Posts

Showing posts from April, 2016

குமாரசாமி கால்குலேட்டர்களை கொடுத்து தீர்ப்பு கூறச் சொல்லுமா கூட்டணி ?

Image
இந்த உடன்படிக்கையில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் ஏற்படும் சண்டை , சச்சரவுகள் . இவர்கள் மத்தியிலே ஏற்படும் சிக்கல்கள் . பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அதற்குரிய தீர்வுகளை எப்படி எடுக்க வேண்டும் ? நாங்களெல்லாம் இந்த மண்ணுக்கு உரியவர்கள் எங்களுடைய பிரச்சனைகளை இந்த மண்ணுக்கேற்ற முறையில் நாங்கள் தீர்த்துக் கொள்கிறோம் என்று சொன்னார்களா? அன்சாரிகள், முஹாஜிர்கள், யூதர்கள் என்று எல்லாரும் சேர்ந்துதான் ஒப்பந்தம் எழுதுகிறார்கள் . பிரச்சனைகளுக்குரிய தீர்ப்பை யார் கூற வேண்டும் என்பதற்கு 9 ஆவது உடன்படிக்கையில் என்ன எழுதுகிறார்கள் ? ” இந்த உடன்படிக்கையில் கலந்து கொண்டவர்களுக்கு மத்தியில் ஆபத்தான சண்டை , சச்சரவுகள் அல்லது ஏதும் பிரச்னைகள் ஏற்பட்டா ல் அதற்குரிய முடிவை அல்லாஹ்வும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுமே கூறுவார்கள்” அதாவது அல்லாஹ்வின் துாதர் முஹம்மது நபி ( ஸல் ) அவர்களிடம்தான் தீர்ப்புக்கு வரவேண்டும் . இவ்வாறு ஒப்பந்தம் எழுதப்படுகிறது . இன்றைய அன்சாரிகள் ஏற்றுக் கொள்ளாமல் கம்யூனிஸத்தையும் கண்டதுகளையும் உள்வாங்கி தீர்வைத் தேடலாம். மதீனா மண்ணின் மைந்தர்களான அசல் அன்சா

அன்சாரி அவர்களே! என்ன இல்லை இஸ்லாத்தில் வெளியில் இருந்து உள் வாங்க?

Image
எல்லா மக்களையும்   அரவணைப்பதுதான் இஸ்லாம். எனவேதான் எல்லா மக்களையும்   அரவணைப்பவர்களாக முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.  எல்லா கொள்கைகளையும் அரவணைத்தால் அதற்குப் பெயர் இஸ்லாமிய மார்க்கம் அல்ல. அப்படி அரவணைப்பவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவர்கள் ஆவார்கள். எல்லா மக்களையும்   அரவணைப்பது என்பது வேறு. எல்லா கொள்கைகளையும் அரவணைப்பது என்பது வேறு. இந்த வித்தியாசத்தை அறிவுடையவர்கள் அறிவார்கள் . எல்லா மண்ணிலும் உள்ள மனிதர்களுக்கேற்ற மார்க்கம்தான் இஸ்லாம் . இந்து குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சகோதரர் இதை விளங்கினார் . இஸ்லாம் அவரை உள் வாங்கியது. மண்ணுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் என்ற விளக்க நுால் வெளியிட்டார் . முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அன்சாரி அவர்களே ஜுனியர் விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில் என்ன சொல்லி உள்ளீர்கள்? ” இந்த மண்ணுக்கேற்ற அரசியலைச் செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் . திராவிட இயக்க அரசியல் , தமிழ் தேசிய அரசியல் , இடதுசாரி அரசியல் ஆகியவற்றை உள்வாங்கி அரசியல் செய்ய வேண்டும் என்பதை முன்னெடுக்க நாங்கள் கட்சியைத் தொடங்கியுள்ளோம் . ( கட்சியை தொடங்க இத

சிறைவாசி சிம்மாசனம் ஏற முடியுமா?

Image
ஒருமைப்பாட்டின் நாயகர் முஹம்மது நபி ( ஸல் ) அவர்கள் யூதர்களுடன் செய்து கொண்ட ஏழாவது ஒப்பந்தம் . “ பிறருக்கு எதிரானப் போரில் முஸ்லிம்களுடன் யூதர்கள் கலந்துகொள்ளும் போது யூதர்களும் போர் செலவுகளில் பங்கெடுக்க வேண்டும்” பிறருக்கு எதிரான போர் என்றாலும் அதில் முஸ்லிம்கள் கலந்து கொள்ள வேண்டும் . அது மட்டுமன்றி பொருளாதார உதவியும் செய்ய வேண்டும் என்பது இதில் அடங்கி இருக்கிறது . அதாவது யூதர்களுக்கு எதிரான போர் என்றாலும் முஸ்லிம்கள் நமக்கு என்ன என்று இருந்து விடக் கூடாது . சரி நாமும் போய் போர் செய்வோம் என்று மட்டும் முஸ்லிம்கள் போய் விடக் கூடாது . முஸ்லிம்களிடமுள்ள பொருளாதாரத்தையும் செலவு செய்ய வேண்டும் . யாருக்காக ? யூதர்களுக்காக , எதற்காக ? யூத சமுதாயத்தினரைக் காப்பாற்றுவதற்காக . முஸ்லிம்களை போருக்கு போகச் சொன்னதோடு நிற்கவில்லை . யூத இனத்தைக் காக்க முஸ்லிம்களும் தங்கள் பொருளாதாரத்தை செலவு செய்ய வேண்டும் என்ற மிகப் பெரிய ஒரு புரட்சியை செய்து உள்ளார்கள் இந்த ஒப்பந்தத்தில் . ஒரு கட்சியினரோடு கூட்டணி ஒப்பந்தம் செய்து கொண்டால் . அந்த கட்சி போட்டியிடும் தொகுதியில் கூட்டணி ஒப்பந்தம

சட்ட(ம் இயற்றும்) சபைக்கு சன்மார்க்கத்தவர்கள் செல்லலாமா?

Image
ஒருமைப்பாடு என்று சொன்னால் எந்த ஒரு இனத்தையோ மொழியையோ சார்ந்து இருக்கக் கூடாது .  முன்னிலைப்படுத்தக் கூடாது. மனிதர்கள் என்ற ஒரு நிலையை மட்டும்தான் முன்னிலைப்படுத்த வேண்டும். அதுதான் ஒருமைப்பாடு . பல கடவுள் கொள்கை உடையவர்கள் அவர்கள் நம்பிக்கைப்படி   வணங்கிக் கொள்ளட்டும். முஸ்லிம்கள் நம்பும் ஒரே கடவுளான அல்லாஹ்வை முஸ்லிம்கள் வணங்கிக் கொள்ளட்டும் . கடவுள்கள் இல்லை என்று நாத்திகர்கள் சொன்னால் . சொல்லி விட்டுப் போகட்டும் .  அதில் அரசு தலையிடக் கூடாது .  தாய் மண்ணை வணங்கு தந்தை மண்ணை வணங்கு என சொல்லக் கூடாது . எல்லாரும் ஒரே நாட்டில் இருக்கக் கூடிய பிரஜைகள் . ஒரு நாட்டில் உள்ள குடிமக்களுக்கு அவரவருக்கு உள்ள உரிமைகளை கிடைக்கச் செய்வதுதான் ஒவ்வொரு நாட்டில் உள்ள ஒருமைப்பாட்டின் நோக்கமாக இருக்க வேண்டும் . மதச் சார்பற்ற இந்திய ஒருமைப்பாடு என்று சொல்லுகிறோம் . மதச் சார்பற்ற இந்திய ஒருமைப்பாடு என்ன செய்ய வேண்டும் . மதம் சம்பந்தமான சடங்குகளுக்கு அரசு ரீதியாக எந்த முக்கியத்துவமும் கொடுக்கக் கூடாது . இந்துக்கள் தீபாவளியை கொண்டாடி சந்தோஷப்படுகிறார்கள் என்றால் அது அவர்களுடைய உரிமை.

பொய் வழக்கு போடும் போலீஸாரை விமர்சிக்கும் பொதுமக்கள் நிலை என்ன?

Image
” யூதர்கள் தங்களின் செலவுகளுக்குத் தாங்களே பொறுப்பாளிகளா க ஆவா ர் கள் . அ து போலவே முஸ்லிம்களும் தங்களின் செலவுகளுக்கு தாங்களே பொறுப்பாளிகளா க ஆவா ர் கள் ” இறைவனின் இறுதித் துாதர் முஹம்மது நபி ( ஸல் ) அவர்கள் யூதர்களுடன் செய்து கொண்ட 2 ஆவது ஒப்பந்தம் இது. இந்த ஒப்பந்தத்தில். இன்றைய  அரசியல்வாதிகளுக்கு அரிய பல வழிகாட்டுதல்கள் உள்ளன. முஸ்லிம்களும் சரி , யூதர்களும் சரி அவரவர்களின் தனிப்பட்ட செலவுகளுக்கு அவரவர்களே பொறுப்பாளிகளாக ஆவார்கள் என்றால் என்ன அர்த்தம்? ” மதீனாவிலே ஆட்சி இருக்கும் . ஆட்சியாளரிடம் பொதுப் பணம் நிறைய இருக்கும் . நிறைய பொருளாதாரம் இருக்கின்றது என்ற காரணத்தினால். அரசாங்க செலவில் நான் பள்ளிவாசல்கள் கட்ட மாட்டேன்” என்பதுதான் இதன் அர்த்தம் .  இதை நீதியாளர் முஹம்மது நபி ( ஸல் ) எப்படி சொல்லி உள்ளார்கள் பார்த்தீர்களா ? அவரவர்கள் சமுதாய சொந்த செலவுகளை அவரவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று .  எல்லா மத மக்களின் பொருளாதாரங்களைக் கொண்ட அரசாங்க செலவில் பள்ளிவாசல்கள் கட்ட மாட்டேன் என்றார் நேர்மையான ஆட்சியாளர் முஹம்மது நபி ( ஸல் ) அவர்கள் .  இன்றுள்ள ஆட்சியா