பிற கட்சிகளோடு கூட்டணி சேர மார்க்கத்தில் அணுமதி இருக்கிறதா?
எந்த ஜாதியாக இருந்தாலும் , எந்த மதமாக இருந்தாலும். ஒரு நாட்டு எல்லைக்குள் வாழ்ந்தால். நபி ( ஸல் ) அவர்கள் யூதர்களோடு செய்த ஒப்பந்தத்தைப் போல் அவர்களுக்கு மத்தியிலே ஒரு ஒப்பந்தத்தை வைத்துக் கொள்ள வேண்டும் . அப்படி வைத்துக் கொண்டால் அங்கு ஜாதி , மத வெறி வராது . ரத்த ஆறுகள் ஓடாது . உடுமலை காதல் சாதல்கள் நடக்காது . போட்டி பொறாமை என்பது இருக்காது . ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வார்கள். ஒருவருக்கு ஒருவர் நலம் நாடுவார்கள். நல்ல நண்பர்களாக பழகுவார்கள் . பல சாரார் ஒன்றாக பழகுவதற்கு இது காரணமாக அமைகிறது . இதை இந்த ஒப்பந்தத்தில் இருந்து புரிந்து கொள்ளலாம் . யூதர்களிலே அவ்ஸ் கிளையைச் சார்ந்தவர்கள் தலைவர் போன்ற அந்தஸ்த்துக்கு உரியவர்களாக இருந்தார்கள். மனிதருள் மாணிக்கம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். ஒரு சமுதாயம் அல்லது ஒரு கூட்டம் மதிக்கக் கூடியவராக ஒருவர் இருந்தால். அவரை இகழ்ந்து பேசாதீர்கள் என்று. நான்கு பேர் ஒருவரை மதித்தால் அவரை நாம் இகழ்ந்து பேசக் கூடாது. பேசினால் நாம் சொல்லும் உண்மை அவர்களிடம் எடுபடாது. அவர்கள் மதிப்பவரை இகழ்ந்து விட்டு அவர்களிடம் ...