Posts

Showing posts from August, 2006

இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு என்பது சரியா?

Image
பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம். 01-08-2006 ஜாதி, மத, பேதமற்ற நீதியான ஆட்சியை நம்மால்தான் தர முடியும். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு வந்ததும் இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ற தலைப்பில் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தும் வழக்கம் வந்து விட்டது. இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள் பங்கு வகித்தார்கள். முஸ்லிம்களுக்கு பங்கு உண்டு என்ற இந்த தலைப்பு உண்மைக்குப் புறம்பானது. உண்மைக்குப் புறம்பான இந்த தலைப்பில் முஸ்லிம்கள் பேசுவதுடன் முஸ்லிம் அல்லாதவர்களைக் கொண்டும் முஸ்லிம்கள் பேச வைக்கிறார்கள். மீலாது மேடைகளில் முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாத்தைப் பற்றி பேசுகிறார்கள் அல்லவா. அது போல் இந்த மேடையிலும் முஸ்லிம் அல்லாதவர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் பேசுகிறார்கள். இதுதான் சந்தர்ப்பம் என கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்கள் பங்கு வகித்தார்கள் என்பதை அழுத்தம் திருத்தமாக நம்பும்படியாக பேசி விட்டுச் செல்கிறார்கள். நடைமுறையில் தெரிந்து வைத்துள்ள வரலாற்றைக் கொண்டே புரிய முடியும். ...