகசிய அச்சிட்டு நடத்திய பொதுக்குழு தாங்களுக்கு முன்பே தெரியுமா?

10. கூட்டத்தில் தாங்கள் த.மு.மு.க. நிகழ்ச்சிக்கு கழகத்தை எதிர்ப்பவர்கள், ஷpர்க்க வாதிகளை அழைக்கக் கூடாது என்று கூறியதாகவும் சிலர் கூறினர் இது எந்த வகையில் நியாயம்? ஏதோ இது சம்பந்தமாக சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக கூறியதாக கேள்விப்பட்டேன் அப்படியென்றால் த.மு.மு.க. பைலாவை திருத்திய (தற்சமயம்) திருத்தப்பட்ட இது உண்மையெனில், த.மு.மு.க. என்று பெயரிட்ட தாங்கள் இதன் பின்பும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்று வைக்கப் போகிறீர்களா? இல்லை ஏதேனும் தமிழ்நாடு ஒரிஜினல் தௌஹீதுவாதிகளின் முன்னேற்றக் கழகம் என்று வைக்கப் போகிறீர்களா?

11. பொதுக்குழுவில் கலந்து கொண்டவர்கள் 250க்கும் அதிகமானோர். ஆனால் வாக்கு விழுந்தது ஒருவருக்கு 56, இன்னொருவருக்கு 32 இது விகித அடிப்படையில் சரியா?

12. என்னைப் போன்ற இளைஞர்களை எல்லாம் இறைவனின் சத்திய கொள்கையைக் கூறி வென்றெடுத்த நீங்கள் இந்த அசத்தியத்திற்கு துணை நின்றது ஏனோ? ஏதாக்கோ?

13. ஆயிரம் உலமாக்கள், ஆலிம்கள் உங்களை பேச்சளவில் எதிர்த்தாலும் உள்ளுக்குள்ளே தங்களின் கருத்தை பதிய வைக்கும் மாஸ்ட்டர் பிரைனை மக்கு பிரைனாக அன்று மட்டும் மாற்றியது ஏனோ? எதற்கு?

மேலே எழுதப்பட்டவை எல்லாம் என்னுடைய கேள்வி இன்று பரவலாக மத்தியில் கேட்கப்படும் கேள்வி யாதெனில் அநீதிக்கு துணை போக மாட்டேன் என்று கூறி விட்டது வந்த அண்ணன் பீ.ஜே. அவர்கள் இந்த பொதுக்குழுவில் சரியான முறையில் பதில் சொல்லாமல் இந்த அநீதியான பொதுக் குழுவிற்கு துணை போக வைத்தது இவர் ஏதேனும் தவறு செய்திருப்பார். இதன் ஆதாரம் லுஹாவிடம் இருக்கும் இதனால் இவர் லுஹாவிடம் அடிபணிந்து இருப்பாரோ? என்று பரவலாக பேசப்படுகிறது.

ஏவனோ இந்த லட்டரை எழுதினான் இவனுக்கெல்லாம் பதில் சொல்வதா? என்று நினைத்து விடாதீர்கள். இதற்கு பதில் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மறுமையை நம்பியுள்ள நாம் இதற்கு பதில் இங்கு தெரியாவிட்டாலும் கட்டாயம் இறைவனிடம் தெரியும். இறைவனும் நம்மை கேட்பான் என்று கூறி தாங்கள் இதற்கு பதில் தருவீர்கள் என்ற நோக்கடன் இம்மடலை நிறைவு செய்கிறேன் வஸ்ஸலாம்! . இப்படிக்கு
எஸ்.இ.எம் எஸ்.இ.எம். முஹம்மது மஸ்தான்,
31.01.04

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

பழனி பாபாவை கொலை செய்ய ஆட்களை அனுப்பியது யார்? -புனிதப் போராளி காமில்

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.