ஹிஸ்புல்லாஹ்க்களா? ஹிஸ்புஷ் ஷய்த்தான்களா?
போர் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் வந்த உடன் மதீனத்து மாமன்னர் முஹம்மது நபி ( ஸல் ) என்ன செய்தார்கள் ? விளக்கம் கூறினார்கள். போரின் நிர்ப்பந்தத்தை புரிய வைத்தார்கள் . காரியங்க ளில் அவர்களுடன் ஆ லோசனை செய் வீராக ( அல்குர்ஆன் 03:159) என்ற கட்டளைப்படி மக்களிடம் ஆலோசனையும் கேட்டார்கள் . எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் . ஆலோசனை செய்து கொள்ள வேண்டும். ஒரு குடும்பத்தில் , ஒரு இயக்கத்தில் , ஒரு ஊரில் ஒரு நாட்டில் தலைவராக இருந்தால் . இந்த ஆலோசனை மிக மிக அவசியம் . நான் எடுக்கக் கூடிய முடிவுதான் சரியாக இருக்கும் என்று நினைப்பது ஒரு முஃமினுக்கு அழகு இல்லை . முஹம்மது நபி ( ஸல் ) அவர்கள் இறைவனுடைய துாதராக இருந்தாலும் அவர்கள் தன்னிச்சையாக முடிவு செய்யவில்லை . இதைத்தான் இங்கு நாம் படிப்பினையாகவும் வழிகாட்டுதலாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும் . இந்த தொடருக்கு தரப்பட்ட கால அளவு நிறைவு அடையப் போகிறது . அல்லாஹ் முந்தைய சமுதாயம் மற்றும் நபிமார்களின் வாழ்க்கை வரலாற்றை படிப்பினைக்காக சொல்லிக் காட்டி உள்ளான் . இறுதித் துாதரின் வாழ்க்கையை சுன்னத்தாக ( பின்பற்ற வேண்டிய வழிமுறையாக ...