SDPI முஸ்லிம் சமுதாய கட்சி அல்ல
2014-05-15 14:12 GMT+04:00 jahangeer hussain < jahangeerh328@gmail.com > : SDPI சமுதாய கட்சியா? அனைத்து சமுதாய கட்சியா? இது போன்ற கேள்வியை அவ்வப்போது விவாதமாக்குவதும்,சமுதாய கட்சி என்றால் பொங்கல்,கிருஸ்துமஸ்,தீபாவளி போன்ற பிற மதத்தவரின் பண்டிகைகளுக்கு வாழ்த்து பேனர் வைப்பது ஏன்? அனைத்து சமுதாய கட்சி என்றால் முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பில் ஒரு உறுப்பினராக அங்கம் வகிப்பது சரியா? என்றெல்லாம் கேள்வி கேட்டு தங்களை மெத்த படித்த மேதாவிகளைப்போல் காண்பிக்க துடிக்கும் சில அறியா சகோதரர்களுக்கு எனது இந்த விளக்கம் தெளிவை கொடுக்கும் என நினைக்கிறேன். SDPI என்பது எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லாமல் அனைத்து சமுதாயத்திற்கும் சொந்தமான பொதுவான தேசிய அரசியல் கட்சியாகும். இந்த கட்சியில் முஸ்லிம்,இந்து,கிருஸ்தவர் என்ற பாகுபாடில்லாமல் அனைத்து மக்களும் உறுப்பினர்களாகவும்,பொறுப்பாளர் களாகவும் இருந்து வருவதே அதற்கு சாட்சியாகும். அந்தந்த மக்களின் பண்டிகை காலங்களின் போது அவரவர் சார்ந்துள்ள சமூக மக்களுக்கு வாழ்த்துக்கள் சொல்வதென்பது இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையாகும். இதன் அடிப்படையில் தான் SDPI...