கபுராளிகள் தினமான பராஅத் இரவு வாழ்த்துக்கள்?
அன்னையர் தினம், மங்கையர் தினம்,முதியோர் தினம், ஆசிரியர் தினம், குழந்தைகள் தினம், என்று பல விதமான தினங்களை இன்று மக்கள் கொண்டாடி வருகிறார்கள். அந்த தொடரில் நமக்கும் காலத்திற்குக் காலம் ஏதாவது சில தினங்களை உருவாக்க வேண்டும் என்று நினைத்த இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த மத குருமார்கள் சிலர், நபியவர்களின் பிறந்த தினம், நபியவர்கள் மிஃராஜ் சென்ற தினம், என்று பல வகையான மார்க்கத்தில் இல்லாத கொண்டாட்டங்களை உருவாக்கி வைத்துக் கொண்டு அவற்றையும் மார்க்கம் என்ற பெயரில் காலா காலமாக அரங்கேற்றி வருகிறார்கள். அந்த வகையில் ஷஃபான் மாதம் 15ம் நாளை கபுராளிகள் தினம் (பராஅத் இரவு) என்று உருவாக்கி அதனை வெகு விமர்சையாக முஸ்லீம்களில் சிலர் கொண்டாடி வருகிறார்கள். பராஅத் இரவு வாழ்த்துக்கள் http://arusuvai.com/tamil/node/19591 என்று வாழ்த்துக்களும் கூறி வருகிறார்கள். அதை சிறப்பித்து பாவம் போக்கும் பரா அத் இரவு (Paavam Pokkum Baraath Iravu) என்ற தலைப்பில் பலஹீனமான ஹதீஸ்களை ஆதாரங்களாகைக் காட்டி தனது வாய்த் திறமைகளையும், அபத்தமான வாதங்களையும், விளக்கங்களையும் கொண்டு உரை நிகழ்த்தியுள்ள மௌலவி ஷெய்க் அப்த