அண்ணன் ஜமாத்தின் அடாவடி போராட்டம்! - அப்துல் முஹைமின்
ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்... திருமறைக் குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் மட்டுமே மார்க்கம் என்ற கொள்கையின் பால் ஈர்க்கப்பட்டு இக்கொள்கையை ஏகத்துவப் பிரச்சாரத்தின் துவக்க காலத்தில் ஏற்றவர்கள் அதற்காகப் பெரிய விலை கொடுத்தனர். அடி உதைகளுக்கு ஆளானார்கள். ஊரை விட்டு விலக்கி வைக்கப்பட்டனர். பொய் புகார் கூறி சிறையில் அடைக்கப்பட்டனர். சொந்த பந்தங்களுக்குப் பகையாயினர். இப்படி ஏராளமான தியாகங்களுக்கு மத்தியில் தான் கொள்கையைக் கடைப்பிடித்தனர். மேற்கண்ட 'டயலாக்' அண்ணன் ஜமாஅத்தினரால் அடிக்கடி பயன்படுத்துவதாகும். அல்லாஹ்விற்காக பாடுபட்ட நல்லடியார்கள் இதுபோன்று நாள்தவறாமல் சொல்லிகொண்டிருக்கவில்லை. இது கிடக்கட்டும். இவர்கள் 25 வருட சாதனையில் மேடையில் முழங்கியது தவிர வேறு என்ன பெரிதாக சாதித்து விட்டார்கள்? எத்தனை நபிமொழி நூல்களை இவர்கள் மொழிபெயர்த்து வெளியிட்டார்கள்? ஒரு திர்மிதியை அதுவும் ஒரே பாகத்தோடு ஊத்தி மூடி விட்டார்கள். ஏற்கனவே திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு உள்ள நிலையில், இவர்கள் பங்குக்கு ஒரு மொழிபெயர்ப்பை வெளியிட்டார்கள். அத...