காலத்தை உணர்ந்து தருகின்ற ஊதியத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். P.J.
அந்நஜாத் பத்திரிக்கையிலிருந்து ராஜினாமா செய்த பி.ஜே. உண்மைக் காரணத்தை மக்களுக்கு கூறாமல் பொய்யான காரணத்தைக் கூறும்படி அவர் கைப்பட எழுதிய கடிதம் http://mdfazlulilahi.blogspot.com/1990/01/blog-post.html என்ற பிளாக்கில் உள்ளது. அந்நஜாத் துவங்குவதற்கு முன்பே பிரச்சனை வந்து விட்டது. அதற்குரிய ஆதாரம்தான் பி.ஜே. 17-01-1986 இல் துபைக்கு எழுதிய கீழ் காணும் கடிதம். இதைப் படித்தால் அந்நஜாத்திலிருந்து ராஜினாமா செய்த பின், ''பத்திரிக்கையை மோசடி செய்து விட்டார் அதனால்தான் விலகினேன். நில மோசடி செய்து விட்டார் அதனால்தான் விலகினேன்'' என்று பி.ஜே. சந்தர்ப்பத்திற்கு தகுந்தவாறெல்லாம் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய் என்பதை விளங்கலாம். துபையிலிருந்த பொதக்குடி குத்புத்தீன் அவர்களுக்கு 17-01-1986 அன்று P. ஜைனுல் ஆபிதீன் எழுதிய கடிதம். 17-1-86 பேரன்புச் சகோதரர் குத்புத்தீன் அவர்களுக்கு P. ஜைனுல் ஆபிதீனுடைய அஸ்ஸலாமு அலைக்கும். நலம், நலம் பல சூழ்க! கோவையில் நடந்த ISM மாநாட்டில் நானும் சகோதரர் ஷாஹுல் ஹமீது (அபூஅப்துல்லாஹ்) அவர்களும் கலந்து கொண்டோம். நிகழ்ச்சி...