உறவுகளை வெட்டி (முறித்து) வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்.
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். 20-09-2006 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. உண்மையை உரத்துக் கூறும் உமர் என்ற பெயரில் மெயில்கள் அனுப்பி வரும் முத்துப் பேட்டை பரகத் அலி அவர்களே! உங்களைப் போன்றவர்கள் செய்து வரும் பொய்ப் பிரச்சாரங்களுக்கு பதில் அளிக்கும் மார்க்கக் கடமையை செய்து வந்திருக்கிறோம். அது போல் உபதேசம் என்ற மார்க்கக் கடமையை இந்த மெயில் மூலம் செய்கிறோம். நீங்கள் செய்துள்ள தில்லுமுல்லுகளை பட்டியலிடுவதற்காக இதை எழுதவில்லை. வார்த்தைக்கு வார்த்தை பதில் எழுதி விட்டது போல் எண்ணிக் கொண்டு எதையாவது எழுத வேண்டும் என்பதற்காக என்ன என்னவோ எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். அந்த வழியில் இலங்கை டூ காத்தான்குடி என்ற தலைப்பில் மெயில் அனுப்பியுள்ளீர்கள். அதிலுள்ள உங்கள் அறியாமையை நீங்கள் செய்துள்ள தில்லுமுல்லுகளை பட்டியலிடுவதற்காக இதை எழுதவில்லை. பலஹீனத்தினால் இப்படி எழுதி இருக்கிறேன் என்ற எண்ணம் உங்களுக்கு வந்து விடக் ...