மானங்கெட்டு மதிப்பை இழக்கச் செய்த TNTJ போராட்டம்
மமக ஆக்கிரமிப்புக்கு மரண அடி - என்று June 22, 2011 அன்றும் மமகவிற்கு மரண அடி கொடுக்க சென்னையில் கூடிய ஆயிரக்கணக்கானோர் – சென்னை ஆர்ப்பாட்டப் புகைப்படங்கள்! - என June 28, 2011இரவிலும் டி என் டி ஜெ . வெளியிட்ட செய்தி படங்கள் கீழே உள்ளன. கடைசியில் நீதியின்படி த.மு.மு.க.விடமே இந்த இடம் போகும் இன்ஷாஅல்லாஹ் கடந்த 14 ஆண்டுகளாக உணர்வு வார இதழ் எண் : 7, வடமரைக்காயர் தெருவில் செயல்பட்டு வந்தது. 2004ஆம் ஆண்டு உணர்வு அலுவலகத்தில் தமுமுகவினர் வன்முறை வெறியாட்டத்தில் இறங்கிய பின்பும் அது உணர்வு அலுவலகமாகவே இருந்து வந்தது. ஆனால், கடந்த மே29அம் தேதி அன்று உணர்வு அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த மமகவினர் இது மமக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் என்று கூறி அராஜகத்தில் இறங்கினர். நாங்கள் ஆளும்கூட்டணியில் இருக்கின்றோம். எங்களை யாரும் அசைக்க முடியாது என்று இறுமாப்புடன் எம்.எல்.ஏ அலுவலகம் என்று சட்ட விரோதமாக அறிவித்துக் கொண்டனர். இதன் பின்னர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் செய்ததுடன் நடவடிக்கை மந்தமாக இருந்ததால் சட்டமன்ற முற்றுகை போ...