உருவப்படங்கள்,டி.வி. வீடியோக்கள் பற்றி இஸ்லாம்.
யாரேனும் உருவப்படங்களை வரைந்தால் அதற்கு அவனால் உயிரளிக்க முடியாது என்றிருந்தும் உயிரளிக்கும்வரை அவனை அல்லாஹ் வேதனை செய்வான் (அதாவது வேதனை செய்து கொண்டே இருப்பான்) - நபிமொழி. அறிவிப்பவர்:- இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்:-புகாரி, திர்மிதி, நஸயி https://mdfazlulilahi.blogspot.com/1988/09/blog-post.html உருவப்படங்கள் வரையும் வேலையை இனியும் எவரேனும் செய்தால் முஹம்மதின் மீது இறக்கப்பட்ட (வேதத்)தை அவர் மறுக்கிறார். - நபிமொழி. அறிவிப்பவர்:- அலி (ரலி) நூல்:-அஹ்மத். 1. உருவப் படங்களுக்கும் சிலைகளுக்கும் இஸ்லாத்தில் தடை உள்ளதால் குழந்தைகளுக்கு உருவ விளையட்டுப் பொம்மைகள் வாங்கிக் கொடுப்பது ஹராமா? 2. உருவப்படங்கள் இருக்கும் இடத்தில் மலக்குகள் வர மாட்டார்கள் என்றால் கரன்ஸிகளில் உருவப்படம் உள்ளதே: அதை வைத்துக் கொண்டு தொழலாமா? 3. உருவப்படங்களைக் காட்டும் டி.வி. வீடியோக்களை வீட்டில் வைக்கலாமா? அதில் வரும் காட்சிகளைப் பார்க்கலாமா? 4. சினிமாவை ஹராம் என்று கூற நேரடியான ஹதீஸ் ஆயத்துகள் உண்டா? 5. ஆடியோ, வீடியோக் (சி.டி.கேஸட்) கடை நடத்தலாமா? இவைகளை நடத்த நம் ...