இவர்கள் இனி எதிலும் ஈடுபட மாட்டார்கள் என்று நான் பொறுப்பு ஏற்கிறேன்.
கண்ணியத்திற்குரிய த.மு.மு.க. தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் பொறுப்பாளர்களுக்கு கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹியின் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. நலம், நலம் பல சூழ்க. சில விரும்பத் தகாத செய்திகள் சமீப காலமாக மேலப்பாளையம் நகர் முழுவதும் உலவி வருகின்றது. இது பற்றி பல வழிகளிலும் உங்களுக்கும் செய்திகள் வந்திருக்கும். இது சம்பந்தமாக மேலப்பாளையத்தில் அல்-உம்மா என்று அறியப்பட்டவர்களின் நிலை என்ன? என்பதை அறிய வேண்டும். அதையொட்டி நம்மால் இயன்ற அறிவுரைகளைக் கூற வேண்டும் என்று முடிவு செய்தேன். அதன் அடிப்படையில் முல்லன் செய்யது அலி தலைமையில் உள்ளவர்களை அழைத்து வருமாறு கூறினேன். 20-05-2006 அன்று மஃரிபுக்குப் பிறகு 17 பேரை எனது வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார். அதனை சிறைவாசிகள் நலன் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் என அமைத்துக் கொண்டோம். 8 ஆண்டுகளாக சிறையில் வாடும் முஸ்லிம்களின் விடுதலை விஷயத்தில் த.மு.மு.க. கொண்டுள்ள கவலை. அதற்காக எடுத்து வரும் முயற்சிகள். ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசி வருவது. 1993 இல் தடாவில் போட்ட இதே அணியினரை இதே த.மு.மு.க.தான் இதே ஆட்சியாளர்களிடம் பேசித்...