டாக்டர் ஹெல்பர் வேலை தேடுகிறார்?

டாக்டர் சீட் பெற்றவர் என்று பி.ஜே. வகையறாக்களால் கூறப்பட்டவருக்கு துபையில் ஹெல்பர் வேலை தேவை.

குணங்குடி ஹனீபா அவர்களால் 1986ல் துவங்கப்பட்டது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம். முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கோரி 1986ல் அவர் நடத்திய போராட்டத்திற்குப் பிறகு அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். குணங்குடி ஹனீபா அவர்களை அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தினார். ஹனீபாவின் செயல்பாடுகளைக் கண்ட டாக்டர் ராமதாஸ் ஹனீபாவை பா.ம.க.வில் இணைத்து மாநில பொருளாளர் பொறுப்பு கொடுத்தார். ஹனீபா பா.ம.க. பொருளாளராக இருந்தபோது வட்டம், மாவட்டம், நகரம் என எல்லாக் கிளைகளிலும் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய 3 பொறுப்புகளில் ஒன்று முஸ்லிம் சமுதாயத்திற்கு என்று பா.ம.க.வில் நடைமுறைபடுத்தினார்.

1995ல் பாக்கர் கைது செய்யப்பட்டதும் ஹனீபா 1986ல் நிறுவிய த.மு.மு.க.வின் சார்பில்தான் போராட்டம் நடந்தது. ஜே.எஸ். ரிபாய் கைதானதும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதற்குப் பிறகு பி.ஜே, அலதவுதீன் போன்றவர்கள் தங்களை காத்துக் கொள்ள த.மு.மு.க.வில் இணைந்தனர். அமைப்பாளர் அது இது என பொறுப்புகளும் பெற்றனர். முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதவரை தலைவராக ஏற்கக்கூடாது என்று கூறப்பட்டதும் பா.ம.க.வில் இருந்து ஹனீபா ராஜினாமா செய்தார். டாக்டர் ராமதாஸ் ராஜினாவை ஏற்க மறுத்து திருப்பி அனுப்பினார். எனவே ராஜினாவை பத்திரிக்கையில் செய்தியாக வெளியிட்டு பா.ம.க.விலிருந்து ஹனீபா விலகினார். (இவருக்கு பிறகு பா.ம.க.வுக்கு வந்தவர்கள் பா.ம.க.வின் சார்பில் இன்று எம்.எல்.ஏ. க்களாகவும் எம்.பி.க்களாகவும் மத்திய மந்திரிகளாகவும் உள்ளனர்.)

1996 சட்டமன்ற பொதுத் தேர்தல் நிலைபாடு சம்பந்தமாக த.மு.மு.க.வில் வந்து சேர்ந்தவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அபயம் தேடி வந்தவர்களிடம் அமைப்பை விட்டு விட்டு ஹனீபா வெளியேறும் நிலைக்குள்ளானார். அப்பொழுது முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் 2 கோடி ரூபாய் ரொக்கமும். ஹனீபாவின் மூத்த மகன் மைதீக் ரஸாக் என்பவருக்கு டாக்டர் சீட்டும், 2 வது மகன் அமீர் சுல்தான் என்பவருக்கு இன்ஜினியர் சீட்டும் ஜெயலலிதாவிடம் வாங்கி உள்ளார். அதனால்தான் த.மு.மு.கவை விட்டு வெளியேறினார் என்று த.மு.மு.கவில் அடைக்கலம் புகுந்து த.மு.மு.க.வை கைப்பற்றிய பி.ஜே. வகையறாக்கள் பிரச்சாரம் செய்தார்கள்.

பழனி பாபா இறந்த பின் ஜிஹாத் கமிட்டியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார் ஹனீபா. இதனால் பாபரி மஸ்ஜித் இடிப்பு எதிர்ப்பு ரெயில் குண்டு வெடிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டு, அவரது மகள் திருமணத்தன்று கைது செய்யப்பட்டார். ஜெயிலில் போய் பார்க்கச் சென்ற ஹனீபா மகன் அமீர் சுல்தான் கைது செய்யப்பட்டார். தம்பியை காணவில்லையே என்று தேடிச் சென்ற அண்ணன் மைதீன் ரஸாக்கும் கைது செய்யப்பட்டார். கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு மைதீன் ரஸாக் விடுதலையானார். ஓண்ணரை ஆண்டுகளுக்குப் பிறகு அமீர் சுல்தான் விடுதலையானார்.

இதுவரை விடுதலையாகாமல் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் த.மு.மு.க. நிறுவனர் குணங்குடி ஹனீபாவின் மூத்த மகன் மைதீன் ரஸாக் வேலை தேடி துபை வந்துள்ளார். டாக்டர் வேலையா? அதுதான் இல்லை ப்ளஸ்-டூ வே பெயில் என்ற நிலையில் ஹெல்பர் வேலை தேடுகிறார். டாக்டர் சீட் பெற்றவர் என்று பி.ஜே. வகையறாக்களால் கூறப்பட்டவருக்கு துபையில் ஹெல்பர் வேலை தேவை. நியாய உணர்வு உடையவர்களே! உதவிடுவீர். இறையருளைப் பெற்றிடுவீர்.

Comments

Popular posts from this blog

மறுமை நாளில் மக்கள் எவ்வாறு எழுப்பப்படுவார்கள்?

அந்நார் - النَّارَ – இதற்கு அக்னி, நெருப்பு, தீ என்பது நேரடி பொருள் என்றாலும் நரகம், நரக நெருப்பு, என்ற பொருளிலும் இடம் பெற்றுள்ளது.

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு