Posts

Showing posts from March, 2003

இன்பார்மர் வேலை செய்ய இஸ்லாத்தின் பெயரால் அமைப்புகள் தேவையா?

கடைசிப் பக்கத்தை முதலில் படிக்காதீர்கள். மவுலவி ஹாமித் பக்ரி அவர்கள் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து பி.ஜே அணி .ரகசியமாக உதவுகிறது, உதவாது என்று ஆளுக் கொருவிதமாகவும்; நாளுக்கொருவிதமாகவும் பி.ஜே அணியின் கீழ் மட்டப் பொறுப்பாளர்கள் மூலம் விளக்கங்களைக்; கூறி பொது மக்களை சமாளித்துக் கொண்டிருந்தார்கள். ஷஷஹாமித் பக்ரி கைது பற்றி பி.ஜே. விளக்கம்|| ஷஷஹாமித் பக்ரியின் கைதுக்குப் பின்னால் உள்ள உதிரத்தை உரைய வைக்கும் சதி|| ஆகிய தலைப்புகளில் நாம் வெளியிட்ட பிரசுரங்கள். ஷஷபக்ரியின் கைதும் படிப்பினைகளும்|| என்ற தலைப்பில் வெளியான ஆடியோ கேஸட்கள், இவர்கள் யார் என்பதை சமுதாயத்திற்கு அடையாளம் காட்டின. இவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு கொண்ட சமுதாய முன்னோடிகளில் பலர் போதும் விட்டு விடுங்கள் என்று வேண்டுகோள் வைத்தார்கள். அந்த பெருந்தகைகளை கண்ணியப்படுத்தும் வகையில் அவர்களது வேண்டுகோளை ஏற்றோம். அதனால்தான் சமுதாய விரோத சக்திகள் வெளியிட்ட பிரசுரங்களுக்குப் பதில் பிசுரம் வெளியிடாமல் இருந்தோம். இப்பொழுது மவுலவி ஹாமித் பக்ரி விடுதலையான பின்னரும் பி.ஜே. அணிதான் ரகசியமாக முயற்சி செய்து விடுதலை ஆக்கியது. பி.ஜே.அணிக...