முழுப் பூசணியை சோற்றில் மறைத்தவர்கள்.
நிச்சயமாக உமது இறைவனின் பிடி கடுமையானது. (அல்குர்ஆன் 85:12) தலைப்பைப் பார்த்ததும் முழுப் பூசணியை சோற்றில் மறைக்க முடியாது என்பதுதானே பழமொழி. அதற்கு மாற்றமாக முழுப் பூசணியை சோற்றில் மறைத்தவர்கள் என்று தலைப்பு உள்ளதே. யார் மறைத்திருப்பார்கள்! என்று ஆச்சரியப்படுகிறீர்கள் அப்படித்தானே. ஆச்சரியப்படுவதால் நீங்கள் நவீன தக்லீதி இல்லை என்பது தெரிகிறது. நவீன தக்லீதியாக இருந்தால் ஆச்சரியப்பட மாட்டீர்கள். இலங்கை சென்ற பி.ஜே. கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட செய்திதான் சோற்றில் மறைத்த பூசணியாக உள்ளது. அது என்ன என்பதை இறுதியில் பார்ப்போம். அதன் துணைச் செய்திகளை முதலில் பார்ப்போம். பி.ஜே. கொடி அறிவித்ததும் தவ்ஹீதை சொல்ல கொடி எதற்கு என்று பொங்கி எழுந்த மாவீரர்களில் ஒருவர் எம். எஸ். சுலைமான் என்பவர். விடுவாரா முபாஹலா பூச்சாண்டி ஒரே ஒரு மிரட்டல்தான் விட்டார். அப்படியே ஆடிப் போய் விட்டார் சுலைமான்;. பாவம் பிழைப்பு போய் விடுமே. பிறகு என்ன சரண் அடைவதுதான் கதி என சரண் அடைந்து விட்டார். அண்ணன் கொடுத்த விளக்கத்தில் தெளிவு(?) அடைந்து கொடி தேவை என புரிந்து விட்டேன் என்று கூற...