காஃபிர்கள், அநியாயக்காரர்கள், பாவிகள்
ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்ற கொள்கையுடையவர்கள் சொல்லும் அதிகாரம் சம்பந்தமானது அல்ல. இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ் (அல்குர்ஆன் 12:40) அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை என்ற இந்த ஆயத்து. நபி யூசுப் (அலை) அவர்களுடைய அரசியல் வாழ்வு. இருந்தாலும் அவர்கள் சொன்ன அந்த அதிகாரம் சம்பந்தமான அர்த்தத்திலேயே பொருள் கொண்டு ஆய்வு செய்தோம். அப்படி பொருள் கொண்டாலும் இதை ஒட்டி அவர்கள் கூறும் கருத்து தவறானது. இதற்கு ஆதாரமாக இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ் - அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை என்று எந்த நபி பிரச்சாரம் செய்தாரோ அந்த நபி யூசுப் (அலை) அவர்களுடைய அரசியல் வாழ்வு இந்த வசனத்துக்கு விளக்கமாக அமைந்து விட்டது. தவறான கருத்துடையவர்களுக்கு பதிலாகவும் அமைந்து விட்டது. இதை முந்தைய வெளியீட்டில் விரிவாகவும் விளக்கமாகவும் தெளிவாகவும் கண்டோம். இதுவரையிலும் எந்த பதிலும் இதுவரை வரவில்லை. இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ் (அல்குர்ஆன் 12:40) என்பதை ஆதாரமாகக் காட்டி ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்று எழுதியவர் இன்று அந்த கருத்தில் இல்லை. இருந்தாலும் இன்றும் சிலர் அந்த கருத்தில் இருக்கிறார்கள்.