கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைக்கு முன்னுதாரணம் இவர்தான்.
முஸ்லிம் லீக்கைச் சார்ந்த வி.எஸ்.டி. ஷம்சுல் ஆலம் என்பவர் பாளைத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். இவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபொழுது தொகுதிக்கு என்று எந்த நன்மையும் செய்யாதவர். எம்.எல்.ஏ. என்ற முறையில் பொது மக்கள் தேவைக்கு என்று சென்றால் அவர்களிடத்திலே கைக் கூலி வாங்கி விட்டுத்தான் கையெழுத்துப் போடுவார். இவரின் பிற திருவிளையடல்கள். இவரின் பராமரிப்பில் இருந்த வக்பு நிலங்களில் ஒரே இடத்தை ஒன்றுக்கு மேற்பட்டோருக்கு விற்று காசு வாங்கிய கண்ணியவான். நிலப்பிரச்சனையில் சம்பந்தப்பட்டவர்கள் வந்து உரிமை கோரும்போது கட்டப் பஞ்சாயத்து பேசி இரண்டு தரப்பிலும் காசடித்த காசாளர். இதனால் எம்.எல்.ஏ.வாக இருந்தபொழுது முனிசல் சேர்மன் தேர்தலில் நின்று படு தோல்வி அடைந்தார். பிற கட்சிகளில் கவுன்ஸிலராக இருந்தவர்கள் எம்.எல்.ஏ.வாக ஆவதை கண்டிருக்கிறோம். 1984இல் எம்.எல்.ஏ.வாக இருந்த முஸ்லிம் லீக்கைச் சார்ந்த இவர் 1998இல் கவுன்ஸலிராக ஆனார். என்னே முன்னேற்றம் பார்த்தீர்களா? கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைக்கு முன்னுதாரணம் இவர்தான் என்பதை மறுக்க முடியுமா? இப்படி செல்லாக் காசாகி விட்ட இவர் தனது அரசியல் செல்வ...