பி.ஜெ.யின் மனம் திறந்த மடல்.
சகோதரர் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தமுமுகவின் மாநில அமைப்பாளர் உட்பட அனைத்து பொருப்புக்களிலிருந்தும் விலகிக் கொண்டபோது அவர் எழுதிய 'மனம் திறந்த மடல்' மனம் திறந்த மடல். என் மீது அன்பு கொண்ட அனைத்து சகோதரர்களுக்கும் பி. ஜைனுல் ஆபிதீன் எழுதும் மனம் திறந்த மடல். அஸ்ஸலாமு அலைக்கும். கடந்த இருபது ஆண்டுகளாக என்னால் இயன்ற பொதுப் பணிகளைச் செய்து வந்தேன். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில அமைப்பாளராகவும் ஐந்த ஆண்டுகளாக நான் இருந்து வருகிறேன். எதிர் வரும் ஜனவரி மாதம் பத்தாம் தேதியிலிருந்து தமுமுகவின் மாநில அமைப்பாளர் பொறுப்பு உட்பட நான் வகித்து வந்த அனைத்துப் பொறுப்புக் களிலிருந்தும் இன்ஷhஅல்லாஹ் விலகிக் கொள்கிறேன். இது குறித்து மனம் விட்டு பேசவே இந்த மடலை வரைகிறேன். விலகும் நேரத்தில் இதை அறிவிக்காமல் முன் கூட்டியே அறிவிப்பதற்குக் காரணம் இருக்கிறது. தமுமுகவின் மீது எனக்கு அதிருப்தி ஏற்பட்டு, ஆனால் நான் விலகுவதாகப் பிரச்சாரம் செய்ய சிலர் காத்துக் கிடக்கின்றனர். தமுமுக எனும் சமுதாயப் பேரியக்கம் இன்று அவசியத்திலும் அவசியம் என்பதை உங்களைவிட நான் அதிகமாகவே நம்புகிறேன். இந்தக் கழக...