இஸ்லாமிய இஜ்திமா விளம்பரத்தை போட விடாமல் தடுத்த தீய சக்தி எது?
முஸ்லிம் பெண்மணி மாத இதழ் பார்ட்னரும் ஸாஜிதா புக் சென்டர் அதிபருமான ஜக்கரிய்யா அவர்கட்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... தங்கள் பெயரால் ஒரு ஈ-மெயில் பிரசுரம் வந்தது. அது யாருடைய தூண்டுதலும் இல்லாமல் சுயமாக அனுப்பி உள்ளீர்கள். எந்த ஒரு தனி மனிதரையும் திருப்திபடுத்த வேண்டும் என்ற நோக்கம் இல்லாமல், உண்மையை நிலை நாட்ட வேண்டும் என்றே ஈ-மெயில் பிரசுரம் வெளியிட்டுள்ளீர்கள். இப்படி அப்பாவியான உங்களைப் பற்றி முன் பின் தெரியாதவர்கள் உங்கள் பின்னணியை அறியாதவர்கள்; புரியாதவர்கள் நம்பலாம். கடந்த பாராளு மன்ற தேர்தலில் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மைதீன் ஸாஹிபும் தேசிய லீக் தலைவர் அப்துல் லதீப் ஸாஹிபும் அவரவர்கள் கூட்டணியினர் தொகுதி ஒதுக்கியதன் அடிப்படையில் 2 பேருமே மத்திய சென்னையில் போட்டி இடுவதாக அறிவிப்பு வெளியானது. அப்துல் லதீப் ஸாஹிபை எதிர்த்து போட்டி இட வேண்டாம் என மு.லீக் முடிவு செய்து தொகுதியை கூட்டணியிடம் ஒப்படைத்தது. குறுகிய இந்த இடைப்பட்ட காலத்தில் ஒரு திட்டம் தீட்டப்பட்டது. நான் தோற்றாலும் அப்துல் லதீப் ஜெயிக்கக் கூடாது அதனால்தான் போட்டி இடுகிறேன் என்று முஸ்லிம் லீக் தலைவர் காதர் மைதீன் வாய...