ஆய்வு செய்யப்பட வேண்டிய அந்த அறிஞர்.
முஸ்லிம்களில் தவ்ஹீதுவாதிகள் என்போர் சுன்னத் ஜமாஅத் என்போரை பின்பற்றித் தொழக் கூடாது என்று கூறி வருகிறார்கள். அவர்களது இந்த வாதத்திற்கு ஆதாரம் போல் அவர்கள் கூறியுள்ள ஆயத்து கலிமாச் சொன்ன முஸ்லிம்கள் பற்றியது அல்ல. அவர்கள் வைத்துள்ள வாதப்படி பார்த்தாலும் அவர்களின் கருத்தே அவர்களுக்கு முரண்படுகிறது ஆகியவற்றையும் எப்படியெல்லாம் முரண்படுகிறது என்பதில் ஒரு சிலவற்றையும் முந்தைய வெளியீடுகளில் பார்த்தோம். அல் குர்ஆன் 9 வது அத்தியாயம் 28 வது வசனத்தில் எல்லா பள்ளிகளையும் குறிக்கும் வகையில் மஸாஜித் (பள்ளிகள்) என பன்மையில் கூறாமல் மஸ்ஜித் என ஒருமையில் குறிப்பிட்டு மஸ்ஜிதல் ஹராம - புனிதமான இப்பள்ளியை என்று, அந்த ஒரு பள்ளியை குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது. இவ்வளவு தெளிவாக மக்காவிலுள்ள புனிதமான அந்த ஒரு பள்ளியை குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளதை தெரிந்தும் உலகில் உள்ள எல்லா பள்ளிகளுக்குமான பொதுவான கட்டளையாக இட்டுள்ளது போல் கூறி அதில் கூறப்படாத இமாம் சட்டத்தை உண்டு பண்ணி திணித்து சுன்னத் ஜமாஅத் என்போரை பின்பற்றி தொழக் கூடாது என்று கூறி வருகிறார்கள். சிந்திக்கக் கூடியவர்கள் திறமையாளர்கள்? இப்படி கூறி வரும் ...