Sunday, June 22, 2008
நெல்லை த.மு.மு.க வின் கல்வி உதவி.
ஏழை, எளிய மாணவ, மாணவியருக்கு நெல்லை நகர த.மு.மு.க.சார்பாக நோட்டு புத்தகங்கள் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி. டவுண் முகம்மது அலி தெருவில் நகரத் தலைவர் ஆ.ளு.காதர் தலைமையில் நடைபெற்றது. அனைத்து சமுதாய மாணவ, மாணவியர் அதிக அளவில் பயன்பெற்றனர்.அதனைத் தொடர்ந்து பொதுக் கூட்டமும் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் பாளை ரபீக், மாவட்ட செயலாளர் ஐ.உஸ்மான் கான், துணைத் தலைவர் மைதீன் பாருக், துணைச் செயலாளர் அன்சர் ஆகியோர் உரையாற்றினர்.
Saturday, June 14, 2008
குவைத்தில் தத்தளிக்கும் 9 தமிழர்கள் - மீட்கப்போராடும் த.மு.மு.க.
நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்.
Source: http://tmmkgulf.blogspot.com/2008/06/9.html
பிழைப்புத் தேடி குவைத்திற்குச் சென்ற தமிழர்கள் ஒன்பது பேர் முதலாளியின் சித்திரவதைகளைப் பொறுக்க முடியாமல் அவரிடமிருந்து எப்படியோ ரகசியமாகத் தப்பியிருக்கிறார்கள். கடந்த ஒரு வார காலமாய் சோறு தண்ணியின்றி நடு ரோட்டில் அலையும் அவர்களை இந்தியத் தூதரகமும் அலட்சியப்படுத்தி விடவே, நாடு திரும்ப வழியின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட த.மு.மு.க.வினர் அவர்களை மீட்டுக் கொண்டு வரும் பணியில் இறங்கியிருப்பது ஆறுதலான விஷயம்.
கடலூர்மாவட்டம் சாத்தப்பாடியைச்சேர்ந்த ரவிச்சந்திரன்,உதயகுமார், முருகன்,கருணாகரன், அப்துல்கனி மற்றும் திருவாரூர் மாவட்டம் மாங்குடியைச் சேர்ந்த மணிவண்ண பாண்டியன்,ராஜாராமன், முருகானந்தம்,இளையராஜா ஆகியோர்தான் குவைத்தில் தவித்துக்கொண்டிருக்கும் அந்த அப்பாவி ஜீவன்கள்.

நெல்லைப் பக்கம் தாழையூத்தைச் சேர்ந்தவர் பீர் மரைக்காயர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகச் செயலாளராய் இருந்து பலவிதமான பொதுநலப் போராட்டங்களில் ஈடுபட்டவர். இவர் பிழைப்பிற்காக குவைத் சென்றார். அங்கு பஸ் டிரைவராய் இருக்கிறார். அவர் கடந்த 6-ம் தேதி நமது அலுவலகத்திற்கு போன் செய்து... `சார்... பிழைப்புத் தேடி குவைத்திற்கு வந்த ஒன்பது தமிழர்களை அவர்களின் முதலாளி தொடர்ந்து சித்திரவதை செய்ததால் ஒருகட்டத்தில் பொறுக்க முடியாமல் அங்கிருந்து தப்பி வந்து ஒரு வார காலமாய் பசி பட்டினியால் தவித்தனர். அவர்களை நான்தான் மீட்டு என்னுடன் தங்க வைத்திருக்கிறேன். இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் என் அறையிலிருந்தால் எனக்குப் பிரச்னையாகி விடும். எனவே, அவர்கள் தாய் நாட்டிற்குத் திரும்ப உதவி செய்யுங்கள்' என்றவர், ஒன்பது பேரும் சேர்ந்து எழுதிய கடிதத்தையும் நமக்கு இ-மெயில் செய்தார். அந்தக் கடிதத்தில் ஒன்பது பேரும் தங்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை விலா வாரியாய் எழுதியிருந்தார்கள்.
சற்று நேரத்தில் குவைத்திலிருந்தே மணிவண்ண பாண்டியன் என்பவர் நம்மைத் தொடர்பு கொண்டு பேசினார். ``சார் நானும் எனது நண்பர்கள் ராஜாராமன், முருகானந்தம், இளையராஜா ஆகியோரும் வேலை தேடிக்கிட்டிருந்தோம். அப்ப எங்க ஊரைச் சேர்ந்த புரோக்கர் முருகன் என்பவர்தான் `குவைத்தில் டிரைவர் வேலை இருக்கு, மாசம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம், தங்குமிடம், சாப்பாடு இலவசம்'னு ஆசை காட்டினாரு. உடனே நாங்களும் வீட்டிலிருந்த நகைகளையெல்லாம் அடகு வைச்சி, 90 ஆயிரம் ரூபாய் வரை செலவு செஞ்சி கடந்த 2005-ம் ஆண்டு குவைத்திற்கு வந்தோம். இங்குள்ள அல்ஹசீரா கார் ரென்டிங் எஸ்டேட் என்கிற கம்பெனியில் டிரைவர் வேலை கிடைச்சது. இந்த கம்பெனியில் இருபதுக்கும் மேற்பட்ட பஸ்கள் இருக்கு. அவங்களுக்குச் சொந்தமான பல கம்பெனிகளின் ஊழியர்களை அழைத்துக் கொண்டு அந்தந்த கம்பெனியில் கொண்டு போய் விடுவதே எங்கள் வேலை.
மாசம் பதினஞ்சாயிரம் சம்பளம்னு சொன்னதாலே உற்சாகமாய் வேலை செஞ்சோம். எல்லாம் கொஞ்ச நாள்தான். முதல் மாசம் சம்பளம் தரலே. இரண்டாம் மாசமும் தரலே. கேட்டா லைசன்ஸ், அடையாள அட்டை எடுக்க சம்பளம் சரியாப் போச்சுன்னுட்டாங்க. எங்களுக்கெல்லாம் பயங்கர அதிர்ச்சி. ஆனா ஒண்ணும் பேச முடியாது. தலைவிதியை நொந்தபடி வேலை செஞ்சோம். அப்புறமும் இரண்டு மாச சம்பளம் தரலே. அதைக் கேட்டா அது டெபாசிட்டிலே இருக்கும்னுட்டாங்க. எங்களுக்கு ஒண்ணும் புரியலே. ஆனா நாட்கள் செல்லச் செல்லத்தான் புரிஞ்சிது. அதாவது, நாங்க ஓட்டுற பஸ் 1980-ம் ஆண்டு மாடல். ரொம்பப் பழசு. சரியா பிரேக் கூட பிடிக்காது.ஏதாவது சின்ன சுவரில் மோதித்தான் வண்டியை நிறுத்தணும்.அப்படி மோதும்போது வண்டியில் ஏதாவது சேதம் ஏற்பட்டாலோ, பஞ்சரானாலோ டெபாசிட் பணத்துலே கழிச்சிருவாங்க.
எங்களுக்கு 21 மணி நேர வேலை, மூன்று மணி நேரம்தான் தூக்கம். காலையிலே 4 மணியிலே இருந்து மாலை 6 மணி வரை டிரைவர் வேலை பார்க்கணும். ஆறு மணிக்கு மேலே முதலாளி பாலைவனத்துலே கட்டுற கெஸ்ட் ஹவுசில் சித்தாள் வேலை செய்யணும். இரவு 12 மணிக்கு சித்தாள் வேலையை முடிச்சிட்டு ரூமுக்கு வர நள்ளிரவு ஒரு மணி ஆயிடும். அப்புறம் கொஞ்ச நேரம் தூங்கிட்டு மறுபடியும் அதிகாலை நாலு மணிக்கு எழுந்து வேலைக்குப் போகணும். அதனாலே படுத்தா தூக்கம் வராது. தூக்கமில்லாததாலே உடம்பே மெலிஞ்சி போயிட்டுது. எங்களிடம் முதலில் மாசம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்றார்கள். ஆனால் வேலைக்குச் சேர்ந்த பிறகு, 8500 ரூபாய்தான் சம்பளம். அதிலும் சாப்பாடு மற்றும் தங்குமிடத்திற்காக நாலாயிரம் ரூபாய் பிடிச்சுக்குவாங்க. கேள்வி கேட்க முடியாது.பேசாம நம்மூரிலேயே நிம்மதியா இருந்திருக்கலாம் போலிருக்கு'' என்றவரின் குரல் கம்மியது.
அவரைத் தொடர்ந்து ரவிச்சந்திரன் என்பவர் நம்மிடம் பேசினார். ``எனது சொந்த ஊர் கடலூர் மாவட்டம் சாத்தப்பாடி. நானும் எனது நண்பர்கள் உதயகுமார், முருகன், கருணாகரன், அப்துல் கனி ஆகியோரும் புரோக்கர் ஆறுமுகம் என்பவர் மூலம் குவைத் வந்தோம். ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவைதான் சம்பளம் குடுப்பாங்க. சில சமயம் அதுவும் லேட்டாகும். ஏன்னு கேட்டாப் போதும், எங்க முதலாளிக்குக் கோபம் வந்திடும். கம்பியால் அடிஅடியென அடிப்பான். பூட்ஸ் காலால் மிதிப்பான். பஸ் ரிப்பேராகி நின்னு போனாப் போதும், உடனே கூப்பிட்டு கம்பியால் அடிப்பான். கக்கூஸ் கழுவச் சொல்லுவான். எங்களாலே எதிர்த்து எதுவும் செய்யமுடியாது.அடிச்சதில் உடம்பு பூரா காயமிருந்தாலும் லீவு தரமாட்டான்.வலியைப் பொறுத்துக்கிட்டு வண்டி ஓட்டியே ஆகணும். இதனாலே சில சமயம் தற்கொலை செஞ்சுக்கலாம்னு தோணும். ஆனா வீட்டை நினைச்சிப் பார்த்து எல்லாத்தையும் மறந்துடுவோம். அந்தக் கொடூரத்துக்கு இன்னொரு உதாரணமும் சொல்றேன். போன வருஷம் என்னோட அப்பா ராமலிங்கம் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது இறுதிக் காரியம் செய்யிறதுக்காக ஊருக்கு வர 15 நாட்கள் லீவு கேட்டேன்.`நீ போனவுடனே உங்கப்பா என்ன உயிரோடவா வந்திடப்போறாரு?'ன்னு ஏளனம் செஞ்சி லீவு தர மறுத்துட்டான். என்னோட தங்கை அமுதவல்லியின். திருமணத்துக்குக் கூட என்னால் வர முடியலே!'' என்றார் விரக்தியுடன்.
தொடர்ந்து விழுந்த அடி, உதையின் காரணமாக இந்த ஒன்பது பேரும் கூடிப்பேசி இந்த கம்பெனியை விட்டு எஸ்கேப்பாக முடிவு செய்திருக்கிறார்கள். அதன்படி கடந்த வாரம் பஸ்சை ஆங்காங்கே நிறுத்தி விட்டு ஓரிடத்தில் கூடி அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஆலோசித்திருக்கிறார்கள். அதன் பின்னர் குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் போய் புகார் செய்து தங்களை தாய் நாட்டுக்கே திரும்ப அனுப்பும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அங்கோ, மனுவை மட்டும் வாங்கிக்கொண்டு விரட்டிவிட்டார்களாம். சரியான ரெஸ்பான்ஸ் இல்லாததால் என்ன செய்வது என்று தெரியாமலும் கையில் காசில்லாததால் பசி மயக்கத்திலும் கால் போன போக்கில் சுற்றியிருக்கிறார்கள்.
ஒரு வார கால பட்டினிப் போராட்டத்திற்குப் பின்னர், ஒருவழியாய் குவைத்தில் டிரைவராய் இருக்கும் பீர் மரைக்காயரைச் சந்தித்திருக்கிறார்கள். அதைப்பற்றி நம்மிடம் போனிலேயே விளக்கினார் பீர் மரைக்காயர். ``நான் குவைத் முழுக்க வண்டி ஓட்டுபவன். பஸ்சிலே தமிழர்களும் ஏறுவாங்க. ஒருநாள் என்னோட சக டிரைவர் நண்பர் இந்த ஒன்பது பேர் படும் பாட்டைச் சொல்லி, `நீங்கள்லாம் ஊருலே பெரிய பொதுநலவாதினு பீத்திக்குறீங்க. இங்கே தமிழர்கள் ஒன்பது பேர் சித்திரவதையால் பாதிக்கப்பட்டு சாப்பாட்டுக்கே அல்லல்பட்டுக்கிட்டிருக்காங்க. நீங்க முஸ்லிம். இந்துக்களுக்கெல்லாம் எங்கே உதவப்போறீங்க?'ன்னார்.
உடனே நான் `இந்து - முஸ்லிம்னு பிரிச்சுப் பார்க்காதீங்க. நாம எல்லோருமே இந்தியர்கள்தான்'னு சொல்லி அந்த ஒன்பது பேரையும் எனது ரூமுக்கே அழைத்து வரச்சொன்னேன். இப்ப அவங்களை என்னோட ரூமில்தான் தங்க வைச்சிருக்கேன். ஆனா, அவங்களை ஒரு வாரத்துக்கு மேல் என்னுடன் தங்க வைக்க குவைத் சட்டம் இடம் தராது. என்னையும் சேர்த்து குற்றவாளியாக்கிருவாங்க. இந்தியத் தூதரகத்துலே இவங்க புகார் குடுத்ததாலே,அதிகாரிங்க அந்த பஸ் கம்பெனி முதலாளியை விசாரிப்பாங்க. அவனோ, அந்த ஒன்பது பேரும் பஸ்சை திருடிட்டு வந்துட்டாங்கன்னு பொய்யா புகார் குடுத்துட்டான்னா, அவ்வளவுதான். கேஸ் முடியிறவரை ஒண்ணுமே செய்ய முடியாது. எனவே, தமிழக அரசு மூலம் கோரிக்கை வந்தாத்தான் இவங்க பத்திரமா திரும்ப முடியும்'' என்றார்.
தற்போது இந்த இளைஞர்களை பத்திரமாய் மீட்கும் பணியை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஏற்றிருக்கிறது. அதன் நெல்லை மாநகரச் செயலாளர் உஸ்மான்கானிடம் பேசினோம்.குவைத்தில் தவிக்கும் இளைஞர்களின் மனு எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. இதைக் கொண்டு கடலூர்,திருவாரூர் மாவட்ட கலெக்டர்களைச் சந்திக்க முடிவு செய்திருக்கிறோம். அந்த இளைஞர்கள் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அவலம் பற்றி இதுவரை தங்கள் வீடுகளுக்குச் சொல்லவில்லை. சொன்னால் அவர்கள் ரொம்ப வருத்தப்படுவார்களே என்கிற பயம்தான் காரணம். ஆனால், இளைஞர்களின் ரத்த சம்பந்த உறவினர்கள்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரிடம் புகார் செய்யணும். அதுபற்றியும் யோசித்துக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு மாலைராஜா எம்.எல்.ஏ. வரச்சொல்லியிருக்கிறார். தவிர, வைகோவிடமும் சொல்லப்போகிறோம். கண்டிப்பாக அந்த இளைஞர்கள் பத்திரமாக நாடு திரும்புவதற்கு த.மு.மு.க. துணை நிற்கும்!'' என்றார் உறுதியுடன்.ஆக,இந்து இளைஞர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களை பத்திரமாய் நாடு திரும்ப முயற்சிகளை எடுக்கும் முஸ்லிம் அமைப்பின் மனித நேயம் பாராட்டத்தக்கது. நமது தேசத்தின் ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு!
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்.
Source: http://tmmkgulf.blogspot.com/2008/06/9.html
பிழைப்புத் தேடி குவைத்திற்குச் சென்ற தமிழர்கள் ஒன்பது பேர் முதலாளியின் சித்திரவதைகளைப் பொறுக்க முடியாமல் அவரிடமிருந்து எப்படியோ ரகசியமாகத் தப்பியிருக்கிறார்கள். கடந்த ஒரு வார காலமாய் சோறு தண்ணியின்றி நடு ரோட்டில் அலையும் அவர்களை இந்தியத் தூதரகமும் அலட்சியப்படுத்தி விடவே, நாடு திரும்ப வழியின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட த.மு.மு.க.வினர் அவர்களை மீட்டுக் கொண்டு வரும் பணியில் இறங்கியிருப்பது ஆறுதலான விஷயம்.
கடலூர்மாவட்டம் சாத்தப்பாடியைச்சேர்ந்த ரவிச்சந்திரன்,உதயகுமார், முருகன்,கருணாகரன், அப்துல்கனி மற்றும் திருவாரூர் மாவட்டம் மாங்குடியைச் சேர்ந்த மணிவண்ண பாண்டியன்,ராஜாராமன், முருகானந்தம்,இளையராஜா ஆகியோர்தான் குவைத்தில் தவித்துக்கொண்டிருக்கும் அந்த அப்பாவி ஜீவன்கள்.

நெல்லைப் பக்கம் தாழையூத்தைச் சேர்ந்தவர் பீர் மரைக்காயர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகச் செயலாளராய் இருந்து பலவிதமான பொதுநலப் போராட்டங்களில் ஈடுபட்டவர். இவர் பிழைப்பிற்காக குவைத் சென்றார். அங்கு பஸ் டிரைவராய் இருக்கிறார். அவர் கடந்த 6-ம் தேதி நமது அலுவலகத்திற்கு போன் செய்து... `சார்... பிழைப்புத் தேடி குவைத்திற்கு வந்த ஒன்பது தமிழர்களை அவர்களின் முதலாளி தொடர்ந்து சித்திரவதை செய்ததால் ஒருகட்டத்தில் பொறுக்க முடியாமல் அங்கிருந்து தப்பி வந்து ஒரு வார காலமாய் பசி பட்டினியால் தவித்தனர். அவர்களை நான்தான் மீட்டு என்னுடன் தங்க வைத்திருக்கிறேன். இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் என் அறையிலிருந்தால் எனக்குப் பிரச்னையாகி விடும். எனவே, அவர்கள் தாய் நாட்டிற்குத் திரும்ப உதவி செய்யுங்கள்' என்றவர், ஒன்பது பேரும் சேர்ந்து எழுதிய கடிதத்தையும் நமக்கு இ-மெயில் செய்தார். அந்தக் கடிதத்தில் ஒன்பது பேரும் தங்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை விலா வாரியாய் எழுதியிருந்தார்கள்.
சற்று நேரத்தில் குவைத்திலிருந்தே மணிவண்ண பாண்டியன் என்பவர் நம்மைத் தொடர்பு கொண்டு பேசினார். ``சார் நானும் எனது நண்பர்கள் ராஜாராமன், முருகானந்தம், இளையராஜா ஆகியோரும் வேலை தேடிக்கிட்டிருந்தோம். அப்ப எங்க ஊரைச் சேர்ந்த புரோக்கர் முருகன் என்பவர்தான் `குவைத்தில் டிரைவர் வேலை இருக்கு, மாசம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம், தங்குமிடம், சாப்பாடு இலவசம்'னு ஆசை காட்டினாரு. உடனே நாங்களும் வீட்டிலிருந்த நகைகளையெல்லாம் அடகு வைச்சி, 90 ஆயிரம் ரூபாய் வரை செலவு செஞ்சி கடந்த 2005-ம் ஆண்டு குவைத்திற்கு வந்தோம். இங்குள்ள அல்ஹசீரா கார் ரென்டிங் எஸ்டேட் என்கிற கம்பெனியில் டிரைவர் வேலை கிடைச்சது. இந்த கம்பெனியில் இருபதுக்கும் மேற்பட்ட பஸ்கள் இருக்கு. அவங்களுக்குச் சொந்தமான பல கம்பெனிகளின் ஊழியர்களை அழைத்துக் கொண்டு அந்தந்த கம்பெனியில் கொண்டு போய் விடுவதே எங்கள் வேலை.
மாசம் பதினஞ்சாயிரம் சம்பளம்னு சொன்னதாலே உற்சாகமாய் வேலை செஞ்சோம். எல்லாம் கொஞ்ச நாள்தான். முதல் மாசம் சம்பளம் தரலே. இரண்டாம் மாசமும் தரலே. கேட்டா லைசன்ஸ், அடையாள அட்டை எடுக்க சம்பளம் சரியாப் போச்சுன்னுட்டாங்க. எங்களுக்கெல்லாம் பயங்கர அதிர்ச்சி. ஆனா ஒண்ணும் பேச முடியாது. தலைவிதியை நொந்தபடி வேலை செஞ்சோம். அப்புறமும் இரண்டு மாச சம்பளம் தரலே. அதைக் கேட்டா அது டெபாசிட்டிலே இருக்கும்னுட்டாங்க. எங்களுக்கு ஒண்ணும் புரியலே. ஆனா நாட்கள் செல்லச் செல்லத்தான் புரிஞ்சிது. அதாவது, நாங்க ஓட்டுற பஸ் 1980-ம் ஆண்டு மாடல். ரொம்பப் பழசு. சரியா பிரேக் கூட பிடிக்காது.ஏதாவது சின்ன சுவரில் மோதித்தான் வண்டியை நிறுத்தணும்.அப்படி மோதும்போது வண்டியில் ஏதாவது சேதம் ஏற்பட்டாலோ, பஞ்சரானாலோ டெபாசிட் பணத்துலே கழிச்சிருவாங்க.
எங்களுக்கு 21 மணி நேர வேலை, மூன்று மணி நேரம்தான் தூக்கம். காலையிலே 4 மணியிலே இருந்து மாலை 6 மணி வரை டிரைவர் வேலை பார்க்கணும். ஆறு மணிக்கு மேலே முதலாளி பாலைவனத்துலே கட்டுற கெஸ்ட் ஹவுசில் சித்தாள் வேலை செய்யணும். இரவு 12 மணிக்கு சித்தாள் வேலையை முடிச்சிட்டு ரூமுக்கு வர நள்ளிரவு ஒரு மணி ஆயிடும். அப்புறம் கொஞ்ச நேரம் தூங்கிட்டு மறுபடியும் அதிகாலை நாலு மணிக்கு எழுந்து வேலைக்குப் போகணும். அதனாலே படுத்தா தூக்கம் வராது. தூக்கமில்லாததாலே உடம்பே மெலிஞ்சி போயிட்டுது. எங்களிடம் முதலில் மாசம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்றார்கள். ஆனால் வேலைக்குச் சேர்ந்த பிறகு, 8500 ரூபாய்தான் சம்பளம். அதிலும் சாப்பாடு மற்றும் தங்குமிடத்திற்காக நாலாயிரம் ரூபாய் பிடிச்சுக்குவாங்க. கேள்வி கேட்க முடியாது.பேசாம நம்மூரிலேயே நிம்மதியா இருந்திருக்கலாம் போலிருக்கு'' என்றவரின் குரல் கம்மியது.அவரைத் தொடர்ந்து ரவிச்சந்திரன் என்பவர் நம்மிடம் பேசினார். ``எனது சொந்த ஊர் கடலூர் மாவட்டம் சாத்தப்பாடி. நானும் எனது நண்பர்கள் உதயகுமார், முருகன், கருணாகரன், அப்துல் கனி ஆகியோரும் புரோக்கர் ஆறுமுகம் என்பவர் மூலம் குவைத் வந்தோம். ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவைதான் சம்பளம் குடுப்பாங்க. சில சமயம் அதுவும் லேட்டாகும். ஏன்னு கேட்டாப் போதும், எங்க முதலாளிக்குக் கோபம் வந்திடும். கம்பியால் அடிஅடியென அடிப்பான். பூட்ஸ் காலால் மிதிப்பான். பஸ் ரிப்பேராகி நின்னு போனாப் போதும், உடனே கூப்பிட்டு கம்பியால் அடிப்பான். கக்கூஸ் கழுவச் சொல்லுவான். எங்களாலே எதிர்த்து எதுவும் செய்யமுடியாது.அடிச்சதில் உடம்பு பூரா காயமிருந்தாலும் லீவு தரமாட்டான்.வலியைப் பொறுத்துக்கிட்டு வண்டி ஓட்டியே ஆகணும். இதனாலே சில சமயம் தற்கொலை செஞ்சுக்கலாம்னு தோணும். ஆனா வீட்டை நினைச்சிப் பார்த்து எல்லாத்தையும் மறந்துடுவோம். அந்தக் கொடூரத்துக்கு இன்னொரு உதாரணமும் சொல்றேன். போன வருஷம் என்னோட அப்பா ராமலிங்கம் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது இறுதிக் காரியம் செய்யிறதுக்காக ஊருக்கு வர 15 நாட்கள் லீவு கேட்டேன்.`நீ போனவுடனே உங்கப்பா என்ன உயிரோடவா வந்திடப்போறாரு?'ன்னு ஏளனம் செஞ்சி லீவு தர மறுத்துட்டான். என்னோட தங்கை அமுதவல்லியின். திருமணத்துக்குக் கூட என்னால் வர முடியலே!'' என்றார் விரக்தியுடன்.
தொடர்ந்து விழுந்த அடி, உதையின் காரணமாக இந்த ஒன்பது பேரும் கூடிப்பேசி இந்த கம்பெனியை விட்டு எஸ்கேப்பாக முடிவு செய்திருக்கிறார்கள். அதன்படி கடந்த வாரம் பஸ்சை ஆங்காங்கே நிறுத்தி விட்டு ஓரிடத்தில் கூடி அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஆலோசித்திருக்கிறார்கள். அதன் பின்னர் குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் போய் புகார் செய்து தங்களை தாய் நாட்டுக்கே திரும்ப அனுப்பும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அங்கோ, மனுவை மட்டும் வாங்கிக்கொண்டு விரட்டிவிட்டார்களாம். சரியான ரெஸ்பான்ஸ் இல்லாததால் என்ன செய்வது என்று தெரியாமலும் கையில் காசில்லாததால் பசி மயக்கத்திலும் கால் போன போக்கில் சுற்றியிருக்கிறார்கள்.
ஒரு வார கால பட்டினிப் போராட்டத்திற்குப் பின்னர், ஒருவழியாய் குவைத்தில் டிரைவராய் இருக்கும் பீர் மரைக்காயரைச் சந்தித்திருக்கிறார்கள். அதைப்பற்றி நம்மிடம் போனிலேயே விளக்கினார் பீர் மரைக்காயர். ``நான் குவைத் முழுக்க வண்டி ஓட்டுபவன். பஸ்சிலே தமிழர்களும் ஏறுவாங்க. ஒருநாள் என்னோட சக டிரைவர் நண்பர் இந்த ஒன்பது பேர் படும் பாட்டைச் சொல்லி, `நீங்கள்லாம் ஊருலே பெரிய பொதுநலவாதினு பீத்திக்குறீங்க. இங்கே தமிழர்கள் ஒன்பது பேர் சித்திரவதையால் பாதிக்கப்பட்டு சாப்பாட்டுக்கே அல்லல்பட்டுக்கிட்டிருக்காங்க. நீங்க முஸ்லிம். இந்துக்களுக்கெல்லாம் எங்கே உதவப்போறீங்க?'ன்னார்.
உடனே நான் `இந்து - முஸ்லிம்னு பிரிச்சுப் பார்க்காதீங்க. நாம எல்லோருமே இந்தியர்கள்தான்'னு சொல்லி அந்த ஒன்பது பேரையும் எனது ரூமுக்கே அழைத்து வரச்சொன்னேன். இப்ப அவங்களை என்னோட ரூமில்தான் தங்க வைச்சிருக்கேன். ஆனா, அவங்களை ஒரு வாரத்துக்கு மேல் என்னுடன் தங்க வைக்க குவைத் சட்டம் இடம் தராது. என்னையும் சேர்த்து குற்றவாளியாக்கிருவாங்க. இந்தியத் தூதரகத்துலே இவங்க புகார் குடுத்ததாலே,அதிகாரிங்க அந்த பஸ் கம்பெனி முதலாளியை விசாரிப்பாங்க. அவனோ, அந்த ஒன்பது பேரும் பஸ்சை திருடிட்டு வந்துட்டாங்கன்னு பொய்யா புகார் குடுத்துட்டான்னா, அவ்வளவுதான். கேஸ் முடியிறவரை ஒண்ணுமே செய்ய முடியாது. எனவே, தமிழக அரசு மூலம் கோரிக்கை வந்தாத்தான் இவங்க பத்திரமா திரும்ப முடியும்'' என்றார்.
தற்போது இந்த இளைஞர்களை பத்திரமாய் மீட்கும் பணியை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஏற்றிருக்கிறது. அதன் நெல்லை மாநகரச் செயலாளர் உஸ்மான்கானிடம் பேசினோம்.குவைத்தில் தவிக்கும் இளைஞர்களின் மனு எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. இதைக் கொண்டு கடலூர்,திருவாரூர் மாவட்ட கலெக்டர்களைச் சந்திக்க முடிவு செய்திருக்கிறோம். அந்த இளைஞர்கள் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அவலம் பற்றி இதுவரை தங்கள் வீடுகளுக்குச் சொல்லவில்லை. சொன்னால் அவர்கள் ரொம்ப வருத்தப்படுவார்களே என்கிற பயம்தான் காரணம். ஆனால், இளைஞர்களின் ரத்த சம்பந்த உறவினர்கள்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரிடம் புகார் செய்யணும். அதுபற்றியும் யோசித்துக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு மாலைராஜா எம்.எல்.ஏ. வரச்சொல்லியிருக்கிறார். தவிர, வைகோவிடமும் சொல்லப்போகிறோம். கண்டிப்பாக அந்த இளைஞர்கள் பத்திரமாக நாடு திரும்புவதற்கு த.மு.மு.க. துணை நிற்கும்!'' என்றார் உறுதியுடன்.ஆக,இந்து இளைஞர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களை பத்திரமாய் நாடு திரும்ப முயற்சிகளை எடுக்கும் முஸ்லிம் அமைப்பின் மனித நேயம் பாராட்டத்தக்கது. நமது தேசத்தின் ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு!
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்.
Thursday, June 12, 2008
Wednesday, June 11, 2008
சகீனா
Monday, June 02, 2008
பி.ஜெ.யால் கைவிடப்பட்ட முஸ்தபா ரசாதி உடலின் கதியைப் பாரீர்.
பி.ஜெ.யின் தூண்டுதலால் தீவிரவாதத்தில் ஈடுபட்ட முஸ்தபா ரசாதி உடலின் கதியைப் பாரீர்.

த.த.ஜ. தலைவர் பி.ஜெ.யால் கைவிடப்பட்ட முஸ்தபா ரசாதி ஜனாஸா.
தீவிரவாதத்தை தூண்டி குளிர் காய்ந்த மறுமைக்கஞ்சா மாவீரர் த.த.ஜ. தலைவர் பி.ஜெ.யால் கைவிடப்பட்ட முஸ்தபா ரசாதி உடல் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
http://mdfazlulilahi.blogspot.com/2008/05/blog-post_28.html

Sunday, June 01, 2008
ஜூம்ஆ தொழுகையின் சிறப்புகளும் அந்த நாளில் செய்ய வேண்டிய அமல்களும்
அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால் ...
ஜூம்ஆ தொழுகையின் சிறப்புகளும் அந்த நாளில் செய்ய வேண்டிய அமல்களும்
ஜூம்ஆ நாளின் சிறப்புக்களையும், அந்த நாளில் செய்ய வேண்டிய அமல்கள், சிறப்புகள் மற்றும் அதை விடுவதால் ஏற்படும் விளைவுகள் ஆகியவற்றை இந்த கட்டுரையில் காண்போம்.
இன்று உலகில் ஒருவரிடம் ஒட்டகம், மாடு,ஆடு, கோழி,முட்டை ஆகியவற்றைக் கொடுத்து, இதில் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால் அவர் எதை தேர்வு செய்வார்? ஒட்டகத்தைத் தான் தேர்வு செய்வார்.ஏனெனில் அது தான் இருப்பதிலேயே அதிக விலை மதிப்பு கொண்டது. இது உலக விவகாரத்தில் ! ஆனால் மறுமை விஷயத்திலோ அவர் இவ்வாறு தேர்வு செய்வதில்லை.
'ஓருவர் ஜூம்ஆ நாளில் கடமையான குளிப்பைப் போன்று குளித்து விட்டுப் பள்ளிக்கு வந்தால் ஒரு ஒட்டகத்தை அல்லாஹ்வின் பாதையில் குர்பானி கொடுத்தவர் போலாவார். இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடையஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். இமாம் பள்ளிக்கு வந்து விட்டால் வானவர்கள் ஆஜராகிப் போதனையைக் கேட்கின்றார் கள்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:அபூஹீரைரா(ரலி) நூல்: புகாரி 881
இந்த ஹதீஸைத் தெரிந்த பிறகும் நாம் ஒட்டகத்தைத் தேர்வு செய்யாமல் தாமதமாகலாமா?
பரிசு தருவதற்காக பதிய வரும் மலக்குகள்:
'ஜூம்ஆ நாள் வந்ததும் பள்ளியின் பாகங்களில் உள்ள ஒவ்வொரு வாசலிலும் மலக்குகள் நிற்கின்றனர் .முதன் முதலில் வருபவரை-அடுத்து வருபவரைப் பதிவு செய்கின்றனர் . இமாம்(மிம்பரில் )உட்கார்ந் ததும் தங்;கள் ஏடுகளைச் சுருட்டிக் கொண்டு உரையைக் கேட்க வந்து விடுகின்றனர்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹீரைரா( ரலி),நூல் : முஸ்லிம் 1416
நம்முடைய பெயர்கள் வெள்ளியன்று பள்ளிக்கு வரும் மலக்குகளின் பதிவேட்டில் பதியப்பட வேண்டுமெனில் நாம் இமாம் மிம்பரில் ஏறுவதற்கு முன்பே பள்ளிக்குவந்தாக வேண்டும்.
நன்மைகளைப் பறித்து விடும் நச்சுக் கிருமிகள்:
'இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது உன் அருகிலிருப்பவரிடம், 'வாய் மூடு' என்று கூறினால் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டு விட்டாய'; என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹீரைரா( ரலி),நூல்: புகாரி 934
'யார் (தரையில் கிடக்கும்) கம்பைத் தொ(ட்டு விளையா)டுகின் றாரோ அவர் (ஜீம்ஆவை) பாழாக்கி விட்டார்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹீரைரா( ரலி),நூல் : முஸ்லிம் 1419
மூன்று பேர்கள் ஜூம்ஆவிற்கு வருகின்றார்கள் . ஒருவர் ஜூம்ஆவிற்கு வந்து (குத்பாவின் போது பேசி)வீணாக்குகின் றார். இதுவே அவரது ஜூம்ஆவில் கிடைத்த அவருடைய பங்காகும். இன்னொருவர் ஜூம்ஆவிற்கு வந்து பிரார்த்திக் கின்றார். இவர் மகத்துவமும், கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தவராவார் . அவன் நாடினால் அவருக்கு வழங்குவான். அவன் நாடினால் அவருக்க (கொடுக்காமல் ) தடுக்கின்றான் . மூன்றாமவர் ஜூம்ஆவிற்கு வந்து மவுனத்துடன் வாய் பொத்தியுமிருந் தார். எந்த ஒரு முஸ்லிமின் பிடரியையும் தாண்டவில்லை. யாருக்கும் தொந்தரவு
கொடுக்கவில்லை. இந்த ஜீம்ஆ அதை அடுத்து வரும் ஜீம்ஆ வரையிலும் இன்னும் மூன்று நாட்கள் வரையிலும் (செய்த பாவங்களுக்கு) பரிகாரமாகும். ஏனெனில் மகத்துவமும், கண்ணியமும் பொருந்திய அல்லாஹ் 'நன்மை செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு (பரிசு) உண்டு. தீமை செய்தவர் தீமை செய்த அளவே தண்டிக்கப் படுவார்' என்று(6:160 வசனத்தில்)கூறுகின் றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ ; பின் அம்ர்(ரலி),நூல்:அபூதாவூ த் 939
இந்த மூன்று பேர் பட்டியலில் நாம் முதலாமவர் பட்டியலில் இடம் பெற்று ஜூம்ஆவின் பலனை இழந்து விடக் கூடாது.
ஜூம்ஆ தொழாதவருக்கு ஏற்படும் பாதிப்புகள்:
எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு வெள்ளிக்கிழமையைப் புனித நாளாக ஆக்கியது போன்று யூதர்களுக்கு சனிக்கிழமையைப் புனித நாளாக ஆக்கினான். அந்த நாளின் வணக்கத்தை அவர்கள் பேணாமல் வரம்பு மீறி கடலுக்குச் சென்றதால் அவர்கள் குரங்குகளாக மாற்றப்பட்டனர் . இந்த வரலாற்றை அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்.
கடல் ஓரத்தில் இருந்த ஊரைப் பற்றி அவர்களிடம் கேட்பீராக! அவர்கள் சனிக்கிழமையில் வரம்பு மீறியதை நினைவூட்டுவீராக! சனிக்கிழமையன் று மீன்கள் நீரின் மேல் மட்டத்தில் அவர்கள் முன்னே வந்தன.
சனிக்கிழமை அல்லாத நாட்களில் அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் இவ்வாறு அவர்களைச் சோதித்தோம் .
அல்லாஹ் அழிக்கப் போகிற அல்லது கடுமையாகத் தண்டிக்கப் போகிற கூட்டத்திற்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?' என்று அவர்களில் ஒரு சாரார் கூறினர். அதற்கவர்கள் ,உங்கள் இறைவனிடமிருந் து(விசாரணையின் போது தப்பிப்பதற்காகவும்,அவர்கள்(இறைவனை) அஞ்சுவோராக ஆவதற்காகவும்( அவர்களுக்கு அறிவுரை கூறுகிறோம்) எனக் கூறினர்.
கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்த போது தீமையைத் தடுத்தோரை (மட்டும்) காப்பாற்றினோம் . அநீதி இழைத்தோரை அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் கடுமையாகத் தண்டித்தோம். தடுக்கப்பட்டதை அவர்கள் மீறிய போது 'இழிந்த குரங்குகளாக ஆகி விடுங்கள்!' ,என்று அவர்களுக்குக் கூறினோம்.(அல் குர்ஆன் 7:163-166)
இந்த வரலாற்றை நாம் படிப்பினையாக எடுத்துக் கொண்டு ஜூம்ஆ தொழுகை நேரத்தின் போது தொழுகையை விட்டு விட்டு வரம்பு மீறிச் சென்று அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகி விடக் கூடாது.
இதயங்கள் இறுகி விடும்:
'ஜூம்ஆ தொழுகைகளை விடுவதை விட்டும் ஒரு கூட்டம் விலகிக் கொள்ளட்டும்! இல்லையேல் அல்லாஹ் அவர்களது உள்ளங்களில் முத்திறையிடுவான் அவர்கள் கவனமற்றவர்களாக ஆவார்கள்!' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிம்பர் படிகளில் நின்று சொன்னார்கள் .
அறிவிப்பவர்: அபூஹீரைரா( ரலி),நூல் : முஸ்லிம் 1432
'அலட்சியமாக மூன்று ஜூம்ஆக்களை யார் விட்டு விட்டாரோ அவரது உள்ளத்தில் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகின்றான்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுல் ஜஃது(ரலி),நூல்: திர்மிதி 460
இல்லங்கள் எரிக்கப்பட வேண்டும்:
'ஒரு கூட்டத்தாருக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் ஜூம்ஆவிற்கு வராமல் இருந்து விடுகின்றனர். நான் ஒருவரை மக்களுக்குத் தொழுவிக்கச் செய்யுமாறு உத்தரவிட்டு விட்டு, ஜூம்ஆவிற்கு வராமல் தங்களுடைய வீடுகளில் இருக்கும் ஆட்களை கொழுத்தி விட எண்ணி விட்டேன்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி), நூல்: முஸ்லிம் 1043
இறைத் தூதர் (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு ஜூம்மாவைத் தவற விடாமல் பேணுவோமாக!.

மொபைல் போன்கள் - சிறு கேமராக்கள் பெண்கள் எச்சரிக்கை
கையடக்க காமிராக்கள், மொபைல் வீடியோ காமிராக்கள்,
மறைமுகமாக பொருத்தி பதிவு செய்யும் மிகச் சிறிய
காமிராக்கள் என்பது இன்றை நவீன உலகில் மிகப் பிரபலமாக மிக
சாதாரணமானவர்களின் கைளில் கூட உலா வரக் கூடிய ஒன்றாக
இருக்கிறது. அறிவியல் புதிய கண்டுபிடிப்புகளை எல்லாம் நல்ல
பயன்பாடுகள் கருதி நமக்கு வழங்கினாலும் அதை எத்தனை பேர்
நன்மையாக பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி.
மொபைல் கேமிராக்கள், கையடக்க வீடியோ கேமிராக்கள் இன்றைக்கு
பெண்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப் படுகிறது
என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
குறிப்பாக தன் கணவன் மற்றும் வீட்டில் உள்ள ஆண்கள்
வெளிநாடுகளில் இருக்க தனியாக வெளியிடங்களுக்கு செல்லக்
கூடிய, தனியான தமது காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய
நிலையில் உள்ள சமுதாயப் பெண்கள் மிகவும் விழிப்புணர்வுடன்
இருக்கவே, பெண்களின் மத்தியில் இதுபற்றிய விழிப்புணர்வை
ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பொது இடங்களில் காமிராக்கள் :
பொது இடங்களில் குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரயில்
நிலையங்கள், மார்க்கெட் போன்ற பொது இடங்களில் வரும்
பெண்களை மொபைல் காமிராக்கள் மூலம் படமெடுத்து
இன்டர்நெட்டில் வைத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்
கலாச்சாரம் பெருகி வருகிறது. ஆடை விலகிய நிலையில் பல
குடும்பப் பெண்களின் படங்கள், வீடியோக்களை இன்டர்நெட்டில்
வெளியிட்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். ஹிஜாப்
அணியும் பெண்கள் இது பற்றி கவலைப்பட வேண்டாம் என்றாலும்.
பர்தா அணியாமல் வெளியே செல்லும் பெண்கள் இது பற்றிய
விழிப்புணர்வு பெற்றுக் கொண்டு தங்கள் ஆடைகள் சரியாக
இருக்கிறதா என்று கவனம் வைத்துக் கொள்வது நல்லது.
பள்ளி, கல்லூரி, விடுதிகளில் :
பள்ளி, கல்லூரி, விடுதிகளில் தங்கும் மாணவிகள் அவர்களின்
அறைகளில், மற்றும் கழிவறை, குளியலறைகளில் காமிராக்கள்
எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதில் கவனம்
செலுத்தவும். சக மாணவர்கள் தங்களை காமிராக்களால்
படமெடுத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் இன்று
சகஜமாக நடந்து வருகிறது. கவனமாக எப்பவும் விழிப்புணர்வுடன்
இருக்கவும்.
பொதுக்கழிப்பிடங்கள், குளியலறைகள், ஹோட்டல் அறைகள் :
பொதுக் கழிப்பிடங்களுக்கு செல்லும் பெண்கள், பொதுக்
குளியலறைகளை பயன்படுத்தும் பெண்கள் மற்றும்
வெளியூர்களுக்கு செல்லும்போது வேலை நிமித்தமாக அங்கு
ஹோட்டல்கள், லாட்ஜ்களில் தங்க நேரிடும்போது அங்குள்ள
அறைகளை பயன்படுத்தும் போதும், கழிப்பறை, குளியலறைகளிலும்
காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்று
நன்றாக கவனித்துப் பார்க்கவும். தங்களுக்கு தெரியாமல்
தங்களை, தங்கள் செயல்களை படமெடுக்கும் காமிராக்கள் அங்கு
பொருத்தப் பட்டிருக்கலாம் கவனம் தேவை.
மருத்துவமனைகள் (ஆஸ்பத்திரிகளில்) கவனம் தேவை :
மருத்துவமனைகளுக்கு செல்லும் பெண்கள் தனியாக
செல்லாதீர்கள். தக்க துணையுடன் செல்வது நல்லது.
மருத்துவமனைகளிலும் தங்கள் ஆடைகளை நெகிழ்த்தும் போதும்,
ஆடைகளை மருத்துவ காரணங்களுக்காக ஆடைகளை விலக்கும் போதும்
கவனமாக இருங்கள். காமிராக்கள் எதுவும் பொருத்தப்
பட்டிருக்கிறதா என்பதை கவனித்து உறுதி செய்து கொள்ளுங்கள்,
மருத்துவமனைகளில் டெஸ்ட்டுக்கு என்று எதாவது மருந்துகளை
உட்கொள்ள சொல்லும் போதும் கவனம் தேவை உடனிருப்பவர்கள்
அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.
இப்படித்தான் ஒரு மருத்துவர் தன் மருத்துவமனைக்கு கால்வலி
என்று வந்த குடும்பப் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து
தனி அறைக்கு எடுத்துப் போய் அவர்களின் கற்பையும் சூறையாடி
மானபங்கம் செய்து அவர்களை ஆடையின்றி படமெடுத்து,
வீடியோவாகவும், புகைப்படமாகவும் இன்டர்நெட்டில் விற்பனை
செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தான். இன்றைக்கு அந்த
குடும்பப் பெண்களின் அலங்கோல புகைப்படங்கள், வீடியோக்கள்
இன்டர்நெட்டில் வலம் வருவதை யாராலும் தடுக்க முடியவில்லை.
ஆகவே மருத்துவமனைகளுக்கு செல்லும் நமது பெண்கள் தக்க
துணையுடனும் சென்று அங்கு மிக்க கவனத்துடனும் இது பற்றிய
விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.
துணிக்கடைகளின் உடை டெஸ்ட் செய்யும் அறைகளும் அங்கு
பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடிகளும் :
நாம் துணிக்கடைகளுக்கு செல்வது இயல்பானது அங்கு உடைகளைப்
போட்டு பார்த்து சரிபார்க்க சிறிய அறை பெண்களுக்காக பெரிய
கடைகளில் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த துணிக்கடைகளின்
உடைகளை போட்டு சரிபார்க்கும் அறைகளைப் பயன்படுத்தும்
பெண்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அங்கு
கண்டிப்பாக கேமிராக்கள் தங்களை கண்காணிக்ப் பொறுத்தப்
பட்டிருக்கும், வேறு நோக்கத்தில் இல்லை என்றாலும் துணிகள்
களவு போகிறதா, துணிகளை மறைக்கிறார்களா என்று
பார்ப்பதற்காகவாவது அங்கு கேமிராக்கள் பொருத்தப்
பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு தாங்கள் உடைகளை
மாற்றவும். காமிராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை
என்றாலும். கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த
கண்ணாடிகளிலும் இரண்டு வகை கண்ணாடிகள் உண்டு
இவைகளைகப்பற்றியும் நாம் தெரிந்து கொள்வது நல்லது.
கண்ணாடிகளில் நம்மை மட்டுமே பிரதிபலிப்பது ஒரு வகை இன்னொரு
வகை நாம் பார்க்கும்போது கண்ணாடியாக நம்மை பிரதிபலிக்கும்.
ஆனால் மறுபக்கத்திலிருந்து அதாவது கண்ணாடிக்கு அடுத்த
பக்கம் பார்ப்பவர்களுக்கு ஒளிவு, மறைவு இல்லாமல் நம்மைக்
காட்டும் இந்த இரண்டாம் வகை கண்ணாடிகள் பற்றிதான் நாம்
மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். இந்த உடை
மாற்றும் அறைகளில் இந்த கண்ணாடிகளின் ஊடாக மறுபக்கம்
காமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது
தங்களை படமெடுக்கலாம் இவைகளை கவனத்தில் கொண்டு
செயல்படவும்.
நம்மையறியாமலேயே நம்மை படமெடுத்து, வீடியோ எடுத்து
மற்றவர்களுடன் இன்டர்நெட்டில் பகிர்ந்து கொள்ளும்
கலாச்சாரம் தற்போது மிக சாதாரணமாக நம் நாட்டிலும் பரவி
வருகிறது. இதற்கு காரணம் கையடக்க காமிராக்கள்தான்
என்றாலும் நாமும் கவனமாக இருந்து இது போன்றவைகளில்
சிக்காமல் வாழ பழகிக் கொள்ளவும் தக்க விழிப்புணர்வை நம்
சமுதாயப் பெண்களுக்கும் சொல்லி நம் எல்லோரிடமும் ஒரு
எச்சரிக்கை உணர்வை எப்பவும் ஏற்படுத்த வேண்டும்.
Iqbal Masthan
Al Hammadi Hospital
Riyadh, Saudi Arabia
from அலாவுதீன்

பொது மக்கள் முன்னிலையில் தூக்கு தண்டனை.
Subscribe to:
Posts (Atom)