Posts

Showing posts from October, 2009

த.மு.மு.க. வின் முதல் பொதுச் செயலாளர்.

தமிழ்நாடு முஸ்­லிம் முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் என்ஜினீயர் அப்துஸ் ஸமது சாஹிப் அவர்கள் சென்ற சனிக்கிழமை (அக்டோபர் 17) அன்று பிற்பகல் சென்னையில் காலமானார்கள். [இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்] அவருக்கு வயது 78 ஆகும். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பிறந்த ஹெச். அப்துஸ் ஸமது அவர்கள் ஒரு பொறியாளர் ஆவார். பொறியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற அவர் பொறியியல் கல்லுரிகளில் பேராசிரியராகவும், முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.தமிழ்நாடு முஸ்­லிம் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர்களில் ஒருவரான என்ஜினீயர் அப்துஸ் ஸமது சாஹிப் அவர்கள் அமைப்பின் முதல் பொதுச் செயலாளராக ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் துடிப்புடன் செயலாற்றினார். பின்னர் உடல்நலக் குறைவின் காரணமாக அப்பதவியில் இருந்து விலகினார். சமுதாய மற்றும் மார்க்கப்பணியில் அதிக நாட்டம் உடையவராக விளங்கிய இஞ்சினியர் அப்துஸ் ஸமது அவர்கள் தமது கடைசி மூச்சு வரை அப்பணிகளை ஆற்றிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பல மார்க்க நூல்களை எழுதியும், மொழிபெயர்த்தும் உள்ளார். இந்தியன் இஸ்லாமிக் மிஷனின் அறங்காவலர்களில் ஒருவராகவும் அவர் விளங்கின...