Thursday, April 30, 2009

பிறருக்காக தேர்தல் வேலை செய்யலாம் அவர் மட்டும் போட்டி இடக் கூடாது என்ற நிலைபாடா?

ஜனநாயகம் நவீன கால இணை வைப்பா? என்பது பற்றிய விபரத்தை காணும் முன் இன்றைய வரலாறாக ஆகி விட்ட நேற்றைய செய்திகளை நினைவு கூறுவது அவசியமாக இருக்கிறது. எனவே அதனை முதலில் பார்ப்போம்.

ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்ற கருத்து ஜவாஹிருல்லாஹ் அவர்களுடையது மட்டுமல்ல. சகோதரர் சம்சுல்லுஹா, பி.ஜே. ஆகியவர்களுடைய கொள்கையும் இதுவாகத்தான் இருந்தது.

1988இல் துபை வந்திருந்த அ.கா.அ. அப்துஸ்ஸமது அவர்கள் வரக் கூடிய சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம் லீக் சார்பில் பாளையில் போட்டியிட வேண்டும் என்று கூறினார்கள். இது பற்றி சகோதரர் சம்சுல்லுஹா அவர்கள் மூலம் பி.ஜே.யிடம் கலந்த போது ஹராம் என்று கூறி விட்டார்கள்.

ஜனநாயகம் என்பது நவீன கால இணை வைப்பு, ஓட்டுப் போடுவது ஹராம் என்ற கொள்கை பி.ஜே.யின் அண்ணன் பி.எஸ். அலாவுதீன் உட்பட எஸ்.ஐ.எம்.(சிம்)முடன் தொடர்புடைய எல்லா மவுலவிகளிடமும் இருந்தது.

1995.
ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என அருட்செல்வன் என்ற புனைப் பெயரில் ஜவாஹிருல்லாஹ் எழுதினார்.

1996.
அந்த ஜவாஹிருல்லாஹ் த.மு.மு.க துணைத் தலைவராக இருக்க பி.ஜே. த.மு.மு.க அமைப்பாளராக இருந்தார். சட்டமன்ற தேர்தல் வந்தது. அப்போது தேர்தலை கண்டு கொள்ளாத நிலைப்பாடு எடுத்தது த.மு.மு.க.

பி.ஜே.யின் கொள்கைப்படி ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு ஓட்டுப் போடுவது ஹராம் என்பதை நேரடியாக சொல்ல முடியாமல் எடுத்த முடிவுதான் அது.
ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு ஓட்டுப் போடுவது ஹராம் என்று சொன்னால் த.மு.மு.க.வில் உள்ள தவ்ஹீதுவாதிகள் எளிதில் ஏற்றுக் கொள்வார்கள். மற்ற சகோதரர்கள் ஜீரணிக்கவே மாட்டார்கள். அதனால் தேர்தலை கண்டு கொள்ளாத நிலைப்பாடு எடுக்கப்பட்டது.

எனவேதான் அரசியல்வாதியான த.மு.மு.க நிறுவன தலைவர் குணங்குடி ஹனீபா விலகினார். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தலைவராக ஆனார்கள்.

1998.

ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தலைவராக ஆன பிறகு வந்தது பாராளுமன்ற தேர்தல். அப்போது பி.ஜெ.யின் யோசனைப்படி தேர்தல் புறக்கணிப்பு என்ற நிலைப்பாடு எடுத்தது த.மு.மு.க. அதுவும் பி.ஜே.யின் கொள்கைப்படி ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு ஓட்டுப் போடுவது ஹராம் என்பதை ஒட்டிய முடிவுதான். ஏனைய த.மு.மு.க. நிர்வாகிகளிடமும் மக்களிடமும் பி.ஜே. கூறிய காரணங்கள் வேறு விதமானது என்பது தனி விஷயம்.

1998பிப்ரவரி 14இல் நடந்த கோவை கோவை குண்டு வெடிப்பு சம்பவம் தேர்தல் புறக்கணிப்பு என்ற நிலைப்பாட்டை வாபஸ் பெற வைத்தது. ஓட்டுப் போடும்படி சொல்லவும் வைத்தது. ஓட்டுப் போடுவது ஹராம் என்ற கொள்கையில் இருந்த சகோதரர் சம்சுல்லுஹா நெல்லை தொகுதியில் நடிகர் சரத்குமாருக்கு ஓட்டுப் போடுங்கள் என்று த.மு.மு.க. சார்பில் அறிக்கை வெளியிட்டார்.

த.மு.மு.க.வின் நிர்வாகப் பொறுப்பில் இல்லாத லுஹா எப்படி த.மு.மு.க. சார்பில் அறிக்கை வெளியிடலாம் என்ற கேள்வி வந்தது. ஆளுங்கட்சியான தி.மு.க. வேட்பாளருக்கு ஓட்டுப் போடுங்கள் என அறிக்கை விட வேண்டி நிர்ப்பந்தம் லுஹாவுக்கு வந்ததை பதிலாகக் கூறினார்.

த.மு.மு.க.வை கண்டதிலிருந்து எந்தக் கட்சியுடனும் சேர மாட்டோம். மு.லீக் மாதிரி பிறர் மீது சவாரி செய்ய மாட்டோம். சொந்தக்காலில் நிற்போம். பிறர் மேடை மீது ஏற மாட்டோம். பிறருக்கு மேடை போட்டுக் கொடுக்கவும் மாட்டோம் என்று வீர வசனம் பேசி வந்தவர் பி.ஜெ.

அந்த பி.ஜெ. 1998 பிப்ரவரி 14 கோவை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பிறகு தனி மேடை போட முடியாத நிலைக்கு ஆளானார். எனவே புதிய தமிழகம் கிருஷ;ணசாமி மீது ஏறி சவாரி செய்ய முடிவு செய்தார். அப்பொழுது கிருஷ;ணசாமியின் கையை தூக்கிப் பிடித்துக் கொண்டு தொப்புல் கொடி உறவு என்ற கோஷம் வைத்தார். கிருஷ;ணசாமியின் தயவில் தனி மேடை போட வழி கண்டார்.

1999.
த.மு.மு.க. துவங்கப்பட்ட 1995 ஆகஸ்ட்டிலிருந்து பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதம், மாநாடு, டிசம்பர் 6 போராட்டம் என ஜெயலலிதா ஆட்சியில் பிரச்சனையின்றி நடத்தியது.

1996இல் ஆட்சிக்கு வந்த கருணாநிதி தீவிரவாத முத்திரை குத்தி த.மு.மு.க. வின் மாநிலம் தழுவிய பேரணி மாநாடுகளையும் நடத்த விடாமல் தடை போட்டு வந்தார். முன்னெச்சரிக்கை கைதுகளையும் செய்து வந்தார். அந்தக் கருணாநிதி ஆட்சி 1999 வாழ்வுரிமை மாநாட்டையும் நடத்த விடாமல் தடை போட திட்டமிட்டது.

சொந்தக்காலில் நிற்போம். பிறர் மேடை மீது ஏற மாட்டோம். பிறருக்கு மேடை போட்டுக் கொடுக்கவும் மாட்டோம் என்ற பி.ஜெ.யின் சிம்மக் குரல் கம்மல் குரலாக ஆனது. சாதாரண மேடையையே பிறருக்கு போட்டு கொடுக்க மாட்டோம் என்ற பி.ஜெ. மாநாட்டு மேடையை பங்கு போட்டு ஜெ. உட்பட அனைத்து அரசியல் கழிசடைகளையும் ஏற வைத்தார். மொத்தத்தில் அரசியல்வாதிகள் தயவில் அந்த மாநாடு நடந்தது.

2000
மாநாடு நடத்த உதவியாக இருந்த ஜெ. தலைமையிலான கூட்டணிக்கு பாராளுமன்ற தேர்தலில் களம் இறங்கி பிரச்சாரம் செய்தது பி.ஜெ.யை அமைப்பாளராக கொண்டிருந்த த.மு.மு.க. தங்கள் வாழ்நாளில் ஓட்டுப் போடப் போகும் முதல் தேர்தல் இது என தேர்தல் பிரச்சாரத்தில் கூறி பெருமை பட்டார் பி.ஜே.

2001
மனம் திறந்த மடல் மூலம் த.மு.மு.க. அமைப்பாளர் பதவியை பி.ஜெ. ராஜினாமா செய்த பிறகு சட்டமன்ற தேர்தல் வந்தது. வெளிப்படையாக ஒதுங்கி இருந்தாலும் த.மு.மு.க. தலைமையை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த பி.ஜெ. தொகுதிக்கு ஒரு நிலைப்பாடு என்ற புரட்சியான? புதுமையான நிலைப்பாட்டை எடுக்க வைத்தார். இந்த நிலைப்பாட்டை விளக்க அவரே மீண்டும் தேர்தல் பிரச்சார களத்துக்கு வந்தார்.

2004
பாராளுமன்ற தேர்தல் வந்தது. தேர்தலில் களம் இறங்கி பிரச்சாரம் செய்தால் ஈமான் போய் விடும். எனவே நமது ஆதரவு யாருக்கு என சொன்னால் போதும் என்று கூறிய அண்ணன் பி.ஜெ.யும் அவரது தம்பிகளும் தேர்தல் களத்தை விட்டு ஒதுங்கினர். ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி உட்பட த.மு.மு.க. தலைவர்கள் அனைவரும் தேர்தலில் களம் இறங்கி வேலை செய்தனர். இத்துடன்

2006
ஜெ.க்கு ஜே போட போன பி.ஜெ. தேர்தலில் களம் இறங்கி பிரச்சாரம் செய்தால் ஈமான் போய் விடும் என்ற கொள்கையை காற்றில் பறக்க விட்டு விட்டு தேர்தலில் களம் இறங்கினார்.

1995க்குப் பிறகு 2006 வரையில் உள்ளாட்சி தேர்தல்களையும் சேர்த்து 10 தடவை தேர்தல்கள் வந்துள்ளன. அத்தனை தேர்தல்களிலும் ஜவாஹிருல்லாஹ்வின் பங்களிப்பு இருந்துள்ளது. இத்தனை தேர்தல்களிலும் ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்பதை அருட்செல்வன் என்ற புனைப் பெயரில் எழுதியவர் ஜவாஹிருல்லாஹ்தான் என்ற செய்தி வெளிப்படுத்தப்படவில்லை. ஒரு சிலருக்கு தெரிந்திருந்தாலும் அது பரப்பப்படவில்லை.

இப்பொழுது ஜவாஹிருல்லாஹ் தேர்தலில் போட்டியிடுகிறார் என்றதும். அருட்செல்வன் என்பது ஜவாஹிருல்லாஹ்தான் என்பது வெளிப்படுத்தப்படுகிறது. பரபரப்பாக பரப்பப்படுகிறது. ஈமெயில்கள் பறக்கின்றன. ஊருக்கு ஊர் நோட்டீஸ்கள் போட்டோக் காப்பிகள் என கை மாறுகிறது.

ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்று எழுதியவர் பிறருக்காக தேர்தல் வேலை செய்யலாம் அவர் மட்டும் போட்டி இடக் கூடாது என்ற நிலைபாடா? இது எல்லோரையும் நோக்கி கேட்கப்படும் கேள்வி.

ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்ற கொள்கையுடயவர்கள் இதைப் பரப்புகிறார்கள் என்றால் அது அவர்களது கொள்கை ரீதியானது. அதை நாம் குறை கூற முடியாது. அந்த கொள்கை தவறு என்பது தனி விஷயம்.

பிள்ளையார் சிலை ஊர்வலத்தை மாலை போட்டு வரவேற்ற காயல்மஹ்பூபுக்கு பாளைத் தொகுதியை கொடுங்கள் என்று லத்தீப் ஸாஹிபிடம் கோரிக்கை வைத்த பி.ஜெ. அணியினர் இந்த நோட்டீஸை இப்பொழுது பரப்புவதன் நோக்கம் கொள்கை ரீதியானதா? குரோத ரீதியானதா?

எது எப்படியோ ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்று எழுதியவர் தேர்தலில் போட்டி இடுகிறார். அந்தக் கொள்கையில் இருந்த சம்சுல்லுஹா, பி.ஜே. போன்ற மவுலவிகள் தேர்தல் கள பிரச்சாரகர்களாக ஆகி இருக்கிறார்கள். வரக் கூடிய தேர்தலில் பி.ஜெ, லுஹா போன்றவர்கள் போட்டி இடுவார்கள். அவர்களின் இந்த செயல்பாடுகள் மூலம் ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்ற கருத்து தவறானது என்பதை ஒப்புக் கொண்டு விட்டார்கள்.

ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்ற இந்த வாதம் வைக்கக் கூடியவர்களில் அதிகமானவர்கள் தங்கள் கருத்துக்கு ஆதாரமாக முதலில் கூறக் கூடிய குர்ஆன் வசனம் 12:40என்பதாகும் .

இப்படி குறிப்பிட்டு விட்டு 12:40இன் முழு வசனத்தையும் கூறுவதில்லை. 12:40இல் உள்ள இனில் ஹுகுமு இல்லாஹ் லில்லாஹ் என்று மட்டுமே சொல்வார்கள்.

இது 12:40யின் முழு வசனம் இல்லை. 12:40ஆவது ஆயத்தில் உள்ள ஒரு சிறு பகுதி மட்டுமே இது. இந்த வசனம் பற்றிய விளக்கத்தை அடுத்த வெளியீட்டில் காண்போம். இன்ஷhஅல்லாஹ்.

Sunday, April 19, 2009

இஸ்லாத்தில் அரசியல்-2

ரோமப் பேரரசு என்பது கிறிஸ்தவர்களின் அரசாங்கம்.

திருமறை குர்ஆன் 30ஆவது அத்தியாயத்தின் பெயர் அர்ரூம். அதாவது ரோமப் பேரரசு என்றே அந்த அத்தியாயத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. ரோம் என்பது கிறிஸ்தவர்களால் ஆளப்பட்ட நாடு. ரோமப் பேரரசு என்பது கிறிஸ்தவர்களின் அரசாங்கம். கிறிஸ்தவ அரசாங்கத்தின் பெயரிலேயேதான் திருமறை குர்ஆனில் ஒரு அத்தியாயம் உள்ளது. இது அரசியலா இல்லையா?அந்த அத்தியாயத்தில் என்ன சொல்லப்படுகிறது

ரோம் தோல்வியடைந்து விட்டது. அருகிலுள்ள பூமியில் ஆனால் அவர்கள் (ரோமர்கள்) தங்கள் தோல்விக்குப்பின் விரைவில் அல்லாஹ்வின் உதவியினால் வெற்றியடைவார்கள்.

சில வருடங்களுக்குள்ளேயே! (இதற்கு) முன்னும், (இதற்கு) பின்னும், (வெற்றி தோல்வி குறித்த) அதிகாரம் அல்லாஹ்வுக்குத்தான் (ரோமர்கள் வெற்றி பெறும்) அந்நாளில் முஃமின்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

அல்லாஹ்வின் உதவியினால் (வெற்றி கிடைக்கும்) அவன்தான் நாடியவர்களுக்கு உதவி புரிகிறான்.

இது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும் அல்லாஹ் தன் வாக்குறுதியில் தவறமாட்டான். ஆனால், மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள். 30:2-6


கிறிஸ்தவர்களின் அரசாங்கமான ரோமப் பேரரசு விரைவில் வெற்றி பெறும்.
அதாவது கிறிஸ்தவர்கள் விரைவில் வெற்றி பெறுவார்கள். அதையும் அல்லாஹ் எப்படி சொல்லிக் காட்டுகிறான்.

அல்லாஹ்வின் உதவியினால் கிறிஸ்தவர்கள் வெற்றியடைவார்கள் என்று. அது மட்டுமா இது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும் அல்லாஹ் தன் வாக்குறுதியில் தவறமாட்டான் என்றும் கிறிஸ்தவர்கள் அரசாங்கம் பெற இருக்கும் வெற்றி பற்றி உறுதி அளிக்கிறான். இது அரசியலா இல்லையா?

இதைத்தான் அல்லாஹு அக்பர் என்று கைகளை கட்டிக் கொண்டு தொழுகையில் இமாம் மிஹ்ராபில் நின்று படித்து(ஓதி)க் காட்டுகிறார். மொழி தெரியாதவர்கள் இது ஒரு வேத வசனம் என்ற நிலையில் மட்டுமே படிப்பார்கள் செவிமடுப்பார்கள்.

அரபிகள் மற்றும் அரபி மொழி தெரிந்தவர்கள் இது அரசியல் சம்பந்தமானது என்று புரிந்து நிற்பார்களா இல்லையா? இஸ்லாத்தில் அரசியல் ஹராம் என்றால் அல்லாஹு அக்பர் என்று கைகளை (தக்பீர்) கட்டிக் கொண்டு தொழுகையில் நின்று இமாமோ நாமோ இதை படிக்க (ஓத) முடியுமா?

மேலும் கிறிஸ்தவர்கள் வெற்றி பெறும் அந்நாளில் முஃமின்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்றும் சொல்லிக் காட்டுகிறான் ஏன்?


இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இருந்த இரு வல்லரசுகளில் ஒன்று பாரசீகம். மற்றொன்று ரோம்.

பாரசீக சாம்ராஜயத்தினர் நெருப்பை வணங்கக் கூடிய முஷ;ரிக்களாக இருந்தார்கள். ரோம் சாம்ராஜயத்தினரோ வேதம் உடைய கிறிஸ்தவர்களாக இருந்தார்கள். இந்த இரு வல்லரசு நாடுகளும் மோதிக் கொண்டன. அந்த மோதலில் கிறிஸ்தவர்களின் ரோமபுரி சாம்ராஜயம் தோல்வியடைந்து விட்டது.

இதை மக்காவில் உள்ள இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் எதிரிகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். முஸ்லிம்களைப் போலவே தங்களிடம் வேதம் இருக்கிறது என்று கூறிக் கொள்ளும் கிறிஸ்தவர்களின் ரோமபுரி சாம்ராஜயம் வீழ்ந்து விட்டது. நம்மைப் போல் பல தெய்வ கொள்கை உடைய பாரசீக சாம்ராஜ்யம் வெற்றி பெற்று விட்டது. எனவே முஸ்லிம்களை நாம் வெற்றி பெறுவோம் என்று பேசிக் கொண்டனர்.

அப்போதுதான் வேதக்காரர்களான கிறிஸ்தவர்களின் ரோமபுரி பேரரசு மிகச் சில ஆண்டுகளிலேயே மீண்டும் வெற்றி பெறும் என்ற இந்த வசனங்கள் அருளப்பட்டன.
இந்த வசனங்கள் என்றும் பொருந்தும்.

அரசியலில் முஃமின்கள் வருந்தும் வண்ணம் பின்னடைவோ தோல்வியோ ஏற்பட்டால் முஸ்லிம்களின் எதிரிகள் கொண்டாடி மகிழலாம். முனாபிக்குகளும் எழுச்சியுடன் முஸ்லிம்களின் எதிரிகளுடன் கை கோர்த்து கொண்டாடலாம். ஆனால் அது நிரந்தரமல்ல. மிகச் சில ஆண்டுகளிலேயே அல்லாஹ்வின் உதவியினால் முஃமின்கள் வெற்றியடைவார்கள் அந்நாளில் முஃமின்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்று இறுதி நாள் வரை நற்செய்தி கூறி முஃமின்களுக்கு தெம்பூட்டிக் கொண்டிருக்கிறது சூரா அர்ரூம். அதாவது ரோமப் பேரரசு என்ற அந்த அத்தியாயம்.

தொடரும் இன்ஷhஅல்லாஹ்

Saturday, April 18, 2009

இஸ்லாத்தில் அரசியல் -1

தேர்தல் நேரம் வந்து விட்டால் அரசியல் பேசக் கூடாது என்ற போர்டுகள் டீக் கடைகளையும் ஹோட்டல்களையும் ஆக்கிரமித்திருக்கும். இவை வியாபார ரீதியான தனியார் நிறுவனங்கள். அவர்களை குறை சொல்ல முடியாது. ஆனால் அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களிலும் அரசியல் பேசக் கூடாது என்ற போர்டுகள் வைக்கிறார்கள்.

இஸ்லாத்தில் அரசியல் ஹராம் என்பது போல குத்பா பிரசங்கங்களில் அரசியல் பேசக் கூடாது என்று கதீப்களுக்கும் பள்ளி நிர்வாகிகள் தடை விதித்து விடுகிறார்கள். இஸ்லாம் வேறு அரசியல் வேறு இஸ்லாத்திற்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை என்ற தவறான கருத்துக்களே இதற்கு காரணம்.

திருமறை குர்ஆனில் உள்ள 6666 ஆயத்துக்களில் சுமார் 422 வசனங்கள் அரசியல் ஆட்சி அதிகாரம் சட்டங்கள் பற்றி கூறுகிறது.

குத்பா பிரசங்கங்களில் அரசியல் பேசக் கூடாது என்று தடை விதிக்கப்பட்ட பள்ளி கதீப்கள் அல்லாஹு அக்பர் என்று தக்பீர் சொல்லி கைகளை கட்டி -நடைமுறை பாiஷயில் சொல்வதென்றால் தக்பீர் கட்டிக் கொண்டு அல்குர்ஆனின் 2:247ஆவது வசனத்தை தொழுகையில் படித்துக் காட்டுகிறார். நடைமுறை பாiஷயில் சொல்வதென்றால் ஓதுகிறார். அந்த வசனம் என்ன கூறுகிறது.

தாலூத் என்பரை அல்லாஹ் உங்கள் ஆட்சியாளராக நியமித்துள்ளான் என்று அவர்களின் நபி அவர்களிடம் கூறினார். (அதற்கு) அவர்கள், ''எங்கள் மீது அவர் எப்படி ஆட்சி அதிகாரம் செலுத்த முடியும்? அவரை விட ஆட்சிக்கு நாங்கள் தாம் தகுதியுடையவர்கள்.

என்கிறது அந்த வசனம். இது அரசியலா இல்லையா? தாலூத் ஆட்சியாளராக நியமிக்கப்படுகிறார். மக்கள் அவர் எப்படி ஆட்சி அதிகாரம் செலுத்த முடியும்? ஆட்சியாளராக ஆட்சிக்கு நாங்கள் தாம் தகுதியுடையவர்கள் என்கிறார்கள். இது தெளிவான அரசியலா இல்லையா?

இஸ்லாத்தில் அரசியல் ஹராம் என்றால் தொழுகையில் இதை ஓத முடியுமா? தொழுகையில் அரசியல் வசனங்களை படிக்கலாம். மிம்பரில் நின்று மட்டும் பேசக் கூடாதா? 2:247ஆவது வசனத்தில் மேலும் என்ன கூறப்பட்டுள்ளது.

மேலும், அவருக்கு பொருள் வசதியும் வழங்கப்படவில்லை என்று கூறினார்கள் அதற்கவர், ''நிச்சயமாக அல்லாஹ் உங்களைவிட அவரையே தேர்ந்தெடுத்து விட்டான் இன்னும், அறிவாற்றலையும் உடல் வலிமையையும் அவருக்கு அதிகமாக வழங்கியுள்ளான் - அல்லாஹ் தான் நாடியோருக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்குகிறான். 2:247

ஆட்சியாளருக்கு பொருள் வசதி தேவை என அன்றைய மக்கள் எண்ணியுள்ளதை அறிகிறோம். இன்றைய மக்களும் ஆட்சியாளருக்கு பொருள் வசதி தேவை என்றே விளங்கி வைத்துள்ளார்கள்.

கவுள்சிலர் தேர்தலில் நிற்பவன் லட்சாதிபதியாக இருக்க வேண்டும். எம்.எல்.ஏ.க்கு நிற்பதாக இருந்தால் கோடீஸ்வரனாக இருக்க வேண்டும். எம்.பிக்கு நிற்பதாக இருந்தால் கோட்டீஸ்வரனாக மட்டுமல்ல கோடான கோடிக்கு சொந்தக்காரனாக இருக்க வேண்டும் என்ற மன நிலையில் உள்ளார்கள். அல்லாஹ் இதை மறுக்கிறான்.

ஆட்சியாளனாக ஆக பொருள் வசதி தேவை இல்லை. ஆட்சியாளனாக ஆக அறிவாற்றலும் உடல் வலிமையும்தான் தேவை என்பதை இந்த வசனத்தின் அல்லாஹ் அரசியல் பாடம் சொல்லித் தருகிறான்.

அல்லாஹ் தான் நாடியோருக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்குகிறான் என்பதன் மூலம் ஆட்சியை வழங்குவது இறைவனின் அதிகாரம். என்பதையும் அவர்கள் நபி மூலம் சொல்லிக் காட்டி புரிய வைத்துள்ளான்

அல்குர்ஆன் 3:26ஆவது வசனத்தில் இதே கருத்தை நமது நபி மூலம் சொல்லிக் காட்டி நம்மை புரிய வைக்கிறான் பாருங்கள்.

.(நபியே!) நீர் கூறுவீராக: ''அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்குகின்றாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சி அதிகாரத்தை பறித்து விடுகிறாய். நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய். நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய். 3:26 (7:128)

தேர்தல் நேரத்தில் இந்த வசனத்தை படித்தால் ''அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ நாடினால் சோனியாவுக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்குவாய். நீ நாடினால் மன்மோகிடமிருந்து ஆட்சி அதிகாரத்தை பறித்து விடுவாய். என்ற கருத்து வருகிறது அல்லவா. இது அரசியலா இல்லையா? இஸ்லாத்திற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. முஸ்லிம்கள் அரசியலில்ஈடுபடக் கூடாது என்போர் சிந்திக்க வேண்டும்.

தொடரும் இன்ஷhஅல்லாஹ்

Friday, April 17, 2009

சின்னம் ஒரு சின்னப் பிரச்சனையா? சின்ன விஷயமா?

வக்பு வாரிய தலைவர் பொறுப்பையும் திரும்ப கொடுத்து தெருவில் நிற்பது நியாயம்தானா?

16-04-2009 அன்று துபை எம்.எம்.கே. நிகழ்ச்சியில் கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி ஆற்றிய உரை.

''இதுகாலம் வரையில் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளுக்கு திராவிட கட்சிகள் ஒரு ஸீட் வழங்குவதும் இரட்டை இலை அல்லது உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவதும்தானே வழக்கமாக இருக்கிறது?''

மு.லீக் தலைவர் காதர் மைதீன் உதய சூரியன் சின்னத்தில் நின்றது செல்லும் என்றுதானே கோர்ட் தீர்ப்பு உள்ளது.

1906 ஆண்டு துவங்கப்பட்ட கட்சி இ.யூ.முஸ்லிம் லீக். 100 ஆண்டுகள் பாரம்பர்யமிக்க கட்சியே தனி சின்னத்தில் போட்டியிடவில்லை.

அப்துஸ்ஸமது ஸாஹிப், அப்துல் லத்தீப் ஸாஹிப், காதர் மைதீன் ஸாஹிப் என முஸ்லிக் லீக்கின் தலைவர்களாக இருந்த எல்லா ஸாஹிப்களும் இரட்டை இலை, உதய சூரியன் என பிற கட்சிகளின் சின்னத்தில் போட்டி இட்டுதான் பாராளுமன்றத்துக்கும் சட்ட மன்றத்துக்கும் போயிருக்கிறார்கள்.

அப்படி இருக்க துவங்கி 6 மாதம் கூட் ஆகாத த.மு.மு.க.வின் மனித நேய மக்கள் கட்சி சின்னம் என்ற ஒரு சின்ன பிரச்சனைக்காக கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டது நியாயம்தானா?

12 சட்டமன்ற சீட் வாய்ப்புகளை நழுவவிட்டது நியாயம்தானா?

ஒரு சீட்டு கலாச்சாரத்தை ஒழிப்போம் என்றீர்கள் அ.தி.மு.க. 2 எம்.பி. சீட் தருவேன் என்றதே. சட்ட மன்ற அளவிலே இது 12 சீட் அல்லவா. 1977இல் இருந்து முஸ்லிம் லீக்குக்கு 2 சட்டமன்ற சீட்கள்தானே கிடைத்து வருகிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு சட்ட மன்ற தேர்தலில் 12 சட்டமன்ற தொகுதிகளை கேட்கலாமே. சின்னம் என்ற சின்னப் பிரச்சனைக்காக 12 சட்டமன்ற சீட் வாய்ப்புகளை நழுவவிட்டது நியாயம்தானா?

கொறடா அனுமதி பெற்றுத்தான் பேச வேண்டும் என்றால் நமது செல்வாக்கை பயன்படுத்தி கட்சி தலைவர்களிடம் சொல்லி நேரம் பெறலாமே. எந்த வழியிலாவது ஒரு முறை சென்று விட்டு பேச முடியவில்லை என்பதை மக்கள் மன்றத்தில் வைத்து விட்டு திருமாவளவன் போல் இடைத் தேர்தலுக்கு வழி வகுத்து இருக்கலாமே.


''ஒரு தொகுதியை ஏற்றுக் கொள்ளுங்கள். இன்னொரு தொகுதிக்கு பதிலாக யூனியன் பிரதேசம் ஒன்றுக்கான கவர்னர் பதவியும்இ சவூதி அரேபியா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்திற்கான தூதர் பதவியும் காங்கிரஸ் சார்பில் தரப்படும்'' என குலாம் நபி ஆசாத் கூறியதை எடுத்துரைத்த பின்னரும் இந்த வாய்ப்புகளையும் நழுவவிட்டது நியாயம்தானா?

சின்னம் என்ற ஒரு சின்னப் பிரச்சனைக்காக இத்தனை வாய்ப்புகளையும் நழுவ விட்டு இருந்த வக்பு வாரிய தலைவர் பொறுப்பையும் திரும்ப கொடுத்து தெருவில் நிற்பது நியாயம்தானா? இதுவே அமீரகம் வந்த பின் 24 மணி நேரத்துக்குள் அரபக வாழ் தமிழ் மக்களிடமிருந்து வந்த கேள்விகள்.

நாட்டிலே எத்தனையோ அமைப்புகள் இருக்கின்றன. அவற்றில் எத்தனையோ பதவிகளும் காத்து இருக்கின்றன. அவற்றையெல்லாம் உதறி தள்ளி விட்டு ஏதாவது ஒரு முஸ்லிம் அமைப்பில் ஒருவர் உறுப்பினாராக இருக்கிறார் என்றால் என்ன காரணம். லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற கலிமா சொன்ன முஸ்லிம் நாம். எனவே நாம் தலைவராக ஏற்கக் கூடியவரும் லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்று கலிமா சொன்ன முஸ்லிமாக இருக்க வேண்டும். இந்த உயரிய எண்ணத்திலும் ஆயத்து ஹதீஸ்களின்படியும்தான் ஏதாவது ஒரு முஸ்லிம் அமைப்பில் போய் உறுப்பினாராக இருக்கிறார்.

அந்த முஸ்லிம் அமைப்பின் தலைவர் வேறு ஒரு கட்சியின் சின்னத்தில் போட்டி இடுவதாக இருந்தால் அவர் செய்ய வேண்டிய முதல் பணியே அவரது தரத்தை தாழ்த்துவதுதான். முஸ்லிம் அமைப்பின் தலைவராக இருப்பவர் சின்னம் தரும் கட்சியில் சாதாரண உறுப்பினராக ஆக வேண்டும். இது தரம் தாழ்ந்த செயலா இல்லையா? இது சின்ன விஷயமா?

இரட்டை இலையில் நிற்பதாக இருந்தால் லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற கலிமா சொன்னவர் காஞ்சித் தலைவனின் புகழ்பாடி புரட்சித் தலைவர் வழி நடப்போம் என்றும், அல்லாஹு அக்பர் என்றவர் அண்ணா நாமம் வாழ்க என்றும், இஸ்லாமிய(யிஸம்)கொள்கை ஓங்குக என்றவர் அண்ணாயிஸம் ஓங்குக என்றும், எங்கள் தலைவர் முஹம்மது நபி(ஸல்) என்றவர் எங்கள் தலைவர் புரட்சித் தலைவி இதய தெய்வம் அம்மா என்றுள்ள அ.தி.மு.க. கட்சியின் உறுப்பினர் பாரத்தில் கையெழுத்திட வேண்டும். சின்னப் பிரச்சனையா?இது சின்ன விஷயமா?

உதய சூரியன் சின்னத்தில் நிற்பதாக இருந்தால் வங்கக் கடலோரம் துகில் கொள்ளும் அண்ணாவை தொழுதிடுவோம். கலைஞர் இல்லம் இருக்கும் கேபாபலாபுரத்தை நோக்கி வணங்கிடுவோம் என்றுள்ள தி.மு.க. கட்சியின் உறுப்பினர் பாரத்தில் கையெழுத்திட வேண்டும். இது சின்னப் பிரச்சனையா? இது சின்ன விஷயமா?

உதய சூரியன் சின்னத்தில் நின்றது செல்லும் என்று தீர்ப்பு பெற்றது எப்படி?


மு.லீக் தலைவர் காதர் மைதீன் உதய சூரியன் சின்னத்தில் நின்றது செல்லும் என்று ஹை கோர்ட் தீர்ப்புதான் உள்ளது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு போன வழக்கு நிலுவையில்தான் உள்ளது. மு.லீக் தலைவர் காதர் மைதீன் உதய சூரியன் சின்னத்தில் நின்றது செல்லும் என்று ஹை கோர்ட் தீர்ப்பு பெற்றது எப்படி?

தமிழகத்தில் இ.யூ.முஸ்லிம் லீக் என்பது சமுதாய தொண்டு நிறுவனம்தான். தமிழகத்தில் இ.யூ.முஸ்லிம் லீக் தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி அல்ல. காதர் மைதீன் இ.யூ.முஸ்லிம் லீக் என்ற அரசியல் கட்சிக்கு தலைவர் அல்ல. இ.யூ.முஸ்லிம் லீக் என்ற சமுதாய தொண்டு நிறுவனத்தின் தலைவர்தான்.

மு.கருணாநிதியை தலைவராகக் கொண்ட தி.மு.க. என்ற அரசியல் கட்சிதான் காதர் மைதீன் உறுப்பினராக இருக்கும் அரசில் கட்சி. இவ்வாறு கூறிதான் காதர் மைதீன் உதய சூரியன் சின்னத்தில் நின்றது செல்லும் என்று கோர்ட் தீர்ப்பு வாங்கி உள்ளார்கள்.

அல்ஹம்துலில்லாஹ் என்ற புகழ் கூறி உரையை துவங்க வேண்டிய காதர் மைதீன் கோபலாபுரத்திலிருக்கும் கலைஞர் புகழ் பாடி பாராளுமன்ற உரையை துவங்கினார். இதை சி.எம்.என். சலீம் வெளியிட்ட காதர் மைதீன் பாராளுமன்ற உரை சி.டி.யில் பார்க்கலாம்.

தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற்ற அரசியல் அமைப்பாக முஸ்லிம் சமுதாய அரசியல் அமைப்பு இருக்க வேண்டும். இந்த நோக்கில்தான் லட்சக்கணக்கான முஸ்லிம்களின் ரத்த வியர்வையில் துவங்கப்பட்டது த.மு.மு.க.வின் மனித நேய மக்கள் கட்சி. தேர்தல் ஆணைய அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளது. இரட்டை இலையிலோ கருணாநிதியின் எச்சி இலையிலோ நின்றிருந்தால் ஜவாஹிருல்லாஹ்வும் ஹைதர் அலியும் எம்.பி. ஆகி விடலாம் சமுதாயம் எம்பியாக முடியாது. எனவே சின்னம் ஒரு சின்னப் பிரச்சனையா? சின்ன விஷயமா? சிந்தித்து முடிவு செய்யுங்கள்.


fromAஇது சின்ன விஷயமா ? சின்ன தீமையா ?
////
இரட்டை இலையில் நிற்பதாக இருந்தால் லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற கலிமா சொன்னவர் காஞ்சித் தலைவனின் புகழ்பாடி புரட்சித் தலைவர் வழி நடப்போம் என்றும், அல்லாஹு அக்பர் என்றவர் அண்ணா நாமம் வாழ்க என்றும், இஸ்லாமிய(யிஸம்)கொள்கை ஓங்குக என்றவர் அண்ணாயிஸம் ஓங்குக என்றும், எங்கள் தலைவர் முஹம்மது நபி(ஸல்) என்றவர் எங்கள் தலைவர் புரட்சித் தலைவி இதய தெய்வம் அம்மா என்றுள்ள அ.தி.மு.க. கட்சியின் உறுப்பினர் பாரத்தில் கையெழுத்திட வேண்டும். சின்னப் பிரச்சனையா?இது சின்ன விஷயமா? //////
தாங்கள் சொல்வது சரி தான். இன்னொன்று தெரியுமா ? தனி சின்னத்தில் போட்டியிட்டாலும் முஸ்லீம் அமைப்பின் சார்பாக வென்றாலும் பாராளுமன்றத்தில் எம்.பி யாக பதவியேற்கும் போது அம்பேத்கர், ராஜேந்திர பிரசாத் போன்றோரின் மனோ இச்ச்சையில் உருவான இந்திய அரசியல் சாசனத்துக்கு கட்டுபட்டு நடப்பேன் என்று தான் பைஅத் (உறுதிமொழி) கொடுக்க முடியுமே தவிர குரான் - ஹதீஸ் படி நடப்பேன் என கூற முடியாது? இது சின்ன விஷயமா ? சின்ன தீமையா ?

!fromAsu நியாயமான நச் கேள்வி

From: TAJUDEEN
Date: 2009/4/18
Subject: Re: {TMB - 2869} Re: தனி சின்னத்தில் போட்டி
To: tamilmuslimbrothers@googlegroups.com



அம்பேத்கர் ராஜேந்திர பிரசாத் போன்றோரின் மனோ இச்ச்சையில் உருவான இந்திய அரசியல் சாசனத்துக்கு கட்டுபட்டு நடப்பேன் என்று தான் பைஅத் (உறுதிமொழி) கொடுக்க முடியுமே தவிர குரான் - ஹதீஸ் படி நடப்பேன் என கூற முடியாது? இது சின்ன விஷயமா ? சின்ன தீமையா ?

என்று கேட்டுள்ள பைவ் ரோஸ் கான் ராஜேந்திர பிரசாத் போன்றோரின் மனோ இச்ச்சையில் உருவான இந்திய அரசியல் சாசனத்துக்கு கட்டுபட்டு உட்பட்டுதான் இந்திய அரசிடம் பாஸ்போர்ட் எடுத்து வெளிநாட்டு வேலைக்கு வந்துள்ளார். இது சின்ன விஷயமா ? சின்ன தீமையா ?

எனவே அவரது கேள்வி நியாயமான நச் கேள்வி! யாக ஆக வேண்டுமானால் ராஜேந்திர பிரசாத் போன்றோரின் மனோ இச்ச்சையில் உருவான இந்திய அரசியல் சாசனத்துக்கு கட்டுபட்டு உட்பட்டு இந்திய அரசிடம் எடுத்த பாஸ்போர்ட்டை கிளித்து எறிய வேண்டும் செய்வாரா?

இப்படி பேசுபவர்கள் நடத்தும் பத்திரிக்கை சம்பந்தமான வழக்குகளை இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட கோர்ட்டுகளில்தான் வழக்கு தொடர வேண்டும் என்று எழுதுகிறார்கள். அங்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலா தீர்ப்பு வழங்குகிறார்கள். பைவ் ரோஸ் கான் குறிப்பிட்டுள்ள ராஜேந்திர பிரசாத் போன்றோரின் மனோ இச்ச்சையில் உருவான இந்திய அரசியல் சாசனத்துக்கு கட்டுபட்டு உட்பட்டுதான் தீர்ப்பு வழங்குகிறார்கள். இது சின்ன விஷயமா ? சின்ன தீமையா ?

ம.ம.க.வினர் பாராளுமன்றம் சென்றால் அல்லாஹ்வின் பெயரால் உறுதி மொழி எடுப்பார்கள். நாத்திகர்களை பின்பற்றி உளப்பூர்வமாக என்றோ மனசாட்சிப்படி என்றோ உறுதி மொழி கொடுக்க மாட்டார்கள். இதுவே குர்ஆன் ஹதீஸ்களை நிலை நாட்டுவதற்கான முதல் பணியாகும்.

Regards,
A.Tajudeen
--
Thanks & Regards,
A.TAJUDEEN
00971502077067

100பேர் கொண்ட கருணாநிதி குடும்பத்துக்கு 5 பதவி.

சுமார் ஒரு கோடி பேர் கொண்ட முஸ்லிம் சமுதாயத்துக்கு தி.மு.க.வில் ஒரு எம்.பி. சீட் கூட கிடையாதாம் சிந்தியுங்கள்.

16-04-2009 அன்று துபை எம்.எம்.கே. நிகழ்ச்சியில் கீழக்கரை ஹஸன் ஆற்றி உரையில் மனதில் ஆழமாகப் பதிந்த கருத்து

ஆறரை கோடி மக்களைக் கொண்ட தமிழ்நாட்டில் சுமார் ஒரு கோடி பேர் முஸ்லிம்கள். கருணாநிதியின் குடும்பத்தவரோ சுமார் 100பேர்தான்.
நூறு பேரைக் கொண்ட கருணாநிதி குடும்பத்துக்கு தி.மு.க. மூலம் ஒரு முதலமைச்சர் பதவி, மகனுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் பதவி, மகளுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி, பெயரனுக்கு மத்திய அமைச்சர் பதவி, இப்பொழுது இன்னொரு மகனுக்கும் மத்திய அமைச்சர் பதவி என்ற ஆசையுடன் மதுரை எம்.பி. தொகுதி 100பேர் கொண்ட கருணாநிதி குடும்பத்துக்கு 5 பதவி. தமிழ்நாட்டில் சுமார் ஒரு கோடி பேர் கொண்ட முஸ்லிம் சமுதாயத்துக்கு தி.மு.க.வில் ஒரு எம்.பி. சீட் கூட கிடையாதாம் சிந்தியுங்கள்.

Tuesday, April 14, 2009

இந்த அறிஞர்களை விமர்சித்த அறிஞர்கள் பல அவதாரம் எடுத்துள்ளார்கள்

பேண்ட் போடுவது ஹராம், ஆங்கிலம் படிப்பது ஹராம் என்று சொன்ன மார்க்க அறிஞர்களால் சமுதாயம் 50 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றது. 2 தலைமுறை வாழ்வு பாழானது.

இந்த அறிஞர்களை விமர்சித்த அறிஞர்கள் பல அவதாரம் எடுத்துள்ளார்கள்.

அவதாரம்-1
1984இல் ஜனநாயகத் தலைமைக்கு தாய்ச்சபை என்றார்கள்.

அவதாரம்-2
1986இல் தாய்ச்சபைவிட தந்தை மார்க்கமே சிறந்தது ஜனநாயகம் என்பது நவீன ஷpர்க் அரசியல் ஹராம் ஓட்டுப் போடுவது ஹராம். எனவே தாய்ச்சபையை தூக்கி எறிவோம் தந்தை மார்க்கத்தை. தூக்கி பிடிப்போம் என்றார்கள்.

அவதாரம்-3
1994இல் எவ்வளவு காலம்தான் மக்கா வாழ்க்கை மதீனா வாழ்க்கை இல்லையா எனவே ஜிஹாது என்றார்கள். ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் சிறை சென்றார்கள். அவதாரம்-4
1995ஆகஸ்டு 15இல் பாக்கர் கைது செய்யப்பட்டதும் அடுத்து ஜிஹாதை தூண்டிப் பேசிய ஆலிம்கள் கைதாவார்கள் என்றானது.உடனே மக்கா வாழ்க்கையும் இல்லை மதீனா வாழ்க்கையும் இல்லை. இந்திய முஸ்லிம்கள் வாழ்வது அபிசீனிய வாழ்க்கை எனவே ஜிஹாது ஹராம் ஜனநாயமே சரியான வழி என்றார்கள்.

அவதாரம்-5
1999இல் ஓட்டு வேட்டையாடிய அவர்கள் 50வயதுக்குப் பிறகு தாங்கள் போடும் முதல் ஓட்டு என்றார்கள்.

அவதாரம்-6
2004இல் தேர்தல் களத்தில் ஓட்டுக் கேட்டுப் போனால் ஈமான் போய் விடும் என்றார்கள்.

அவதாரம்-7
2006இல் அவர்கள் கூற்றுப்படி ஈமானை இழந்து ஓட்டுப் பிச்சை கேட்டு வந்தார்கள்.
அவதாரம்-8
2008இல் இனிமேல் எந்த அமைப்புடனும் கூட்டும் இல்லை கூட்டணியும் இல்லை என்றார்கள்.
அவதாரம்-9
2009இல் அவர்கள் கூற்றுப்படி மீண்டும் ஈமானை இழந்து ஓட்டுப் பிச்சை கேட்டு வர உள்ளளார்கள்.
பேண்ட் போடுவது ஹராம், ஆங்கிலம் படிப்பது ஹராம் என்று சொன்ன மார்க்க அறிஞர்களால் சமுதாயம் 50 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றது. 2 தலைமுறையினரின் உலக வாழ்வுதான் பாழானது. இந்த அவதார புருஷர்களால் மறுமை வாழ்வும் சேர்ந்து பாழாகிறது.

நிச்சயம் த.த.ஜ. தேர்தலில் போட்டி இடும். பி.ஜெ.யும் தேர்தலில் போட்டி இடுவார். காலம் வெகு தொலைவில் இல்லை.

Monday, April 13, 2009

செய்த சத்தியத்தை விட சிறந்ததைக் கண்டால்…

அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி சத்தியம் செய்து நாங்கள் ஒருகாலமும் எங்களுக்காக ஓட்டு கேட்டு வரமாட்டோம் என்று சொன்னவர்கள் என்ற விமர்சனத்துடன் அடிக்கடி மெயில்கள் வந்து கொண்டிருக்கிறன. அவற்றுக்கு பதில் அளிக்கும் விதமாக இரு ஹதீஸ்கள் உள்ளன. முஸ்லிம்களுக்கு இந்த இரு ஹதீஸ்கள் போதுமானது.

செய்த சத்தியத்தை விட சிறந்ததைக் கண்டால்…
நாம்தாம் மறுமை நாளில் (காலத்தால்) பிந்தியவர்களாகவும் (அந்தஸ்தால்) முந்தியவர்களாகவும் இருப்போம். மேலும் அல்லாஹ்வின் மீதாணையாக! (உங்களில் ஒருவர் தம் குடும்பத்தார் (துன்புறும் வகையில் அவர்கள்) தொடர்பாகத் தாம் செய்த சத்தியத்தில் பிடிவாதமாக இருப்பது பெரும் பாவமாகும். (அந்தச் சத்தியத்தை முறித்துவிட்டு) அதற்காக அவரின் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ள பரிகாரத்தைச் செய்வது சிறந்ததாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :6624-6625 அபூஹூரைரா (ரலி).

என் நண்பர்கள் என்னை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, தமக்காக (பயண) வாகனம் கேட்கும்படி அனுப்பினார்கள். அப்போது அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் உஸ்ரா(ப் போரின்) படையுடன் செல்லவிருந்தனர் - உஸ்ராப் போரே தபூக் போராகும் - அப்போது நான், ‘இறைத்தூதர் அவர்களே! என் நண்பர்கள் தமக்காக வாகனம் கேட்கும்படி என்னைத் தங்களிடம் அனுப்பி வைத்துள்ளனர்” என்று சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு எந்த வாகனத்தையும் என்னால் தரவியலாது” என்று கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கோபத்திலிருந்த சமயத்தில் நான் அவர்களிடம் சென்றுவிட்டேன். நான் அதை அறிந்திருக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் (வாகனம் தர) மறுத்ததனாலும் என் மீது அவர்கள் வருத்தம் கொண்டிருப்பார்கள் என்ற அச்சத்தினாலும் நான் கவலை கொண்டவனாகத் திரும்பினேன். நபி (ஸல்) அவர்கள் கூறியதை என் நண்பர்களிடம் வந்து தெரிவித்தேன். சிறிது நேரம் தான் கழிந்திருக்கும். அதற்குள், ‘அப்துல்லாஹ் இப்னு கைஸே!” என்று பிலால் (ரலி) அழைப்பதைக் கேட்டேன். உடனே நான் பதிலளித்தேன். அப்போது அவர்கள், ‘உங்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அழைக்கிறார்கள். அவர்களின் அழைப்பை ஏற்றுச் செல்லுங்கள்” என்று கூறினார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றபோது அவர்கள், ‘ஒரே ஈற்றில் பிறந்த இந்த இரண்டு ஒட்டகங்களையும், ஒரே ஈற்றில் பிறந்த இந்த இரண்டு ஒட்டகங்களையும்…” என்று ஆறு ஒட்டகங்களைக் காட்டி, ‘பிடித்துக்கொள்” என்று கூறினார்கள்.
அவற்றை அப்போதுதான் ஸஅத் இப்னு உபாதா (ரலி) அவர்களிடமிருந்து விலைக்கு வாங்கியிருந்தார்கள். உங்கள் நண்பர்களிடம் இவற்றை (ஒட்டிக்) கொண்டு சென்று அவர்களிடம், ‘அல்லாஹ்’ அல்லது ‘இறைத்தூதர்’ அவர்கள் இந்த ஒட்டகங்களை உங்கள் பயணத்திற்காக அளித்துளளார்கள். எனவே, இவற்றிலேறிப் பயணம் செய்யும்படி சொல்லக் கூறினார்கள்’ எனத் தெரிவியுங்கள்” என்று கூறினார்கள். அவர்களிடம் நான் அவற்றை(ஓட்டி)க் கொண்டு சென்று, ‘நபி (ஸல்) அவர்கள் இவற்றின் மீது உங்களைப் பயணம் செல்லும்படி கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் சிலர் என்னுடன் வந்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (’நான் எந்த வாகனமும் தர மாட்டேன்’ என்று) கூறியதைக் கேட்டவர்களிடம் விசாரிக்கும் வரையில் உங்களை நான் விடமாட்டேன். ஏனெனில், நான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொல்லாத ஒன்றை உங்களிடம் சொல்லிவிட்டதாக நீங்கள் நினைத்துவிடக் கூடாதல்லவா?’ எனக் கூறினேன். அதற்கு என் நண்பர்கள், ‘(அதற்கெல்லாம் அவசியமில்லை.) உங்களை உண்மையாளர் என்றே நாங்கள் கருதுகிறோம். (இருந்தாலும், நீங்கள் விரும்புகிறீர்கள் என்ற காரணத்தால்) நீங்கள் விரும்பியபடி நாங்கள் செய்கிறோம்” என்று கூறினார்கள். நான் அவர்களுக்குத் தரமாட்டேன்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (முதலில்) மறுத்ததையும், பிறகு அவர்களே தந்ததையும் அறிந்த சிலரிடம் அழைத்துச் சென்றேன். அப்போது அந்தச் சிலர், நான் மக்களிடம் சொன்னதைப் போன்றே கூறினார்கள்.
புஹாரி :4415 அபூமூஸா (ரலி).

வாள் போர் புரிய வானவர்களை அனுப்பிய அல்லாஹ் வாக்களிக்கவும் வானவர்களை அனுப்புவான்.

மனித நேய கட்சி துவங்கப்பட்ட உடன் சந்திக்கும் முதல் தேர்தல் இது. ம.ம.க.வின் இன்றைய தேர்தல் நிலைப்பாடு பற்றி பல கருத்துக்கள் உள்ளன.

இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மதீனாவின் ஆட்சி பொறுப்பை ஏற்ற பின் சந்தித்த பிரதானமான முதல் போர். இஸ்லாம் கண்ட முதல் பிரதான போர் எனப்படும் பத்ருப் போர் பற்றி அனைவரும் அறிவோம். இந்தப் போரில் ம.ம.க.வினருக்கு அதிக படிப்பினை இருக்கிறது. அல் குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்.

(பத்ரு களத்தில்) சந்தித்த இரு சேனைகளிலும் உங்களுக்கு ஓர் அத்தாட்சி நிச்சயமாக உள்ளது. ஒரு சேனை அல்லாஹ்வின் பாதையில் போரிட்டது. பிறிதொன்று காஃபிர்களாக இருந்தது. நிராகரிப்போர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைத் தங்களைப்போல் இரு மடங்காகத் தம் கண்களால் கண்டனர். இன்னும், அல்லாஹ் தான் நாடியவர்களுக்குத் தன் உதவியைக் கொண்டு பலப்படுத்துகிறான். நிச்சயமாக, (அகப்) பார்வையுடையோருக்கு இதில் திடனாக ஒரு படிப்பினை இருக்கிறது. (அல்குர்ஆன் 3:13)

313 பேர்களைக் கொண்ட இஸ்லாமிய படை 1000பேர்களைக் கொண்ட பெரும் படையை எதிர்க்க வேண்டி இருந்தது. இந்த பத்ருப் போருக்கு ஸஹாபாக்கள் விரும்பிச் சென்றார்களா? இந்தப் போரை ஸஹாபாக்கள் விரும்பினார்களா? இதோ அல்லாஹ் சொல்கிறான்.

.(அபூஸுஃப்யான் தலைமையில் வரும் வியாபாரக் கூட்டம் அபூ ஜஹ்லின் தலைமையில் வரும் படையினர் ஆகிய) இரு கூட்டங்களில் (ஏதேனும்) ஒரு கூட்டத்தை (வெற்றி கொள்ளும் வாய்ப்பு) உங்களுக்கு உண்டு என்று, அல்லாஹ் வாக்களித்ததை நினைவு கூறுங்கள். ஆயுத பாணிகளாக இல்லாத (வியாபாரக் கூட்டம் கிடைக்க வேண்டுமென) நீங்கள் விரும்பினீர்கள். (ஆனால்) அல்லாஹ் தன் திருவாக்குகளால் சத்தியத்தை நிலைநாட்டவும் காஃபிர்களை வேரறுக்கவுமே நாடுகிறான். (அல்குர்ஆன் 8:7)

ஸஹாபாக்கள் ஆயுதம் ஏந்தி போர் புரிவதை விரும்பி இருக்கவில்லை என்பதையும் அல்லாஹ்தான் அவன் கட்டளைப்படி போர் புரிய வைத்தான் என்பதை மேற்கண்ட வசனம் மூலம் அறிகிறோம்.

ஸஹாபாக்களே பலப் பரீட்சையை விரும்பவில்லை விரும்பி இருக்கவில்லை எனும்போது நாம் தனித்து நின்று தேர்தலில் பலப் பரீட்சை பார்ப்பதை விரும்பி இருப்போமா? நம்மில் ஒருவராவது விரும்பி இருப்பார்களா? நிச்சயமாக யாருமே விரும்பி இருக்க மாட்டோம்.

முதலிலேயே தனித்து போட்டி நமது பலத்தை நிருபிக்க பலப் பரீட்சை பார்க்கும் போட்டி என்றால் யாருமே களத்துக்கு வர தயாராக ஆகி இருக்க மாட்டோம். ஆளுங்கட்சியுடன் கூட்டணி. பெரிய கட்சிகளுடன் கூட்டணி. என்ற எண்ணம்தான் தேர்தல் களத்துக்கு வேகத்துடன் வர வைத்தது.

அபூஸுஃப்யான் தலைமையில் வரும் வியாபாரக் கூட்டத்தை எளிதில் மடக்கும் நோக்குடன் மதீனாவை விட்டு வெளியேற வைத்து ஸஹாபாக்களை போர் களத்து வர வைத்தவன் அல்லாஹ். அந்த அல்லாஹ்வின் கட்டளைபடிதான் இதுவும் நடக்கிறது.

(பத்ரு போர்க்களத்தில் மதீனா பக்கம்) பள்ளத்தாக்கில் நீங்களும், (எதிரிகள்) தூரமான கோடியிலும், (குறைஷி வியாபாரிகளாகிய) வாகனக்காரர்கள் உங்கள் கீழ்ப்புறத்திலும் இருந்தீர்கள். நீங்களும் அவர்களும் (சந்திக்கும் காலம் இடம் பற்றி) வாக்குறுதி செய்திருந்த போதிலும் அதை நிறைவேற்றுவதில் நிச்சயமாகக் கருத்து வேற்றுமை கொண்டிருப்பீர்கள் ஆனால் செய்யப்பட வேண்டிய காரியத்தை அல்லாஹ் நிறைவேற்றுவதற்காகவும், அழிந்தவர்கள் தக்க முகாந்தரத்துடன் அழிவதற்காகவும், தப்பிப் பிழைத்தவர்கள் தக்க முகாந்தரத்தைக் கொண்டே தப்பிக்கவும் (இவ்வாறு அவன் செய்தான்) - நிச்சயமாக அல்லாஹ் செவியேற்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 8:42)

(நபியே!) உம் கனவில் அவர்களை(த் தொகையில்) உமக்குக் குறைவாகக் காண்பித்ததையும், அவர்களை உமக்கு அதிகமாகக் காண்பித்திருந்தால், நீங்கள் தைரியம் இழந்து (போர் நடத்தும்) காரியத்தில் நீங்கள் (ஒருவருக்கொருவர் பிணங்கித்)தர்க்கம் செய்து கொண்டிருந்திருப்பீர்கள் என்பதையும் நினைவு கூறுவீராக! எனினும் (அப்படி நடந்துவிடாமல் உங்களை) அல்லாஹ் காப்பாற்றினான் நிச்சயமாக அவன் உள்ளங்களில் உள்ளவற்றை அறிபவன். 8:43

''நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன்; ஆகவே, நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துங்கள் நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன்; 8:12


நீங்களும் அவர்களும் (போரில்) சந்தித்தபோது அவன் உங்களுடைய பார்வையில் அவர்களுடைய எண்ணிக்கையைக் குறைவாகக் காண்பித்தான் இன்னும் உங்கள் (தொகையை) அவர்களுடைய பார்வையில் குறைவாகக் காண்பித்தான் - இவ்வாறு அவன் செய்தது, அவன் விதித்த ஒரு காரியத்தை அவன் நிறைவேற்றுவதற்காகவேயாகும் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் சென்று முடிவடைகின்றன.8:44

''பத்று'' போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த போது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான். 3:123

நினைவு கூறுங்கள்) உங்களை இரட்சிக்குமாறு உங்கள் இறைவனின் உதவியை நாடியபோது ''(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்'' என்று இறைவன் உங்களுக்கு பதிலளித்தான்.8:9

(நபியே!) முஃமின்களிடம் நீர் கூறினீர் ''உங்கள் ரப்பு (வானிலிருந்து) இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப் போதாதா?'' என்று.3:124

குர்ஆனில் பத்ரு போர் சம்பந்தமாக உள்ள ஒவ்வொரு வசனத்தையும் மீண்டும் மீண்டும் படியுங்கள். அதற்குரிய அழுத்தத்துடன் படியுங்கள். வாள் போர் புரிய வானவர்களை அனுப்பிய அல்லாஹ் வாக்களிக்கவும் வானவர்களை அனுப்புவான் என்ற நம்பிக்கை உங்களுக்கு ஏற்படும். அல்லாஹ்வின் மீது இந்த நம்பிக்கை ஏற்பட்டு விட்டால் வெற்றி நிச்சயம்.

10.4.09 அன்று திருநெல்வேலி டவுண் ஜும்ஆ பள்ளியில் ஆற்றப்பட்ட ஜும்ஆ உரையின் சுருக்கம்.

Sunday, April 12, 2009

சிங்கங்கள் யார். அசிங்கங்கள் யார்.


தமிழ் முரசு இது தி.மு.க.வின் தினகரன் குரூப் பத்திரிக்கை. அதில் ம.ம.க. பற்றி வந்துள்ள செய்தியை பாருங்கள்.

ஒரு ஐ.டி.யிலிருந்து வந்தததை எனக்கு அனுப்பி இருந்தீர்கள். பிறரை விமர்சிப்பவர் தன்னைப் பற்றிய விமர்சனத்தையும் சந்திக்க திராணி வேண்டும். யோக்கியதையும் வேண்டும். இந்த ஐ.டிக்கு சொந்தக்காரர்களுக்கு அந்த திராணியும் இல்லை. யோக்கியதையும் இல்லை.

பாராளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் பேசுவதற்காக ஒதுக்கப்படும் நேரங்களில் கொறடா அனுமதியளிக்கும்போதுதான் நான் பேச முடியும். என்று மு.லீக் தலைவர் காதர் மைதீன் கூறியதையே கேள்வியும் நீயே பதிலும் நீயே என்ற தலைப்பில் அவர்கள் கேள்விக்கு பதிலாக அனுப்பினேன். இதற்கு அவர்களால் முறையாக பதில் சொல்ல முடியவில்லை.

முஸ்லிம் சமுதாயத்தின் பெயரால் சீட்டு வாங்கி விட்டு பிற கட்சிகளின் அடிமையாக இருக்கக் கூடாது என்பதால்தான் ம.ம.க. அவர்களை விட்டும் தனித்து நிற்கிறது.

பதவி கிடைத்தால் போதும் என்றிருந்தால் உதய சூரியனில் நின்றிருக்கலாம். வக்பு வாரியத்தை தக்க வைத்திருக்கலாம். உலமாக்கள் வாரியத்தையும் பெற்றிருக்கலாம். எம்.பி.யாகவும் ஆகி இருக்கலாம்.

இப்பொழுது சொல்லுங்கள் இனமானமிக்க சமுதாய சிங்கங்கள் யார். அசிங்கங்கள் யார்.
தன்மானத் தலைமை எது? பதவிக்காக சமுதாயத்தை அடகு வைக்கும் தலைமை எது?

10 லட்சமா? 7 லட்சமா?
http://fazlulilahi.blogspot.com/2006/07/10-7.html

Saturday, April 11, 2009

சுய நலனுக்காக சமுதாயத்தின் பெயரால் வாங்கப்பட்ட சீட்டு.

கேள்வியும் நீயே பதிலும் நீயே
குடிசை, தராசு, சிங்கம், ஏணி போன்ற தனிச் சின்னத்தில் நின்றபோதுதான் மு.லீக் ஒரே நேரத்தில் 24 எம்.எல்.ஏ.க்கள் லோக்சா, ராஜ்யசபாவிலுமாக 5 எம்பிக்கள் இருந்துள்ளனர். என்றைக்கு பிற கட்சிகளிக் அடிமைச் சின்னத்தில் மு.லீக் நிற்க ஆரம்பித்ததோ அன்றிலிருந்துதான் அழிவு கண்டது மு.லீக்.

தி.மு.க.வின் உதய சூரியன் சின்னத்திலோ, அ. தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்திலோ நின்றால் இதுதான் கதி. சுயமாக பேச முடியாது. சின்னம் தந்த கட்சிகளின் அடிமைகளாகவேதான் இருக்க முடியும். கொறடா சொல்லும் புருடாக்களைத்தான் பேச வேண்டும். அடுத்த கட்சிகளின் கொறடா சொல்லும் புருடாக்களை பேச சமுதாயத்தின் பெயரால் ஏன் சீட்டு வாங்க வேண்டும். அதனால்தான் த.மு.மு.க.வின் ம.ம.க. சமுதாயத்தின் தன் மான அரசியல் காண தனித்து நிற்கிறது.

2004இல் துபை வந்த காதர் மைதீனிடம் முஸ்லிம் சிறைவாசிகளுக்காக பாராளுமன்றத்தில் பேசுங்கள் என்றபொழுது. நான் தி.மு.க. உறுப்பினர் பேச முடியாது என்றார். சீட்டு வாங்கியவுடன் காதர் மைதீன் அளித்த பேட்டியே qmfuae@gmail.com,noordeen@hotmail.com அவர்களுக்கு பதிலாக உள்ளது.
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=12508&Itemid=107

அதிகாலைக்கு காதர் மைதீன் அளித்த பேட்டி இது.

அதிகாலை: (காதர் மைதீன் அவர்களே) பாராளுமன்றத்தில் முஸ்லிம் சமுதாயத்தின் பிரச்சினைகள் குறித்து எத்தனை முறை உரையாற்றியிருக்கிறீர்கள்?

பேராசிரியர் : பாராளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் பேசுவதற்காக ஒதுக்கப்படும் நேரங்களில் கொறடா அனுமதியளிக்கும்போதுதான் நான் பேச முடியும்.

இப்பொழுது சொல்லுங்கள் உதசூரியன் சின்னத்தில் போட்டி இடுவது சிறுபிள்ளை தனமானதா சின்னத்தனமனதா?

தி.மு.க. உறுப்பினர்கள் பேசுவதற்காக ஒதுக்கப்படும் நேரங்களில் தி.மு.க. கொறடா அனுமதியளிக்கும்போதுதான் பேச முடியும் என்ற நிலையில் சீட்டு வாங்கினால் அது சமுதாயததுக்காக வாங்கப்பட்டது அல்ல. சுய லாபத்துக்காக சுய நலனுக்காக சமுதாயத்தின் பெயரால் வாங்கப்பட்ட சீட்டு.



--ஆடுதுறையான் .fromThopputhurai 100 முஸ்லிம் லீக் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும்

இன்றைய அரசியல் பிரிவுகளுக்கிடைய லீக் ஏணி சின்னத்தில் போட்டி போட்டால் நிச்சியம் எதிர்மறையாக போய்விடும். காரணம் அடிமட்ட மக்கள் ஏணி சின்னம் அவ்வளவு தெரியாது எனவே கூட்டணி கட்சி சின்னத்தில் போட்டி போடுவது தான் வெற்றிக்கு வழி வகுக்கும்.
லீக் போட்டி போடும் தொகுதில் 15 முதல் 20 சதவீதம் தான் முஸ்லிம்கள் உள்ளனர், 60 சதவீதம் சகோதர சமுதாய இந்து மக்களும், 20 சதவீதம் கிறிஸ்தவர்கள் உள்ளனர். தன்மானம் பேசி திரிபவர்களiன் விமர்சனத்திற்காக நாம் நமது வெற்றி வாய்ப்பை இழக்க கூடாது. இவர்கள் அரசியலில் இப்போது தான் குழந்தை பருவத்தில் உள்ளார்கள். அதனால் தான் சிறுபிள்ளை தனமாகவே அறிக்கைகளும், பேட்டியும் கொடுத்து 60 வருட கட்சி நடத்தும் முஸ்லிம் லீக் தனிசின்னத்தில் போட்டி போடவில்லை என்று ஒப்பாரி வைக்கிறார்கள். இவர்களiன் வாதம் எந்த அளவிற்கு தவறானது என்பது நாம் கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் புரியும் இன்றைய கால கட்டத்திற்கு சரியாக வாரது. தொகுதி என்ற அடிப்படையில் அனைத்து மக்களும் உள்ளனர் முஸ்லிம்கள் இருக்கிறார்கள் ஆனால் பெரிய அளவில் இல்லை.

நம்மிடம் உள்ள கயவர்கள் போட்ட வழக்கும் எந்த எதிர்ப்பும் கொடுக்கவில்லை, நீதிமன்ற தீர்ப்பும் லீக் கட்சிக்கு சார்பாகவே தான் வந்தது. எனவே இந்த தனிசின்னம் என்ற பேச்சு பிறகு சட்டசபை தேர்தல் போது வெள்ளோட்டம் பார்க்கலாம். பல பரிட்சை பார்க்க இதுவல்ல நேரம். ஏணிசின்னம் வேண்டுமானல் கேரளாவில் நன்றாக தெரியும் இங்கு தமிழகத்தில் அப்படி அல்ல. எனவே ஏணி சின்னம் என்று போட்டி போட்டால் அது சுயேச்சை வேட்பாளர் என மக்களுக்கு தோன்றும், இதை பிரபலப்படுத்துவது என்பது வெகு சிரமம். எனவே உதய சூரியன் சின்னத்தில் தான் நிற்க வேண்டும் என்பது ஒவ்வொரு சமுதாய கவலை கொண்ட தொண்டர்களiன் கவலை.

தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு புது சவால்

தேர்தல் செய்திகள்
http://election.dinamalar.com/news/1543/மனிதநேய-மக்கள்-கட்சி-தலைமையில்-4வது-அணி!-:-தி.மு.��.html
மனிதநேய மக்கள் கட்சி தலைமையில் 4வது அணி! : தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு புது சவால்
சென்னை : லோக்சபா தேர்தல் களத்தில், மனிதநேய மக்கள் கட்சி தலைமையில் நான்காவது அணி உருவாகியுள்ளது. இதில், சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம், கொங்கு வேளாளர் பேரவை மற்றும் பல் வேறு சமூக அமைப் புக்கள் இணைந் துள்ளன. இந்தக் கூட்டணி, தமிழகத்தின் முக்கிய கட்சிகளான தி.மு.க., - அ.தி.மு.க., வுக்குப் புதிய சவாலாக உருவெடுத்துள்ளது.

லோக்சபா தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணிகள், தே.மு.தி.க., என மூன்று அணிகள் போட்டியிடுகின்றன. தற்போது, மனிதநேய மக்கள் கட்சி தலைமையில் பல்வேறு கட்சிகள் மற்றும் சமூக அமைப்புக்கள் இணைந்து, நான்காவது அணியாக களம் இறங்குகின்றன. தமிழக முஸ்லிம்களை ஒன்று திரட்டி, அவர்களை சமூக, பொருளாதார நிலையில் முன்னேற்ற, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் துவக்கப்பட்டது. கடந்த தேர்தல்களின் போது, அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணிகளுக்கு இக்கட்சி மாறி மாறி தார்மீக ஆதரவு அளித்து, அக்கட்சிகளை வெற்றியடையச் செய்து வந்தது.

இந்நிலையில், மத்திய, மாநில அரசுகளிடம், தங்கள் சமூகத்தை மேம்படுத்துவதற்கான சலுகைகளைப் பெறுவதற்காக, கடந்த பிப்ரவரியில் தாம்பரத்தில் நடந்த மாபெரும் மாநாட்டில் த.மு.மு.க., என்ற அமைப்பு, மனிதநேய மக்கள் கட்சி என்ற அரசியல் அமைப்பாக மாறியது. மனிதநேய மக்கள் கட்சி கிட்டத்தட்ட 20 தொகுதிகளில் கணிசமாக ஓட்டுக் களை கொண்டுள் ளது. அதிக அளவில் முஸ்லிம் ஓட்டுக்கள் உள்ள தஞ்சாவூர், திருச்சி, வேலூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், மத்திய சென்னை ஆகிய ஆறு தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் கட்சியாக இக்கட்சி உள்ளது. லோக்சபா தேர்தலில் கூட்டணி வைத்துக் கொள்ள முதலில், தி.மு.க.,வுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. கூடுதல் தொகுதிகள், தனிச் சின்னம் என்ற கோரிக்கை முன் வைக்கப் பட்டது. தி.மு.க., இக்கோரிக்கையை நிராகரித்தது. அ.தி.மு.க.,வும் ஒத்து வராததால், லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிட மனிதநேய மக்கள் கட்சி முடிவெடுத்தது. தற்போது, தமிழகத்தில், மனிதநேய மக்கள் கட்சி தலைமையில் நான்காவது அணி உருவாகியுள்ளது.

நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, முடிவு எட்டப்பட்டது. அடுத்ததாக, கொங்கு வேளாளர் பேரவை உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. இக்கூட்டணியில் உள்ள கட்சிகள் மற்றும் சமூக அமைப்புக்களுக்கான தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நெல்லை தொகுதி சமத் துவ மக்கள் கட்சிக்கும், தென்காசி தொகுதி புதிய தமிழகத்திற்கும் ஒதுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முஸ்லிம் மக்கள் அதிகமாக உள்ள மத்திய சென்னை, மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட மனிதநேய மக்கள் கட்சி திட்டமிட்டுள்ளது. இருப்பினும், இது குறித்து ஆலோசனை நடந்து வருவதாகவும், இறுதி முடிவு எட்டப்படவில்லை என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மயிலாடுதுறையில் கட்சியின் மாநிலத் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாவும், மத்திய சென்னையில் கட்சியின் மாநிலப் பொதுச் செயலர் ஹைதர்அலியும், ராமநாதபுரத்தில், அந்த மாவட்டச் செயலர் கலிமுல்லாகானும் போட்டியிடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனிதநேய மக்கள் கட்சி, தமிழக லோக்சபாத் தேர்தலில் போட்டியிடுவதால் தி.மு.க.,வுக்குத் தான் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட சில தொகுதிகளில் நான்காவது அணியால் அ.தி.மு.க., விற்கும் பாதிப்பு ஏற்படும்' என்றனர்.


வாசகர் கருத்து
It will be a powerful party in Tamilnadu. DMK & ADMK will loose their vots. MMK alliance has got a chance to win in many places.
by M Azaghu Rasa,India
Posted on ஏப்ரல் 12,2009,04:48 IST

திராவிட இயக்கங்களுக்கு பல்லக்கு தூக்கி, அவர்களை ஆட்சி கட்டிலில் அமர வைத்து அழகு பார்த்த முஸ்லிம் சமுதாயத்திற்கு, உபகாரமாக திராவிட இயக்கங்கள் செய்திட்ட பணிகளை விட தந்திட்ட வேதனைகளே அதிகம். இவற்றையெல்லாம் களைந்திட தமிழக அரசியல் வானில் புதியதொரு விடியலாக, உருவாகியிருக்கும் மனிதநேய மக்கள் கட்சி-யின் வலுவான தொண்டர் கட்டமைப்பை, உளவுத்துறை தன் கையில் வைத்திருக்கும் முதல்வர் உணர மறுத்தது தி.மு.க தலைமையிலான அணிக்கு மிகுந்த சறுக்கலை ஏற்படுத்தும், இதை முதல்வர் மிக தாமதமாக உணர்வார். 'ஒரு தொகுதியிலும் நிற்க மாட்டோம், உதயசூரியன் சின்னத்திலும் நிற்க மாட்டோம் ' - என்று உரத்து சொன்ன மனிதநேய மக்கள் கட்சி-யின் நிர்வாகிகளை பாராட்டுகின்றேன். அன்புடன் சவுதி அரேபியா
by Mr பரங்கிப்பேட்டை ஹம்துன் அப்பாஸ்,Saudi Arabia

Friday, April 10, 2009

எனது சமுதாயத்தின் கண்ணியம் காக்கப்பட வேண்டும்.

பதவியை துறந்துவிட்டு வந்திருக்கிறேன்.



லோக்சபா தேர்தலில் சமூக கூட்டணி : மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு

சென்னை : ''மனித நேய மக்கள் கட்சி சமூக கூட்டணியை ஏற்படுத்தியிருக்கிறது. நாங்கள் சொல்லும் வேட்பாளர்களுக்கு 40 தொகுதிகளிலும் ஓட்டு போடுங்கள்,'' என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக பொதுச்செயலர் ஹைதர் அலி பேசினார். மனித நேய மக்கள் கட்சி பொதுக்கூட்டம் தாம்பரத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில், மனிதநேய மக்கள் கட்சி காஞ்சிபுரம் மாவட்ட செயலர் யாக்கூப் தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக பொதுச்செயலர் ஹைதர் அலி பேசியதாவது: முஸ்லிம் மக்களுக்கு பிரதிநிதித்துவம் பெற மனித நேய மக்கள் கட்சி உதயமாகியுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தி.மு.க.,விடம் நமது சமுதாயத்தை அடகு வைத்திருந்தது. இந்த லோக்சபா தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதியை தி.மு.க., ஒதுக்கியது. அக்கட்சியின் பொதுக்குழுவில் வேலூர் தொகுதி நமக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றும், அதற்கு நான் தான் வேட்பாளர் என்றும், ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்றும் காதர்மொய்தீன் கூறியிருந்தார். அவர் சார்ந்த கட்சியில் அவரால் கூட சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. தற்போது வேலூர் தொகுதியின் வேட்பாளரும், தொகுதியின் சின்னமும் மாற்றப்பட்டுவிட்டது. எனது சமுதாயத்தின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்பதற்காக நான் வகித்து வந்த வக்பு வாரிய தலைவர் பதவியை துறந்துவிட்டு வந்திருக்கிறேன். ஒரு 'சீட்' வாங்கி லோக்சபாவை பார்க்க நாங்கள் விரும்பவில்லை.

மனிதநேய மக்கள் கட்சி ஒரு சமூக கூட்டணியை ஏற்படுத்தியிருக்கிறது. தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த புதிய தமிழகம், நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த சமத்துவ மக்கள் கட்சி ஆகியவை நம்முடன் கூட்டணி வைத்து போட்டியிட உள்ளன. கிடைத்த வாய்ப்பை ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட அனைத்து சமுதாய மக்களுக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வரும் லோக்சபா தேர்தலில் தமிழகம், புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் நாங்கள் யாருக்கு ஓட்டு போட சொல்கிறோமே, அவர்களுக்கு ஓட்டுப் போடுங்கள். நம்மை இழந்தவர்களுக்கு நாம் நல்ல பாடம் கற்றுத்தர வேண்டும். இவ்வாறு ஹைதர் அலி பேசினார். தலைமை கழக பேச்சாளர் கோவை சையது உள்ளிட்ட பலர் பேசினர்
.http://election.dinamalar.com/news/1465/லோக்சபா-தேர்தலில்-சமூக-கூட்டணி-:-மனிதநேய.html

http://www.dinamalar.com/Arasiyalnewsdetail.asp?news_id=8915செயற்குழு கூட்டத்திற்குப் பின், காதர் மொய்தீன் எம்.பி., நிருபர்களிடம் கூறியதாவது: கட்சியின் முடிவுப்படி வேலூர் தொகுதியில் நான் மீண்டும் போட்டியிடுகிறேன். கடந்த முறை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டேன். இதை முஸ்லிம் சமூகத்தில் பல்வேறு இயக்கங்கள், கட்சியை தி.மு.க.,வில் அடகு வைத்து விட்டதாக பிரசாரத்தில் ஈடுபட்டன. இந்த பிரசாரத்தை முறியடிக்கும் வகையில், இந்த முறை "ஏணி' சின்னத்தில் போட்டியிடுகிறேன்
கடந்த முறை காதர் மைதீன் அடகு வைத்தார். இந்த முறை அடகு வைப்பது யார் யுனானி டாக்டர் ஹக்கீம் சையத் சத்தாரா அப்துல் ரஹ்மானா என்பது பற்றி கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் முடிவு செய்யும். மொத்தத்தில் மு.லீக் தி.மு.க.வின் ஒரு பிரிவுதான்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் மாற்றம்
சென்னை(ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2009 ( 16:02 IST )
தி.மு.க.கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
லோக்சபா தொகுதி வேலூர் வேட்பாளர் காதர் மொகைதீனுக்கு பதிலாக எம்.அப்துல் ரஹ்மான் போட்டியிடவுள்ளார் என அறிவிக்கப் பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டது.
இதனையடுத்து அத்தொகுதியின் தற்போதைய எம்.பி.யான காதர் மொய்தீனே மீண்டும் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டது.
அதே சமயம் கடந்த முறையைப் போல், இந்த முறை உதயசூரியன் சின்னத்தில் நிற்பதற்குப் பதிலாக இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் ஏணி சின்னத்தில் போட்டியிடப் போவதாகவும் மொய்தீன் அறிவித்தார்.
ஆனால் இதை தி.மு.க. ஏற்கவில்லை என்று தெரிகிறது.உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என தி.மு.க. தலைவர்கல் வலியுறுத்தியதால், அதனை ஏற்காத காதர் மொய்தீன் போட்டியிலிருந்து விலகுவது என முடிவு செய்தார்.
இதையடுத்து அக்கட்சியின் பொதுக்குழு அவசரமாக கூட்டப்பட்டது.இக்கூட்டத்தில் காதர் மொய்தீனுக்குப் பதில் அப்துல் ரஹ்மானை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தொடர்ந்து அக்கட்சித் தலைவர்கள் இன்று சென்னையில் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியை சந்தித்து தங்களது வேட்பாளர் மாற்றம் குறித்து தெரியப்படுத்தினர்.அதனை கருணாநிதியும் ஏற்றுக்கொண்டார்.

சென்னை: வேலூர் தொகுதி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளராக அறிவிக்ப்பட்ட காதர் மொய்தீன் விலகி விட்டதால் அவருக்குப் பதில் அப்துல் ரஹ்மான் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள முஸ்லீம் லீக் வேலூர் தொகுதியில் போட்டியிடுகிறது. அத்தொகுதியின் தற்போதைய எம்.பியான காதர் மொய்தீனே மீண்டும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் கடந்த முறையைப் போல இம்முறை உதயசூரியன் சின்னத்தில் நிற்காமல், முஸ்லீம் லீக்கின் ஏணி சின்னத்தில் போட்டியிடப் போவதாக மொய்தீன் அறிவித்தார்.
ஆனால் இதை திமுக ஏற்கவில்லை என்று தெரிகிறது. உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என காதர் மொய்தீனை திமுக தலைவர்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால் இதை ஏற்காத காதர் மொய்தீன் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்தார். இதையடுத்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் பொதுக்குழு கூட்டப்பட்டது.
இக்கூட்டத்தில் காதர் மொய்தீனுக்குப் பதில் அப்துல் ரஹ்மானை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. தற்போது அப்துல் ரஹ்மான் வேலூர் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்துல் ரஹ்மான் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவார் எனத் தெரிகிறது

Monday, April 06, 2009

"ஏணி' சின்னத்தில் போட்டியிடுகிறேன்

http://www.dinamalar.com/Arasiyalnewsdetail.asp?news_id=8915

செயற்குழு கூட்டத்திற்குப் பின், காதர் மொய்தீன் எம்.பி., நிருபர்களிடம் கூறியதாவது: கட்சியின் முடிவுப்படி வேலூர் தொகுதியில் நான் மீண்டும் போட்டியிடுகிறேன். கடந்த முறை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டேன். இதை முஸ்லிம் சமூகத்தில் பல்வேறு இயக்கங்கள், கட்சியை தி.மு.க.,வில் அடகு வைத்து விட்டதாக பிரசாரத்தில் ஈடுபட்டன. இந்த பிரசாரத்தை முறியடிக்கும் வகையில், இந்த முறை "ஏணி' சின்னத்தில் போட்டியிடுகிறேன்

கடந்த முறை காதர் மைதீன் அடகு வைத்தார். இந்த முறை அடகு வைப்பது யார் யுனானி டாக்டர் ஹக்கீம் சையத் சத்தாரா அப்துல் ரஹ்மானா என்பது பற்றி கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் முடிவு செய்யும். மொத்தத்தில் மு.லீக் தி.மு.க.வின் ஒரு பிரிவுதான்


சென்னை: வேலூர் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் போட்டியிடும் காதர் மொய்தீனை உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என திமுக வலியுறுத்தியதால், அவர் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளார். இதையடுத்து வேறு வேட்பாளர் இன்று மாலை அறிவிக்கப்படவுள்ளார்.

காதர் மொய்தீன் கடந்த 2004ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் இதே வேலூர் தொகுதியில்தான் போட்டியிட்டார். அப்போதும் திமுக கூட்டணியில்தான் அவர் இருந்தார்.. அம்முறை அவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார்.

ஆனால் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவராக இருந்து கொண்டு, திமுகவின் சின்னத்தில் போட்டியிட்டதால் அவரது பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் இந்த வழக்கில் காதர் மொய்தீனுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்தது.

இந் நிலையில் இதுபோன்ற சர்ச்சை ஏற்படாமல் இருக்க வரும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்குப் பதில், முஸ்லீம் லீக்கின் ஏணி சின்னத்தில் போட்டியிடுவேன் என காதர் மொய்தீன் கூறியிருந்தார்.

ஆனால் திமுக தரப்பிலோ, ஏணி சின்னத்தில் நின்றால் சுயேச்சை வேட்பாளர் என மக்கள் கருதுவார்கள். சின்னத்தை பிரபலப்படுத்துவது சிரமம். எனவே உதயசூரியன் சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிகிறது.

இதுதவிர தமிழகம் முழுவதும் சென்று இஸ்லாமியர்களின் வாக்குகளை திரட்ட பிரசாரம் செய்ய வேண்டும் எனவும் அவருக்கு திமுக தரப்பு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவுக்கு காதர் மொய்தீன் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இன்று மாலை கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் மண்ணடியில் நடக்கிறது. அப்போது யுனானி டாக்டர் ஹக்கீம் சையத் சத்தார் அல்லது துபாய் பிரிவு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பிரிவு தலைவர் அப்துல் ரஹ்மான் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராகலாம் எனத் தெரிகிறது.