அதி தீவிர முஸ்லிம் லீக் பக்தரின் மைந்தன்.
மில்லத் இஸ்மாயில் அவர்களின் தந்தை அதி தீவிர முஸ்லிம் லீக் பக்தர். அதனால்தான் காயிதே மில்லத் என்றழைக்கப்பட்ட முஹம்மது இஸ்மாயில் ஸாஹிப் நினைவாக தன் மகனுக்கு மில்லத் இஸ்மாயில் என்று பெயரிட்டார். அந்த மில்லத் இஸ்மாயில் மு.லீக் பற்றி கூறியுள்ளதைப் பாருங்கள். மில்லத் இஸ்மாயில் மு.லீக்கில் தென் மண்டல பொறுப்பாளராக ஆனதும் அவருடன் தொடர்பு கொண்டு பேசினேன். எப்படி இருக்கிறீர்கள் என்றேன். ஆளில்லாத ஊருக்கு (மு.லீக்) ராஜாவாக இருக்கிறேன் என்றார். அதையும் இங்கு நினைவுபடுத்திக் கொள்கிறேன்.அவர் மு.லீக்கில் இணையும் முன்னால் அவரிடம் மு.லீக் நிலை பற்றி சொன்னேன். இப்பொழுது அனுபவபூர்வமாக உணர்ந்து வெளியேறி இருக்கிறார். அவர் 26-1-10இல் ம.ம.க.வில் இணைந்தார். 29-1-10இல் அவர் மீது ஒழுங்கு நடடிக்கை எடுத்துள்ளதாக மணிச்சரடில் செய்தி வந்துள்ளது.