உயிரை பறித்த பள்ளி தாளாளரின் பேராசை.
நெல்லை டவுணை சேர்ந்தவர் சாகுல் அமீது. சிறியதாக நகைக்கடை நடத்தி வந்ததோடு த.மு.மு.க-வின் நெல்லை நகர பொருளாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். அன்பான மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் அமைதியாக சென்று கொண்டிருந்த இவர் வாழ்க்கையில் பேரிடியாக, ஒருநாள் மதிய வேளையில் இவருடைய மூத்த மகன் முகம்மது ஆசிக் (8) 3-ம் வகுப்பு படித்து கொண்;டிருந்த லிட்டில் பிளவர் பள்ளியிலிருந்து ஒரு தொலைபேசி வந்தது. 'உங்கள் மகனை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம்' என கூறி இணைப்பு துண்டிக்கப்பட்டது. குமுறும் நெஞ்சத்தை கட்டுப்படுத்தியபடி பள்ளிக்கு விரைந்த சாகுல் தம்பதியினர், பின்பு பாளை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு அவர்களுக்கு காண கிடைத்தது அந்;த பாலகனின் உடல் மட்டுமே. செய்தி கேள்விபட்டு அங்கு குழுமிய த.மு.மு.க-வினருக்கு கிடைத்த செய்தி, பள்ளியின் சார்பாக நீச்சல் பயிற்சி என அனைத்து மாணவர்களும் கட்டாயபடுத்தப்பட்டு ரூ.300 பெற்று கொண்டு, சுமார் 35 மாணவர்கள் ஒரு வேனில் பத்து தினங்கள் முன்பே பள்ளியில் பணிக்கு சேர்ந்த ஒரு ஆசிரியை மற்றும் உடற்கல்வி ஆசிரியருடன். அண்ணா விளையாட்டு அரங்கத்த