அண்ணனின் சொத்து மதிப்பு (50௦ லட்சமாக)உயர்ந்து விட்டதா? - அப்துல் முஹைமின்
ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்.... கேள்வி ; எனது பூர்வீக வீட்டைத்தவிர என் பெயரிலும், மனைவி மக்கள் பெயரிலும் உள்ள சொத்துக்களை 50௦ லட்சம் தந்துவிட்டு யாரும் வாங்கிக்கொள்ளலாம் என்று அண்ணன் பீஜே கூறுகிறாரே? அண்ணனின் சொத்து மதிப்பு உயர்ந்து விட்டதா? -மன்சூர்அஹ்மது, நீடாமங்களம். பதில் ; அண்ணனின் சொத்து எவ்வளவு என்பதை பற்றி நாம் எப்போதும் கண்டுகொண்டதில்லை. காரணம் அவரது சொத்து குறித்து அவர் அல்லாஹ்விடம் பதில் சொல்லலப் போகிறார் என்பதுதான். அதே நேரத்தில் அண்ணன் இஸ்மாயில் சலபிக்கு பதிலளிக்கும்போது, '' நான் தற்போது வசித்து வரும் சென்னையில் சிறிய வாடகை வீட்டில் தான் இருந்து வருகிறேன். எனது சொந்த ஊரில் எனது தந்தையிடமிருந்து வாரிசாகக் கிடைத்த ஒரு வீட்டு மனை உள்ளது. இரண்டு சென்டுக்கும் குறைவான சுமார் 800 சதுர அடி அளவுடையது. இது எனது சம்பாத்தியம் அல்ல. எனது குடும்ப நகைகளை விற்று மதுரையில் நான் ஒரு அச்சகம் நடத்தினேன். தமுமுக ஆரம்பித்த பின் அந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு நான் சென்னையில் இருக்க வேண்டும் என்று நண்பர்கள் வற்புறுத்தியதால்...