Posts

Showing posts from January, 2017

எது விமர்சனமான பேச்சு? எது விவகாரமான பேச்சு?

Image
இவ்வுலகில் அனைவருக்கும் மறுமையில் நல்லடியார்களுக்கு மட்டும் அருள்பாலிக்ககக் கூடிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் . ஸலாத்தும் ஸலாமும் காத்தமுன்நபி முஹம்மது ( ஸல் ) அவர்கள் மீதும் அவர்களைப் பின்பற்றியோர் பின்பற்ற இருப்போர் மீதும் உண்டாகட்டுமாக . காத்தமுன்நபி என்பதை இந்த பகுதியில் அடிக்கடி சொல்ல வேண்டும் அழுத்தமாகவும் சொல்ல வேண்டும் . (அருகில் காதியானி பள்ளி உள்ளது) மார்க்கத்தை தெரிய கேள்வி கேட்டு அறிவதில் ஒரு சிறப்பு இருக்கிறது . அதனால்தான் அல்லாஹ் யஸ்அலுானக அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள் என்று கூறி கேள்வியையும் சொல்லி அதற்கான விளக்கத்தையும் சொல்லிக் காட்டி உள்ளதை திருமறையில் காணலாம். அந்த ஆதாரத்தின் அடிப்படையில்தான் அல்குர்ஆன் மூலம் அல்லாஹ் காட்டி தந்த வழிகாட்டுதலின்படிதான் நாம் தலைப்பை கேள்வியாக அமைப்போம். இதை இன்னும் விரிவாகவே பல நிர்வாகிகளிடம் ஆயத்து ஆதாரங்களுடன் விளக்கி இருக்கிறோம் இருந்தும் கேள்வி மாதிரியான தலைப்பை மாற்றித் தருவதுதான் பலரது இயல்பாக உள்ளது. ரையான் நிர்வாகிகளும் அப்படித்தானோ என எண்ணினேன். அவர்கள் அப்படி இல்லை என்பதை நேரில் தெளிவுபடுத்தி விட்ட...