Posts

Showing posts from March, 2010

இக்பால் மதனி அவர்களின் துணைவியார்

அஷ;ஷய்கு முஹம்மது இக்பால் மதனி அவர்களின் துணைவியார் ருகையா அம்மையார் அவர்கள் 11.3.2010அன்று இறப்பெய்தினார்கள் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம். தமிழகத்தில் தவ்ஹீது எழுச்சி ஏற்பட அரும்பாடுபட்டவர்களில் பெண்களில் முதன்மையானவர் மணப்பாறை ருகையா அம்மையார் அவர்கள் என்று சொன்னால் மிகையாகாது. துபை பாத்திமா பள்ளியில் நடந்த தவ்ஹீது பிரச்சார கூட்டங்கள், ஐ.ஏ.ஸி. (இஸ்லாமிய எழுச்சி மையம்) ஆலோசனை கூட்டங்கள், இன்று ஏகத்துவம் என்ற பெயரால் வெளி வரும் பத்திரிக்கைக்கு மூல வித்தான புரட்சி மின்னல் ஆலோசனை கூட்டங்கள், அது அல்முபீன் ஆக ஆன பின் நடந்த ஆலோசனை கூட்டங்கள், ஆசிரியர் குழு கூட்டங்கள் என அனைத்திலும் அஷ;ஷய்கு முஹம்மது இக்பால் மதனி அவர்களுக்கு உறுதுணையாக ருகையா அம்மையார் அவர்கள் இருந்துள்ளார்கள். அன்னாரின் நல்லறங்களை ஏற்று பாவங்களை மன்னித்து சுவர்க்கத்தை அளிக்க அல்லாஹ்விடம் வேண்டுவோமாக.

நெல்லை மதுக்கடை மறியல் படங்கள் & செய்திகள்.

Image

மில்லத் இஸ்மாயிலிடம்தான் நீதி இருக்கிறது

Image
கலெக்டர், எஸ்.பி, நீதிபதி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு குடிநீரே கிடைக்கக்கூடாது, அமைச்சர்களுடன் மோத வேண்டும் என்று நினைப்பவரால் சமுதாயத்திற்கு நன்மைகளை எப்படி பெற்றுக்கொடுக்க முடியும்? எல்லா வற்றிற்கும் மேலாக எங்கள் கட்சி வளருவதை விட சமூக ஒற்றுமையே முக்கியம். அதற்கு எவர் வெளி யேறு வதைப்பற்றியும் எங்களுக்கு கவலை இல்லை. என்பது மு.லீக் தரப்பு பதிலாகும். இது அவர்களது பத்திரிக்கையிலும் சைட்டிலும் வெளியிட்டு நமது பிளாக்கரிலும் பதிந்துள்ளார்கள். அதிகாரிகளுக்கு குடி நீரே கிடைக்கக் கூடாது என்று கூறவில்லை. பொதுமக்கள் உரிமையை அதிகாரிகள் பறிக்கக் கூடாது என்பதுதான் பிரச்சனை. அதுவும் ஆஸ்பத்திரி நோயாளிகள் உரிமையை பரித்தால் அதை கண்டு கொள்ளாமல் விரல் வைத்து சூப்பிக் கொண்டிருப்பவர்கள் அதிகாரிகளின் அடிவருடிகளாகத்தான் இருக்க முடியும். இதை அவர்கள் அறிக்கை மூலம் நிரூபித்துள்ளார்கள். மில்லத் இஸ்மாயிலிடம்தான் நீதி இருக்கிறது என்பதற்கு பத்திரிக்கைகள் சாட்சி பகிர்கின்றன. முஸ்லிம் லீக் ஆதரவால்தான் இன்று வரை கலெக்டர் மட்டும் நோயாளிகள் நீரை குடித்து வருகிறார்.