கோவை டிசம்பர்- 27 சிறையில் கைதிகளுக்கு பரோல் என்பது ஒரு மனிதவுரிமை. ஆனால் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு இந்த உரிமை மறுக்கப்படுகிறது. மதசார்பற்ற கொள்கைக்கு வேட்டு வைப்பது போல், கோவை சிறை அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்கள். உதாரணம் : சுல்தான் மீரான் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைபெற்று ஐந்து வருடங்களாக சிறையில் இருக்கும் பூரிகமல், ராஜேஷ் போன்ற இந்து பாசிஸ குற்றவாளிகளுக்கு வழிக்காவல் கூட இல்லாமல் மூன்று நாட்கள் வரை பரோல் போன்ற சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் 11 வருடங்களாக தன் குடும்பத்தாரை பிரிந்து சிறையில் வாடும் முஸ்லிம் கைதிகளுக்கு அவர்களின் குடும்பத்தார்கள் மரணமடைந்தால் சில மணி நேரம் பலத்த போலீஸ் காவலுடன் பரோல் கொடுக்கப்படுகின்றது. இது முஸ்லிம் கைதிகளுக்கு அளிக்கும் ஒரு வெளிப்படையான அநீதியாகும். இது தொடர்பாக சம்சுதீன் என்ற சிறைவாசி 24.12.2008 அன்று முதல் எங்களுக்கும் சம நீதி வேண்டும் என சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரின் தொடர் உண்ணாவிரதத்தின் காரணமாக உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு சிறை மருத்துவமனையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவரின் குடும்பத்தாருக்கு க...