தென்காசி பிரச்சனைகளுக்கு என்னதான் தீர்வு?
நன்மையை சொல்லி தீமையை தடுங்கள் என்பதுதான் இஸ்லாத்தின் கட்டளை. தென்காசிக்காக மீட்டிங். தென்காசியில் மீட்டிங். இது போல் அறிவிப்பு செய்து தென்காசிக்கு அப்பால் பல ஊர், பல மைல்கள் தாண்டி கூட்டம் போட்டு தென்காசி என்று ஒரு வார்த்தை கூட சொல்லாமல் விளம்பரம் தேடும் கூட்டம் ஒரு புறம். உண்மையை எழுதினால் எதை எழுதினாலும் விமர்சனம் இன்றி எழுதுங்கள் என்ற அறிவுரை ஒரு புறம். விமர்சனம் இன்றி எழுதுங்கள் என்று எழுதும் உள்ளங்களின் எண்ணம் நல்ல எண்ணம். போல் தோன்றலாம். ஆனால் அது இஸ்லாம் காட்டிய வழி அல்ல. நன்மையை சொல்லுங்கள் என்பது இஸ்லாத்தின் கட்டளை அல்ல. நன்மையை சொல்லி தீமையை தடுங்கள் என்பதுதான் இஸ்லாத்தின் கட்டளை. இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அபுஜஹ்லை விமர்சிக்கவில்லை. அவனது துரோகச் செயல்களை சமுதாயத்துக்கு அடையாளம் காட்டவில்லை என நிரூபித்து விட்டால். தன்னை அபுஜஹ்லை விட மோசமானவன் என்று சொன்னவனை நாம் விமர்சிப்பதையும் அவனது சமுதாய விரோத செயல்களையும் அடையாளம் காட்டாமல் விட்டு விடுவோம். மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டுமா? வேண்டாமா? சிந்தியுங்கள். கோத்ரா ரெயிலை எரித்து விட்டு அதைக் காரணம் காட்டி குஜராத்த...