Posts

Showing posts from November, 2003

ஒற்றுமை வேடதாரிகளின் முகத்திரை கிழிகிறது.

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.  பழ்லுல் இலாஹி மீது கூறிய குற்றச்சாட்டுக்கள் பொய்யானதே ஷம்சுல்லுஹா ஒப்புதல். அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....  வெளிநாட்டுப் பணம் வாங்கக் கூடாது என்பதை பைலாவாகக் கொண்டு செயல்படுதாக தாயக மக்களை ஏமாற்றி பொதுக்கூட்டங்களிலும் இன்ன பிற வழிகளிலும் விதவிதமாக வசூலித்துக் கொண்டிருப்பவர்கள் பி.ஜே. அணியினர் என்பதையும்,  வெளிநாட்டுப் பணத்திற்காக அவ்வப்போது ஏதாவது காரணங்களைச் சொல்லி வந்து வெளிநாடுகளில் தவம் கிடந்து லட்சக் கணக்கில் வசூலித்துச் செல்பவதையே தொழிலாகக் கொண்டிருப்பவர்களும் அந்த பி.ஜே. அணியினர்தான் என்பதையும் அனைவரும் அறிவீர்கள்.  அந்த வரிசையில் இப்பொழுது வெளிநாட்டுப் பணத்திற்காக வந்து ஷார்ஜாவில் தவம் கிடப்பவர் ஷம்சுல்லுஹா. அவருக்கு 01.11.2003 அன்று கா.அ.முஹம்மது பழ்லுல் இலாஹியாகிய நாம், 'நான் தயார் நீங்கள் தயாரா?' என்ற தலைப்பில் எழுதிய கடிதத்திற்குப் பிறகு நம் மீது கூறிய குற்றச்சாட்டுக்கள் பொய்யானதே என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.  முதலில் நாம் எழுதிய கடிதத்தை தலைப்புகளுடன் உங்கள் பார்வைக்குத் தருகிறோம். பொய்யன், பொய் சாட்சி...