டாக்டர் ஹெல்பர் வேலை தேடுகிறார்?
டாக்டர் சீட் பெற்றவர் என்று பி.ஜே. வகையறாக்களால் கூறப்பட்டவருக்கு துபையில் ஹெல்பர் வேலை தேவை. குணங்குடி ஹனீபா அவர்களால் 1986ல் துவங்கப்பட்டது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம். முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கோரி 1986ல் அவர் நடத்திய போராட்டத்திற்குப் பிறகு அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். குணங்குடி ஹனீபா அவர்களை அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தினார். ஹனீபாவின் செயல்பாடுகளைக் கண்ட டாக்டர் ராமதாஸ் ஹனீபாவை பா.ம.க.வில் இணைத்து மாநில பொருளாளர் பொறுப்பு கொடுத்தார். ஹனீபா பா.ம.க. பொருளாளராக இருந்தபோது வட்டம், மாவட்டம், நகரம் என எல்லாக் கிளைகளிலும் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய 3 பொறுப்புகளில் ஒன்று முஸ்லிம் சமுதாயத்திற்கு என்று பா.ம.க.வில் நடைமுறைபடுத்தினார். 1995ல் பாக்கர் கைது செய்யப்பட்டதும் ஹனீபா 1986ல் நிறுவிய த.மு.மு.க.வின் சார்பில்தான் போராட்டம் நடந்தது. ஜே.எஸ். ரிபாய் கைதானதும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதற்குப் பிறகு பி.ஜே, அலதவுதீன் போன்றவர்கள் தங்களை காத்துக் கொள்ள த.மு.மு.க.வில் இணைந்தனர். அமைப்பாளர் அது இது என பொறுப்புகளும் பெற்றனர். முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதவரை தலைவராக ஏற...