Posts

Showing posts from October, 2012

ஹஜ்ஜுப் பெருநாள் பரிசுப் போட்டி

Image
ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு மேலப்பாளையம் சமாயினா சேக் முஹம்மது மூப்பன் தெருவில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 27-10-2012 சனிக்கிழமை அன்று ஜமால் அவர்களை வாத்தியாராகக் கொண்டுள்ள ஞானியார் சிலம்பு கலைக்குழுவினரின் வீர விளையாட்டுக்கள் நடை பெற்றன.   முன்னாள் நகர் மன்ற உறுப்பினரும் சிலம்ப வாத்தியாருமான மணியாச்சி காஜா அவர்கள் வீர விளையாட்டுக்களை துவங்கி வைத்தார். சிறப்பாக விளையாடியவர்கள் ஆடைகள் அணிவித்து கவுரவிக்கப்பட்டார்கள் 28-10-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று வாலிபர்களுக்கிடையிலான பந்தய போட்டிகள் நடைபெற்றன.     29-10-2012 திங்கள்கிழமை அன்று  மார்க்க கேள்வி பதில் நிகழ்ச்சி நடை பெற்றது. மவுலவி L.K.M. காஜா மைதீன் ரியாஜிஅவர்கள் சிறப்புரையாற்றினார்.   1. சமிஃனா என்றால் என்ன அர்த்தம். குர்ஆனில் அந்த வார்த்தை இடம் பெற்றுள்ள வசனங்களில் 3 ஐ குறிப்பிடுக. 2. சமாயினா, சமிஃனா இரண்டுக்கும் தொடர்பு உள்ளதா? 3. ரோம் பேரரசு (அன்றைய இத்தாலி) நாடு பற்றி அல்குர்ஆனில் எங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. 4. மிஸ்ர் (இன்றைய எகிப்து) நாட்டின் பெயர் அல்குர்ஆனில் எத்தனை இடங்களில் இடம் பெற்றுள்ளது.