பிரச்சாரம் செய்ய தாஇகள் இருக்கிறார்கள் பொருளாதாரம்தான் இல்லை. வெளி நாட்டவர் இடமோ. வெளி நாட்டு இயக்கங்கள் இடமோ எந்த ஒரு பைசாவும் நன்கொடை வாங்குவதில்லை என்று பைலாவாகக் கெண்டு செயல்படுகிறோம். சவூதியில் இருந்து 10 கோடி ரூபாய் தந்தாலும் வாங்க மாட்டோம். ஆகவே நீங்கள் நன்கொடை தாருங்கள் என்று டி.வி. விளம்பரக் காட்சிகளிலும் தோன்றி வசூலுக்காக பி.ஜெ. விளம்பரம் காட்சிகளில் நடித்து வருகிறார். வெளிநாட்டவர்களிடமோ வெளிநாட்டு நிறுவனங்களிடமோ உதவி பெற மாட்டோம். இது எங்கள் பழைய கொள்கை. ஜாக்கிலிருந்து வெளியேற இதுவும் ஒரு காரணம் என்றும் சந்தர்ப்பத்திற்கு தக்கவாறு பி.ஜெ. கூறி வருகிறார். அவர் மொழி பெயர்த்த திர்மிதியில் தமிழக மவுலவிகளிடம் அரபியில் அணிந்துரைகள் வாங்கியது எதற்காக. பி.ஜெ.யின் செயல்கள் எல்லாமே அரபு நாட்டு பணத்துக்குத் தான். என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டுமா?