பாலை வெறுக்கும் பூனையா? புகழை வெறுக்கும் அண்ணனா?
ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்... தமிழகத்தில் எல்லோருமே குப்ரில் மரணித்தது போன்றும், தமிழகத்தில் தவ்ஹீத் வரலாறு என்பது அல்லாஹ்வும் இல்லை- குல்லாவும் இல்லை என்று கிளம்பிய அண்ணனுக்கு பின் தான் என்று சொல்லும் அளவுக்கு புகழ் போதை கொண்டவர்கள் அண்ணன் ஜமாத்தினர். அந்த அண்ணன் கேள்வி ஒன்றுக்கு அபகரிக்கப்பட்ட இதழில் பதிலளிக்கும் போது இப்படி கூறியுள்ளார். ''தனிப்பட்ட முறையில் பெயரை மட்டுமே பயன்படுத்துவது என்றும், பட்டமும் பதவிகளும் அடைமொழிகளும் வேண்டாம் என்று முடிவு செய்து சில ஆண்டுகளாக இதைக் கண்டிப்புடன் கடைபிடித்து வருகிறேன். நான் கலந்து கொள்ளும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் என் பெயருடன் தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் என்றோ, மவ்லவி உலவி என்றோ,அறிஞர் என்றோ வேறு எந்த அடைமொழியுமோ பயன்படுத்தக் கூடாது என்பதில் கண்டிப்புடன் இருக்கிறேன். இது என்னளவில் நான் எடுத்துக் கொண்ட முடிவு தான். எனக்குப் பிடிக்கவில்லை என்பது தான் இதற்கு காரணம்.'' என்று கூறியுள்ளார். ஒருவர் தனது பெயருடன் வேறு எந்த அடைமொழியும் பயன்படுத்தப்படுவதை வெறுப்பவர் என்றால் அதை தான் மட்டுமல்லாது, தன்னைப் பி...