ஒழுக்கக் கேட்டில் விஞ்சி நிற்பவர்கள் யார்? பட்டி மன்றத்திற்கு நான் ரெடி பி.ஜே. சவால்.
ஒழுக்கக் கேட்டில் விஞ்சி நிற்பவர்கள் யார்? பி.ஜே. அணியைச் சார்ந்த லுஹா வகையறாவா? பட்டி மன்றத்திற்கு நான் ரெடி நீங்கள் ரெடியா? பி.ஜே. சவால். உண்மை, வணக்கம், கொள்கை, நாணயம் இவை இப்போது இல்லை லுஹாவிடம். இங்கே அன்புடன் விளக்கி உள்ளார் பி.ஜே. பெறுனர்: 04-02-2004 எஸ்.இ.எம். முஹம்மது மஸ்தான், 113ஏ. ஹாமீம்புரம் தெற்கு தெரு, மேலப்பாளையம். அன்புச் சகோதரருக்கு பீ.ஜெய்னுல் ஆபிதீன் எழுதிக் கொள்வது. தங்களின் மடல் கிடைத்தது. கடிதத்தில் விளக்கம் அளிப்பதை விட களத்தில் பதில் சொல்லவே நான் விரும்புகிறேன். எந்நக் குற்றச்சாட்டையும் நேரடியாகவே சந்திக்க நான் எப்போதும் தயங்கியதில்லை. இப்போதும் எனக்குத் தயக்கம் கிடையாது. லுஹாவாகட்டும் (பீ.ஜெய்னுல் ஆபிதீனாகிய) நானாகட்டும் நீங்களாட்டும் மனிதர்கள் என்ற முiறையில் தவறு செய்பவர்கள் தான், தவறு செய்பவர்களில் குறைந்த தவறு செய்தவர் யார் என்ற அடிப்படையில் தான் எவரைப் பற்றியும் முடிவு செய்ய முடியும். அப்படித் தான் நானும் முடிவு செய்தேன் இதைக் கவனத்தில் கொள்ளாமல் குற்றச்சாட்டு சுமத்துவோர் மலக்குகளாக இருக்க வேண்டும் உங்கள் ஊரில் லுஹா சுலைமான்...