Saturday, June 30, 2007

வழி கெடுக்கும் ஆலிம்கள்?

ஜுமுஆ குத்பாவலி ஒரு குபுர் பத்வா என்ற தலைப்பில் தாயத்து தகடு தட்டு போன்ற மாந்ரீக வியாபாரிகள் பின்னால் நின்று தொழலாமா? என்ற கேள்விகளுக்கு குர்ஆன் ஹதீஸ் ஒளியில் விளக்கம் வெளியிட்டிருந்தார். திருச்சி சிங்காரத் தோப்பைச் சார்ந்த சகோதரர் எஸ். ராஸிக் அவர்கள். இதை http://mdfazlulilahi.blogspot.com/2007/03/blog-post.html என்பதை கிளிக் செய்து பார்த்துக் கொள்ளவும்.

அதற்கு பதில் அளித்து திரு அல்தாபி என்பவர் பேசியுள்ளார். அவரது உரைக்கு பதில் அளித்து திருச்சி சிங்காரத் தோப்பு எஸ். ராஸிக் அவர்கள் வெளியிட்டுள்ள பிரசுரம். இது பற்றிய மேல் விபரங்களுக்கு 0091-94427-06337 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்



Tuesday, June 26, 2007

கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட முடவர்கள்!

கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட முடவர்கள்! என்ற தலைப்பில் எஸ். அப்துல் கரீம் றஹ்மத் குடில் நாகப்பட்டிணம் என்ற முகவரியிலிருந்து வெளியிட்டுள்ளார்கள்.

கேப்டன் ஷா அவர்கள், " முடவர்களும் கொம்புத் தேனும், ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள், பி.ஜெ.யின் அவசரம், தேள் கொட்டிய திருடன், திரை மறைவு நாடகம், ஆண்டிகள் கட்டிய மடம்" ஆகிய உட் தலைப்புகளில் எழுதியுள்ளார்கள்.

வாலறுந்த நரிகளின் ஓலம் என்ற தலைப்பில் அபு ஜாவித் அவர்கள் எழுதியதும் இதில் இடம் பெற்றுள்ளது. பி.ஜெ.யின் புலம்பல்களை ஓலம் என்ற தலைப்பில் பி.ஜெ.யின் 10 வகையான ஓலங்களை எடுத்து எழுதி தக்க பதிலும் கொடுத்துள்ளார்கள். பி.ஜெ. களவாடிய பத்திரிக்கையில் இன்றும் ஓலமிடும் அவலம் உள்ளதால் இதை வெளியிடுகிறோம்.












Friday, June 22, 2007

நந்தினியுடன் பாக்கர் ரதி மீனா சொகுசு விவகாரத்தை பெரிதாக ஆக்கியது யார்?

பி.ஜெ. மீது சந்தேகத்தின் வாசல் திறந்திருக்கிறதா இல்லையா?

பாக்கர் நந்தினி விவகாரத்தை நாம் பெரிதுபடுத்தி வருவதாக த.த.ஜ.வினர் வருத்தப்பட்டுள்ளனர். மார்க்கத்தின் பெயரால் பிழைப்பு நடத்தும் த.த.ஜ. மவுலவிகளுக்கு எதிராக ஆனார் பாக்கர். எனவே பாக்கரை ஓரங்கட்ட பி.ஜெ.யும் த.த.ஜ. மவுலவிகளும் சதித் திட்டங்களை செய்தார்கள். அவர்கள் செய்த சதித் திட்டங்கள்படி நந்தினியுடன் பாக்கர் ரதி மீனா சொகுசு விவகாரத்தை பி.ஜெ.தான் ஊர் ஊராக பரப்பினார். இதற்கு கடலூர் மாவட்டம் சாட்சியாக உள்ளது.

நந்தினியுடன் பாக்கர் ரதி மீனா சொகுசு பஸ்ஸில் இருட்டு இரவில் பக்கத்து பக்கத்து சீட்டில் இருந்து சென்றார் என்று உரையாற்றி ஆடியோ கிளிப்பாக தனது http://tntj.net/Common/Bakkar_Resign_Details.asp சைட்டில் வெளியிட்டவரும் திருவாளர் பி.ஜெ.தான். அதில் ஜமாஅத்துடைய விதி அது இது என அவர் அளந்துள்ளவை அனைத்தும் பொய் என்பது இப்பொழுது நிரூபணம் ஆகி விட்டது. 21 நிமிஷம் 11 செகண்டுகள் பேசியுள்ள அதில் நந்தினியுடன் பாக்கர் என்பது ஒரு நிமிஷம் 49 செகண்டுதான் உள்ளது. அதனை மட்டும் http://www.tmpolitics.net/files/tntj/bakarvspj.rm என்பதில் முகவைத் தமிழன் இடம் பெறச் செய்துள்ளார். அதனை அப்படியே தருகிறோம்.

இப்ப வந்து பாக்கருடையதை பொறுத்த வரைக்கும் ஒரு ஒரு ஒரு இஸ்லாத்துக்கு வந்த ஒரு (நந்தினி என்ற) பெண்ணை நம்ம தஃவா சென்டரில் படிச்சாங்க. படிச்சிகிட்டு அதை முடிச்சுட்டு போற நேரத்துலே அதே நாளில் இவர் (பாக்கர்) ஒரு மீட்டிங்குக்கா போறாரு. போற இடத்துலெ இவங்க (நந்தினி) வந்து தஃவ சென்டரிலே படிச்சிகிட்டு இருந்த வகையிலே ஒரூ.. ஒரு அறிமுகம் இருக்குதில்லையா? அந்த அடிப்படையிலே ஒரு பேருந்திலே (பாக்கர் நந்தினி ஆகிய) இரண்டு பேரும் பயணம் செய்கிறார்கள். ஒரு பேருந்திலே. சீட்டு கிடைக்கவில்லை என்ற உடனே (பாக்கருக்கும் நந்தினிக்கும்) பக்கத்து பக்கத்து சீட்டாகவே அமைந்து விடுகிறது.

அப்படி பிரயாணம் செய்து அவங்க (நந்தினி) கோவில்பட்டியிலே இறங்கி விடுகிறாங்க இவர் (பாக்கர்) வந்து திருநெல்வேலியிலே இறங்கி மீட்டிங்குக்கு போறாரு. இது வந்து மக்கள் மத்தியிலே யாரோ இரண்டு சகோதரர்களிலே ஒரு சகோதரரு நம் சகோதரர் பார்த்து விட்டு இதை ஒரு கம்ளைண்ட்டாக என்ன செய்றாரு ஆக்குறார். சம்பவம் நடந்து அதை ஒரு சகோதரர் பார்த்து கம்ளைண்ட் பன்றான்.

அப்ப நம்ப என்ன செஞ்சோம் என்றால் ...நின்று கிட்டு வந்திருக்கலாம். நாங்க கேட்டோம். அப்படியே இரண்டு சீட்டு இணைஞ்சி இருந்தாலும் கீழே இறங்கி உட்கார்ந்துகிட்டு வந்திருக்கலாம். நின்றுகிட்டு வந்திருக்கலாம். அடுத்த பஸ்ஸுக்கு நீங்க மாறிப் போயிருக்கலாம். எவ்வளவோ.. இருக்கிறது. இதில வந்து டேமேஜ் ஆனோம் என்று சொன்னால் எப்படி நாம நிக்க முடியும். அப்படி தவ்ஹீதே அடிபட்டு போயிடும் மக்கள்ட்ட போயி. அப்படீன்னு நாங்க நினைச்சோம்.

ஆனா அவங்களுக்கு அறிவு இருந்திருக்கனும். இது என்ன ஜமாத்து இப்படித்தான் பாக்குறவன் எடுத்துக் கொள்வானா? ஒருத்தன் பார்த்தான் என்று சொன்னால் நீங்க நினைச்ச மாதிரிதான் எடுத்துக் கொள்வானா? அப்ப வந்து ஜமாத்து டேமேஜ் ஆகுமா இல்லையா?

தூங்கும்போது கூட நீங்க (பாக்கர்) வந்து அவங்க (நந்தினி) மேலே சாஞ்சிடலாம்.. அவங்க (நந்தினி) உங்க (பாக்கர்) மேலே சாஞ்சிடலாம். அது இருட்டு நேரம். பல பேரு பலவிதம்.. பல மாதிரியான முகாந்திரம் இருக்குது. தப்பு செய்வதற்கு முகாந்திரம் இருக்கா இல்லையா? முகாந்திரம் இருக்கிறது. நாங்க மறுக்கக் கூடாதுன்னு ஆரம்பத்திலே பேசி வைச்சிருந்திருந்ததாலே ஓ.கே. முகாந்திரம் இருக்கிறது. இந்த மாதிரி யாரும் நடக்கக் கூடாது. நானும் நடக்கக் கூடாது பாக்கரும் நடக்கக் கூடாது. பாக்ரு இந்த மாதிரி நடந்தது தப்புதான்.

இதுதான் சைட்டில் உள்ளது த.த.ஜ. தலைமை மதரஸாவில் ஆசிரியையாக இருக்கும் நஜ்முன்னிஸா என்ற ஆலீமா சொன்னது என்று கடலூர் முபாஹலாவில் சொன்ன பி.ஜெ. சைட்டில் போட்டுள்ளது எப்படி பார்த்தீர்களா? இப்பொழுது சொல்லுங்கள். நந்தினியுடன் பாக்கர் ரதி மீனா சொகுசு விவகாரத்தை பெரிதாக ஆக்கியது யார்? மார்க்கத்தின் பெயரால் பிழைப்பு நடத்தும் த.த.ஜ. மவுலவிகளும் பிழைப்பு நடத்தும் கூட்டத்தின் தலைவரான பி.ஜெ.யும்தான் புரிந்து விட்டீர்களா?

21 நிமிஷம் 11 செகண்டுகள் பி.ஜெ. பேசி அவரது சைட்டில் போட்டுள்ளதில் (பி.ஜெ.யாகிய) நான் ஏதோ ஒரு வேலைக்காக ஒரு வீட்டுக்கு போய். அங்கே ஒரு பெண் வீட்டில் தனியாக இருந்து நான் எந்த தப்பும் செய்யாமல் அந்த வீட்டில் இருந்து வெளி வருவதைப் பார்த்து ஒருவர் சந்தேகப்பட்டு குற்றச்சாட்டுக் கூறினாலும் சந்தேகத்தின் வாசல் திறந்து விட்டது. எனவே நானும் ராஜினாமா செய்து விட வேண்டும். இது ஜமாஅத்துடைய விதி. ஜமாஅத்தின் நலன் கருதி எங்களுக்கு நாங்களே வகுத்துக் கொண்ட விதி என்றுதான் 20 நிமிஷம் வரை பி.ஜெ. பேசியுள்ளார். பி.ஜெ.யின் இந்த வாக்கு மூலப்படி பி.ஜெ. ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை என்று பொதுமக்கள் கேட்கிறார்கள்.

ஏனெனில், ஆண் பெண் தகாத உறவை இருவரும் மனம் ஒத்து செய்தால் மார்க்கத்தில் தவறில்லை என்று பாக்கர் நந்தினியிடம் கூறினார் பி.ஜெ.யின் கூற்றுப்படி இது காதலன் காதலி என்ற உறவில் சொன்னது. இதை த.த.ஜ. தலைமை மதரஸாவில் ஆசிரியையாக இருக்கும் நஜ்முன்னிஸா என்ற ஆலிமாவிடம் நந்தினி கூறியது. நந்தினி ஒரு பெண் நஜ்முன்னிஸா ஒரு பெண். இது பெண் என்ற உறவில் சொன்னது.

அந்த நேரத்தில் நந்தினி வீட்டில் பாக்கர் தங்கி இருந்தார். இதை அந்த ஆலிமா நஜ்முன்னிஸாதான் பி.ஜெ.யிடம் சொன்னது எப்படி? எந்த உறவில்? இருவரும் மனம் ஒத்து செய்தால் ஆண் பெண் தகாத உறவு செய்யலாம் என்ற அசிங்கத்தை அந்நிய பெண்ணான நஜ்முன்னிஸா என்ற அந்த ஆலிமா அந்நிய ஆணான பி.ஜெ.யிடம் கூறியது எப்படி? எந்த உறவில்? பி.ஜெ.யின் கூற்றுப்படி பி.ஜெ. மீது சந்தேகத்தின் வாசல் திறந்திருக்கிறதா இல்லையா?

இந்த அசிங்கங்களை முறையீடு என்ற முறையில் நஜ்முன்னிஸா என்ற அந்த ஆலிமா சொல்வதாக இருந்தால். பி.ஜெ.யின் மனைவி மூலமோ அல்லது இது மாதிரி சரியான வழிகளிலோதான் பி.ஜெ.யின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்க வேண்டும்.

ஒரு முறை அல்ல இரு முறை அல்ல இது மாதிரி அசிங்கங்களை அந்நிய ஆணான பி.ஜெ.யிடம் அந்நிய பெண்ணான நஜ்முன்னிஸா என்ற அந்த ஆலிமா கூச்சமின்றி பல முறை கூறியுள்ளார். இதை பி.ஜெ.யும் கடலூர் முபாஹலாவில், நஜ்முன்னிஸா என்ற அந்த ஆலிமா தான் இந்த மதுரை சம்பவத்திலிருந்து பல செய்திகளை சொன்னார்கள் என்று சொல்லிக் காட்டி ஒப்புக் கொண்டுள்ளார். பி.ஜெ. மீது சந்தேகத்தின் வாசல் திறந்திருக்கிறதா இல்லையா?

பி.ஜெ.யின் வாக்கு மூலப்படி பி.ஜெ. ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை. நியாயவான்கள் கேட்பார்கள். மார்க்கத்தின் பெயரால் பிழைப்பு நடத்தும் த.த.ஜ. மவுலவிகள் கேட்க மாட்டார்கள். த.த.ஜ. என்ற அமைப்பின் பெயரை தங்களது பின்பலமாக பயன்படுத்தி அடுத்தவன் நிலத்தை பிளாட் போட்டு விற்கும் ரியல் எஸ்டேட் பேர்வழிகள் கேட்க மாட்டார்கள்.

Wednesday, June 20, 2007

கடலூர் முபாஹலாவில் கலீமுல்லாஹ் தலையிலானவர்களின் உயர்ந்த நிலை.

கடலூரில் நடந்த முபாஹலா முதல் பாகத்தின் பி.ஜெ. வார்த்தைகளை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை தந்திருந்தோம். கலீமுல்லாஹ் தலையிலான கடலூர் மாவட்ட முன்னாள் டி.என்.டி.ஜே. நிர்வாகிகள் என்ன சொல்லி முபாஹலா செய்தார்கள் என பலர் கேட்டுள்ளார்கள். எனவே அவற்றை சுருக்கமாகத் தருகிறோம்.

காரணம் கடலூர் பி.ஜெ. முபாஹலாவில் வெளிச்சத்துக்கு வந்த நஜ்முன்னிஸா என்ற தலைப்பிலான வெளியீட்டை பார்த்து இருப்பீர்கள். அதன் இறுதியில் பாக்கரின் மன்மத லீலைகள் சம்பந்தமாக பி.ஜெ. சொன்னது பட்டியலிடப்பட்டுள்ளது. அவற்றையும் கூறித்தான் கலீமுல்லாஹ் தலையிலான கடலூர் மாவட்ட முன்னாள் டி.என்.டி.ஜே. நிர்வாகிகள் முபாஹலா செய்தார்கள். எனவே .. வெளிச்சத்துக்கு வந்த நஜ்முன்னிஸாவில் குறிப்பிட்டுள்ளதை தவிர்த்து சுருக்கமாகத் தருகிறோம்.

டி.என்.டி.ஜே. மாநில பொதுச் செயலாளர் எஸ்.எம். பாக்கர் பதவி நீக்கம் ஒழுக்கக் கேடு சம்பந்தமானதுதான் என்ற எந்தச் செய்தியும் கலீமுல்லாஹ் தலையிலான கடலூர் மாவட்ட முன்னாள் டி.என்.டி.ஜே. நிர்வாகிகளுக்கு எதுவும் தெரியாது.

11.3.07 ஆம் தேதிய லால்பேட்டை பொதுக் கூட்டம் சம்பந்தமாக 5.3.07 அன்று போன் செய்த பி.ஜெ.தான் அவராகவே முன் வந்து பாக்கரின் ஒழுக்கக் கேடு சம்பந்தமான குற்றச்சாட்டுக்களைக் கூறினார். அப்பொழுதுதான் கலீமுல்லாஹ் தலையிலான கடலூர் மாவட்ட முன்னாள் டி.என்.டி.ஜே. நிர்வாகிகளுக்குத் தெரியும். அதுவரை எதுவும் தெரியாது.

11.3.07 ஆம் தேதிய லால்பேட்டை பொதுக் கூட்டத்திற்குப் பிறகு ஒரு வீட்டில் வைத்து இரவு 12 மணி அளவில் சுமார் ஒண்ணரை மணி நேரம் பாக்கரின் ஒழுக்கக் கேடுகள் பற்றி பி.ஜெ. பேசினார். பலர் கூடி இருந்த அந்த இடத்தில் ஒழுக்கக் கேடுகள் பற்றி விபரமாகப் பேசினார். விலாவாரியாக விளக்கிப் பேசினார் பி.ஜெ. எந்த அளவுக்கு என்றால் பாக்கர் பல முறை விபச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்ற அளவுக்கு பி.ஜெ. பேசினார்.
பாக்கர் மீது நமது முன்னால் சகாக்கள் கூறிய ஒய்.கே. மேன்சன் விவகாரம் உண்மை என்றும் பி.ஜெ. சொன்னார்.

களியக்காவிளை விவாதத்தின் போது பாக்கர் ஒரு நாள் மிஸ்ஸிங். அப்போது அந்த நாளில் பாக்கர் ஒரு பெண் வீட்டில் இருந்திருக்கிறார். அப்போது அப்பெண்ணின் கணவர் களியக்காவிளை விவாதத்தில் இருந்திருக்கிறார். என்றும் பி.ஜெ. சொன்னார்.

நந்தினியை பாக்கர் அவரது காரில் கூட்டிச் சென்றார் என்றும் பி.ஜெ. சொன்னார்.

ஹஜ்ஜுப் பெருநாளுக்கு மறுநாள் ரதி மீனா சொகுசு பஸ்ஸில் பாக்கரும் நந்தினியும் ஒருவருக்கொருவர் மடியில் படுத்துக் கொண்டும் ஒருவருக்கொருவர் சில்மிஷம் செய்து கொண்டும் நெல்லை வரை சென்றார்கள் என்றும் பி.ஜெ. சொன்னார்.

பாக்கரும் நந்தினியும் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டார்கள் என்றும் பி.ஜெ. சொன்னார்.

இன்னும் பாக்கர் பற்றி நிறைய விஷயங்கள் உள்ளன என்றும் பி.ஜெ. சொன்னார்.

பாக்கர் செய்த தவறுகளையெல்லாம் (பி.ஜெ.யாகிய) நான் பாக்கரிடம் விசாரித்தபொழுது முதலில் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து மறுத்தார். பிறகு ஆதாரங்களை காட்டி போது பாக்கர் ஒப்புக் கொண்டார் என்றும் பி.ஜெ. சொன்னார்.

பாக்கர் பி.ஜெ.யைப் பார்த்து நீங்கள் மட்டும் யோக்கியமா? கம்யூட்டர் கற்றுத் தருகிறேன் என்று மதரஸா மாணவிகளின கைகளைப் பிடித்து சில்மிஷம் செய்யவில்லையா? என்று கேட்டார் என்றும் பி.ஜெ. சொன்னார்.

ஸைபுல்லாஹ் ஹாஜாவையும் ஒரு பெண்ணையும் தொடர்புபடுத்தி பாக்கர் குற்றச்சாட்டு வைத்தார் என்றும் பி.ஜெ. சொன்னார்.

விபச்சாரம் செய்ததாக ஒருவர் பொய் சொன்னால் 80 கசையடி என்ற சமாச்சாரம் எதையும் பலர் கூடி இருந்த அந்தக் கூட்டத்தில் பி.ஜெ. சொல்லவில்லை. மொத்தத்தில் அன்று பி.ஜெ. பாக்கர் அதிகப்படியாக தவறுகள் செய்துள்ளார் என்பதை மக்கள் அறிய வேண்டும் என்பதிலேயே பி.ஜெ. குறியாக இருந்தார்.

பாக்கர் பற்றி பி.ஜெ. போனில் குற்றச்சாட்டு கூறியபொழுது இதெல்லாம் உளவுத்துறையின் வேலையாக இருக்கும். எனவே பாக்கர் விஷயத்தில் அவசரப்படாதீர்கள் என்று கலீமுல்லாஹ் சொன்னது போலவே கூடி இருந்தவர்களும் இதெல்லாம் உளவுத்துறையின் வேலையாக இருக்கும் அவசரப்பட்டு பேசாதீர்கள் என்று பி.ஜெ.யிடம் சொன்னார்கள்.

இதை மறுத்த பி.ஜெ. அப்படியெல்லாம் இல்லை. நாங்கள் இரண்டு மாதத்திற்கு மேலாக பல பேரிடம் தீர விசாரித்த பின்பே ஆதாரங்களின் அடிப்படையிலேதான் இந்த முடிவுக்கு வந்தோம் என்று பி.ஜெ. கூறினார்.

இப்படி பாக்கர் நந்தினி பற்றி பி.ஜெ. கூறியுள்ள அனைத்தையும் கடலூர் மாவட்ட முன்னாள் டி.என்.டி.ஜே. தலைவர் கலீமுல்லாஹ் முபாஹலாவில் சொல்லிக் காட்டுகிறார். இவ்வளவு விஷயங்களை சொல்லிக் காட்டி கலீமுல்லாஹ் செய்த முபாஹலா துஆவின் போது கலீமுல்லாஹ்வும் அவரது தலைமையில் உள்ளவர்களும் உயர்ந்த பண்பாளாகள் என்பதை நிரூபித்து விட்டார். அந்த துஆவை பாருங்கள்.

பி.ஜெ. பாக்கர் பற்றி இப்படி கூறியது முற்றிலும் உண்மை. இது பொய் என்றால், இதில் பொய்யர்கள் நாங்கள் என்றால் எங்கள் மீதும் எங்கள் குடும்பத்தார் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்.

இது உண்மை என்றால் பி.ஜெய்னுல் ஆபிதீன் மற்றும் அவரது குடும்பத்தார் மீதும் அல்லாஹ் அவனது சாபத்தை உண்டாவதற்கு பதிலாக பி.ஜெய்னுல் ஆபிதீன் எங்களுக்கும் ஏனையவர்களுக்கும் ஏகத்துவத்தை ஊட்டியதற்கு பகராமாக பி.ஜெ. செய்த குற்றங் குறைகளை சுட்டிக் காட்டியவர்கள் மீது வரம்பு மீறிய பொய்களையும் தவறான அவதூறுகளையும் வீண் பழிகளையும் சுமத்தி பேசியும் எழுதியும் வருகிறதை தடுத்து யா அல்லாஹ் பி.ஜெ.க்கு நேரான வழியை காட்டு.
இது மாதிரிதான் கலீமுல்லாஹ் தலையிலான அனைவரும் துஆச் செய்தார்கள். இந்த கடலூர் முபாஹலா மூலம் கலீமுல்லாஹ் தலையிலானவர்கள் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் என்பதை நிரூபித்து விட்டார்கள்.

பாக்கர் பல முறை விபச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்ற அளவுக்கு பி.ஜெ. பேசினார் என்றுதான் கலீமுல்லாஹ் தலையிலானவர்கள் கூறி உள்ளார்கள். பாக்கர் விபச்சாரம் செய்து விட்டார் என்ற வார்த்தையை நான் சொல்லவில்லை என்று திசை திருப்பி பி.ஜெ. முபாஹலா செய்துள்ளார்.

நந்தினிக்கு பட்டுப்புடவை, தனி வீடு, செல் போன், தவறான உறவு, நந்தினி வீட்டில் பாக்கர் என்பது உட்பட பி.ஜெ. சொன்ன அனைத்தையும் வார்த்தைக்கு வார்த்தை கூறித்தான் கலீமுல்லாஹ் தலையிலானவர்கள் முபாஹலா செய்தார்கள். இவற்றையெல்லாம் பி.ஜெ. வார்த்தைக்கு வார்த்தை மறுக்கவில்லை. பாக்கர் சம்பந்தமான சில செய்திகளை நஜ்முன்னிஸா என்ற ஒரு பெண் இப்படியெல்லாம் சொல்கிறாள் என்று நழுவி பி.ஜெ. முபாஹலா செய்துள்ளார்.

ஆண் பெண் தகாத உறவை இருவரும் மனம் ஒத்து செய்தால் மார்க்கத்தில் தவறில்லை என்று பாக்கர் நந்தினியிடம் கூறி இருக்கிறார். இதை த.த.ஜ. தலைமை மதரஸாவில் ஆசிரியையாக இருக்கும் (நஜ்முன்னிஸா என்ற) ஆலிமாவிடம் நந்தினி கூறியது. இதை (நஜ்முன்னிஸா என்ற) அந்த ஆலிமா (பி.ஜெ.யாகிய) என்னிடம் கூறியது.

அந்த நேரத்தில் பாக்கர் என் வீட்டில்தான் தங்கி இருந்தார் என்று அந்த ஆலிமா (நஜ்முன்னிஸா என்ற) பெண்ணிடம் நந்தினியே கூறி இருக்கிறார். இதை அந்த ஆலிமா (நஜ்முன்னிஸா என்ற) பெண் (பி.ஜெ.யாகிய) என்னிடம் கூறியது.

இதையெல்லாம் பார்த்த பின் மானமுள்ள எவனாவது தனது பிள்ளைகளை, சகோதரிகளை த.த.ஜ. நடத்தும் பெண்கள் கல்லூரிக்கு பாடம் படிக்க அனுப்புவானா? இவர்கள் நடத்திய பாடத்தின் லட்சணம்தான் நந்தினி - நஜ்முன்னிஸா என நாட்டியம் ஆடுகிறது. பாக்கர் நந்தினி, பி.ஜெய்னுல் ஆபிதீன் நஜ்முன்னிஸா ஆகியவர்களின் மர்மக் கதைகளை ஜொள்ளு விட்டு படிக்க ஆசைப்பட்டவர்கள்தான் இவர்கள் நடத்தும் கல்லூரிகளுக்கு நன்கொடை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள் போலும்..

பி.ஜெ.யைப் பார்த்து நீங்கள் மட்டும் யோக்கியமா? கம்யூட்டர் கற்றுத் தருகிறேன் என்று மதரஸா மாணவிகளின கைகளைப் பிடித்து சில்மிஷம் செய்யவில்லையா? என்று பாக்கர் கேட்டார் என்பது ஷம்சுல்லுஹா கூறியதை நினைவுபடுத்துகிறது.


மதுரையில் 2000இலல் நடந்த இஸ்லாமிய எழுச்சி மாநாட்டின் போது பிரச்சார மேடைக்கு பி.ஜெ. அதிகமாக வரவே இல்லை. பிரச்சார மேடைக்கு வராமல் பெரும்பாலும் பெண்கள் நிறைந்த கண்காட்சிப் பகுதியிலேயே பி.ஜே. கிடந்தார். மதரஸா மாணவிகளையே பி.ஜெ. சுற்றி சுற்றி வந்தார். மாணவிகளும் ஆலிம்ஸா ஆலிம்ஸா என பி.ஜெ.யை சுற்றிச் சுற்றி வந்தார்கள். எல்லா மவுலவிகளும் வருந்தி பேசிக் கொண்டோம். இதனால்தான் சுலைமானும் நானும் மேலப்பாளையம் அல் இர்ஷாத் மாணவிகளை மாநாட்டுப் பணிகளுக்கு அனுப்ப மாட்டோம் என்றோம் என்று ஷம்சுல்லுஹா கூறினார். இந்த தகவலை முன்பே வெளியிட்டிருக்கிறோம்.

கம்யூட்டர் கற்றுத் தருகிறேன் என்று மதரஸா மாணவிகளின கைகளைப் பிடித்து சில்மிஷம் செய்யும் பி.ஜெ.யிடமிருந்து மேலப்பாளையம் அல் இர்ஷாத் மாணவிகளை காப்பாற்றிய சுலைமானுக்கும் ஷம்சுல்லுஹாவுக்கும் மேலப்பாளையவாசிகள் நன்றி கூற வேண்டும்.

Sunday, June 17, 2007

பி.ஜெ. முபாஹலாவில் வெளிச்சத்துக்கு வந்த நஜ்முன்னிஸா.

வார்த்தையால் விளையாடுவதில் மன்னனான திருவாளர் பி.ஜெ. கடலூரில் செய்த முபாஹலா முதல் பாகத்தின் வார்த்தைகளை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை தந்துள்ளோம்.

த.த.ஜ. தலைமை நடத்தும் மதரஸாவில் ஆசிரியையாக உள்ள நஜ்முன்னிஸா என்ற ஆலிமா தலையில் எல்லாவற்றையும் கட்டி விட்டதைப் பாருங்கள்.

பி.ஜெ. கடலூரில் செய்த முபாஹலா முதல் பாகத்தின் வார்த்தைகள்.

இறைவா பாக்கர் தொடர்பாக லால் பேட்டையிலே நான் சொல்லும்பொழுது பாக்கரைப் பற்றியோ யாரைப் பற்றியோ விபச்சாரம் செய்தார்கள் என்று குற்றம் சுமத்துவது மார்க்கத்திலே 4 சாட்சிகள் இல்லாமல் சொல்லக் கூடாது என்ற குர்ஆன் வசனத்தைச் சொல்லி அதை தெளிவாகச் சொன்னதை நீ அறிவாய்.

இதை சிதம்பரத்திலே நடத்திய பொதுக்குழுவில் நேரடியாகவே நான் சொன்னதை கேட்ட இரண்டு சாட்சிகளே முன் மொழிந்ததை இறைவா நீ அறிவாய். இதிலே நான் சொன்ன ஒரு விஷயத்தை சொல்வில்லை என்று இவர்கள் பொய் சொல்லி இருந்தால் பொய் சொன்னவர்கள் மீதும் அவர்களுடைய குடும்பத்தினர் மீதும் உன்னுடைய சாபத்தை இறக்குவாயாக என்று உன்னுடைய திருக்குர்ஆனுடைய போதனைகளின் அடிப்படையிலே நான் துஆச் செய்கிறேன்.

அடுத்ததாக பாக்கர் அவர்கள் சில செய்திகளை பாக்கர் சம்பந்தமான சில செய்திகளை நஜ்முன்னிஸா என்ற ஒரு பெண் இப்படியெல்லாம் சொல்கிறாள் இது எந்த அளவுக்கு உண்மை என்று எனக்குத் தெரியாது ஆக இப்படியெல்லாம் தகவல்கள் வருகின்றது என்றுதான் நான் சொன்னேனே தவிர ஆனால் சந்தேகத்தின் வாசல் திறந்திருக்கிறது என்று சொன்னேனே தவிர நானே உறுதிப்படுத்தி சொல்லவில்லை என்று

அந்த பெண்ணுடைய பெயரைச் சொல்லாமல் ஒரு பெண் என்றும் அவர் ஒரு ஆசிரியை என்றும் அவர்கள் தான் இந்த மதுரை சம்பவத்திலிருந்து பல செய்திகளை சொன்னார்கள் என்றும் அவர்கள் ஒரு நோக்கத்தில் சொல்லி இருக்கலாம் என்றும் இறைவா நான் சொன்னதை நீ அறிவாய். நானே அதைப் பார்த்து உறுதி செய்தது போல சொன்னதாக இவர்கள் சொல்லுவது பொய்.

அவர்கள் எந்த அளவுக்கு உண்மை சொல்கிறார்கள் என்பது அவர்களுக்கும் அல்லாஹ்வுக்கும் தெரியும் என்பதையும் சேர்த்துதான் இறைவா நான் சொன்னேன். இதையும் நீ அறிவாய். இந்த விஷயத்திலே இவர்கள் உண்மையை முன்னிறுத்தி பொய் சொல்லி இருப்பார்களேயானால் உன்னுடைய திருக்குர்ஆனுடைய வழிகாட்டுதல் பிரகாரம் அவர்கள் மீதும் அவர்களுடைய குடும்பத்தார் மீதும் அல்லாஹ்.. என் மீதும் என்னுடைய குடும்பத்தார் மீதும் நான் பொய் சொல்லி இருந்தால் உன்னுடைய சாபம் இறங்கட்டும் என்று நான் துஆச் செய்கிறேன்.

தெளிவாக இன்னொரு தடவை இறைவா நான் நினைவுபடுத்துகிறேன். பாக்கர் விபச்சாரம் செய்து விட்டார் என்ற வார்த்தையை நான் சொல்லவில்லை. அப்படி யாரைப் பற்றியும் சொல்லக் கூடாது என்று சூரத்துல் நூரில் இருக்கிற குர்ஆன் வசனத்தை எடுத்துக் காட்டி நான் சொன்னேன். அப்படி சொல்லி இருக்கும்பொழுது அதையும் மறுத்திருக்கிறார்கள் இச் சபையிலே இதில் நீ சாட்சியாக இருந்து கொள் என்பதுதான் இந்த விஷயத்திலே நான் உன்னிடத்திலே வைக்கிற முறையீடு

மேலே உள்ள வார்த்தைகளால்தான் பி.ஜெ. பாக்கர் விஷயத்தில் முபாஹலா செய்துள்ளார். வார்த்தையால் விளையாடுவதில் மன்னனான பி.ஜெ. வார்த்தை விளையாட்டுகளால்தான் முபாஹலா செய்துள்ளார் என்பதை அவரது முபாஹலா வார்த்தைகள் சாட்சி அளிக்கின்றன.

பாக்கரைப் பற்றியோ யாரைப் பற்றியோ விபச்சாரம் செய்தார்கள் என்று குற்றம் சுமத்துவது மார்க்கத்திலே 4 சாட்சிகள் இல்லாமல் சொல்லக் கூடாது என்ற குர்ஆன் வசனத்தைச் சொல்லி (விட்டுத்தான்) அதை (பாக்கர் சம்பந்தமான குற்றச்சாட்டுச் செய்திகளை) தெளிவாகச் சொல்லி உள்ளதாக முபாஹலாவில் பி.ஜெ. கூறி உள்ளார். பாக்கர் சம்பந்தமான அந்த குற்றச்சாட்டுச் செய்திகள் என்ன என்ன?

1. ஹஜ்ஜுப் பெருநாளுக்கு மறுநாள் பாக்கர் ஒரு பெண்ணுடன் சொகுசு பஸ்ஸில் சென்னையிலிருந்து நெல்லைக்கு பக்கத்து பக்கத்து சீட்டில் உட்கார்ந்தும் ஒருவருக்கொருவர் மடியில் படுத்துக் கொண்டும் பிரயாணம் செய்ததை பார்த்தவர்கள் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள் மூலமாக எங்களுக்கு தெரிவித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்னார்கள். பாக்கரை விசாரித்தோம் முதலில் அல்லாஹ் மீது சத்தியம் செய்து இல்லை என்று மறுத்தார். பல ஆதாரங்களை நாங்கள் காட்டி பேசும்போது ஆமாம் என்று ஒப்புக் கொண்டார்.

பாக்கர் பற்றி இந்த முதல் குற்றச்சாட்டை பி.ஜெ. டெலிபோன் மூலம் சொல்லி உள்ளார். எனவே இது லால்பேட்டையில் என்ற வாசகத்தில் அடங்காது. இந்த முதல் குற்றச்சாட்டில் உள்ள வாசகங்களைக் கூறியோ அதை மறுத்தோ பி.ஜெ. முபாஹலா பண்ணவில்லை.

2. அழகு நிலையம் நடத்தும் நந்தினி என்ற பெண்ணை பாக்கர் த.த.ஜ. தலைமை நடத்தும் மதரஸாவில் சேர்த்தார். மதரஸாவில் எந்தப் பெண்ணுக்கும் செல் போன் வைத்துக் கொள்ள அனுமதி கிடையாது. செல் போன் வைத்துக் கொள்ள தடை இருந்தும். அந்த பெண் நந்தினி செல் போன் வைத்துக் கொள்ள பாக்கர் தனது செல்வாக்கை பயன்படுத்தியுள்ளார்.

3. பாக்கர் நந்தினிக்கு பட்டுப் புடவை வாங்கி கொடுத்திருக்கிறார்.

4. பாக்கர் நந்தினியை காரில் அழைத்துச் சென்றிருக்கிறார்.

5. பாக்கர் நந்தினியை தனியாக வைத்து குடும்பம் நடத்த சென்னையில் தனி வீடு பார்த்திருக்கிறார்.

6. பாக்கரிடம் நந்தினி இப்படி என்னிடம் தவறாக உறவு வைத்துள்ளீர்களே! உங்கள் மார்க்கத்தில் இது தவறு இல்லையா? என்று கேட்டிருக்கிறார். அதற்கு இருவரும் மனம் ஒத்து செய்தால் மார்க்கத்தில் தவறில்லை என்று பாக்கர் நந்தினியிடம் கூறி இருக்கிறார். இதை த.த.ஜ. தலைமை மதரஸாவில் ஆசிரியையாக இருக்கும் (நஜ்முன்னிஸா என்ற) ஆலிமாவிடம் நந்தினி கூறி இருக்கிறார். இதை (நஜ்முன்னிஸா என்ற) அந்த ஆலிமா பி.ஜெ.யிடம் சொன்னார்.

7. மதுரையில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சியின் போது பாக்கர் 24 மணி நேரம் காணாமல் போனார். காணாமல் போன அந்த நேரத்தில் நந்தினி வீட்டில் பாக்கர் தங்கி இருந்தார். இதை அந்த ஆலிமா (நஜ்முன்னிஸா என்ற) பெண்ணிடம் நந்தினியே கூறி இருக்கிறார். இதை அந்த ஆலிமா (நஜ்முன்னிஸா என்ற) பெண் பி.ஜெ.யிடம் சொன்னார்.

இப்படி ஆயக்கலைகள் 64 என்பது போல் பாக்கரின் மீதான குற்றச்சாட்டுக்களை 16 தலைப்புகளில் பி.ஜெ. பட்டியலிட்டுள்ளார். பாக்கர் விஷயத்தில் தெளிவாக வார்த்தைக்கு வார்த்தை சொல்லி மறுக்க முடியாத பி.ஜெ. வார்த்தை விளையாட்டுகளால் தப்பி இருக்கிறார். பி.ஜெ.யின் கூற்றுப்படி பாக்கர் என்ற இடத்தில் பி.ஜெ. பெயரை போட்டுப் பாருங்கள்.

பி.ஜெ. சம்பந்தமான சில செய்திகளை நஜ்முன்னிஸா என்ற ஒரு பெண் இப்படியெல்லாம் சொல்கிறாள் இது எந்த அளவுக்கு உண்மை என்று எனக்குத் தெரியாது ஆக இப்படியெல்லாம் தகவல்கள் வருகின்றது என்றுதான் நான் சொன்னேனே தவிர ஆனால் சந்தேகத்தின் வாசல் திறந்திருக்கிறது என்று சொன்னேனே தவிர நானே உறுதிப்படுத்தி சொல்லவில்லை.

இப்படி பாக்கர் என்ற ஒவ்வொரு இடத்திலும் பி.ஜெ. பெயரையோ த.த.ஜ.விலுள்ள ஒவ்வொரு மவுலவிகளின் பெயரையோ பயன்படுத்திப் பாருங்கள். அவர்கள் ஒரு நோக்கத்தில் சொல்லி இருக்கலாம். சந்தேகத்தின் வாசல் திறந்திருக்கிறது நானே உறுதிப்படுத்தி சொல்லவில்லை. அவர்கள் எந்த அளவுக்கு உண்மை சொல்கிறார்கள் என்பது அவர்களுக்கும் அல்லாஹ்வுக்கும் தெரியும் என்றெல்லாம் சொல்லி விட்டு பாக்கரிடம் நந்தினி, நந்தினியிடம் பாக்கர் என்று சொன்ன மாதிரி சொல்லிப் பாருங்கள் ஏற்றுக் கொள்வார்களா?

தான் உறுதிபடுத்தாத ஒன்றை பிறரிடம் சொல்பவன் ஒரு முஸ்லிமா? அவன் ஒரு சராசரி மனிதனா? அவன் ஒரு தாஇயா? என மானமுள்ள முஸ்லிம்கள் கேட்பார்கள். மானங்கெட்ட கழுதைகள் இது போன்றதுகளைத்தான் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளும். இதற்கு எடுத்துக் காட்டுதான் த.த.ஜ. என்பதை பி.ஜெ. செய்த முபாஹலா நிரூபித்து விட்டது.

Monday, June 11, 2007

பிராடு பி.ஜெ.யின் பித்தலாட்டத்திற்கு கடலூர் மாவட்ட முன்னாள் த.த.ஜ. நிர்வாகிகளின் பதில்.

Thursday, June 07, 2007

காலம் கடந்த ஞானம் என்பது இதுதானோ?





10-4-2004 அன்று த.மு.மு.க. தலைமையினர் எல்லாரும் கையெழுத்திடாத நிலையில் எல்லாரும் கையெழுதிட்டுள்ளது போல் முக்கிய அறிவிப்பு வெளியிட்ட பொய்யர் பி.ஜே. "நான் கவனமாக எழுதி சனிக்கிழமை மஃரிபில் கொடுத்தேன். எல்லாரும் கையெழுத்திட்டு திங்கள் கிழமை மஃரிபில்தான் தந்தார்கள். 48 மணி நேரம் கால அவகாசம் எடுத்து எல்லாரும் கையெழுத்திட்டு தந்துள்ளார்கள்" என்று அழுத்தம் திருத்தமாகவும் திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப பொய் சொன்ன மெகா பொய்யர் பி.ஜே.

நான் டிசம்பர் ஆறுக்கு ஃபழுலுல் இலாஹியிடம் நிதியாகக் கொடுத்த பெருந்தொகை கிடைத்ததா? என்று நம்மிடம் ஒரு சகோதரர் கேட்ட போது அதிர்ச்சி அடைந்தோம் என்று எழுதிய மட்ட ரகமான ஆள் பி.ஜெ.

ஜாக்குடைய கணக்கு கேட்டதற்கு கணக்குகளெல்லாம் என் மனைவி இடம் இருக்கு என்று கமாலுத்தீன் மதனி சொன்னார் என்று பொய்யான குற்றச்சாட்டைக் கூறிய பொய்யர் பி.ஜே.

அந்நஜாத்தில் இருந்து விலக அபுஅப்துல்லாஹ் செய்துள்ள மேசாசடியே காரணம் என பொய்ய சொன்ன பொய்யர் பி.ஜே.

இந்த மெகா பொய்யர் பி.ஜே.யின் சுய ரூபத்தை அன்று அறியாமல் விட்டு விட்டோமே இதற்குப் பெயர்தான் காலம் கடந்த ஞானம். இந்த ஞானம் இன்னும் பல ஊர் காரர்களுக்கு வரும் இன்ஷா அல்லாஹ்

Wednesday, June 06, 2007

இருக்கிற அமைப்புகள் காணாதா இனியும் ஒரு தனி அமைப்பா?

தவ்ஹீதி என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று சொன்னது அந்தக் காலம்.
தவ்ஹீதி என்று சொன்னால் தலை குனிந்து நில்லடா என்பதாக ஆனது இந்தக் காலம்.


கடலூர் த.த.ஜ. நிர்வாகிகள் இப்பொழுது அனுப்பி வரும் மெயில்களை பார்த்து வருகிறீர்கள். 16.06.2007 தேதியில் பி.ஜெ.யுடன் முபாஹலாவுக்கு தயார் என கடைசியாக வந்த மெயிலை நமது பிளாக்கரிலும் இடம் பெறச் செய்துள்ளோம். http://mdfazlulilahi.blogspot.com/2007/06/blog-post_06.html இதை கிளிக் செய்து பார்த்துக் கொள்ளவும்.

அடுத்து வரும் விமர்சனத்தை படிக்கும் முன் அது நான் எழுதியது அல்ல என்பதை முதலில் உங்கள் மனதில் பதிந்து கொள்ளுங்கள். அது யார் எழுதியது எப்பொழுது எழுதியது என்ற விபரமும் கீழே உள்ளது முதலில் விமர்சனத்தைப் படியுங்கள்.

சமீபத்தில் மவ்லவி -- செய்திருக்கின்ற இறையச்சமில்லாத காரியத்தை உங்களுக்கு தெரியப் படுத்தவே இக்கடிதம் எழுதுகிறேன். -- -- அவர்களை துணைக்கு வைத்து மவ்லவி -- -- நிகழ்த்தி இருக்கிற நேர்மையற்ற செயல்களை சொல்லுவதற்கு முன், நமது தவ்ஹீத் ஜமாத்தார்களே நம்மை விமர்சனம் செய்வார்களே! மற்றவர்கள் நம்மை சிறுமை படுத்தி பேசுவார்களே! அது நமது பிரச்சாரத்தை பெரிய அளவில் பாதிக்குமே! என்ற உணர்வு கொஞ்சம் கூட இல்லாமல் மவ்லவி -- -- செய்திருக்கிற இச்செயலை எழுதுவதற்கு முன்னால், இதற்கு தொடர்பு உள்ள சில சம்பவங்களை முதலில் விவரிக்கிறேன்.

இனிமேல் எழுதப்போகின்ற செய்திகளை மனிதன் என்ற அடிப்படையில் எந்தவித சுய விருப்பு, வெறுப்பு இல்லாமல் இறையச்சத்தோடு எழுதுகிறேன் என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு மேலே தொடர்கிறேன் என்ற பீடிகையுடன் 01-02-2004 அன்று 9 பக்க அளவில் ஒரு மெயில் வந்தது. ஒரு தவ்ஹீத் பள்ளி தலைவரின் முரண்பாடுகள் பற்றி பெயர் குறிப்பிட்டு விமர்சனம் செய்யப்பட்டிருந்தது. அந்தக் கடிதம் மதிப்பிற்குரிய வெளிநாட்டில் வாழும் மேலப்பாளையம் தவ்ஹீத் ஜமாத்தார்களுக்கு, ராவுத்தர் மேலத்தெருவைச் சார்;ந்த இமாம் எழுதுவது என்று துவங்கி இருந்தது. அந்த மெயில் தனியாக ஒரு வெப் சைட்டிலும் போடப்பட்டிருந்தது. நாமும் http://mdfazlulilahi.blogspot.com/2004/02/blog-post.html என்ற நமது பிளாக்கரிலும் இடம் பெறச் செய்திருந்தோம்.

அந்த மெயிலில் விமர்சிக்கப்பட்டவர்களுக்குப் பதிலாக சிலரது பெயர்களை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. அவர்களில் சிலரைத் தவிர பெரும்பாலானவர்கள் அந்த விமர்சனத்துக்கு உரியவர்களாக மட்டுமல்ல அதைவிட கேடானவர்களாகவும் கேடுகெட்டவர்களாகவும் இருக்கிறார்கள் அல்லது ஆகி இருக்கிறார்கள் என்பதே இன்றைய நிலை.

தர்கா, தரீகா, மத்ஹபுகள் பெயர்களால் நடை பெற்று வரும் ஷிர்க் பித்அத் போன்ற மார்க்க விரோத செயல்களை ஒழிக்கப் புறப்பட்டுள்ளதாகவே தவ்ஹீதுவாதிகள் என்போர் தங்களை சமுதாயத்துக்கு அடையாளம் காட்டினார்கள். தங்களது சுய நல போக்குகளால் தக்வா எனும் இறையச்சமற்ற செயல்களால் ஷிர்க் பித்அத் போன்ற மார்க்க விரோத செயல்கள் மட்டுமல்ல ஒட்டு மொத்த மனித சமுதாயத்திற்கே விரோதமான செயல்கள் நடைபெறவும் துணை போய்க் கொண்டிருக்கிறார்கள்.

கடலூர் மாவட்ட முன்னால் த.த.ஜ. நிர்வாகிகள் வெளிநாடுகளில் டிஎன்டிஜே பெயரைச்சொல்லி ரூபாய் இருபது லட்சம் வசூல் செய்து சரியாக கணக்கு காட்டாமல் மோசடி செய்துவிட்டதாக பி.ஜெ. குற்றச்சாட்டுக் கூறியுள்ளார். பி.ஜெ. இப்படி குற்றச்சாட்டுக் கூறியதும் கடலூர் மாவட்ட முன்னால் த.த.ஜ. நிர்வாகிகள் கொதித்து எழுந்துள்ளார்கள். இதே மாதிரியான குற்றச்சாட்டுக்களை பி.ஜெ. பிறர் மீது கூறி வந்தபொழுது நீதியை நிலை நாட்ட தக்வா எனும் இறையச்சத்தோடு அவர்கள் தட்டிக் கேட்கத் தவறி விட்டார்கள். இதை கடலூர் மாவட்ட முன்னால் த.த.ஜ. நிர்வாகிகள் இப்பொழுது நினைத்துப் பார்த்து வருந்தாமல் இருக்க மாட்டார்கள்.

2000 செப்டம்பர் 17 ஆம் தேதி ஹாமித் பக்ரி உட்பட சில மவுலவிகள் நமது வீட்டுக்கு வருகை தந்து காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பி.ஜெ.யின் மார்க்க மற்றும் சமுதாய விரோத செயல்களை பட்டியலிட்டார்கள். அதற்கு எதிரான நடவடிக்கைகளை செய்ய வேண்டும் என்றார்கள். திட்டம் வகுத்தார்கள். அதை செயல்படுத்த நம்மை முற்படுத்தினார்கள். மவுலவிகளை நம்பி திட்டமிட்டபடி செயல்பட்ட என் மீது பி.ஜெ. மோசடி குற்றச்சாட்டு கூறினார். அப்பொழுது யாருமே தட்டிக் கேட்கவில்லை. திட்டம் வகுத்த மவுலவிகள் அனைவருமே பல்டியடித்திருந்த விபரம் ஒண்ணரை ஆண்டுகள் கழித்தே நமக்கு தெரிந்தது.

அதே நேரத்தில் ஹாமித் பக்ரி அவர்களுக்கும் அவர்களுடனிருந்த மவுலவிகளுக்கும் சோதனை வந்தபொழுது பி.ஜெ.யின் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் அல்லாஹ்வின் அருளால் பகிரங்கமாக குரல் கொடுத்தேன். 2000 செப்டம்பர் 17 ஆம் தேதி திட்டம் வகுத்த மவுலவிகள் பல்டியடித்திருந்த செய்தி ஒண்ணரை ஆண்டுகள் கழித்தே நமக்கு தெரிந்தது. சமுதாய விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பொழுது திட்டம் வகுத்தவர்கள் திட்டம் வகுத்தபொழுதே இரட்டை வேடம் போட்டுள்ளார்கள். அவர்களை உடனே அல்லாஹ் அடையாளம் காட்டி விட்டான். ஹாமித் பக்ரி அவர்களுக்கும் அவர்களுடனிருந்த மவுலவிகளுக்கும் வந்த சோதனை இவர்களுக்கு வராது என செயல்பட்டு வருகின்றனர்.

தவ்ஹீதி என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று சொன்னது அந்தக் காலம். தவ்ஹீதி என்று சொன்னால் தலை குனிந்து நில்லடா என்பதாக ஆனது இந்தக் காலம் ஆகி விட்டது. தர்கா, தரீகா, மத்ஹபுகள் பெயர்களால் ஷிர்க் பித்அத்களை செய்து வருபவர்கள் அதை மார்க்கம் என்று நம்பித்தான் செய்து வருகிறார்கள். நாமும் ஒரு காலத்தில் அப்படி இருந்தவர்கள்தான். எந்த பிரச்சாரங்கள் மூலம் நாம் வென்றெடுக்கப்பட்டோமோ அதே பிரச்சாரத்தின் மூலம் இவர்களை வென்றெடுக்கலாம்.

ஷிர்க் பித்அத்களுக்கெதிரான பிரச்சாரங்களை சவூதியில் அரசாங்கமே செய்து வருகிறது. எனவே சவூதி போன்ற நாடுகளில் சட்டத்தின் முன் நிறுத்தியும் ஷிர்க் பித்அத்களை தடுக்க முடியும். இன்று நபி என்று வாதிப்பவர்களை எல்லா முஸ்லிம் நாடுகளும் தண்டிக்கும். மார்க்கத்தின் பெயரால் மாந்ரீக வியாபாரம் செய்பவர்களை சவூதி தவிர வேறு எந்த முஸ்லிம் நாடுகளும் தண்டிக்காது. அது போல்தான் ஷிர்க் பித்அத்வாதிகளை இந்திய சட்டத்தின் முன் நிறுத்தி திருத்த முடியாது.

ஆனால் மார்க்கத்தின் பெயரால் பாலியல் அசிங்கங்களை செய்து வருபவர்களை இந்திய சட்டத்தின் முன் நிறுத்தி திருத்த முடியும். தவ்ஹீதுவாதிகள் என்போர் தங்களது சுய நல போக்குகளால் தக்வா எனும் இறையச்சமற்ற செயல்களால் இதனைக் கண்டும் காணாதது போல் இருக்கிறார்கள். இதற்கு துணை போய்க் கொண்டிருக்கிறார்கள். தர்கா வழிபாடு நிறைந்த மேலப்பாளையத்தில் உள்ள ஒரு தர்காவில் மார்க்கத்தின் பெயரால் சிறுமிகள் பலாத்காரம் காலம் காலமாக நடந்து வருகிறது. ஒத்து வராத சிறுமியை கொன்ற சம்பவமும் நடந்துள்ளது.

அண்டை மாநிலங்களில் நடக்கும் சம்பவங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி சி.பி.சி.ஐ.டி. விசாரணை வேண்டும் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று போராடிய தவ்ஹீதுவாதிகள் இதனைக் கண்டு கொண்டதே இல்லை. தர்கா பக்தியின் பெயரால் குரு செய்து வரும் சிறுமிகள் பலாத்காரத்தை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மற்றவர்களும் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு அந்த குரு அள்ளி அள்ளி வழங்குகிறார். தவ்ஹீதுவாதிகள் என்போர் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு அள்ளி அள்ளி வழங்குதில்லை.

தவ்ஹீதுவாதிகள் என்போரில் நிர்வாகிகளாக உள்ளவர்கள் பெரும்பாலோர் வியாபாரிகளாகவே உள்ளனர். வியாபாரிகளாக உள்ள அவர்கள் தங்களது வியாபாரத்துக்கு பின் பலமாக இருக்கட்டும் என்றுதான் தவ்ஹீது அமைப்புகளில் பள்ளிகளில் நிர்வாகிகளாக உள்ளனர். தங்களது வியாபாரங்களில் ஏற்படும் பிரச்சனைகளை ஒட்டி அதிகாரிகளை சந்திக்க நேரிடும்பொழுது தாங்கள் இன்ன தவ்ஹீது பள்ளியின் நிர்வாகி என்றே அறிமுகம் ஆவார்கள். இப்படிப்பட்ட தவ்ஹீது வியாபாரிகளிடம் பக்தியின் பெயரால் சிறுமிகளை பலாத்காரம் செய்து வரும் மத குரு சாமான்கள் வாங்குவார். தங்களது சீடர்களை இவர்களிடம் வாங்கச் செய்வார். இந்த அற்ப ஆதாயத்துக்காக தவ்ஹீது பள்ளியின் நிர்வாகிகளாக உள்ள தவ்ஹீது வியாபாரிகள் இதனை கண்டு கொள்வதே இல்லை.

சமீபத்தில் பீடி கட்டுகளின் மீது மண்டை ஓடு போன்ற எச்சரிக்கை படங்கள் இடம் பெற வேண்டும் என்று மத்திய அரசு சட்டம் கொண்டு வர இருந்தது. பீடி கம்பெனிகள் போராட்டம் நடத்தின. அப்பொழுது பீடித் தொழிலுக்கு ஆதரவாக அனைத்து பள்ளிவாசல்களின் கூட்டமைப்பு சார்பாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அல்லாஹ்வின் பள்ளிவாசல்கள் பணத்தில் பீடி கம்பெனிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகளா? எனவே இதை கண்டிக்க வேண்டும் என்று அன்று காலையிலேயே ஒரு தவ்ஹீது பள்ளியின் நிர்வாகியை போனில் அணுகினோம்.

சரி சுவரொட்டியின் வாசகம் எப்படி இருக்க வேண்டும் என்று எழுதிக் கொண்டு மஃரிபுக்கு வாருங்கள். இன்றே ஏற்பாடு செய்து நாளை காலையிலேயே ஒட்டி விடச் செய்வோம் என்றார். சொன்னபடி மஃரிபுக்குச் சென்றோம். காலையிலே வேகமாகப் பேசிய அந்த நிர்வாகி பள்ளி நிர்வாகிகளில் ஒருவரின் பெயரைச் சொல்லி அவர் ஒத்து வரவில்லை என்றார். ஏன் என்றதற்கு அவரது நண்பர் ஒருவர் பெயரைச் சொல்லி அவர் பீடித் தொழில்தான் செய்கிறார் எனவே இவர் எதிர்ப்பு தெரிவிக்கிறார் என்றார்.

அப்படியானால் பீடித் தொழிலுக்கு ஆதரவாக அனைத்து பள்ளிவாசல்களின் சார்பாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதை அங்கீகரிக்கிறீர்களா? என்றேன். நாம் தனி அமைப்பு காண்போம் அதன் மூலம் இது போன்ற பணிகளை செய்வோம் என்றார். இருக்கிற அமைப்புகள் காணாதா இனியும் ஒரு தனி அமைப்பா? வேண்டாம் என கூறி விட்டோம்.

பீஜேயுடன் முபாஹலா செய்ய கடலூர் மாவட்ட முன்னால் டிஎன்டிஜே நிர்வாகிகளாகிய நாங்கள் தயார்!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

முபாஹலாவிலிருந்து தப்பிக்க பொய் புரட்டுகளை கூறும் பீஜே யின் முக மூடியை கிழித்தெறிவோம்!

கடலூர் மாவட்ட முன்னால் டிஎன்டிஜே நிர்வாகிகளாய் இருந்த நாங்கள் டிஎன்டிஜே மாநில தலைவர் பீஜே யை முபாஹலாவுக்கு அழைத்தது 11.03.2007 அன்று லால்பேட்டையில் பாக்கர் பற்றிய ஒழுக்ககேடான விசயத்தைப் பற்றி பீஜே விளக்கமாக அதுவும் பாக்கர் விபச்சாரமே செய்து விட்டார் என்ற அளவிற்கு பேசிவிட்டு பிறகு அதில் சமரசம் செய்து கொண்ட விசயத்திலும் அதனை ஒட்டி நடந்த விசயங்களுக்கு மட்டுமே! உண்மையாளர்களாகவும், உண்மையில் அல்லாஹ்வுக்கு அஞ்சக்கூடியவர்களாய் இருப்பவர்கள், தங்கள் மீது குற்றச்சாட்டு என்று வரும்போது அந்த விசயத்தில் தாம் தூய்மையானவர்தான் என்று நிரூபிக்க வேறு எதனையும் முன்வைக்காமல் நிபந்தனையேதுமின்றி முன்வருவார்கள்..

அதனை விடுத்து குற்றம் சாட்டியவர்களிடம் எதாவது குறை இருக்கிறதா? என்று துருவி துருவி ஆராய்ந்து குறையை தேடி கண்டுபிடித்து அல்லது அவதூராய் எதையாவது அவர்கள் மீது பழி சுமத்தி குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க எத்தனிப்பவர் மகா பொய்யர் என்பதற்கு இதை தவிற வேறு ஏதும் ஆதாரம் தேவையில்லை. குற்றம் சாட்டியவர்கள் மீது மேலும் மேலும் பொய்களையும், அவதூரறுகளையும், வீன் பழிகளையும் மக்களிடம் கூறி தன்னை நியாயப்படுத்திக்கொள்பவர்கள் அல்லாஹ்வின் தன்டனைக்கு தன்னை தயார்படுத்திக்கொள்ளட்டும்.

கடந்த 03.06.2007 அன்று கடலூரில், பல மாவட்டத்து ஆட்களை அழைத்து வந்து நடத்திய கூட்டத்தில் முபாஹலாவைப்பற்றி பேசிய பீஜே, வழக்கம்போல் முபாஹலாவிற்கு அழைத்தவர்கள் மீது பொய்யான, அவதூரான வீண் பழிகளை அள்ளி வீசி அதற்கும் அவர்கள் முபாஹலா செய்யவேண்டும் என்று கூறி இருக்கிறார். மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு ஆகவே, எங்களுக்கு மடியில் கனமும் இல்லை வழியில் பயமும் இல்லை. அதனால் நாங்கள் பீஜே மீது சொன்ன அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும், மேலும் பீஜே வால் இன்று 04.06.2007 ல் எங்களுக்கு அனுப்பப்படடுள்ள வக்கீல் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள, நாங்கள் வெளிநாடுகளில் டிஎன்டிஜே பெயரைச்சொல்லி ரூபாய் இருபது லட்சம் வசூல் செய்து சரியாக கணக்கு காட்டாமல் மோசடி செய்துவிட்டதாக பழி சுமத்தியதற்கும், 03.06.2007 பீஜே கடலூர் கூட்டத்தில் எங்கள் மீது கூறிய அவதூருகளுக்கும் இன்ஷாஅல்லாஹ், பீஜே அறிவித்த 16.06.2007 தேதியில் நெல்லிக்குப்பம் தேவநாதன் திருமண மண்டபத்தில் மாலை 7 மணிக்கு பீஜேயுடன் முபாஹலா செய்ய கடலூர் மாவட்ட முன்னால் டிஎன்டிஜே நிர்வாகிகளாகிய நாங்கள் தயார்! என்பதை இதன் மூலம் பீஜே வுக்கும் மற்றும் சகலமானவர்களுக்கும் அறிவிக்கின்றோம். இது சம்மந்தமாக ஒப்புதல் தபாலையும் பி.ஜைனுல்ஆபிதீன், டிஎன்டிஜே மாநில தலைவர், 30.அரன்மனைகாரன் தெரு, மன்னடி, சென்னை-1 என்ற முகவரிக்கு 05.06.2007 ல் கூரியர் தபால் மூலம் அனுப்பி விட்டோம்.

இப்படிக்கு,
கடலூர் மாவட்ட முன்னால் டிஎன்டிஜே நிர்வாகிகள்.
05.06.2007.

Sunday, June 03, 2007

பி.ஜெ.க்கு கே.எஸ்.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி அவர்கள் எழுதிய உபதேச கடிதம்.

பி.ஜெ.க்கு கே.எஸ்.ரஹ்மதுல்லாஹ் இம்தாதி புத்திமதி கூறி எழுதிய கடிதம்.