தமுமுக தொடங்கப்பட்ட வரலாறு
Assalamu Alaikkum, சிலர் தமுமுக சகோதரர் பி.ஜே அவர்களால் தொடங்கப் பட்ட இயக்கம் என்று எண்ணி பதில் அனுப்பியுள்ளார்கள். அதற்கு பதிலே இது. சகோதரர் ஷாஹுல் அவர்கள் தனது கடிதத்தில் தற்போதைய தமுமுக தலைவர்களால் தமுமுக தொடங்கப்படவில்லை என்று வரலாறு தெரியாமல் எழுதியுள்ளார். குணங்குடி ஹனிபா அவர்கள் பெயரளவில் வைத்திருந்த தமுமுகவை வெகுமக்கள் இயக்கமாக மாற்றுவது என்ற முடிவு ஆகஸ்ட் 1995ல் எடுக்கப்பட்டது. இதற்காக நடைபெற்ற கூட்டத்தில் தற்போதைய தமுமுக தலைவர் பேராசிரியர் டாக்டர் ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி, துணைத் தலைவர் அப்துல் ஜலீல், தற்போது தமுமுகவின் செயற்குழு உறுப்பினராக இருக்கும் தமுமுகவின் முதல் பொருளாளர் சைய்யது நிசார் அஹ்மது, தமுமுகவின் முதல் பொதுச் செயலளார் பொறியாளர் அப்துஸ் ஸமது, இவர்களுடன் சகோதரர்.அலாவுத்தீன், சகோதரர்.பி. ஜெய்னுலாபுதீன், சகோதரர். குணங்குடி ஹனிபா ஆகியோர் சேர்ந்து தொடங்கியது தான் தமுமுக. தமுமுக வெளியிட்டுள்ள அமைப்பு நிர்ணயச் சட்டத்தில் இதனைப் பார்க்கலாம். சகோதரர். எஸ். எம். பாக்கர் கைதுச் செய்யப்பட்டுச் சிறையில் இருந்த போது இந்தக் கூட்டம் நடைபெற்றது. இருப்பினும்