இரு வேடமா? இரட்டை வேடமா? பி.ஜே.க்கு கத்தர் போட்ட தடை சாதராணமானது அல்ல.
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம் 24-06-2005 அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. எந்தப் பதவிக்கும் ஆசைப்படாதவன் நான் என்று தன்னைப் பற்றி தானே விளம்பரம் செய்து வந்த பி.ஜே. அவருக்கே உரிய சதி திட்டத்தின் மூலம் த.த.ஜ.வின் தலைவர் பதவியை கைப்பற்றி விட்டார். பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டார் என்பதெல்லாம் பி.ஜே. காட்டும் கண் கட்டி வித்தைகளில் ஒன்று. இதை அறிவுள்ளவர்கள் அனைவரும் அறிவார்கள். பி.ஜே. தானே ஆட்களை செட்டப் செய்து பொதுக் குழுவுக்குள் வரச் செய்வார் என்பது பி.ஜே.யே ஒப்புக் கொண்டுள்ள வரலாற்று உண்மை. தனது தேவை நிறைவேறும் வரை தலைவராக வைத்திருந்தவரை தக்க தருணத்தில் தலைவர் பதவியிலிருந்து தூக்கி வீசி விட்டார். இன்னும் அவர் இழிவுபடுத்த வேண்டும் என்பதற்காகவே துணைத் தலைவராகவும் ஆக்கி வைத்துள்ளார். பொதுவாக துணைப் பொறுப்புகளிலிருந்து மேல் பொறுப்புகளுக்குத்தான் தேர்வு செய்யப்படுவார்கள். தலைவராக இருந்து துணைத் தலைவராக ஆன முதல் மனிதர...