நன்றி குமுதம் ரிப்போர்ட்டர். Source: http://tmmkgulf.blogspot.com/2008/06/9.html பிழைப்புத் தேடி குவைத்திற்குச் சென்ற தமிழர்கள் ஒன்பது பேர் முதலாளியின் சித்திரவதைகளைப் பொறுக்க முடியாமல் அவரிடமிருந்து எப்படியோ ரகசியமாகத் தப்பியிருக்கிறார்கள். கடந்த ஒரு வார காலமாய் சோறு தண்ணியின்றி நடு ரோட்டில் அலையும் அவர்களை இந்தியத் தூதரகமும் அலட்சியப்படுத்தி விடவே, நாடு திரும்ப வழியின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட த.மு.மு.க.வினர் அவர்களை மீட்டுக் கொண்டு வரும் பணியில் இறங்கியிருப்பது ஆறுதலான விஷயம். கடலூர்மாவட்டம் சாத்தப்பாடியைச்சேர்ந்த ரவிச்சந்திரன்,உதயகுமார், முருகன்,கருணாகரன், அப்துல்கனி மற்றும் திருவாரூர் மாவட்டம் மாங்குடியைச் சேர்ந்த மணிவண்ண பாண்டியன்,ராஜாராமன், முருகானந்தம்,இளையராஜா ஆகியோர்தான் குவைத்தில் தவித்துக்கொண்டிருக்கும் அந்த அப்பாவி ஜீவன்கள். நெல்லைப் பக்கம் தாழையூத்தைச் சேர்ந்தவர் பீர் மரைக்காயர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகச் செயலாளராய் இருந்து பலவிதமான பொதுநலப் போராட்டங்களில் ஈடுபட்டவர். இவர் பிழைப்பிற்காக குவைத் சென்றார். அங்கு பஸ் டிரைவராய் ...